சந்தோசமா சரக்கடிங்க..

” டேய் மாமா.. மனசே சரியில்லடா.. சரக்கடிக்கலாம் வறியா?? ” பெரும்பாலும் ஆண்கள் குழுமியுள்ள வட்டங்களில் கேட்கப்படும் வசனம் இது. ஏதோ டீ குடிக்கலாம் வா“னு சொல்வது போல தண்ணியடிக்கலாம் வா“னு கூப்பிட்றது இப்போ ஃபேசனாகிப் போய்டுச்சு. என்ன??? முறைக்கிறீங்களா??? ஏதோ அட்வைஸ் பண்ணப்போறேனு முகத்தை சுழிக்காதீங்க.. நான் அதெல்லாம் பண்ணல. அப்படியே பண்ணினாலும் அத யாரும் படிக்கப்போறதுமில்ல.. ஏன்னா உலகத்துலயே சுலபமான விசயம் அட்வைஸ் பண்றதுனும் கஷ்டமான விசயம் அந்த அட்வைஸ கேட்டு நடக்குறதும்னும் எனக்குத் தெரியும். எந்த விசயத்தப் பத்தி பேசுறதுக்கும் ஒரு அனுபவம் வேணும்னு சொல்வாங்க. ஆனா அது எல்லாத்துக்கும் பொருந்தாது. பத்தாவது மாடியில இருந்து குதிச்சா என்ன ஆகும்கு சொல்றதுக்கு, அப்டி குதிச்ச அனுபவம் இருக்கணும்னு அவசியம் இல்ல. என்ன நா சொல்றது?? சரி இப்ப என்ன சொல்ல வறேனு கேக்குறீங்களா?? ” சரக்கடிக்கிறவங்க எல்லாரும் சந்தோசமா சரக்கடிங்க.. ” அட ஆமாங்க.. எல்லாருக்குமே குடிக்கிறதுக்கு நிச்சயமா ஒரு காரணம் இருக்கும். நண்பர்கள் ட்ரீட், பார்ட்டி காதல் தோல்வி, குடும்ப பாரம், மன அழுத்...