சந்தோசமா சரக்கடிங்க..டேய் மாமா.. மனசே சரியில்லடா.. சரக்கடிக்கலாம் வறியா??
பெரும்பாலும் ஆண்கள் குழுமியுள்ள வட்டங்களில் கேட்கப்படும் வசனம் இது. ஏதோ டீ குடிக்கலாம் வா“னு சொல்வது போல தண்ணியடிக்கலாம் வா“னு கூப்பிட்றது இப்போ ஃபேசனாகிப் போய்டுச்சு.
என்ன??? முறைக்கிறீங்களா??? ஏதோ அட்வைஸ் பண்ணப்போறேனு முகத்தை சுழிக்காதீங்க.. நான் அதெல்லாம் பண்ணல. அப்படியே பண்ணினாலும் அத யாரும் படிக்கப்போறதுமில்ல.. ஏன்னா உலகத்துலயே சுலபமான விசயம் அட்வைஸ் பண்றதுனும் கஷ்டமான விசயம் அந்த அட்வைஸ கேட்டு நடக்குறதும்னும் எனக்குத் தெரியும்.
எந்த விசயத்தப் பத்தி பேசுறதுக்கும் ஒரு அனுபவம் வேணும்னு சொல்வாங்க. ஆனா அது எல்லாத்துக்கும் பொருந்தாது. பத்தாவது மாடியில இருந்து குதிச்சா என்ன ஆகும்கு சொல்றதுக்கு, அப்டி குதிச்ச அனுபவம் இருக்கணும்னு அவசியம் இல்ல. என்ன நா சொல்றது??
சரி இப்ப என்ன சொல்ல வறேனு கேக்குறீங்களா??
சரக்கடிக்கிறவங்க எல்லாரும் சந்தோசமா சரக்கடிங்க..
அட ஆமாங்க..
எல்லாருக்குமே குடிக்கிறதுக்கு நிச்சயமா ஒரு காரணம் இருக்கும். நண்பர்கள் ட்ரீட், பார்ட்டி காதல் தோல்வி, குடும்ப பாரம், மன அழுத்தம், பண்டிகை, குடித்துப் பார்க்கும் ஆர்வம்,...
இப்டி ஏதாவது ஒரு காரணம் கட்டாயமா இருக்கும். நீங்க தேவையில்லாம குடிக்கிறதில்லையே.. ஏன்னா நீங்க ரொம்ம்ம்ப நல்லவங்க..


ரொம்ப நாளைக்கப்பறம் நண்பர்கள் சந்தித்திச்சுகிட்டா அவங்க முதல்ல போற இடம் பார் தான். ஏன்னா அங்க தான மனசு விட்டு சந்தோசமா பேச முடியும். வீட்லயோ, பார்க்லயோ இல்ல வேற இடங்கள்ளயோ பேசினா உங்களுக்கு பேசின மாதிரியே இருக்காதே.. அதுனால அதுவும் சரிதான்.
இதுல இப்ப என்ன புதுசுனா நண்பர்கள் எல்லாம் சேந்து பீர் அடிக்கப் பழகிக்கிறது. என்னடானு கேட்டா அது சரக்கு லிஸ்ட்ல வராதாம். அதுனால அது கெட்ட பழக்கமில்லையாம். அதுலயும் பார்“க்கு போய் தண்ணியடிச்சாதான் தப்பாம். ரூம்கு வாங்கிட்டு வந்து அடிச்சா தப்பில்லையாம். அட அட என்ன ஒரு லாஜிக். செலவுக்கு காசு இருக்காது.. ஆனா சரக்கடிக்க மட்டும் எங்கிட்டு இருந்துதான் பெரட்டுவாங்களோ தெரியாது.. அதுல நீங்க கில்லாடி.. இதுக்காகவே உங்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தலாம்.


மற்ற விசயத்துல எப்படியோ. காதல் விசயத்துல சொல்லவே வேணாம்.. அதுல ஜெயிச்சுட்டா தண்ணி பார்ட்டி தான்.. தோத்துட்டா நண்பர்களுக்கு வாங்கித் தருவதையும் சேத்து தானே குடிச்சிட்டு அழுது புலம்புறது.. வெற்றி தோல்விங்கிறத தாண்டி அதுல சின்னதா சண்டை வந்தா கூட உடனே சரக்கடிச்சிட வேண்டியது. ஏன்னா அது தெய்வீக காதலாச்சே.. தண்ணியடிச்சு புலம்புறதுல தான நம்மலோட ஆழமான காதல அடுத்தவங்களுக்கோ இல்ல தனக்கேவோ புரிய வைக்க முடியும். அதுனால இதுல ஒண்ணும் தப்பில்ல..
அடுத்து கல்யாண பார்ட்டி.. கேட்டா பேச்சுலர் பார்ட்டியாம். நண்பர்களுக்காகவாம். அதுவும் கரெக்ட் தான். நட்பு இல்லையா.. நண்பன் இல்லையா.. செஞ்சு தான் ஆகணும். அப்டி பார்ட்டி வைக்கலேனா அது நட்பே இல்ல போல.. அவங்களோட நட்பு எந்த அளவு உண்மையானதுனு காட்றதுக்கு அவங்களுக்கு இத தவிர வேற வழியில்லையோ என்னவோ..?
அப்புறம் வாரத்திற்கு ஒரு தடவைனு வீட்ல அனுமதி வாங்கி குடிக்கிறது. அட ஆமாம்பா.. டெய்லி குடிக்கிறதுக்கு பதிலா, ஆறு நாள் கட்டுப்படுத்தி ஏழாவது நாள் மொத்தமா குடிக்கிறது எவ்ளோ பெரிய தியாகம்... ஒரு தியாகியா நீங்க அங்க நிக்கிறீங்க.. (எங்கனு கேக்காதீங்க)


அப்புறம் ஏதோ திராட்சை ரசமாம்.. அதாங்க வொய்னு. அது என்னவோ ஜூஸ் மாதிரியாம்.. உடம்புக்கு ரொம்ப சத்தாம், அதுனால தப்பில்லையாம். அதுக“கு நேரடியா திராட்சைய தின்னு தொலையலாமேனு கேட்டா, அதுல எஃபெக்ட் இல்லையாம். நியாயம் தானங்க.
உக்காந்து பேசுனா, ஒரு மணி நேரத்துல பிரச்சனை முடிஞ்சிடும். ஆனா செய்யமாட்டாங்க. ஒரு நாள் பூராவும் தண்ணிய போட்டுட்டு மப்புல திரிவாங்க. ஏண்டானு கேட்டா ஃபீல் பண்றாங்களாம்.. அது நமக்குப் புரியாதாம். ஆமாங்குறீங்களா?? ரைட்டு விடுங்க.
ஒரு சிலர் இருக்காங்க.. போர் அடிக்கிது அதுனால தண்ணியடிக்கிறேனு சொல்வாங்க. சரி சத்தமில்லாம போய்த் தூங்குங்கடானா, சலம்பல குடுத்தே சாவடிப்பாங்க. தூக்கிப் போட்டு நாலு மிதி மிதிக்கணும்னு நமக்குத் தோணவே தோணாது.
இதுலயும் சிலர், கௌரவத்துக்காகவும் பிசினஸ்க்காகவும் அப்புறம் ஃப்ரெண்ஸ் வற்புறுத்துனதாலயும் லைட்டா ஒரு பெக் போட்டேனு சொல்வாங்க. ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் குடிக்கும் போது நா மட்டும் குடிக்கலேனா தப்பா நெனப்பாங்கனு காரணம் சொல்வாங்க. (ஆஹா என்ன ஒரு ஃப்ரெண்ட்ஷிப்??) அவங்க எல்லாம் குடிகாரங்க வகைல இல்லாயாம். ஒரு பெக்குல ஆல்கஹால் இருக்காதோ என்னவோ?
இவங்க மப்புல புலம்புறத கேட்டுக்கேட்டே, இம்சை தாங்க முடியாம, கூட இருக்குறவங்க தண்ணியடிக்க ஆரம்பிச்சு ஃபுல் டைட்டாயிட்றாங்க. ஏதோ இவங்களால முடிஞ்ச ஒரு சமூக சேவை.


சரி ஏண்டா குடிச்சு உடம்ப கெடுத்துக்குற? அந்தக் கருமத்தை விட்டுத் தொலைக்கலாம்ல?“னு கேட்டா நாங்க ஒண்ணும் அதுக்கு அடிமையாகல. ஜஸ்ட் ஒரு ரிலாக்சேசன்அப்டினு சொல்வாங்க. ஓங்கி நாலு அறை விடலாம்னு நமக்குத் தோணவே கூடாது. ஏன்னா இவங்க ரொம்ம்ம்ம்ப நல்லவங்க.
தண்ணியடிச்சா பிரச்சனை தீராது, கொஞ்ச நேரம் மறக்கலாம் அவ்ளோதான். ஆனா நமக்கு அது தானே முக்கியம்.
அடுத்தவங்க எக்கேடு கெட்டுப்போனா நமக்கென்ன? எவ்ளோ கேவலமா நம்மள நெனச்சாலும் பரவாயில்ல. நம்ம உடம்ப பத்தி நமக்கே கவலையில்லாதப்ப அவங்க யாரு நம்மள கேள்வி கேக்க? நம்மள நம்பியிருக்குறவங்க அழுதாலோ வருத்தப்பட்டாலோ நாம கண்டுக்கலாமா? நம்ம சுயநலம் தான் நமக்கு முக்கியம்.
அதுனால மறுபடியும் சொல்றேன்.
சரக்கடிக்கிறவங்க எல்லாரும் சந்ந்ந்ந்ந்ந்தோஷமா சரக்கடிங்க.
.
.

Comments

சரக்கடிக்க சொல்றீங்களா இல்லையா ?? குழப்பறீங்களே ?

இப்பலாம் பொண்ணுங்க சர்வ சாதரணமா குடிக்கராங்க
இந்து நிறையவே அனுபவப்பட்டுருக்கீங்க போல சரக்கடிக்கிறவங்க கிட்ட இருந்து!
//LK said..

சரக்கடிக்க சொல்றீங்களா இல்லையா ?? குழப்பறீங்களே ?//

தெளிவா படிச்சீங்கனா கண்டிப்பா புரியுமே??

//இப்பலாம் பொண்ணுங்க சர்வ சாதரணமா குடிக்கராங்க//

கண்டிக்க வேண்டியவங்களும் கூட சேந்து குடிச்சா அப்படிதான் இருக்கும்.
ஃபேசன்“னு சொல்லி தப்பிச்சிக்குறாங்க.
இல்லனா பொது உரிமைங்குற பேர்ல பண்றாங்க. கெட்டுப்போறதுக்கு என்ன காரணம் சொன்னா என்ன?? தப்பு தப்பு தான?
என்னமோ எழுதிருக்கீங்க. எனக்கு மங்கலா தெரியுது. இருங்க ஒரு கட்டிங் விட்டுட்டு வந்து தெளிவா படிகிர்ர்ர்ரர்ர்ர்ர் ர்ர்ரேஏஏந்
டொட்டடொய்ய்ய்ய்
டேய் மாமா ஒரு குவார்ட்டர் சொல்லு!
சரக்கடிப்பதை நியாயப்படுத்த பலர் இருக்கிறார்கள்....

இப்போது சரக்கடிக்காதவர்களை பாதி மனிதர்களாக பார்க்கிறது சமூகம்
Saran said…
//
அருண் பிரசாத் said...
சரக்கடிப்பதை நியாயப்படுத்த பலர் இருக்கிறார்கள்....

இப்போது சரக்கடிக்காதவர்களை பாதி மனிதர்களாக பார்க்கிறது சமூகம்.

//

சமூகம்னா தமிழக அரசா அருண்?
ரொம்ப பெரிய பதிவா வேற இருக்கு .
அதவிட அந்த போட்டோல எல்லோரும் கைல ....
( நான் அதோட பேரு கூட சொல்ல மாட்டேன் .. அவ்ளோ நல்லவன் )
அதனால நான் கிளம்புறேன் .!!
ஹா ஹா ஹா!! பயங்கர கோவமா எழுதியிருக்கீங்க..

ஆனால் உண்மைதான்.. நல்ல பதிவு..
// நம்ம உடம்ப பத்தி நமக்கே கவலையில்லாதப்ப அவங்க யாரு நம்மள கேள்வி கேக்க? நம்மள நம்பியிருக்குறவங்க அழுதாலோ வருத்தப்பட்டாலோ நாம கண்டுக்கலாமா? நம்ம சுயநலம் தான் நமக்கு முக்கியம். //

அட ., நீங்களும் நல்லவர் தானா .. !!
//உக்காந்து பேசுனா, ஒரு மணி நேரத்துல பிரச்சனை முடிஞ்சிடும். ஆனா செய்யமாட்டாங்க. ஒரு நாள் பூராவும் தண்ணிய போட்டுட்டு மப்புல திரிவாங்க. ஏண்டானு கேட்டா ஃபீல் பண்றாங்களாம்.. அது நமக்குப் புரியாதாம். ஆமாங்குறீங்களா?? ரைட்டு விடுங்க.
//

இது சரிதாங்க .. ஆனா சிலர் தண்ணி அடிச்சாதான் நிம்மதி அப்படின்னு நினைக்கிறாங்களே .!!
அதுனால மறுபடியும் சொல்றேன்.

சரக்கடிக்கிறவங்க எல்லாரும் சந்ந்ந்ந்ந்ந்தோஷமா சரக்கடிங்க.///

என்ன இருந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே , எவ்ளோ அனலைஸ் பன்னி என்ன நேர்மையா ஒரு தீர்ப்பு சொல்லி இருக்கீங்க ஹெட் ஆஃப். ரொம்ப நன்றிங்க
இப்படிக்கு
குடிக்க காரணம் தேடும் போது குறுக்கே வந்து வாய்ப்பு தருவோரை வாழ்த்தி குடிக்க ஆரம்பிப்போர் சங்கம்
Balaji saravana said…
//ஆனா சரக்கடிக்க மட்டும் எங்கிட்டு இருந்துதான் பெரட்டுவாங்களோ தெரியாது.. அதுல நீங்க கில்லாடி.. இதுக்காகவே உங்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தலாம்.//

எங்கள ரொம்ப புகழாதீங்க இந்திரா.. ஹி ஹி.. :)
கண் மண் தெரியாம சரக்கடிச்சிட்டு சாக்கடையில சரிஞ்சி கிடக்கிறது தப்புங்க..

ஆனா சோசியல ஒரு கட்டிங் அடிக்கிறது தப்பே இல்லை..


மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்.
///அப்புறம் வாரத்திற்கு ஒரு தடவைனு வீட்ல அனுமதி வாங்கி குடிக்கிறது. அட ஆமாம்பா.. டெய்லி குடிக்கிறதுக்கு பதிலா, ஆறு நாள் கட்டுப்படுத்தி ஏழாவது நாள் மொத்தமா குடிக்கிறது எவ்ளோ பெரிய தியாகம்... ஒரு தியாகியா நீங்க அங்க நிக்கிறீங்க.. (எங்கனு கேக்காதீங்க)///

நன்றி... இங்கதான் நீங்க நிக்கிறீங்க..!
மாபிள்ள ஒரு புல் சொல்லேன்.. அப்படியே கொஞ்சம் சைடிசும் சொல்லேன்... வாட்டர் பாக்கெட் மறந்திராத மாப்பு...
///மங்குனி அமைசர் said...
அதுனால மறுபடியும் சொல்றேன்.

சரக்கடிக்கிறவங்க எல்லாரும் சந்ந்ந்ந்ந்ந்தோஷமா சரக்கடிங்க.///

என்ன இருந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே , எவ்ளோ அனலைஸ் பன்னி என்ன நேர்மையா ஒரு தீர்ப்பு சொல்லி இருக்கீங்க ஹெட் ஆஃப். ரொம்ப நன்றிங்க
இப்படிக்கு
குடிக்க காரணம் தேடும் போது குறுக்கே வந்து வாய்ப்பு தருவோரை வாழ்த்தி குடிக்க ஆரம்பிப்போர் சங்கம்////

@மங்குனி... அப்புடியே நமக்கும் ஒரு Half சொல்லும்.. ஆரம்பிப்போம்...அதன் அம்மணியே சொல்லீடுச்சில்ல? வூட்ல யாராவது கேட்ட அம்மணி பதிவ காட்டுவோம்.. இந்திரா நன்றிங்க..சியர்ஸ்..
நிறையா நல்லவங்க இருப்பாங்க போலயே!
logu.. said…
onnume velangakla..

oru cutting pottathan theliva therium pola..
என்னங்க.. திடீர்ன்னு இப்படி ஆகிட்டீங்க... டைட்டில் பார்த்துட்டு நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன். குடிமகன்கள் ஓட்டு எல்லாம் உங்களுக்குத்தான் போங்க
இது அந்நிய நாட்டு சதி
Saran-DBA said…
enna prachanai sir ipo? vaanga pesi theethukkalam. Thanni neenga snacks naanu!

weekend vandhu tholaikara nerathula ivalo perusa thaniya pathi vilakina vilangidum ponga.
அவர்களாக நினைக்கும் வரை அப்பழக்கத்தை நிறுத்த முடியாது. அப்படியே நிறுத்த வைத்தாலும் அது தற்காலிகமே!
//அப்புறம் ஏதோ திராட்சை ரசமாம்.. அதாங்க வொய்னு. அது என்னவோ ஜூஸ் மாதிரியாம்.. உடம்புக்கு ரொம்ப சத்தாம், அதுனால தப்பில்லையாம். அதுக“கு நேரடியா திராட்சைய தின்னு தொலையலாமேனு கேட்டா, அதுல எஃபெக்ட் இல்லையாம். நியாயம் தானங்க.//

:)
தண்ணி அடிக்கிறவங்க கூட பக்கத்திலேயே இருந்து ரசிச்சு இருப்பீங்க போல...
எனிவே ஒரு நல்ல பதிவு...
ரொம்ப அழகா இருக்கு எழுத்து நடை...

"அடுத்தவங்க எக்கேடு கெட்டுப்போனா நமக்கென்ன? எவ்ளோ கேவலமா நம்மள நெனச்சாலும் பரவாயில்ல. நம்ம உடம்ப பத்தி நமக்கே கவலையில்லாதப்ப அவங்க யாரு நம்மள கேள்வி கேக்க?"

இது சூப்பர் பாயிண்டுங்க...! நச்...!
vinu said…
emma indhira tea innum varlaiiiiiiiii

yaar mealayooo kolai verilla pathivu pottu irrukkura maathiri theriyuthuuuuuuuuuuuuuuuuuuu


intha vilayaattukku naan varalaingooooo
raja said…
நல்ல பதிவு இதை படித்துவிட்டு சரக்கு அடிக்காம இருந்த சரி
அன்னு said…
//சரக்கடிக்க சொல்றீங்களா இல்லையா ?? குழப்பறீங்களே ?//
ஒரு வேளை சரக்கை பத்தி எழுதினதாலேயே குழம்பிட்டீங்களோ...ஹிஹி

அதை விடுங்க...நாலாவது ஃபோட்டோல சாரை கொஞ்சம் உக்காரச் சொல்லி ஃபோட்டோ பிடிச்சிருக்கலாம்...ஆனாலும் உங்க ரசனையே தனிதான் போங் :)
venkat said…
தலை இப்பவே தலை சுத்துதே !!
உள் குத்தல் மாதிரி தெரியுதே
நீங்க சரக்க அடிக்க சொல்லறீங்களா? இல்லை வேண்டாம்னு சொல்லறீங்களா? தமிழ்நாட்டு அரசியல்வாதி மாதிரியே பேசறீங்களே, எதிர்காலத்தில் அரசியலுக்கு வர்ற ஐடியா உண்டா?
இதுவரைக்கும் உங்க பேச்ச கேட்டதில்ல... இந்த ஒரு விஷயத்துலயாவது உங்க பேச்ச கேட்டுக்குறோம்...
உவ்வ்வ்வ்வ்வ்வே...


நல்லா உறைக்கிற மாறி சொல்லுங்க...
ஹா..ஹா...
( ஊர்ல நல்லா.. உறைக்கிற ஊறுகாய் எங்கேங்க கிடைக்கும்?.. சும்மா ஜெனரல் நாலெட்ஜ்-கு கேட்டேன்)
இதென்ன "turn court" மாதிரி இருக்கு.... ;-)
:) சரி எப்பவாவது சரக்கடிக்கிறது குத்தமா?
R.Gopi said…
இந்திரா.......

சரக்கு ஓகே....

சைட் டிஷ் எங்க??
மன்னிக்கவும்... இந்திரா...!
தங்கள் கருத்தில் மாறுபடுகிறேன்...!

இன்றைய நிலவரப்படி...
இந்தியாவில் பெண்கள் அதிகமாய் மது அருந்துகிறார்கள்...
அதிலும் குறிப்பாக...!
குப்பத்திலிருந்து... ஏ.சி. ரூம் வரை...
பெரும்பான்மையான பெண்கள் "தண்ணி"யடிப்பதில் முன்னிலையில் இருக்கிறார்கள்...
எடுத்துக்காட்டு... ஒரு வருடத்திற்கு முன் வெளி வந்த ஒரு தமிழ் வாரஇதழில்... ஓர் குப்பத்து பெண் ராவாக... டாஸ்க்மார்க் கடை முன் தண்ணியடிப்பது தமிழ்நாட்டில் சகஜம்...

மேல்தட்டுமக்க்ளால் அதற்கு பேஷன் என எனப் பெயரிட்டு அழைக்கிறார்கள்...

இக்காலத்தில் ... தாங்கள்... ஆண்களை மட்டும் குறை சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்...!

நட்புடன்...
காஞ்சிமுரளி...
நண்பர் காஞ்சி முரளிக்கு..

நான் ஆண் பெண் என்ற வேறுபாட்டை சுட்டிக்காட்டவில்லை. பொதுவானதாக இருக்கும் குடிப்பழக்கத்தை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன். நண்பர் LK-க்கு சொன்ன பதில் தான் தங்களுக்கும்.
”கண்டிக்க வேண்டியவங்களும் கூட சேந்து குடிச்சா அப்படிதான் இருக்கும்.
ஃபேசன்“னு சொல்லி தப்பிச்சிக்குறாங்க.
இல்லனா பொது உரிமைங்குற பேர்ல பண்றாங்க. கெட்டுப்போறதுக்கு என்ன காரணம் சொன்னா என்ன?? தப்பு தப்பு தான?”

தங்கள் கருத்துக்கு நன்றி.
அடடடா... போதையில் எழுதி விட்டீர்களோ...(சும்மா சொன்னேன்)..

உங்கள் மனதின் நல்ல எண்ணம் புரிகிறது..

மாற்றப் பட வேண்டியது குடிப்பழக்கம் மட்டும் இல்லை சகோதரி.. இன்னும் நிறைய இருக்கின்றன...

சாமக்கோடங்கி..
Chitra said…
உள் குத்து - வெளி குத்து எல்லாம் பலமா இருக்கே! சூப்பர்!
யெக்கா எனக்கொரு கோட்டர் சொல்லுங்க....
யெக்கா.. ஒரு கோட்டர் சொல்லுங்க.....
HariShankar said…
indha padhivaiyum.. appadiye yella pinootangalayum padichen....

mudhalil nalla sirika mudinjudhu... aana siripu mattum illai nenga sonna karuthum sonna vidhamum miga arumai...

orey oru vendukol. nenga sonnadhu podhuva dhan.. aana pugaipadam sonna incident yellame adhiga pacham aangal pathinadhu mattume.. onnu rendu idangalil reply for // LK & கவிதை காதலன் // le soleerukenga... adhanala idhu aangalai mattuem sonna madhiri oru assumption'le kondu pooi vitududhu... :(

yenna panna unmai sila nerangal'le kasaka dhan seiyum onnu panna mudiyadhu..

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..