இதெப்படி இருக்கு???


ரெண்டு நாளைக்கு முன்னாடி என் சொந்தக்காரர் ஒருத்தர் வீட்டு கிரஹப்பிரவேசத்துக்குப் (அதாங்க.. புது வீடு பால் காய்ச்சினதுக்கு) போயிருந்தேன். அங்க நிறைய பேர் வந்திருந்தாங்க. பால் காய்ச்சி சாமி எல்லாம் கும்புட்டுட்டாங்க. என்னென்னவோ சாஸ்த்திரமெல்லாம் பண்ணினாங்க. வீட்டுக்கு சொந்தக்காரர் தன்னோட புது வீட்டப் பத்தி வந்திருந்த எல்லார்கிட்டயும் ரொம்பப் பெருமையா பேசிகிட்டு இருந்தாரு. மார்பில்ஸ் போட்டதிலருந்து கதவு, ஜன்னல் செஞ்சது வரைக்கும் எல்லாமே மாடர்னா பண்ணிருக்குறதா சொல்லிகிட்டு இருந்தாரு. வெளிநாட்டு ஸ்டைல்ல ப்ளான் பண்ணி கட்டினதா பேசிகிட்டு இருந்தாரு. கொஞ்ச நேரம் கழிச்சு எல்லாருக்கும் பந்தி போட்டாங்க, நாங்களும் சாப்பிட்டோம். (அதுக்கு தான வந்ததே..) அப்புறம் மொய் எழுதினோம். (எம்புட்டுனு கேக்காதீங்க.)

திடீருனு அங்க இருந்த ஒரு பெரியவர், வீட்டு உரிமையாளர் கிட்ட போயி ”எனக்கு வவுத்த கலக்குதுப்பா, பாத்ரூம் எங்க இருக்கு”னு கேட்டாரு. அவரும் பாத்ரூமுக்கு கூட்டிட்டு போனார். வெஸ்டர்ன் டைப்னால எனென்ன பண்ணனும்னும் சொல்லி அனுப்பிட்டு வந்து, மறுபடியும் பெருமை பேச ஆரம்பிச்சாரு. ”பாத்ரூம்ல ரொம்பவே காஸ்ட்லியான டைல்ஸ் பதிச்சிருக்கோம், ஷவர், பாத் டப் எல்லாமே அழகா அமைச்சிருக்கோம், வெஸ்ட்டர்ன் டாய்லட் போட்ருக்கோம். ரொம்பவே மாடலா இருக்கு” அப்டி இப்டினு ஓவரா பீத்திகிட்டு இருந்தாரு.

கொஞ்ச நேரம் கழிச்சு அந்தப் பெரியவர் வெளிய வந்தாரு. நேரா வீட்டு ஓனர்கிட்ட போயி, ”ஏம்பா.. எல்லாமே நல்லா தான் இருக்கு, கழுவுறதுக்கு எந்த சுட்ச் போடணும்னு தெரியலயே”னு அப்பாவியா சொன்னாரு. டாய்லட் வெஸ்டர்னா இருக்குறத பாத்துட்டு அதுல உட்கார்ந்ததும் தண்ணியோட சேந்து உள்ள இருந்து ஏதோ கை மாதிரி மெஷின் வந்து கழுவிவிடும்னு நெனச்சிட்டாராம்.. இதெப்படி இருக்கு.

முன்ன பின்ன அவரு வெஸ்ட்டர்ன் டாய்லட் பாத்ததே இல்லாயாம்.. அதுனால கழுவுறதுலயும் ஏதாவது நவீனம் வந்திருக்குமோனு நெனச்சிட்டாரு. அவருக்கு ஒரு வழியா வௌக்கம் சொல்லி புரியவைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. ”அட என்னப்பா பாத்ரூம் கட்டியிருக்க?? மனசுக்கு ஒரு நெறைவாவே இல்ல.. வீட்டுக்குப் போயி நல்லா “போகணும்”னு சொல்லிட்டு கௌம்பிட்டாரு. அவருக்கு வழக்கமான டாய்லெட்ல போற வசதி இதுல இல்லையாம்.

இப்ப என்னதான் சொல்ல வற்றனு கேக்குறீங்களா??

என்னதான் நாம நவீனமா மாறிட்டாலும் ஒரு சில “அடிப்படை“ விஷயங்கள மாத்த முடியாது. (ஹிஹி)

ஹும்.. எப்புடியெல்லாம் பதிவு போட்டு சமாளிக்க வேண்டியிருக்கு..
.

Comments

:))))))

//
என்னதான் நாம நவீனமா மாறிட்டாலும் ஒரு சில “அடிப்படை“ விஷயங்கள மாத்த முடியாது. (ஹிஹி) //

ஹி ஹி கருத்து கருத்தம்மா இந்திரா வாழ்க வாழ்க :)
Balaji saravana said…
//ஹும்.. எப்புடியெல்லாம் பதிவு போட்டு சமாளிக்க வேண்டியிருக்கு..//
நீங்களே சொல்லிட்டீங்க.. நாங்க வேற என்ன சொல்ல :)
//தண்ணியோட சேந்து உள்ள இருந்து ஏதோ கை மாதிரி மெஷின் வந்து கழுவிவிடும்னு நெனச்சிட்டாராம்//

அட அதுக்கும் இப்போ வந்துடுச்சிங்க. நீங்க ரிமோட்ல பிரஸ் பண்ணா ஒரு சின்ன டியூப் உள்ளுக்குள்ளயே வந்து தண்ணி பிச்சி அடிக்கும். விளம்பரம் பார்க்கலையா நீங்க
siva said…
:)))
எப்புடி எல்லாம் யேசனை பண்றங்கப்பா..
நண்பர்களே ..பாக்கிற ஒரு விசியதிலும்
ஒரு ப்ளாக் போஸ்ட் எழுதலாம்னு ஐடியா குடுத்த
பதிவு உலக நகைச்வை அரசி என்கிற பட்டம் வழங்கபடுகிறது
வாழ்த்துக்கள்...
// என்னதான் நாம நவீனமா மாறிட்டாலும் ஒரு சில “அடிப்படை“ விஷயங்கள மாத்த முடியாது. (ஹிஹி) //

ஆஹா இத இப்படி கூட சொல்லலாமா..?? "அடிப்படை" அழகா சொல்லிட்டீங்க!!
dharumi said…
அதுனால கழுவுறதுலயும் ஏதாவது நவீனம் வந்திருக்குமோனு நெனச்சிட்டாரு.//

சொல்ல நினச்சதை அருண் சொல்லிட்டாரே ..... :(
அவ்வ்வ்வ்வ்வ்வ்..........அவ்வ்வ்வ்வ்வ்வ்..........அவ்வ்வ்வ்வ்வ்வ்..........

///ஹும்.. எப்புடியெல்லாம் பதிவு போட்டு சமாளிக்க வேண்டியிருக்கு..////

ஆனாலும் கடைசீல உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு
டிவி யில வர விளம்பரத்தைப் பார்த்திருப்பார்ன்னு நினைக்கிறேன் :)
//என்னதான் நாம நவீனமா மாறிட்டாலும் ஒரு சில “அடிப்படை“ விஷயங்கள மாத்த முடியாது. (ஹிஹி) //

கண்டிப்பாக
// ”அட என்னப்பா பாத்ரூம் கட்டியிருக்க?? மனசுக்கு ஒரு நெறைவாவே இல்ல.. வீட்டுக்குப் போயி நல்லா “போகணும்”னு சொல்லிட்டு கௌம்பிட்டாரு.//
வெஸ்டேர்ன் டாயிலெட் சுகாதாரமானதுதான்.. இருந்தாலும், ஒரு இந்தியமுறை டாயிலெட்டாவது இருந்தால் நல்லது என நினைக்கிறேன். அல்லது 'sitting cum squatting' வகை டாயிலெட் அமைக்கலாமே !
// எல்லாமே நல்லா தான் இருக்கு, கழுவுறதுக்கு எந்த சுட்ச் போடணும்னு தெரியலயே//


இருக்குற லைட் சுவிட்சையெல்லாம் போட்டு பார்த்திருப்பாருன்னு நினைக்கிறேன் :-)
HariShankar said…
//
என்னதான் நாம நவீனமா மாறிட்டாலும் ஒரு சில “அடிப்படை“ விஷயங்கள மாத்த முடியாது. (ஹிஹி)

ஹும்.. எப்புடியெல்லாம் பதிவு போட்டு சமாளிக்க வேண்டியிருக்கு.. // kadaisee rendu varile nachunu soleetenga... unmaiyai :)

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..