டீன்-ஏஜ் ஜாக்கிரதை..


தொழில்நுட்பம்குறது நம்மளோட அறிவ வளத்துக்குறதுக்கும் தகவல்கள தெரிஞ்சுக்குறதுக்கும் உபயோகமா இருக்குற சாதனம் தான். ஆனா இன்னைக்குள்ள வாழ்க்கை முறைல இளைஞர்களோட வாழ்க்கைப் பாதையை வெகுவா மாத்துறது இந்த தொழில்நுட்பங்கள் தான்னு சொல்லலாம். முக்கியமான உதாரணமா இணையத்த சொல்லலாம். இளைஞர்கள்னு கூட சொல்ல முடியாது. சின்னப் புள்ளைய்ங்க கூட அசால்ட்டா இன்டர்நெட் யூஸ் பண்ணுதுங்க. கேம்ஸ் விளையாட்றதுல தொடங்கி பெரிய பெரிய விஷயங்களெல்லாம் தானா கத்துக்குதுக. அது நல்ல விசயமா இருந்தா பரவாயில்லை.. ஆனா தேவையில்லாத வேலையெல்லாம் இணையத்துல பண்றாய்ங்க.

தப்பான பேர்ல ச்சாட் பண்றதுல ஆரம்பிச்சு கண்ட கண்ட இணையதளத்த மேயுறது வரைக்கும் எல்லா 420 வேலையும் செய்றானுங்க.

என் பக்கத்து வீட்டுல குடியிருக்குறவங்களுக்கு பத்தாவது படிக்கிற ஒரு பையன் இருக்கான். அவங்களுக்குப் படிப்பறிவு கம்மி, ஆனாலும் நல்ல வசதியானவங்க. அவன் ஒரே பையன்குறதுனால அவன் கேட்டான்னு கம்ப்யூட்டர், செல்போனெல்லாம் வாங்கி குடுத்துருக்காங்க. அந்தப் பையன எனக்குச் சின்ன வயசுலருந்தே தெரியும்குறதுனால என்கிட்ட நல்லா பேசுவான்.

பாக்குறதுக்கு ரொம்ப அப்பாவி மாதிரி இருப்பான். ஆனா கம்ப்யூட்டர்ல உக்காந்துட்டான்னா எப்ப பாத்தாலும் ஆர்குட், ஃபேஸ்புக், ச்சாட்டிங்னு தான் அவனோட பொழுது கழியும். ஆரம்பத்துல நா கூட இவன ரொம்ப நல்ல்ல்வன்னு நெனச்சேன். ஆனா என்னோட தோழி ஒருத்திகிட்டயே தப்பான பேர்ல இவனோட ச்சாட்டிங் வேலைய காமிச்சு என்கிட்ட மாட்டிகிட்டான். அப்புறம் தான் தெரிஞ்சது, இவன் படிக்காம கண்ட கண்ட இணைதளமெல்லாம் நைட்ல பாக்குறன்னு. அது மட்டுமில்லாம ரெண்டு பொண்ணுங்ககிட்ட ச்சாட்டிங்கல லவ் டயலாக் விட்டுகிட்டு இருக்கான்னு தெரியவந்துச்சு. கூப்ட்டு கண்டிச்சேன். இவனுங்களுக்குத்தான் அட்வைஸ் பண்றவங்களப் பிடிக்காதே.. என்கிட்ட பேசுறத நிறுத்திட்டான். அவங்க அம்மா கிட்ட சொன்னதுக்கு “அவன் சின்னப்புள்ளமா, அந்தளவுக்கெல்லாம் விவரம் இல்லாதவன், நீ வீணா எதையாவது சொல்லாத“னு என்கிட்ட கோவப்பட்டாங்க.

அவனுக்கு மிஞ்சிப்போனா பதினஞ்சு வயசு தான் இருக்கும். அவன கண்டிச்சாலும் அட்வைஸ் பண்ணினாலும் எடுத்துக்கொள்ளாத பருவம் இது. ஆனாலும் அவன தனியா கூப்ட்டு “சகோதரனா நெனச்சு உனக்கு ஒரே ஒரு அட்வைஸ் பண்றேன். கேக்குறதும் கேக்காததும் உன் இஷ்டம்“னு சொன்னேன். அவன் வழக்கமான ஏளனச் சிரிப்போட “ஆரம்பிச்சுட்டீங்களா“ங்குற மாதிரி பாத்தான்.

“இந்த வயசுல உனக்கு எல்லாமே சகஜமா தெரியலாம், இதுலென்ன தப்பிருக்கு?னு தான் தோணும். ஆனா ஒண்ணு மட்டும் மனசுல வச்சிக்க. சில வருஷத்துக்கப்புறம் ஒரு மெச்சூரிட்டி வரும்போது உன்னப்பத்தி நீ நெனச்சுப் பாக்குற நேரத்துல, பெருமையா நெனைக்கலனாலும் “நாமளா இவ்ளோ கேவலமா நடந்துகிட்டோம்“னு தோணிடக் கூடாது. அடுத்தவன் முன்னாடி நீ நல்லவன் மாதிரி நடிச்சிட்டுப் போயிடலாம். ஆனா உனக்கு நீ உண்மையா இரு. அந்தந்த வயசுல உனக்கு கெடைக்க வேண்டியதெல்லாமே கட்டாயம் கெடைக்கும். இப்போ உனக்குப் படிப்பு தான் முக்கியம். உங்கம்மா உன் மேல வச்சிருக்குற நம்பிக்கைய கெடுத்துக்காத. இதுனால உனக்கு என் மேல வெறுப்பு கூட வரும். ஆனா சொல்லனும்னு தோணுச்சு சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்“னு நேருக்கு நேரா அவனோட கண்ணப் பாத்து சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

இப்பவும் அவன் ச்சாட் பண்ணிகிட்டு, போன் பேசிகிட்டு தான் இருக்கான். பெத்தவங்க குடுக்குற செல்லம் தான் இந்த மாதிரியான பசங்கள ரொம்பவே கெடுக்குது. அதுக்காக எந்நேரமும் சந்தேகக் கண்ணோடு பாக்கணும்னு சொல்லல. ஆனாலும் கொஞ்சம் கவனமாவும் இருக்கணும். ஆண் பெண் நட்பு சகஜமாகிட்டு வரும் காலமிது. ஆனாலும் அது நட்புக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் பட்சத்தில் தவறாகப் போகாது. டீன்-ஏஜ் வயசுல இனக்கவர்ச்சி ஏற்பட்றது தவிர்க்க முடியாத விசயம் தான். அந்த அபாயத்துல இருந்து தங்கள வெளில கொண்டுவர்றது தான் இவங்களுக்குப் பெரும்பாடு. தலைமுறை இடைவெளி, நட்பு வட்டாரம், காதல், காமம், கெட்ட பழக்க வழக்கங்கள், படிப்பு, திமிர்.. இப்டி எல்லாமே ஒருசேர கலந்து குழப்புற வயசு தான் இந்த டீன்-ஏஜ் பருவம். இது பெத்தவங்களையே விரோதியா பாக்க வைக்கும். தங்களோட வாழ்க்கையையே நிர்ணயிக்கிறது இந்த வயது தான்ங்குறத இவங்க புரிஞ்சுக்குறதில்ல. இந்த வயசுல இவங்க எடுக்குற முடிவுகளோட பாதிப்பு, வாழ்க்கையோட கடைசி நாள் வரைக்கும் ப்ரதிபலிக்கும். சாதாரண விஷயம் தானே.. சகஜமா நடக்குற சம்பவம் தானேனு தோணலாம். ஆனா சின்னச் சின்ன தவறுகள் தான் பெரிய பாதிப்புக்கு காரணமா அமையும். எதையும் தெரிஞ்சுக்கணும்குற ஆர்வம் தான் இவங்கள தவறு செய்ய தூண்டுது.

“நீ தப்பு பண்ணிகிட்டு இருக்க. ஆனா அது தப்புனு உனக்குப் புரியுற நேரத்துல, அதுக்காக மன்னிப்பு கேக்குற சந்தர்ப்பம் உனக்குக் கெடைக்காமலே போகலாம்“னு ஒரு வசனம் உண்டு. இது தான் இன்னைக்கு இவங்களோட நிலைமையும். பெத்தவங்க இவங்ககிட்ட தோழமையோட பழகும்போதும், வெளிப்படையா எண்ணங்கள பகிர்ந்துக்கும்போதும் இந்த மாதிரியான தப்புக்கள் குறைய வாய்ப்பிருக்கு. திணிக்கப்படாத அக்கறைகளும் சரியான வழிகாட்டுதல்களும் தான் இந்தப் பருவத்தில் இவர்களுக்குத் முக்கியமாகத் தேவை.

.

.

Comments

logu.. said…
hi..hi... adichutomla...
நான் ஆர்குட்லயும், ஃபேஸ்புக்லயும் இருக்குறப்போ பொய்யான பெயர்ல ப்ரொஃபைல் ்வச்சுகிட்டு இந்த மாதிரி நிறைய பேர் பேசுவானுங்க.. கடுப்பாகி இப்ப ஃபேஸ்புக் அக்கவுன்ட்டையே டெலிட் பண்ணிட்டன்.. எப்பதான் திருந்துவாங்களோ.!! ஆனா அக்கா இப்ப பொண்ணுங்க கூட இப்படி ஆயிடுறாங்க.. ரொம்ப வருத்தமா இருக்கு..


என்னையும் பாருங்க,
http://avanidamnaan.blogspot.com/
அட்வைஸ் என்கிற வார்த்தையை அகராதியில இருந்து உடனே நீக்கணும்னு போராட்டம் பண்ணினாலும் பண்ணுவாங்க...!!!
ஆமா அடுத்த நாள் உங்க பைக் பன்சர் ஆகவில்லை'தானே....
logu.. said…
\\திணிக்கப்படாத அக்கறைகளும் சரியான வழிகாட்டுதல்களும் தான் இந்தப் பருவத்தில் இவர்களுக்குத் முக்கியமாகத் தேவை.
\\

Vazhimozhigiren...
எவ்வளவுதான் காத்திருந்தாலும் வடை மட்டும் மிஸ் ஆகிருதே.....
ஏன் எனக்கு மட்டும் இப்பிடி நடக்குது....
தெளிவான பார்வை...இப்ப அவசியமும்கூட

வாழ்த்துக்கள் சகோ...
Dhushi said…
M....
I feel my sister on ur word accka....
i missed her
ரேவா said…
நீ நெனச்சுப் பாக்குற நேரத்துல, பெருமையா நெனைக்கலனாலும் “நாமளா இவ்ளோ கேவலமா நடந்துகிட்டோம்“னு தோணிடக் கூடாது. அடுத்தவன் முன்னாடி நீ நல்லவன் மாதிரி நடிச்சிட்டுப் போயிடலாம். ஆனா உனக்கு நீ உண்மையா இரு. அந்தந்த வயசுல உனக்கு கெடைக்க வேண்டியதெல்லாமே கட்டாயம் கெடைக்கும்.


டீன்-ஏஜ் ஜாக்கிரதை..

தொழிநுட்பம் என்ற பெயரில் நம்பவர்கள் செய்யும் செயலை வருத்தத்துடன் பதிவு செய்துள்ளேர்கள்.. உங்கள் ஆதங்கம் புரிகிறது தோழி.. வாழ்த்துக்கள்....
karthikkumar said…
நல்ல பதிவுங்க .. :)
karthikkumar said…
ஆனா இந்த மாதிரி எல்லாம் பதிவு போட்டீங்கன்னா எப்படி கலாய்க்கறது.... :(
இனையம் என்பது கண்ணுக்கு தெரியாத உயிர்கொல்லி கவனமாயிருங்கள் நயவஞ்சகர்கள் நாகரீகமாக பேசி உங்கள் தலை எழுத்தை மாற்றிவிடுவார்கள், இனைய வழியிலான நட்பு என்றால் கொஞ்சம் கவணமாக இருங்கள் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காரணம் இங்கு இருவருக்குமே முக மூடி உண்டு

இதை இன்றைய இணைய நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
sulthanonline said…
கண்டிப்பாக இந்த மாதிரியெல்லாம் நடக்குது பெற்றோர்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். teenage வயசில் அவர்களிடம் எது சரி, தவறு என்பதை புரியும் படியாக பெற்றோர்கள் எடுத்து கூறுவது மிக அவசியம்.
kalai said…
திணிக்கப்படாத அக்கறைகளும் சரியான வழிகாட்டுதல்களும் தான் இந்தப் பருவத்தில் இவர்களுக்குத் முக்கியமாகத் தேவை. nalla idea parentsku
சரி என்னமோ சொல்லிருக்கீங்க . என் பிகர் கிட்ட சாட்ல இருக்கேன். அப்புறமா வந்து படிக்கிறேன் .ஹிஹி
உங்க குழந்தை வளர்ந்துட்டு வர்ர இந்த நேரத்துல ஒரு பொறுப்பான அம்மாவா ஒரு பொறுப்பான பதிவு
karthikkumar said...

ஆனா இந்த மாதிரி எல்லாம் பதிவு போட்டீங்கன்னா எப்படி கலாய்க்கறது.... :(//


அட பாவி மக்கா பதிவை படிச்சிட்டியா?
karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
karthikkumar said...

ஆனா இந்த மாதிரி எல்லாம் பதிவு போட்டீங்கன்னா எப்படி கலாய்க்கறது.... :(//


அட பாவி மக்கா பதிவை படிச்சிட்டியா///

இல்ல மக்கா சும்மா படம் பாத்தேன்... ஹி ஹி//


அதான அந்த பயம் இருக்கணும். பின்ன இந்திரா அக்கா கோவிச்சுப்பங்களே
karthikkumar said…
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
karthikkumar said...

ஆனா இந்த மாதிரி எல்லாம் பதிவு போட்டீங்கன்னா எப்படி கலாய்க்கறது.... :(//


அட பாவி மக்கா பதிவை படிச்சிட்டியா///

இல்ல மக்கா சும்மா படம் பாத்தேன்... ஹி ஹி
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
karthikkumar said...

ஆனா இந்த மாதிரி எல்லாம் பதிவு போட்டீங்கன்னா எப்படி கலாய்க்கறது.... :(//


அட பாவி மக்கா பதிவை படிச்சிட்டியா///

இல்ல மக்கா சும்மா படம் பாத்தேன்... ஹி ஹி//


அதான அந்த பயம் இருக்கணும். பின்ன இந்திரா அக்கா கோவிச்சுப்பங்களே//

யப்பா ராசா முடியல.. முடியல...
மாணவன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
karthikkumar said...

ஆனா இந்த மாதிரி எல்லாம் பதிவு போட்டீங்கன்னா எப்படி கலாய்க்கறது.... :(//


அட பாவி மக்கா பதிவை படிச்சிட்டியா///

இல்ல மக்கா சும்மா படம் பாத்தேன்... ஹி ஹி//


அதான அந்த பயம் இருக்கணும். பின்ன இந்திரா அக்கா கோவிச்சுப்பங்களே//

யப்பா ராசா முடியல.. முடியல...///

இதுக்குதான் பதிவை படிக்க கூடாதுன்னு சொல்றது. என்ன ஆச்சு? எந்த ஹாஸ்பிடல்?
எம்மாம் பெரிய தத்துவம்.........
ரொம்ப சிம்பிள். செய்யாதே என்று அட்வைஸ் பண்ணா ஒதுங்குற ஆட்களுக்கு
இதைச் செய் என்று நல்லதின் பக்கம் திருப்பி விட வேண்டும். அந்தப் பையனை ஒரு பதிவராக்கி விடுங்கள். :)பிறகு இதில் ஆர்வம் வந்து விட்டால் அவனுடைய திறமைகள் கவிதையாகவோ கட்டுரையாகவோ வெளியேறி சமூகத்திற்குப் பயன்படும். :)
இதெல்லாம் பட்டா தான் திருந்தும்..
Speed Master said…
நல்ல தகவல்
வைகை said…
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சரி என்னமோ சொல்லிருக்கீங்க . என் பிகர் கிட்ட சாட்ல இருக்கேன். அப்புறமா வந்து படிக்கிறேன் .ஹிஹி//////

ஒருத்தனுக்கு நிக்கவே தெம்பில்லையாம்! இதுல ஒம்போது கேர்ள் பிரண்டாம்! ஓவர் பில்டப் ஒடம்புக்கு ஆகாது போலிஸ்!
வைகை said…
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
karthikkumar said...

ஆனா இந்த மாதிரி எல்லாம் பதிவு போட்டீங்கன்னா எப்படி கலாய்க்கறது.... :(//


அட பாவி மக்கா பதிவை படிச்சிட்டியா////

நான் இப்ப படிக்கவா? வேண்டாமா?!
வைகை said…
ஒருகட்டத்தில் இது தானாக சரியாகிவிடும்....சில விதிவிலக்குகளும் உண்டு.....இவர் எப்படி என்று போக போக தெரியும்!
அரசன் said…
மிக நல்ல தகவலை வழங்கி இருக்கீங்க ...

இப்போ அதுதான் நடக்குது...

சில பேராவது இதை பார்த்து மாற நினைக்கட்டும் ...

வாழ்த்துக்கள்
பயனுள்ள பதிவு... என்றாலும் சில மறுக்க முடியாத உண்மை என்னவென்றால் அந்த பதின்ம வயதில் தொண்ணூறு சதவிகிதம் பேர் மற்றவர்கள் பேச்சை கேட்பதில்லை... அந்த வயது அப்படி... பட்டுதான் திருந்துவார்கள்...
Balaji saravana said…
சிறப்பான பதிவு இந்திரா! பக்குவம் வந்தால் தான் சரியாகுவார்!
சொன்னா யாரு கேட்கறாங்க ?? உனக்கென்ன வந்துச்சின்னு ஒரு கேள்விதான் திருப்பி வரும்
>>>>ஆரம்பத்துல நா கூட இவன ரொம்ப நல்ல்ல்வன்னு நெனச்சேன்.

hi hiஹி ஹி .இப்படித்தான் பொண்ணுங்க ஏமாந்துடறாங்க.. எங்களை மாதிரி நல்லவங்க்ளை நம்பறதில்லை.கெட்டவங்களை நம்பிடறாங்க.. ஹா ஹா
vinu said…
indraiya thinagaran papper vaangip padikkavum;

namathu kavithai kaathalanukku thiraippadap paadal eluthum vaayppu kidaththullathu;


vaalthukkal mani
//தீபிகா said...

நான் ஆர்குட்லயும், ஃபேஸ்புக்லயும் இருக்குறப்போ பொய்யான பெயர்ல ப்ரொஃபைல் ்வச்சுகிட்டு இந்த மாதிரி நிறைய பேர் பேசுவானுங்க.. கடுப்பாகி இப்ப ஃபேஸ்புக் அக்கவுன்ட்டையே டெலிட் பண்ணிட்டன்.. எப்பதான் திருந்துவாங்களோ.!! ஆனா அக்கா இப்ப பொண்ணுங்க கூட இப்படி ஆயிடுறாங்க.. ரொம்ப வருத்தமா இருக்கு..
//


உண்மை தான் தீபிகா. இப்ப அதிகமாவே இருக்கு.
//logu.. said...

vadai??????//

உங்களுக்கே தான்ங்க.
//Blogger ரேவா said...


தொழிநுட்பம் என்ற பெயரில் நம்பவர்கள் செய்யும் செயலை வருத்தத்துடன் பதிவு செய்துள்ளேர்கள்.. உங்கள் ஆதங்கம் புரிகிறது தோழி.. வாழ்த்துக்கள்....//


வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
//MANO நாஞ்சில் மனோ said...

அட்வைஸ் என்கிற வார்த்தையை அகராதியில இருந்து உடனே நீக்கணும்னு போராட்டம் பண்ணினாலும் பண்ணுவாங்க...!!!
ஆமா அடுத்த நாள் உங்க பைக் பன்சர் ஆகவில்லை'தானே....//


ஹிஹிஹி
அதெல்லாம் நாங்க அலர்ட்டா இருப்போம்ல.
//மாணவன் said...

தெளிவான பார்வை...இப்ப அவசியமும்கூட

வாழ்த்துக்கள் சகோ...//



நன்றி நண்பரே.
//Dhushi said...

M....
I feel my sister on ur word accka....
i missed her//


நன்றி சகோ..
//sulthanonline said...

கண்டிப்பாக இந்த மாதிரியெல்லாம் நடக்குது பெற்றோர்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். teenage வயசில் அவர்களிடம் எது சரி, தவறு என்பதை புரியும் படியாக பெற்றோர்கள் எடுத்து கூறுவது மிக அவசியம்.//


யார் சொன்னாலும் இவங்க கேக்குறதே இல்லையே.. பெத்தவங்களையே விரோதியா பாக்குற வயசு அது. என்ன பண்றது??
//karthikkumar said...

நல்ல பதிவுங்க .. :)//


நன்றி கார்த்திக்
//karthikkumar said...

ஆனா இந்த மாதிரி எல்லாம் பதிவு போட்டீங்கன்னா எப்படி கலாய்க்கறது.... :(//


எப்ப்பூடிஈஈஈஈஈஈ....
//மாணவன் said...

இனையம் என்பது கண்ணுக்கு தெரியாத உயிர்கொல்லி கவனமாயிருங்கள் நயவஞ்சகர்கள் நாகரீகமாக பேசி உங்கள் தலை எழுத்தை மாற்றிவிடுவார்கள், இனைய வழியிலான நட்பு என்றால் கொஞ்சம் கவணமாக இருங்கள் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காரணம் இங்கு இருவருக்குமே முக மூடி உண்டு

இதை இன்றைய இணைய நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும்//


உண்மை.
கருத்துக்களைப் பகிர்ந்ததற்கு நன்றி.
//kalai said...

திணிக்கப்படாத அக்கறைகளும் சரியான வழிகாட்டுதல்களும் தான் இந்தப் பருவத்தில் இவர்களுக்குத் முக்கியமாகத் தேவை.

nalla idea parentsku//


வருகைக்கு நன்றி கலை.
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி என்னமோ சொல்லிருக்கீங்க . என் பிகர் கிட்ட சாட்ல இருக்கேன். அப்புறமா வந்து படிக்கிறேன் .ஹிஹி//


இந்த மாதிரி வெட்டியா சீனப் போட்றதுல ஒன்னும் குறைச்சலே கிடையாது..
//அருண் பிரசாத் said...

எம்மாம் பெரிய தத்துவம்.........//


படிக்காமலே சொல்லக்கூடாதுங்க..
இப்படி சொல்லி எஸ்கேப் ஆகுறீங்களா??? முழுசா படிக்கணும் சொல்லிப்புட்டேன்.
//☀நான் ஆதவன்☀ said...

உங்க குழந்தை வளர்ந்துட்டு வர்ர இந்த நேரத்துல ஒரு பொறுப்பான அம்மாவா ஒரு பொறுப்பான பதிவு//


நன்றி ஆதவா..
//அரபுத்தமிழன் said...

ரொம்ப சிம்பிள். செய்யாதே என்று அட்வைஸ் பண்ணா ஒதுங்குற ஆட்களுக்கு
இதைச் செய் என்று நல்லதின் பக்கம் திருப்பி விட வேண்டும். அந்தப் பையனை ஒரு பதிவராக்கி விடுங்கள். :)பிறகு இதில் ஆர்வம் வந்து விட்டால் அவனுடைய திறமைகள் கவிதையாகவோ கட்டுரையாகவோ வெளியேறி சமூகத்திற்குப் பயன்படும். :)//


நல்ல ஐடியாவா இருக்கே.. ஆனா அவன் கேக்கணுமே..
(எச்சூச்மி.. இது வஞ்சப் புகழ்ச்சி இல்லேல??)
//Speed Master said...

நல்ல தகவல்//


நன்றிங்க..
//தம்பி கூர்மதியன் said...

இதெல்லாம் பட்டா தான் திருந்தும்..//


அப்டி கண்டுக்காம விடவும் முடியாதே.. நம்ம கடமைய நம்ம செய்வோம். அதுக்கு மேல ஒண்ணும் பண்ண முடியாது.
//வைகை said...

ஒருகட்டத்தில் இது தானாக சரியாகிவிடும்....சில விதிவிலக்குகளும் உண்டு.....இவர் எப்படி என்று போக போக தெரியும்!//

ம்ம்.. பார்க்கலாம்.
//அரசன் said...

மிக நல்ல தகவலை வழங்கி இருக்கீங்க ...

இப்போ அதுதான் நடக்குது...

சில பேராவது இதை பார்த்து மாற நினைக்கட்டும் ...

வாழ்த்துக்கள்//



நன்றிங்க..
//Balaji saravana said...

சிறப்பான பதிவு இந்திரா! பக்குவம் வந்தால் தான் சரியாகுவார்!//


நன்றி பாலாஜி..
//Philosophy Prabhakaran said...

பயனுள்ள பதிவு... என்றாலும் சில மறுக்க முடியாத உண்மை என்னவென்றால் அந்த பதின்ம வயதில் தொண்ணூறு சதவிகிதம் பேர் மற்றவர்கள் பேச்சை கேட்பதில்லை... அந்த வயது அப்படி... பட்டுதான் திருந்துவார்கள்...//


90 இல்ல 99 சதவிகிதம் பேர் அப்படித்தான் இருக்கிறார்கள். நீங்க சொல்றது போல பட்டுதான் திருந்துவார்கள்.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே..
//எல் கே said...

சொன்னா யாரு கேட்கறாங்க ?? உனக்கென்ன வந்துச்சின்னு ஒரு கேள்விதான் திருப்பி வரும்//


இத விட ஏளனமா கிண்டல் பண்ணுவாங்க.. அவங்க வயசு அப்படி.
//சி.பி.செந்தில்குமார் said...

hi hiஹி ஹி .இப்படித்தான் பொண்ணுங்க ஏமாந்துடறாங்க.. எங்களை மாதிரி நல்லவங்க்ளை நம்பறதில்லை.கெட்டவங்களை நம்பிடறாங்க.. ஹா ஹா//


ரொம்ப நொந்துபோயிருக்கீங்கனு நெனைக்கிறேன். யாரு உங்கள நம்பலனு சொல்லுங்க.. நா வேணும்னா ரெகமெண்ட் பண்றேன்.
:))
//vinu said...

indraiya thinagaran papper vaangip padikkavum;

namathu kavithai kaathalanukku thiraippadap paadal eluthum vaayppu kidaththullathu;


vaalthukkal mani//


தகவலுக்கு நன்றி வினு.

“உயிரைத் தொலைத்தேன்“ திரைப்படத்திற்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ள நண்பர் மணிக்கு (கவிதைக் காதலன்) வாழ்த்துக்கள்.

அவரது இந்தப் பணி சிறப்பாகத் தொடர்ந்து, வாழ்வின் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேற, நண்பர்கள் சார்பாக மனமார வாழ்த்துகிறேன்.
வயசுதாங்க மேட்டர் :)

என்ன ஒண்ணு பதினெட்டு வயசுக்கு மேல வர வேண்டியதெல்லாம் இப்ப பதினாலு பதினைந்திலேயே வந்துடுது :) மெச்சூரிட்டிய தவிற

பதின்ம வயது : இந்த வயசுல தான் எதிர்பாலின கவர்ச்சியே ஆரம்பிக்குது,பொண்ணுங்கள்ட பேசிட்டே இருக்கனும் பழகனும்னு ரொம்ப துடிப்போம், ஆனா அது எதுவும் நிறைவேறாத போது இணையத்துல வேலைய ஆரம்பிக்குது :(

பொண்ணுங்களுக்கும் இதே ஆசை இருக்கும் ஆனா தைரியம் இருக்காது நம்ம பயளுக அளவுக்கு :)

காதல்,காமம் எல்லாம் தானா வர வேண்டிய வயசுல வரணும், ஆனா இதெல்லாத்தையும் தானா தூண்டிவிட்டு பிஞ்சுலயே பழுக்க வைத்துவிடுகிறது நம் திரைப்படங்கள் தான் :)

(ஆஹா ஒரு பதிவ மறந்து இங்க எழுதிட்டனோ)
களவும் கற்று மற...
இதுவும் கடந்து போகும்..சீரழவின் விளிம்பில் பயணம் என்ன செய்ய முடியும் இந்திரா?
தெளிவான பார்வை...
நண்பியே...!
நீங்க சொன்னது அனைத்து உண்மை...!
உண்மையைத்தவிர வேறேதும் இல்லை....!
எனக்கேகூட... முகநூலில் இருந்து வெளியேறிவிடலாமா என்ற எண்ணம் இருந்தது... ஆனால்.. நான் 10 பேரை மட்டுமே நண்பர்களாய் வைத்துள்ளேன்... வேறு யாரேனும் friends request கேட்டால் "NO" தான்...!

இதில் teenage மட்டுமல்ல... திருமணமானவரும் உள்ளார் இந்த லிஸ்டில்...

இது ஓர் உதாரணம்...!

தாங்கள் இந்தியாவில் இருந்தால் தெரிந்திருக்கும்... சென்ற வார தினகரன் நாளிதழில் ஓர் செய்தி... முகநூலில் நட்பாகிய ஓர் திருமணமாகி... இரண்டு குழந்தைகளை பெற்ற தாய்... அவர் டெல்லியை சேர்ந்தவர்... ஓர் இளைஞருடன் நட்பாகி... அவன் டெல்லி வந்து... ஆவலுடன் ஊர்முழுதும் சுற்றி.. இறுதியில் அப்பெண் தன் குழந்தை மற்றும் தன் கணவருக்கு உணவில் விஷம் வைத்துவிட்டு... பணம் மற்றும் நகைகளுடன் எஸ்கேப்...! விஷ உணவினை உண்ணாமல் படுத்துவிட்ட கணவர் காலையில் எழுந்து பார்த்தல் குழந்தைகள் இறந்து கிடக்கின்றன... பின்னர்... அவனையும்... அந்த பெண்ணையும் பிடித்து விட்டனர்...!
மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய இச்செய்தி அறிந்து மிகவும் அதிர்ந்துபோனேன்...! தாங்கள் குறிப்பிட்டுள்ள ////சின்னப் புள்ளைய்ங்க கூட அசால்ட்டா இன்டர்நெட் யூஸ் பண்ணுதுங்க. கேம்ஸ் விளையாட்றதுல தொடங்கி பெரிய பெரிய விஷயங்களெல்லாம் தானா கத்துக்குதுக. அது நல்ல விசயமா இருந்தா பரவாயில்லை.. ஆனா தேவையில்லாத வேலையெல்லாம் இணையத்துல பண்றாய்ங்க. தப்பான பேர்ல ச்சாட் பண்றதுல ஆரம்பிச்சு கண்ட கண்ட இணையதளத்த மேயுறது வரைக்கும் எல்லா 420 வேலையும் செய்றானுங்க.//// என்ற வார்த்தைகள்... உண்மை...! முற்றிலும் உண்மை...!

நீங்க அட்வைஸ் பண்ணா புடிக்காத அவன்... "அடின்னா... அடி... அப்பேர்பட்ட அடிபட்டுதான் திருந்துவான்"...!
மதுரையில் பெண்கள் கூட பழகும் வாய்ப்புகள் மிகவும் குறைவு அதே நேரத்தில் சினிமா மற்றும் செய்திகளில் வரும் ஆபாசங்கள் சிறுவர்களின் மனதை கெடுக்கின்றன. அந்த மாதிரி சிறுவர்களுக்கு இணையதளம்தான் ஒரு வடிதளம். கம்பியூட்டர் வாங்கி கொடுத்தால் மட்டும் போதாது அதை அவன் எப்படி பயன்படுத்துகிறான் என்று கண்காணிப்பதுதான் முக்கியம். அந்த பொறுப்பில் இருந்து இந்த சிறுவனின் பெற்றோர்கள் தவறிவிட்டனர்/ நீங்கள் அந்த சிறுவனை கூப்பிட்டு பேசியதைவிட அந்த பெற்றோர்களிடம் நன்றாக விளக்கி அவன் செய்யும் தவறை இணையதளத்திற்கே சென்று அவன் பெற்றோர்களிடம் காண்பித்து இருக்க வேண்டும்

உங்கள் பதிவுகள் எல்லாம் நன்றாக இருக்கிறது...வாழ்க வளமுடன்.
அன்புடன்
Madurai Tamil Guy
http://avargal-unmaigal.blogspot.com/

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்