நின்னைச் சரணடைந்தேன் (1)

எழுந்ததிலிருந்தே உள்ளுக்குள் பதற்றமாகவே இருந்தான் சித்தார்த். அன்று தான் ரமேஷிற்குத் திருமணம். முதல் நாளே வரச்சொல்லி நண்பனிடமிருந்து அழைப்பு.. ஆனாலும் போக மனமில்லாது தங்கிவிட்டான். காரணம் சாஹித்யா. ரமேஷின் தங்கை. ஒரு காலத்தில் சித்தார்த்தின் காதலி. என்னதான் சித்தார்த்தின் காதலை ஏற்க மறுத்திருந்தாலும் மானசீகமாக மனைவியாக நினைக்கப்பட்டவள். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாகி விட்டது. சாஹித்யாவின் திருமணத்திற்கு கூட ரமேஷ் அழைத்திருந்தான். தன் காதலியின் திருமணத்தைப் பார்க்கும் தைரியம் யாருக்கு தான் இருக்கும்?? ஏதோ சாக்குகள் சொல்லி வரமறுத்துவிட்டான். காலத்தைக் கட்டுப்படுத்தும் வலிமை சித்தார்த்தின் கரங்களுக்கு எப்போதும் இருந்ததில்லை. ஆரம்ப நாட்களில் சாஹித்யாவின் நினைவலைகளில் மூழ்கி மீளமுடியாமல் தவித்து, சுயநினைவின்றி அலைந்து, வேறு வழியின்றி சூழ்நிலையின் பிடியில் சிக்கிக்கொண்டான். இதோ காயத்ரியின் கழுத்தில் புதிதாய் இவனது மாங்கல்யம், அம்மாவின் கடைசி ஆசை என்பதால் மறுக்க முடியவில்லை. “என்னங்க..“ ஏதோ யோசனையில் இருந்தவனை காயத்ரியின் குரல் கலைத்தது. என்ன, என்பதுபோல...