ராசிப்பொண்ணுக்கு ஒரு வாழ்த்து..




இப்படி வாழ்த்துப் பதிவு போட்றதுலயும் ஒரு வசதி இருக்குங்க.. பின்னூட்டம் போட்றவங்களுக்கு சிரமமே இருக்காது. தங்களோட கருத்துனு தனியா சொல்றதுக்கு எதுவும் இருக்காது.. மிஞ்சிப்போனா ரெண்டு வரில ஏதாவது வாசகம், இல்லேனா வெறுமனே “வாழ்த்துக்கள்“, பிறந்தநாள் வாழ்த்துக்கள்னு மட்டும் போடலாம்.. அதுவும் கூட முந்தின பின்னூட்டத்துல இருந்து Copy பண்ணி paste பண்ணிடலாம்.. சரிதானே???? (அதாவது தயவு செஞ்சு வாழ்த்திடுங்க ப்ளீஸ்..னு சொல்ல வரேன். ஏன்னு, பதிவப் படிச்சா உங்களுக்கே புரியும்.)
சரி விஷயத்துக்கு வரேன்...
எனக்கு ரெண்டு தங்கைனு ஏற்கனவே சொல்லிருக்கேன். (எப்ப“னு கேட்டு பல்பு குடுக்காதீங்க.. முந்தின ஏதோ ஒரு பதிவுல சொல்லிருக்கேங்க.) அதுல ரெண்டாவது தங்கைக்கு, அதாவது எங்க வீட்டு கடைக்குட்டிக்கு, வர்ற ஞாயித்துக் கிழமை (27.02.2011) பிறந்தநாள். (அதுக்கென்ன இப்ப“னு கேட்டும் பல்பு குடுத்துடாதீங்க). அவளுக்கு வாழ்த்து சொல்லுங்க.. தயவு செஞ்சு சொல்லிடுங்க ப்ளீஸ்.. “எனக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி பதிவு போடு“னு திரும்ப திரும்ப போன் பண்ணி அவளே கேட்டுகிட்டதால இத நா சொல்லல.. (ஐய்யயோ.. உண்மைய உளறிட்டேனோ..!!) எனக்கு அவ மேல பாசம் ஜாஆஆஆஆஸ்தி.. அதுனால சொல்றேன். (ஹிஹிஹி).
அவளோட உண்மையான பேர் வேற. அவ ரொம்ப ராசியான பொண்ணுனு அப்பா அடிக்கடி சொல்றதுனால அவளுக்கு செல்லமா “ராசிப்பொண்ணு“னு பேர் வச்சிட்டோம். (கிண்டலுக்காகவும் தான்). இந்தப் பேர சொன்னா அவ பயங்கரமா டென்சனாயிடுவா.. பின்ன?? அவளோட காலேஜ்ல போய் பிரபலமாக்கிட்டோம்ல.. இப்ப அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துகிட்டிருக்கோம். அந்த முகம் தெரியாத பலியாடு எங்க சுத்திகிட்டிருக்கோ தெரில.. எப்படியும் இந்த வருஷம் பிரியாணிக்கு சிக்கிடும். அதுனால ராசிப்பொண்ணுக்கு நாம எல்லாரும் சேர்ந்து பிறந்த நாள் வாழ்த்தும், பலியாடு சிக்கிறதுக்கு வாழ்த்தும் சொல்வோம்.
குறிப்பா வாழ்த்து சொல்ற எல்லாரும் அவளோட செல்லப்பேர சொல்லி வாழ்த்து சொல்லணும்னு கேட்டுக்குறேன்.. (அடுத்தவங்கள கடுப்பாக்கிப் பாக்குறதுலயும் என்னா ஒரு ஆனந்தம்..).
ரெண்டு நாள் இந்தப் பக்கம் வர முடியாது. அதுனால தான் இன்னைக்கே பதிவுல சொல்லிட்டேன்.
ஹேப்பி பர்த்டே ராசிப்பொண்ணு.. (இத Copy பண்ணுவீங்களே..!!!)
.
.

Comments

//எனக்கு அவ மேல பாசம் ஜாஆஆஆஆஸ்தி..//

அதிக பாசம் ஜலதோசம் பிடிக்குமாம்...
//சரி விஷயத்துக்கு வரேன்... //

வேண்டாம்னு சொன்னா விடவாப்போறீங்க...
..அதுவும் கூட முந்தின பின்னூட்டத்துல இருந்து Copy பண்ணி paste பண்ணிடலாம்.. சரிதானே????..

உண்மைய வெளிய சொல்லாக்கூடாது...
,,வளுக்கு செல்லமா “ராசிப்பொண்ணு“னு பேர் வச்சிட்டோம்.,,

ராசிக்கல்லு கேள்விப்பட்டு இருக்கேன் ராசிப்பொண்ணு வித்தியாசமா இருக்கு...
..அதுக்கென்ன இப்ப“னு கேட்டும் பல்பு குடுத்துடாதீங்க..

பல்பு வாங்குறது உங்களுக்கு புதுசா...
//அந்த முகம் தெரியாத பலியாடு எங்க சுத்திகிட்டிருக்கோ தெரில.. //

அடுத்து திருமண அழைப்பு என ஒரு பதிவு போடுங்க அந்த பலி ஆட்டுக்கு இத மெயில் அனுப்புறோம்...
..ஹேப்பி பர்த்டே ராசிப்பொண்ணு.. (இத Copy பண்ணுவீங்களே..!!!)..

வாழ்த்துக்கள்... ராசிப்பொண்ணுக்கு..

உங்களுக்கு கண்டனம் அந்த பாசக்கார பொண்ண பாடாப் படுத்தியதற்கு...
அருள் said…
டோண்டு: அரை லூசா, முழு லூசா, காரிய லூசா...?

http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_25.html
ராசிப்பொண்ணுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :)
VELU.G said…
குட்டிப் பெண்ணிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
"Happy Birtday Lucky Girl"

Happy Birthday Astrological sign

:-))))))
தனக்கான ராசியை
ஒவ்வொருவரும்
தேடிக்கொண்டிருக்க,
ராசியே தானாய் உன்னில்
வந்தமர்ந்தமைக்கு
இந்த ரசிகனின் வாழ்த்துக்கள்.
ஸ்பெஷல் வாழ்த்துக்களை இந்த கவிதை காதலனின் சார்பாக உங்கள் தங்கைக்கு தெரிவித்துவிடுங்கள்
உன் பிறந்தநாளுக்கு எல்லாரும்
மகிழ்ச்சியாய் இருக்க
ஒரே ஒரு ஜீவன் மட்டும்
வருத்தமாய்...
உன்னைவிட்டு நீங்கும்
உன் வயது...
ஐயையோ... என்ன வினு மட்டும் இன்னும் வரலை..
மச்சி சீக்கிரம் வாழ்த்து சொல்லிடு.. அப்பத்தான் இந்திரா நம்பர் கொடுப்பாங்க..ஹி..ஹி..
logu.. said…
\\எனக்கு அவ மேல பாசம் ஜாஆஆஆஆஸ்தி.. அதுனால சொல்றேன்.\\

ஆமா..ஆமா.. குரங்குங்களுக்கு தங்காச்சி மேல ரொம்ப பாசமாம்.. கேள்விபட்ருக்கேன்.
ஹிஹி..
logu.. said…
ஹேப்பி பர்த்டே ராசிப்பொண்ணு.....

இத நாங்க காப்பி பண்ணவே இல்ல.
( சொந்தமா டைப் பண்ணோமாக்கும் )
எனக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி பதிவு போடு“னு திரும்ப திரும்ப போன் பண்ணி அவளே கேட்டுகிட்டதால இத நா சொல்லல.. (ஐய்யயோ.. உண்மைய உளறிட்டேனோ..!!)

Ha ha
வைகை said…
ராசிப்பொண்ணுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :
வைகை said…
தனக்கான ராசியை
ஒவ்வொருவரும்
தேடிக்கொண்டிருக்க,
ராசியே தானாய் உன்னில்
வந்தமர்ந்தமைக்கு
இந்த ரசிகனின் வாழ்த்துக்கள்...

நன்றி - கவிதைக்காதலன்
வைகை said…
ஹேப்பி பர்த்டே ராசிப்பொண்ணு.....

இத நாங்க காப்பி பண்ணவே இல்ல.
( சொந்தமா டைப் பண்ணோமாக்கும்
வைகை said…
உன் பிறந்தநாளுக்கு எல்லாரும்
மகிழ்ச்சியாய் இருக்க
ஒரே ஒரு ஜீவன் மட்டும்
வருத்தமாய்...
உன்னைவிட்டு நீங்கும்
உன் வயது.


நன்றி - கவிதைக்காதலன்
ஹேப்பி பர்த்டே ராசிப்பொண்ணு
இது உங்களுக்கில்ல இந்திரா உங்க தங்கைக்கு...

உங்களுக்கு இந்திரா சொன்ன மாதிரி சொன்னா கோபம் வருமாம்ல.. சரி சரி.. பேர் தெரியாத தோழிக்கு வாழ்த்துக்கள்.. நான் ரொம்ப நல்லவள்ங்க..
மிஸ் ராசிப்பொண்ணு உங்க பிறந்தநாளுக்கும் வரப்போகும் திருமண நாளுக்கும்(1 வருசம் தானே இருக்கு) வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்வதா.. இல்ல இந்திராவின் தங்கையான சோகத்தை நினைத்து வருந்துவதான்னு தெரியல.. மனச தேத்திக்கோங்க.. வாழ்த்துக்கள்..
Lakshmi said…
ராசிப்பெண்ணுக்குப்பிறந்த நாள் வாழ்த்துக்களும், கூடிய சீக்கிரமே பலி
யாடு மாட்டவும் வாழ்த்துக்கள்.
ஹேப்பி பர்த்டே ராசிப்பொண்ணு.....
//ஹேப்பி பர்த்டே ராசிப்பொண்ணு.. (இத Copy பண்ணுவீங்களே..!!!)//

காப்பி பண்ணிட்டோம்ல ஹா ஹா ஹா ஹா
கை ராசி பொண்ணுக்கு ஒரு கை ராசி பையன் கிடைக்க வாழ்த்துகிறேன்....
அதே போல பிறந்த நாளுக்கும் வாழ்த்துகள்....
Balaji saravana said…
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதுரை ராசிப்பொண்ணு! ;)
Chitra said…
இப்ப அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துகிட்டிருக்கோம். அந்த முகம் தெரியாத பலியாடு எங்க சுத்திகிட்டிருக்கோ தெரில.. எப்படியும் இந்த வருஷம் பிரியாணிக்கு சிக்கிடும். அதுனால ராசிப்பொண்ணுக்கு நாம எல்லாரும் சேர்ந்து பிறந்த நாள் வாழ்த்தும், பலியாடு சிக்கிறதுக்கு வாழ்த்தும் சொல்வோம்.



......அவ மேல பாசம் ஜாஆஆஆஆஸ்தி..னு தெரியுது.... பதிவில வேற வரிகள் காப்பி பேஸ்ட் பண்ணிட்டோம்ல... ஹி,ஹி,ஹி,ஹி...
உங்கள் ஆருயிர் தங்கைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
அன்னு said…
ஆஹா.. இபப்டியும் ஒரு அக்கா... ராசியான தங்கைதான்.


இந்த வருடமே குடும்ப இஸ்திரியாக வாழ்த்துக்கள். ஹி ஹி ஹி... யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்...:)))
ஹேப்பி பர்த்டே ராசிப்பொண்ணு....

மனம் விரும்பும் வண்ணம் மாலை சூடிட மணாளன் அமையட்டும் விரைவில்...
ஹேப்பி பர்த்டே ராசிப்பொண்ணு.... சீக்கிரமே பலியாடும் சிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :-)
sulthanonline said…
// இப்ப அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துகிட்டிருக்கோம். அந்த முகம் தெரியாத பலியாடு எங்க சுத்திகிட்டிருக்கோ தெரில.. எப்படியும் இந்த வருஷம் பிரியாணிக்கு சிக்கிடும்.//


அடப்பாவிகளா வீட்டுக்கு வர மாப்பிள்ளைய பலியாடாக்கி பிரியாணி போடுறீங்காளா. யாரு பெத்த புள்ளயோ உங்ககிட்ட பலியாகப்போகுது. வாழ்த்துக்கள்.


ஹேப்பி பர்த்டே ராசிப்பொண்ணு.
kalai said…
ஹேப்பி பர்த்டே ராசிப்பொண்ணு
ஹேப்பி பர்த்டே ராசிப்பொண்ணு.... சீக்கிரமே பலியாடும் சிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
நன்றி.. நன்றி.. நன்றி..

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..