அரிதாரக் கடவுள்கள்..
நேத்து கே.டிவில ஏதோ ஒரு சாமி படம் போட்டான். ரோஜா அதுல கடவுளாவும் பக்தையாவும் நடிச்சிருந்தாங்க. அதென்னவோ தெரியல.. சினிமாவுல வர்ற கடவுள் மட்டும் ஏன் தான் இப்படி மொக்கையா வருதுகளோ தெரியல. அதாவது நா ரோஜாவ சொல்லல.. அவங்க போட்ருந்த வேஷத்த சொல்றேன். மத்த மொழிகள்ல எப்டியோ.. இந்தத் தமிழ் சினிமாவுல வர்ற கடவுள்கள் எல்லாம் பயங்கர காமெடியா இருக்குதுங்க.
தலைல பெரிய்ய்ய்ய கிரீடம், கலர் கலரா முகத்துல பெயிண்ட் அடிச்சிருப்பாங்க. (அழகா இருக்குற மூஞ்சியையும் அசிங்கப்படுத்திக்கிறது), கழுத்துல எழுமிச்சம்பழ மாலை.. கையில சூலம், அயர்ன் பண்ணின பட்டுப் புடவை.. கண்ண அடிக்கடி உருட்டி உருட்டி பாத்துகிட்டு.. முக்கியமா ராமநாரயணன் படம்னா சொல்லவே வேணாம். அந்த வேஷம் போட்டவங்க ஆட்றது மட்டுமில்லாம அவங்களோட சூலம், வேப்ப மரம்னு எல்லாமே டான்ஸ் ஆடும். கொடுமைடா சாமி.
அப்புறம் இந்த மாதிரி படங்கள்ல கண்டிப்பா ஒரு அப்பாவி பொண்ணு ஹீரோயினா இருக்கும். ஏதாவதொரு டம்மி பீசு ஹீரோவா இருப்பான். அந்தப் பொண்ண தவிர மத்த எல்ல்ல்ல்லாருமே கெட்டவங்களா இருப்பாங்க. ஒரு மந்திரவாதி வில்லனா இருப்பான். அவனோட கெட்அப் பத்தி சொல்லவே வேணாம். கழுத்துல மண்டை ஓடு.. “ஓம் க்ரீம் ஐஸ் க்ரீம்“னு ஏதாவது மொனங்கிகிட்டே இருப்பான் (மந்திரம் சொல்றானாம்).
படம் பூராம் அந்த ஹீரோயின எல்லாரும் கொடுமைப்படுத்திகிட்டே இருப்பாங்க. கடைசிஈஈஈஈஈல வந்து கடவுள் வேஷம் போட்ட பொம்பளை (அதுலயும் ஆம்பளை சாமி இருக்க மாட்டாங்க..) மந்திரவாதிய கொன்னு அந்தப் பொண்ண காப்பாத்தும். அத மொதல்லயே செஞ்சு தொலைச்சா தான் என்ன???
சொல்லி வச்சது மாதிரி எல்லா சாமி படத்துலயும் இதே கதை தான் வரும். முகத்துல அடிக்கிற பெயிண்ட் கலரும், சாமியோட பேரும் மட்டும் தான் வேற.. கடவுள்னா இப்டி தான் இருக்கும்னு அவங்களே ஒரு கற்பனை பண்ணிக்கிறாங்க. சாதாரணமா இருக்கும்போது பச்கை பெயிண்ட், சின்ன பொட்டு, மஞ்சள் பட்டுப் புடவை... கோவமா இருந்தா சிகப்பு பெயிண்ட், பெரிய்ய்ய்ய்ய பொட்டு, சிகப்பு பட்டுச் சேலை.. ஜிங்கு ஜிங்குனு ஒரு ஆட்டம் வேற.. இவுங்க ஆட்றது மட்டுமில்லாம பாம்பு, யானை, குரங்குனு வேற டான்ஸ் ஆடும்.
இதுல கிராஃபிக்ஸ் கொடுமை வேற தாங்க முடியாது. பூமி ரெண்டா பிளக்குறதும், வேப்ப மரம் பேசுறதும், அம்மனோட கண்ணு கலர் மாறுறதும், கெட்ட சக்தினு ஏதோ ஒரு மிருகம் வர்றதும்.. மேஜிக் வேலையெல்லாம் காட்டுவானுக.. யப்பா முடியல..
கடவுள் இருக்காரா இல்லையாங்குறது வேற விசயம். அது அவங்கவங்க நம்பிக்கையப் பொறுத்தது. அதையும் தாண்டி இந்த மாதிரி சாமி படம் எடுக்குறேங்குற பேர்ல, பாக்குறவங்கள கொலையா கொல்றது இன்னும் எவ்ளோ நாள் தான் நடக்குமோ தெரில.
உலகம் எங்கயோ போய்கிட்டு இருக்கு.. இவனுங்க இன்னும் இந்த மாதிரி குண்டு சட்டிக்குள்ள்ளே குதிரை ஓட்டிகிட்டு இருக்காணுக. அதப் பாக்குறதுக்கும் ஒரு கூட்டம் இருக்கு.. என்னத்த சொல்றது??
.
.
Comments
ரம்யாகிருஷ்ணன் தான் தென்னிந்தியாவின் நிரந்தர அம்மன் என்பதனை சிரிக்காமல் நினைவில் கொள்க :)
இத நீங்க வேற பாத்திருக்கறீங்க...
என்னத்தசொல்ல...
பிடிக்கலேன்னா பார்க்காம இருக்கலாமே!
இதை முழுசா வணக்கம் வரைக்கும் பார்த்துட்டு, மூஞ்சில பெயிண்ட் கலர் அது இதுன்னு போட்டு தாளிக்கிறீங்களே.
//இந்த மாதிரி சாமி படம் எடுக்குறேங்குற பேர்ல, பாக்குறவங்கள கொலையா கொல்றது இன்னும் எவ்ளோ நாள் தான் நடக்குமோ தெரில//
நீங்க எல்லாம் பாக்கறத நிறுத்தினா தானே குறையும்....
உலகம் எங்கே போனாலும் இது இருந்து கொண்டு தான் இருக்கும்... பிடிக்க வில்லை என்றால் பார்க்காமல் இருக்கலாம்...
கசப்பான மருந்தை கூட சிறிது இனிப்பு கலந்து வழங்குவது உண்டு... அது போல் தான் இதுவும்... இதை விட கிண்டல் பண்ண நிறைய விச்யங்கள் இருக்க, இதையேன் இவ்ளோ சீரியஸா??
எப்படி? அந்த படத்தை முழுசாக பார்த்கீர்களா?
இப்படி எழுதினால் உங்களுக்கு பிடிக்காது. ஆனால் அதுதான் உண்மை.
நிறைய பெண்கள் இது போன்ற படங்களால் கவரப்படுகின்றனர்.
அம்மன் படம் என்றால் தியேட்டரில் பெண்கள் கூட்டம்தானே அதிகம்.
அதனால்தான் அது போன்ற படங்களை எடுப்பது அந்த வியாபாரிகளின் வேலை.
இதுபோன்ற படங்களை ஏன் பெண்கள் நிராகரிக்ககூடாது?
என்னத்தசொல்ல...
haa haa ஹா ஹா உண்மை தான்
oru velai saami x-police officeraa irrukumo...........
athuthaan kadaichiiiiiiiiiila varraangalo ennamo
he he he he he he he #chumma oru doubttu
இதில் மிகப்பெரிய கொடுமை என்ன என்றால் இந்த படம் நம்ம ஊர்ல 100 நாள் ஓடும்...
இத நீங்க வேற பாத்திருக்கறீங்க...
என்னத்தசொல்ல...//
நா பாக்கலங்க.. வீட்ல இருக்குற பெருசுங்க பாத்துச்சுங்க..
இதுனால ஒரு பதிவ தேத்திட்டேனே.. அது வரைக்கும் சந்தோசம்.
உங்க கனவுல ரோஜா... ஐ மீன் சாமி கண்ண குத்த போகுது பாருங்க.
ரம்யாகிருஷ்ணன் தான் தென்னிந்தியாவின் நிரந்தர அம்மன் என்பதனை சிரிக்காமல் நினைவில் கொள்க :)//
சரிங்க..
சிரிப்பை அடக்கிகிட்டேன்.
//த மொதல்லயே செஞ்சு தொலைச்சா தான் என்ன???//-good question!:)//
அதே தானுங்க..
யப்பா முடியல..//
பதிவ சொல்றீங்களா???
ஹிஹிஹி நன்றிங்க..
என்னாச்சு....
பிடிக்கலேன்னா பார்க்காம இருக்கலாமே!
இதை முழுசா வணக்கம் வரைக்கும் பார்த்துட்டு, மூஞ்சில பெயிண்ட் கலர் அது இதுன்னு போட்டு தாளிக்கிறீங்களே.
நீங்க எல்லாம் பாக்கறத நிறுத்தினா தானே குறையும்....//
நா பாக்கலேன்னாலும் வீட்ல இருக்குற பெருசுங்க நிறுத்தணுமே..
வணக்கம் வரைக்கும்லாம் பாக்கலை கோபி சார்.. அந்த அளவுக்கு எனக்குப் பொறுமை இல்ல.
உலகம் எங்கே போனாலும் இது இருந்து கொண்டு தான் இருக்கும்... பிடிக்க வில்லை என்றால் பார்க்காமல் இருக்கலாம்...
கசப்பான மருந்தை கூட சிறிது இனிப்பு கலந்து வழங்குவது உண்டு... அது போல் தான் இதுவும்... இதை விட கிண்டல் பண்ண நிறைய விச்யங்கள் இருக்க, இதையேன் இவ்ளோ சீரியஸா??//
அட என்னாங்க நீங்க..
கிண்டல் பண்றதுனு முடிவாய்டுச்சு.. எந்த விசயமா இருந்தா என்ன???
அடி வாங்காம இருந்தா சரிதானே..
எப்படி? அந்த படத்தை முழுசாக பார்த்கீர்களா?
இப்படி எழுதினால் உங்களுக்கு பிடிக்காது. ஆனால் அதுதான் உண்மை.
நிறைய பெண்கள் இது போன்ற படங்களால் கவரப்படுகின்றனர்.
அம்மன் படம் என்றால் தியேட்டரில் பெண்கள் கூட்டம்தானே அதிகம்.
அதனால்தான் அது போன்ற படங்களை எடுப்பது அந்த வியாபாரிகளின் வேலை.
இதுபோன்ற படங்களை ஏன் பெண்கள் நிராகரிக்ககூடாது?//
இப்ப இந்தப் பெண்களின் எண்ணிக்கை குறைஞ்சிருக்கு.. படங்களும் தான். ஆனாலும் சுத்தமா நிறுத்திட்டா தேவலை..
அப்புறம் ஒரு விசயம்.. படத்தை முழுசா நா பாக்கலைங்க.. அந்தப் பொறுமை எனக்கில்ல.
>>>இந்தத் தமிழ் சினிமாவுல வர்ற கடவுள்கள் எல்லாம் பயங்கர காமெடியா இருக்குதுங்க.
haa haa ஹா ஹா உண்மை தான்//
நன்றிங்க..
oru velai saami x-police officeraa irrukumo...........
athuthaan kadaichiiiiiiiiiila varraangalo ennamo
he he he he he he he #chumma oru doubttu//
நல்ல்ல்ல்ல்ல்ல டவுட்டு....
அதிகமாக சாமி படம் எடுத்தவர் நம்ம ராமநாராயணனாதான் இருப்பார்ன்னு நினைக்கிறேன். ஆமா அவர் திமுக ஆச்சே? ஓ அதனாலதான் சாமிகளை வைத்து காமெடி படம் எடுக்கிறாரா?//
ஹிஹிஹி
வருகைக்கு நன்றிங்க..
மீ எஸ்கேப்பூ..
இத நீங்க வேற பாத்திருக்கறீங்க...
என்னத்தசொல்ல...//
என்னத்த சொல்ல???
வந்ததுக்கு நன்றிங்க.
ரெண்டு படம் கைய கடிச்சா மூணாவது படம் அவன் எடுப்பானா? பார்க்கத்தான் இன்னும் ஆளிருக்கே?
*********
இந்த பதிலை நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்க வில்லை இந்திரா....
அதெப்படிங்க எந்த விஷயமா இருந்தாலும் கிண்டல் பண்ணிட முடியும்?
நிஜம் தான் பெரும்பாலும் ஒரே திரைக்கதை ஒரே நடிகை ஆனால் பார்க்கறதுக்கு இத்தனை பேர் இருக்கும்போது எடுக்காம என்ன செய்வாங்க//
ஆமாம் சக்தி..
கருத்துக்கு நன்றி.
இது தமிழ் சினிமாவில் மட்டும் இல்லையே? ஆங்கிலப்படங்களில் கூடத்தான் இருக்கு...
ரெண்டு படம் கைய கடிச்சா மூணாவது படம் அவன் எடுப்பானா? பார்க்கத்தான் இன்னும் ஆளிருக்கே?//
ம்ம் அதுவும் சரிதான்..
//கிண்டல் பண்றதுனு முடிவாய்டுச்சு.. எந்த விசயமா இருந்தா என்ன???//
*********
இந்த பதிலை நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்க வில்லை இந்திரா....
அதெப்படிங்க எந்த விஷயமா இருந்தாலும் கிண்டல் பண்ணிட முடியும்?//
கடவுளையும் பக்தியையும் மிகைப்படுத்தி எடுக்கும் தமிழ் சினிமாவைத் தானே கிண்டலாகக் குறை சொல்லியிருக்கிறேன்.
இதில் கோபப்படுவதற்கு என்ன இருக்கிறது என்று புரியவில்லை.
தாங்கள் சொல்ல வரும் கருத்தை தெளிவுபட கூறினால் நானும் தெரிந்துகொண்டு பதில் சொல்வேனே கோபி சார்.
போயிருவோம் என சிம்பாலிக்கா
சொல்லத்தான் அழகான சாமியை
அப்படி மாத்தராங்களோ என்னவோ
ராம நாராயணனைத்தான் கேட்கனும்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
அந்த கூட்டத்து தலைவி தப்பிச்சாச்சுனு கேள்விபட்டன்.. இங்க தான் இருக்கீங்களா.???
இந்த பதிவு எழுதுறதுக்கு முன்னாடி சாமிபடத்துகிட்ட போயி 108 தோப்புகரணம் போட்டீங்களாமே.!!
எதோ ஒரு கிரகத்தில் வினோத மனிதர்கள் இருப்பதா படம் எடுக்கறாங்க அமெரிக்காவில் . அதுலயும் இதே மாதிரி க்ராபிக்ச்தான் அதே மாதிரிதான்
இத்தனாவது மாசம் உலகம் அழியும்னு ஒரு புரளி கிளப்பி படம் எடுத்தா அதை உக்காந்து அப்படி சிலாகிச்சு பாக்கறீங்க. பக்கம் பக்கமா எழுதறீங்க.
நம்ம ஊர் சாமியை பத்தி படம் எடுத்தா மட்டும் மொக்கைன்னு கிண்டல் பண்ண தோணுது ? எப்படிங்க ? உங்களுக்கு பிடிக்காட்டி அந்த நேரத்தில் டிவி பாக்காதீங்க.
எத்தனையோ பேரு பார்க்கரவங்க இருக்காங்களே ??
ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டின்னு சொல்லுவாங்க,. அப்படிதாங்க இருக்கு நீங்க எழுதி இருக்கறது
குரங்கையும்,யானையும் வெச்சு படம் எடுத்தவங்க வேற என்னங்க பண்ண முடியும்...
கோவமா யாராக இருந்தாலும் அசிங்கமா
போயிருவோம் என சிம்பாலிக்கா
சொல்லத்தான் அழகான சாமியை
அப்படி மாத்தராங்களோ என்னவோ
ராம நாராயணனைத்தான் கேட்கனும்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க.
அந்த கூட்டத்து தலைவி தப்பிச்சாச்சுனு கேள்விபட்டன்.. இங்க தான் இருக்கீங்களா.???
இந்த பதிவு எழுதுறதுக்கு முன்னாடி சாமிபடத்துகிட்ட போயி 108 தோப்புகரணம் போட்டீங்களாமே.!!//
அட.. கணக்கு தப்பா இருக்கே..
ம்ம்ம்..
நீங்க சொன்ன அத்தனையும் ஒரு பேய் (ஆவி ) படத்துக்கும் இருக்கும் . :-))//
உண்மை தான் ஜெய்லானி..
கருத்துக்கு நன்றி.
தேவையற்றப் பதிவு, ஒரு கேள்விக் கேட்கறேன் பதில் சொல்லுங்க
எதோ ஒரு கிரகத்தில் வினோத மனிதர்கள் இருப்பதா படம் எடுக்கறாங்க அமெரிக்காவில் . அதுலயும் இதே மாதிரி க்ராபிக்ச்தான் அதே மாதிரிதான்
இத்தனாவது மாசம் உலகம் அழியும்னு ஒரு புரளி கிளப்பி படம் எடுத்தா அதை உக்காந்து அப்படி சிலாகிச்சு பாக்கறீங்க. பக்கம் பக்கமா எழுதறீங்க.
நம்ம ஊர் சாமியை பத்தி படம் எடுத்தா மட்டும் மொக்கைன்னு கிண்டல் பண்ண தோணுது ? எப்படிங்க ? உங்களுக்கு பிடிக்காட்டி அந்த நேரத்தில் டிவி பாக்காதீங்க.
எத்தனையோ பேரு பார்க்கரவங்க இருக்காங்களே ??
ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டின்னு சொல்லுவாங்க,. அப்படிதாங்க இருக்கு நீங்க எழுதி இருக்கறது//
பிடிக்கலைனா டிவி பாக்காம இருக்கணுமா???
அதாவது பதிவு பிடிக்கலைனா படிக்காம இருங்கனு சொல்ற மாதிரி..
அப்டிதானே எல்.கே?
இந்திரா...ரொம்பவே ரசிச்சுப் பாத்திட்டு அப்பறம் திட்டக்கூடாது சாமியை.ராத்திரிக்கு கண்ணைக் குத்திடும் !//
ஹிஹி காமெடி பண்ணினா ரசிக்கத் தானே செய்வோம்..
வருகைக்கு நன்றி ஹேமா.
நான் கேட்ட கேள்விக்கு பதில் காணோமே . முதலில் அதற்கு பதில் சொல்லுங்கள் முதலில்
தாலி காத்த மாரியம்மன், பொட்டு அம்மன், பாளையத்து அம்மன், அம்மன், புருஷ லக்ஷணம் இப்படி நிறைய...
குரங்கையும்,யானையும் வெச்சு படம் எடுத்தவங்க வேற என்னங்க பண்ண முடியும்...//
அதுவும் சரிதான்..
ஆனா கொஞ்சம் மனுஷனையும் வச்சு படம் எடுக்க முயற்சி பண்ணனுமே..
கருத்துக்கு நன்றிங்க.
உங்களை நான் பாலோ பண்ணுவது இல்லை. எனவே உங்கள் பதிவுகள் என் டேஷ் போர்டில் வராது, நண்பர் ஒருவர் லிங்க் கொடுத்து படியுங்கள் என்று சொன்னார். அதனால் படித்தேன்.//
நல்ல தகவலுக்கு நன்றி.
//நான் கேட்ட கேள்விக்கு பதில் காணோமே . முதலில் அதற்கு பதில் சொல்லுங்கள் முதலில்//
எல்லாரும் ஒத்த கருத்துடையவர்களாக இருக்க முடியாதே எல்.கே... உங்களுக்கு சரியெனப் படுவது எனக்குத் தவறாகத் தெரியலாம். இதில் விமர்சிப்பதில் தவறென்ன?
அதுவுமில்லாமல் நான் மதம் பற்றியோ கடவுள் நம்பிக்கை பற்றியோ குறிப்பிடவில்லை.
தமிழ் சினிமாவில் வரும் கடவுள்களின் மேஜிக் வித்தைகளைப் பற்றித் தான் சொல்லியிருக்கிறேன்.
//படம் பூராம் அந்த ஹீரோயின எல்லாரும் கொடுமைப்படுத்திகிட்டே இருப்பாங்க. கடைசிஈஈஈஈஈல வந்து கடவுள் வேஷம் போட்ட பொம்பளை (அதுலயும் ஆம்பளை சாமி இருக்க மாட்டாங்க..) மந்திரவாதிய கொன்னு அந்தப் பொண்ண காப்பாத்தும். அத மொதல்லயே செஞ்சு தொலைச்சா தான் என்ன???//
//சாதாரணமா இருக்கும்போது பச்கை பெயிண்ட், சின்ன பொட்டு, மஞ்சள் பட்டுப் புடவை... கோவமா இருந்தா சிகப்பு பெயிண்ட், பெரிய்ய்ய்ய்ய பொட்டு, சிகப்பு பட்டுச் சேலை.. ஜிங்கு ஜிங்குனு ஒரு ஆட்டம் வேற.. இவுங்க ஆட்றது மட்டுமில்லாம பாம்பு, யானை, குரங்குனு வேற டான்ஸ் ஆடும்.//
ரொம்ப நல்லாவே கவனிச்சிருகீங்க..
எனக்கு ஒரு சந்தேகம். உங்களுக்கு கடவுள்னா இப்படித்தான் இருப்பார்னு ஏதேனும் ஒரு image உண்டா? சும்மா.. தெரிஞ்சிக்க..
அப்புறம் இந்தமாதிரி படங்கள எடுக்குறவங்க பெண்கள் கண்களில் இருந்து வரும் கண்ணீரையும் நிரம்பும் box office யும் மட்டும்தான் கடவுளா நினைக்கறாங்க.
கடவுளை இப்படி காட்டுவதால் நிறைய லாபம். பயம். பயம்தான் மூலதனம். இந்த ரவுடிகள் சொல்றமாதிரி. பயம் போச்சுன்னா எல்லாம் போச்சு.
ஆனா பாருங்க கடவுள் அன்பின் அவதாரம்பாங்க.. இந்த முரன் எனக்கு புரியவே மாட்டேங்குதுங்க..
உங்க பார்வை நல்லயிருக்கு..
God Bless You.
ஹெ ஹெ ஹெ ஹெ
சிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குது. ஹி ஹி சரியான காமெடி பதிவு.
ஆன ஒன்னு, இந்த மாதிரி பதிவெழுதினதுக்கு பரிகாரமும் செஞ்சிடுங்க..இல்லைன்னா அதுக்குன்னே வலையுலகாம்பாள்ன்னு இன்னொரு ஃபிலிம் ஆரம்பிச்சிடுவார் நம்ம இரா!! :))
ஹெ ஹெ
சினிமாவில்வரும் அம்பாள்இல்லையே
என்பதுபோல் ஒருதவிப்பு தெரிகிறது.
நீங்கள் நல்லவரா,கெட்டவரா?
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com
purincha siringa, puriaatium siringa...
nanri vanakkam, en nethila ippo illai sandhanam ...
நான் கடவுள் மறுப்பாளனா இருந்தாலும் எனக்கு பொம்பள சாமின்னா ரொம்ப பிடிக்கும், ஏன்னா ரொம்ப அழகா இருக்காங்களே!