“முடியாது“ என்று சொல்லிப் பழகுங்கள்..


தலைப்புல இருக்குற “முடியாது“ங்குற வார்த்தை, தன்னம்பிக்கைய குறைக்குறது தொடர்பானதுனு நீங்க நெனச்சா அது தப்பு. இன்னைக்கு அன்றாட வாழ்க்கைல நண்பர்கள், காதலர்கள், சொந்தக்காரவுங்க, அடுத்த வீட்டுக்காரங்க, ரோட்ல நடக்குற யாரோ சிலர்“னு நிறைய பேரை தினம் தினம் சந்திச்சுகிட்டு இருக்கோம். இவங்களுக்குள்ள ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல ஒருத்தரை ஒருத்தர் சார்ந்திருக்க வேண்டிய அல்லது ஏதாவது ஒரு உதவியை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அப்படிப்பட்ட நேரங்கள்ல தன்னால் அவங்களோட எதிர்பார்ப்ப நிறைவேத்த முடியாதுனு நிச்சயமா தோணுறபட்சத்துல “முடியாது“னு வெளிப்படையா சொல்லிடணும். (தலைப்புக்கு வந்துட்டேனா??)
ஒரு சிலர் இருக்காங்க, வெளிப்படையா சொன்னா சம்மந்தப்பட்டவங்க தப்பா நெனச்சுக்குவாங்கனு கவுரவம் பாத்துகிட்டே, பண்ணிட்றேன், பார்க்கலாம், கொஞ்சம் டைம் ஆகும், முயற்சி செய்யிறேன்“னு இழுத்தடிச்சுகிட்டே இருப்பாங்க. அப்புறமா கொஞ்ச நாள் கழிச்சு எவ்வளவோ முயற்சி செஞ்சேன், முடியல“னு அசட்டுத்தனமா சொல்லுவாங்க. இத முதல்லயே சொல்லிருந்தா, அவங்க வேற யார் மூலமாவாவது அந்த காரியத்தை செஞ்சு முடிச்சிருப்பாங்க.
பண விஷயமாகட்டும், பொருள் கடனா குடுக்குற விஷயமாகட்டும்.. அவசரத்துல ஏதாவது வாக்குறுதி குடுத்துட்டு அப்புறம் எப்படி சமாளிக்கிறதுனு தெரியாம முழிக்கிறதே பெரும்பாலானவர்க்கு வழக்கமாய்டுச்சு.
உதாரணத்துக்கு, அலுவலகத்துல நம்மள நம்பி ஒரு வேலைய குடுக்கும்போது, மத்தவங்க முன்னாடி கெத்தா இருக்கும்ணு சரி சரி“னு தலையாட்டிட்டு, அப்புறம் பாத்ரூம் கண்ணாடி முன்னாடி நின்னு “உனக்கேன் இந்த வேண்டாத வேலை??? எப்படி செஞ்சு முடிக்கப்போறோனோ..“னு தன்னைத் தானே திட்டிக்க வேண்டியது.. (ஹிஹிஹி.. எல்லாம் ஒரு அனுபவம் தான்..).


மத்தவங்க நம்மளப் பத்தி புரிஞ்சுவச்சிருக்குறத விட, எப்பவுமே நம்மள நாமே கணித்து வச்சுக்கணும்.. ஒரு குறிப்பிட்ட உதவியை அடுத்தவங்க நம்மகிட்ட கேக்கும்போது, முழுதாகவோ அல்லாது ஓரளவிற்கோ அல்லது முற்றிலும் செய்ய இயலாமலோ.. எந்த அளவுக்கு நம்மளால அதை செய்ய முடியும்னு உணர்ந்தோம்னா உடனே அவங்ககிட்ட நிலைமைய விளக்கி சொல்லிடலாம். பந்தாவுக்கு தலையாட்டிட்டு திருட்டுத்தனமா வேற ஒருத்தர்கிட்ட உதவி கேட்குறதெல்லாம்.... எதுக்கிந்த மானங்கெட்ட பொழப்பு?? அதுக்கு “முடியாது“னு சொல்லித் தொலஞ்சிடலாமே...
இன்னும் தெளிவா சொல்லணும்னா, காதல் விஷயத்தை சொல்லலாம். (இப்ப புரியுமே...). ஒருத்தர பிடிக்கலனாலோ இல்ல காதலிக்கலனாலோ உடனே வெளிப்படையா சொல்லிடலாம், அத விட்டுட்டு மாசக்கணக்கா இழுத்தடிச்சு, நாம ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம்னு சொல்லி ஒருத்தர காயப்படுத்துறது....... நிராகரிக்கப்பட்றத விட கொடுமையான தண்டனை. ஒருத்தரோட எதிர்பார்ப்ப நிறைவேற்ற முடியாதபட்சத்தில், அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்கலாம்.. தப்பேயில்லை.
இந்த பிரச்சனை காதலில் மட்டுமில்ல, நண்பர்களுக்குள்ளேயும் இருக்கு. ஒரு சிலர் இருக்காங்க.. “அவன் என்ன சொன்னாலும் நான் செய்வேன்.. அந்த அளவுக்கு சின்ன வயசுலருந்து பழக்கம்“னு சொல்வாங்க.. நல்ல விஷயம் தான். அதுக்காக, அவன் தண்ணியடிக்கும் போது கம்பெனி குடு“னு சொன்னான். என்னால தட்ட முடியல, அதுனால லைட்டா சாப்டேன்“னு சொல்வாங்க.. “எனக்கு இஷ்டமில்ல, என்னால முடியாது“னு நேருக்கு நேரா சொல்றதுனால என்ன கெட்டுப்போய்டும்??? நண்பன் கிண்டல் பண்ணுவானா?? பண்ணிட்டுப்போகட்டுமே? கையயும் காலையும் கட்டிப்போட்டு வாயத்தெறந்து சங்குல ஊத்துவாய்ங்களா??? இல்லேல. அப்படிப்பட்ட சந்தர்ப்பத்துல, ஆரம்பத்துலயே முகம் சுழிச்சு முடியாதுனு உறுதியா சொல்லிட்டீங்கனா அடுத்த முறை கேட்க யோசிப்பாங்க.
ஏதோ குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் காட்டி ஏமாத்துற மாதிரி, பார்க்கலாம் பார்க்கலாம்னு சொல்லி பதிலைத் தள்ளிப் போடாம, யோசித்துப் பார்த்து உடனுக்குடன் வெளிப்படையா சொல்லிட்றது நல்லது.. வீண் எதிர்பார்ப்பாவது தடுக்கப்படலாம்.
தன்னால முடியுமானு முயற்சி செஞ்சு பாக்கலாம்.. வேணாம்னு சொல்லல. ஆனா அது தனக்குனு வரும் சந்தர்ப்பத்துல செய்யலாம். வீணா நம்மளோட டெஸ்ட்டுக்கு அடுத்தவங்கள கஷ்டப்படுத்தக் கூடாதுனு சொல்றேன். “ஸாரிங்க.. என்னால இந்த செயலை செய்ய முடியும்னு தோணல, நீங்க வேற யார்கிட்டயாவது கேட்டுப்பாருங்க“னு வெளிப்படையா சொல்றதால நம்ம தலைல இருக்குற க்ரீடம் ஒண்ணும் கீழ விழுந்துடாது. தன்னால இயலாத ஒரு செயலுக்கு, தேவையில்லாம உங்க நேரத்தையும் வீணாக்கி அடுத்தவங்க எதிர்பார்ப்பையும் வீணாக்குவது வேண்டாமே.. அதுனால..
“முடியாது“னு சொல்லிப் பழகுங்க...
.
.

Comments

முடியாதுங்க...
தமிழ்மணம் ஓட்டுப்போட முடியாது....
கமெண்ட் போட முடியாது...
முடியாதது என்பதை பற்றி முடியாமல் முயற்சி செய்து நச்சுன்னு ஒரு கட்டுரை....
வர வர பல்பு கலக்கலோ கலக்கல்...
vinu said…
கருத்து சொல்ல முடியாது
முடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுவ்வ்முடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாது
baleno said…
முடியாதுனு சொல்லிப் பழகுங்க

தெளிவான சிறந்த அறிவுரை.
willfred Ronald said…
This comment has been removed by the author.
அட எப்படிங்க இப்படியெல்லாம் ....உண்மையிலே முடியலிங்க ...
முடியாதுன்னு சொல்ல முடியனும்... முடியாத விசத்துக்குன்னு நச்சுன்னு சொல்லிட்டீங்க...
நிறைய பேரு இங்கேயே சொல்லி பழகிட்டாங்க போல....
முடியாத விஷயத்தை முடியாதுன்னு சொல்றது நல்ல விஷயம்தான். முடிஞ்ச விஷயத்தை உடனே செஞ்சிடணும். கட்டுரை நல்லா இருக்குன்னு சொல்ல முடியும். வாழ்த்துக்கள் சொல்ல முடியும். (நீங்க கவுன்சலிங் சென்டரே ஆரம்பிக்கலாம்னு தோணுது.)
Unknown said…
நல்லா சொல்லிடீங்க (:
SURYAJEEVA said…
முடியாதுன்னு சொல்வது மிக சுலபம் ஒரு முறை சொல்லும் வரை
இந்த பதிவின் கருத்துரை பகுதியில் தமாஷா கருத்து சொல்லி இருக்காங்க, தப்பில்ல.


அதிகம் அனுபவிசிருபீங்க போல.
அருமையான கருத்துக்கள்.
இந்த மாதிரி பதிவுகள் இணையத்தில் தேடி இருக்கேன் கிடைக்கல.
மேலும் இந்த மாதிரி நல்ல தகவல்களையும், ரசிச்சு படிக்கிரமாதிரி எழுதுங்க,,,
//ஒருத்தர பிடிக்கலனாலோ இல்ல காதலிக்கலனாலோ உடனே வெளிப்படையா சொல்லிடலாம், அத விட்டுட்டு மாசக்கணக்கா இழுத்தடிச்சு, நாம ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம்னு சொல்லி ஒருத்தர காயப்படுத்துறது....... நிராகரிக்கப்பட்றத விட கொடுமையான தண்டனை.//

சரியா சொன்னிங்க.
பொதுவா பசங்கள விட பொண்ணுங்கதான் இழுத்தடிகிறாங்க என்பது என் கருத்து,,,
இன்றும் என் பேத்தி படத்தையே ஆவலுடன் காண வந்தேன்.

என் அருமைப் பேத்தியிடன் எதையுமே ’முடியாது’ன்னு சொல்ல எனக்கு ’முடியாது’ங்க!

என் வலைப்பூ பக்கமே நீங்கள் வராவிட்டாலும் நான் தொடர்ந்து வருவது, அந்த மேலே உள்ள என் பேத்தியின் சாயலில் உள்ள குழந்தையைப் பார்க்கவே!

நல்லதொரு பதிவுதாங்க! அதையும் மறுக்க ‘முடியாது’ தானுங்க.

அன்புடன் vgk
தெளிவான அறிவுரை.இதை யாரும் எற்க முடியாதுன்னு சொல்ல மாட்டாங்க....
சி.பி.செந்தில்குமார் said...
முடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுவ்வ்முடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாதுமுடியாது முடியாது முடியாது முடியாது//

ஹோட்டல்ல ரூம் போடுறதுக்கு, ஐடி ஃபுரூப்'பே குடுக்காதவனாச்சே நீ...!!
சரி இனி நானும் நோ சொல்லிடுறேன்...
willfred Ronald said…
அருமையான விடயம் ...........
முடியவே
முடியாது.........
இத முதல்லயே சொல்லிருந்தா, அவங்க வேற யார் மூலமாவாவது அந்த காரியத்தை செஞ்சு முடிச்சிருப்பாங்க.

அருமை..
COOL said…
செரிங்க...
நண்பர் சிபி(மன்னித்துக்கொள்ளுங்கள்) ரொம்ப ரொம்ப பாதிக்கக்கப் பட்டிருக்கிறார் போலும். தெரிஞ்சவுங்க கொஞ்சம் "முடியாது" ன்னு சொல்லாம வைத்தித்துக்கு ஏற்பாடு பண்ணுங்க.பாவம் ரொம்ப நல்ல மனுசன். நேத்து வர நல்ல நல்ல பதிவா வெளியிட்டுக்கிட்டிருந்தாரு.
இயக்குநர் அகத்தியன் படத்தில், பிரசாந்த் தன்னிடம் காதல் சொல்லிய பெண்ணிடம் சொல்லும் மறுப்பு கடுமையாக இருக்கும். என்னடா இப்படி மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டானேன்னு தோணும்!

பின்னாளில், என் அனுபவத்தில் அப்படி சொல்வது மிகச் சரியெனப்பட்டது!
Avani Shiva said…
இப்போ என்னால முடியும், முடியாது அப்படின்னு சொல்ல



நாங்கல்லாம் புதுசா எழுதுறோம் வந்து பாருங்க
அது என்னால முடியாதுங்க....
'முடியாது' -ன்னு சொல்லிட்ட அங்கேயே மேட்டர் முடிஞ்சு போச்சு.
அதைவிட்டு வெறும் ஜம்பத்துக்கு 'முடியும்'-ன்னு சொல்லி கடைசியிலே முடியாது-ன்னு சொன்ன, எதிர்பார்ட்டிக்கு கோபந்தான் வரும்.
'நீங்க அப்போவே முடியாது-ன்னு சொல்லியிருந்த நான் ஆளைப் பார்த்திருப்பேன்' என்றோ, 'வேற இடத்திலே கேட்டிருப்பேன்' என்றோ அவர் வருத்தப்படக் கூடும்.

எனவே பொதுவா முதலில் முடியாது என்று சொல்வதே இரண்டு தரப்பினருக்கும் சாலச்சிறந்தது.
K.s.s.Rajh said…
முடியாதுங்க
ezhilan said…
இதற்கெல்லாம் கருத்துரை போட "முடியாதுங்க" சரியாகத்தானே சொல்லி இருக்கின்றீர்கள்.வாழ்த்துக்கள்
நல்ல பதிவு..
// பார்க்கலாம்//

:)

வேற என்னாத்த சொல்ல!
என்னால் உங்கள் வலைத்தளம் பக்கம் இனிமேல் வராமல் இருக்க முடியாது..முடியாது....முடியாது
அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html
உங்கள் அறிவுரையை கேட்க முடியாது ன்னு சொல்ல முடியாத அளவுக்கு எல்லோரையும் சென்றடையற மாதிரி எழுதயிருக்கீங்க ...
பின்னூட்டம் போட இருக்க முடியாது...
ஒருமாதிரி பழகி கொஞ்ச நாளாய் முடியாது என்று சொல்லப் பழகி இருக்கிறேன் நீண்ட நெடிய மன வருத்தத்துக்கு சிறிய தற்காலிக மன வருத்தம் பரவாயில்லைதான்!
Anonymous said…
மீனு ....பதிவு நல்லா இருக்கு.
atchaya-krishnalaya.blogspot.com
Nagasubramanian said…
நீங்க சொன்னது உண்மை தான். தக்க சமயத்தில் நாம் தலையாட்டும் விஷயம் நமக்கே பாதகம் ஆகிவிடுவது. ex : காதல்.
100 % உண்மை. தன் வாழ்க்கையையும் தீர்மானிக்காமல், பிறரையும் தீர்மானிக்க விடாமல் இருக்கும் குழப்பவாதிகளை விட, "முடியாது" எனக் கூறும் ஆண்/ பெண் களுக்கு கோவில் கட்டி கும்பிடலாம்
rajamelaiyur said…
No....No....No....No....No....No....No....No....No....No....No....No....No....

it's enough?
rajamelaiyur said…
முடியாது னு சொல்ல முடில ..
மாலதி said…
தெளிவான சிறந்த அறிவுரை.
மாலதி said…
தெளிவான சிறந்த அறிவுரை.
முடியாது பற்றி ரொம்ப முடிவா சொல்லி இருக்கீங்க.
ஹேமா said…
உண்மைதான்.முடியாததை முடியாதுன்னு சொல்லி முடிக்கிறது நல்ல விஷயம் !
//சங்கவி //

//vinu //

//சி.பி.செந்தில்குமார் //

//baleno //

//koodal bala //

//மாய உலகம் //

//siva //

//வெட்டிப்பேச்சு //

//பன்னிக்குட்டி ராம்சாமி //


கருத்துக்கு நன்றிங்க..
//கணேஷ் //

//Moorthy //

//suryajeeva //

//ஆர்.சண்முகம் //


கருத்துக்கு நன்றிங்க..
//வை.கோபாலகிருஷ்ணன் //

கருத்துக்கு நன்றிங்க..


//என் வலைப்பூ பக்கமே நீங்கள் வராவிட்டாலும் நான் தொடர்ந்து வருவது, அந்த மேலே உள்ள என் பேத்தியின் சாயலில் உள்ள குழந்தையைப் பார்க்கவே!//

தவறாக நினைக்க வேண்டாம் சார்.. நேரமின்மையே காரணம்.. தவறை திருத்திக்கொள்கிறேன்.

அப்புறம்.. பேத்தியை பார்க்க வருகிறேன்னு அடிக்கடி சொல்றீங்க.. பதிவு நல்லாயில்லனு மறைமுகமா சொல்றீங்களோ??? அவ்வ்வ்வ்..
//RAMVI //


நன்றிங்க..
//MANO நாஞ்சில் மனோ said...

சரி இனி நானும் நோ சொல்லிடுறேன்...//


எதுக்கு??? இந்தப் பக்கம் வர்றதுக்கா???
அப்படியெல்லாம் சொல்லப்படாது மனோ சார்...
//ronald //

//முனைவர்.இரா.குணசீலன் //

//இராஜராஜேஸ்வரி //

//cool //

//சேக்காளி //

கருத்துக்கு நன்றிங்க..
//குருத்து said...


பின்னாளில், என் அனுபவத்தில் அப்படி சொல்வது மிகச் சரியெனப்பட்டது!//


அனுபவக் கருத்திற்கு நன்றிங்க..
//Avani Shiva said...

இப்போ என்னால முடியும், முடியாது அப்படின்னு சொல்ல



நாங்கல்லாம் புதுசா எழுதுறோம் வந்து பாருங்க//


கண்டிப்பா வர்றேங்க..
//கவிதை வீதி... சௌந்தர் //

//Advocate P.R.Jayarajan//

// K.s.s.Rajh //

//ezhilan //

//ILA(@)இளா//


கருத்துக்கு நன்றிங்க..
//வால்பையன் said...

// பார்க்கலாம்//

:)

வேற என்னாத்த சொல்ல!//


ரைட்டு விடுங்க..
//Avargal Unmaigal //

//Rathnavel //

//பூங்குழலி //

//Thanjai Vasan (தஞ்சை.வாசன்) //

//ஸ்ரீராம். //


கருத்துக்கு நன்றிங்க..
//atchaya said...

மீனு ....பதிவு நல்லா இருக்கு.
atchaya-krishnalaya.blogspot.com//


மீனுவா???
பின்னூட்டத்தை மாத்தி போட்டுட்டீங்களா???
//Nagasubramanian //

//"என் ராஜபாட்டை"- ராஜா //

//மாலதி //

//தமிழ்வாசி - Prakash //

//ஹேமா //


கருத்துக்கு நன்றிங்க..
முடியாது முடியாது“னு சொல்லியே நிறைய பேர் பின்னூட்டம் தேத்திட்டீங்க..
ம்ம்ம்ம் முடியல..
Unknown said…
முடியாது

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்