உயரதிகாரிகிட்ட “டீ“ போட சொன்னது தப்பா??? அவ்வ்வ்வ்வ்...



பொதுவா எல்லா ஆபீஸ்லயும் வருகை பதிவேடு (Attendance Register) இருக்கும். காலேல வந்ததும் எல்லாரும் அதுல கையெழுத்து போட்றது வழக்கமா நடக்கும்.. தனியார் அலுவலகத்துல எப்படியோ தெரியாது. ஆனா இந்த அரசாங்க அலுவலகத்துல, சில அப்பாடக்கர்கள் பண்ற அழும்பு இருக்கே.. தாங்க முடியாது.
என்னோட அலுவலகத்துல அந்த பதிவேடு, அலுவலக உதவியாளர் பொறுப்புல இருக்கும். தினமும் எல்லாரும் கையெழுத்து போட்டு முடிச்சதும் தலைமைப் பொறுப்புல இருக்குற அதிகாரி கிட்ட ஒப்படைக்கணும். அப்புறம் அவர் செக் பண்ணிட்டு இறுதிக் கையெழுத்து போடணும். இதுல பர்மிஷன் போட்றவங்க, அரை நாள் அல்லது முழு நாள் லீவ் போட்றவங்கனு தனிப் பட்டியலும் சேர்ந்து போகும்.
இதுல என்ன விஷயம்னா.. வாசலுக்குப் பக்கத்துலயே ஒரு டேபிள்ல அந்த ரெஜிஸ்டர் வச்சிருப்போம். அத தாண்டி தான் எல்லாரும் உள்ள போகணும். ஆனாலும் சில அப்பாடக்கர்ஸ் அதுல கையெழுத்து போடாம போய் சீட்ல உக்காந்துடுவாங்க. அவங்கள தேடிப் போய் அந்த உதவியாளர் கையெழுத்து வாங்கணும். அதுலயும் யாருக்காகவோ வேலை செய்யிற மாதிரி ரொம்ம்ம்ப சலிச்சுக்குட்டு கையெழுத்துப் போடுவாங்க.
(இத நோட் பண்ணிக்கங்க..) வந்த அரைமணி நேரத்துலயே டீ, காபி சாப்பிட்றேன்னு கேன்டீன் போயிடுவாங்க. அங்க போய் அரட்டைய போட்டுகிட்டு சாவகாசமா வருவாங்க. இப்ப கொஞ்ச நாளா, கேன்டீன்ல டீ நல்லாயில்லைனு சொல்லி, அலுவலகத்துலயே சரஸ்வதி“னு ஒரு வயதான பெண்மணிய டீ போட சொல்லிருக்காங்க. (ஆனாலும் வடை சாப்பிட கேன்டீன் போய்டுவாங்க..) எலெக்ட்ரிக் அடுப்பு, சீனி, காபி தூள், டீ தூள், பால் பாக்கெட்னு எல்லாமே வாங்கி குடுத்துருக்காங்க. (என் கெட்ட நேரம்.. சம்பவம் நடந்த அன்னைக்கு அந்த டீ போடும் பெண்மணி லீவு போட்ருந்தாங்க..)
கடந்த ரெண்டு நாளா எங்க ஆபீஸ் அப்பாடக்கர்ல ஒருத்தர் அலுவலக விஷயமா டூர் போயிருந்தார். பொதுவா தனிப்பட்ட முறைல லீவு போட்டா, ரெஜிஸ்டர்ல “CL“ போடுவாங்க. அஃபீசியல் டூர் போனா “T“ போடுவாங்க. ஆனா அவர் எதுவுமே குறிக்காம இருந்தத நா கவனிச்சு அந்த உதவியாளர் கிட்ட சொன்னேன். உடனே என்கிட்டயே அந்த பொறுப்ப குடுத்துட்டாரு. (வாய வச்சுகிட்டு சும்மா இருந்திருக்கலாம்..)
சரினு நானும் வேகமா அந்த அப்பாடக்கர் இருக்கிற கேபினுக்கு போனேன். யாரோ ரெண்டு மூணு பேர்கிட்ட சீரியஸா டிஸ்கஸ் பண்ணிகிட்டு இருந்தாரு. “Excuse me sirனு மெதுவா கேட்டுட்டு உள்ள போனேன். “சொல்லும்மா“னு என் முகத்தைப் பார்த்தார். நானும் ரொம்பவே பணிவான குரல்ல “சார், ரெண்டு நாளா டீ போடலயாம்.. அதுனால உங்கள இன்னைக்கு டீ போட சொன்னாங்க“னு சொன்னேன். (இது தான் டாக்டர் நடந்தது..).
கேபின்ல இருந்தவங்க எல்லாரும் என்னையும் அந்த சாரையும் மாறி மாறி பாத்தாங்க.. ஏன்னு தெரில.. “என்னது?”னு திரும்ப கேட்டாரு.. நானும் அவருக்கு காது கேக்கல போலனு நெனச்சு, சத்தமா “உங்கள டீ போட சொன்னாங்க“னு சொன்னேன்.
சொன்னது தான் தாமதம்.. “நான்சென்ஸ்“னு சத்தமா கத்திட்டாரு.. ஏன் அப்டி கத்தினாரு??? “T” போட சொன்னது ஒரு தப்பா??? நீங்களே சொல்லுங்க....
.
.

Comments

இந்திரா, ட்வீட் சாரி டீ இன்னும் வர்ல!!!!
F.NIHAZA said…
ஐயோ....தாங்க முடியலயே....சுத்த அப்பாவியா இருப்பீங்களோ....
T” போட சொன்னது ஒரு தப்பா???
அடாடா... ரொம்பவே இம்சிச்சுட்டீங்களே...
இன்றும் பேத்தியை ஒரு முறை தரிஸிக்க முடிந்தது தான் இலாபம்.

//நான் இந்திரா இம்சிக்கிறேன்..//

உண்மையிலேயே தான்.
ஒரே தலைவலி.
உடனே எனக்கு
TEA or COFFEE வேண்டும்.

vgk
Unknown said…
Sir, Tea coffe,
Sir tea cofee...
really I should appreciate this.

wonderful humor.

மனசு விட்டு பலமா சிரிச்சேன்.

உங்களை டி போடச்சொன்னத ஆபிசர் கிட்ட டி போடச்சொல்லிட்டீங்களே..

என்னே உங்க சாமார்த்தியம்.

God Bless You.
அன்பின் இந்திரா - ஆமா இந்த டீ போடறா வேலை எல்லாம் பொதுவா அசிஸ்டெண்ட் தான் பண்ணுவாங்க - அது ஏன் ஆஃப்பிசர வரைக்கும் கொண்டு போறிங்க - சரி சரி - கடசில அன்னிக்கு யார்தான் டீ போட்டாங்க - அதச் சொல்லுங்க
Unknown said…
ஹஹஹா!!
கடைசில அவர் டீ போட்டாரா இல்லையாங்க??

இங்க்லீஷ் படம் மாதிரி பாதிலேயே முடிசிடீங்க!!
நெக்ஸ்ட் பார்ட் ஏதும் பிளான் பன்னிருகீங்களா?? (((:
aotspr said…
இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்...

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
மிக அழகாக விளக்கி எழுதி இருக்கிறீர்கள்
இல்லையேல் அரசுப் பணி புரிபவர்கள் தவிர
மற்றவர்கள் புரிந்து கொள்வது கடினம்
அருமையான நடைமுறை நகைச்சுவைப் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ஹா..ஹா.. ஹா..
Avani Shiva said…
இந்த வந்துரும் , அந்த வந்துரும் பார்த்த வரவேஇல்ல , எங்க ஆபிஸ்ல டீ தான்
SURYAJEEVA said…
வடையும் போச்சு
டீயும் போச்சு
ezhilan said…
டி சர்ட் கொடுத்திருந்தா நீங்க போட்டுகிட்டிருப்பீங்க. டீயை மட்டும் மேலதிகாரிதான் போடனுமா என்ன? அந்த வயதான அம்மா வரும் வரை நீங்களே டி போடுங்கள்.இனி போடுகின்ற டி இதைவிட நன்றாக இருக்கவேண்டும்,ஆமா,இல்லேண்ணா பிச்சுபுடுவேன் பிச்சு.
ஆஹா வடிவேலு கணக்கா போயி மாட்டிகிட்டீங்களே அவ்வ்வ்வ்வ்...
ஜுரம் காய்ச்சல் எல்லாம் வரலியா உங்களுக்கு, செமையா வாங்கி கட்டி இருக்கீங்க ஹா ஹா ஹா ஹா...
Unknown said…
வகோ நீங்களே'T'போட்டு அவர்கிட்ட சொல்லி பாராட்டுகளை வாங்கி இருக்களாம்.
ஆனா இப்படி வாங்கி கட்டியிருக்ககூடாது.
9கொஞ்சம் சீரியஸா முகத்த ஆபிஸுல வச்சுகோங்க, இல்லைனா இத வச்சு உங்கள கேளிபண்னப் போறாங்க
ஒரு T போட சொன்னது ஒரு குத்தமா?
COOL said…
கொஞ்ச நேரம் சிரிக்க வச்சதுக்கு நன்றிங்க...
Unknown said…
ஹா......ஹா........

அருமையான T
டீ இன்னும் வர்ல
K.s.s.Rajh said…
ஹா.ஹா.ஹா.ஹா............
அடடா, இதுக்குத்தான் இடம், பொருள், ஏவல் ன்னு சொல்லுவாங்களோ
தப்பே இல்ல இந்திரா .

அட இந்த இஇஈஈதொல்லை தாங்க முடியலப்பா
:))

ஆனால் OT or OD (On Tour or Outside Duty) என்றுதானே போடுவார்கள்?
வாய்விட்டு சிரித்தேன்..
தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ... மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...
COOL said…
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
T T T T T T T
நானே போட்டுட்டேன்..
//ஸ்ரீராம். said...

:))

ஆனால் OT or OD (On Tour or Outside Duty) என்றுதானே போடுவார்கள்?//


அது தான் வழக்கம்.. ஆனால் சிலருக்கு அது கூட சோம்பேறித்தனமாகிப் போனது. அதனால் இங்கே இப்படி...
கருத்துக்களைப் பகிர்ந்த, பகிரப் போகும் நண்பர்களுக்கு நன்றிகள்..
Praveen said…
Ithu Antha Tea'ya?

Vada poche... :(
Mohamed Shaheed said…
உங்களுக்கு லொள்ளு ரொம்ப ஜாஸ்தி !!!!

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..