மொக்கை இலவசம்.. (படிச்சு நொந்தது)..



பொறுக்கி :- மாப்பு வாழ்க்கையே புடிக்க மாட்டேங்குதுடா
கிறுக்கன் :- அடேய் வாழ்க்கை உன்னை என்ன பண்ணுனது?
பொ:- இல்லடா, நான் 3 வருஷமா, உயிருக்கு உயிரா காதலிச்ச பொண்ணு என்னை புடிக்கலைனு சொல்லிட்டா'டா
கிறு:- உயிருக்கு உயிரா'னா எப்படி? நீ உங்க வீட்டுல ஒரு கரப்பான் பூச்சிய சாகடிச்சா, அவ அவங்க வீட்டுல எலியை சாகடிப்பாலா?
பொ:- முடியலடா..உன்கிட்ட வந்து சொன்னேன் பாரு..
கிறு:- சரி சரிலூஸ்ல வுடு.. இத்தனை நாள் உன்னை லவ் பண்ணுனவ இன்னைக்கு ஏன் வேண்டாம்'னு சொன்னா..
பொ:- இன்னைக்கு சொல்ல'ல டா முந்தா நேற்றே சொல்லிட்டா..
கிறு:- இதோடா, எனக்கே வா?
பொ:- சாரிடா, லூஸு கிட்ட பேசுனா லூஸாவாங்க இல்ல? அது மாதிரி தான் இதுவும்..
கிறு:- அப்போ என்னை லூஸு'னு சொல்லுற?
பொ:- அப்படி லூஸை கேவல படுத்துற அளவுக்கு நான் ஒன்னும் முடிச்சவுக்கி இல்லை
கிறு:- அப்போ முடிச்சி போடுறவனு சொல்லுறியா?
பொ:- உன்கிட்ட தெரியாமா சொல்லிட்டேன்….. லெட் பீ சீரிய்ஸ் டா
கிறு:- சரி சரி மொபைல் கொஞ்சம் கொடு ஒரு கால் பண்ணிக்கிறேன்..
பொ:- அப்போ கை பண்ணுறத்துக்கு என்ன கேட்ப்ப?
கிறு:- வேண்டாம் சொல்லிட்டேன்..
பொ:- கூல்.. இந்தா போன்.. யாருக்கு பேச போற?
கிறு:- ஆம்புலன்ஸ்க்கு
பொ:- ஏன்?
கிறு:- நீ தான் லெட் பீ சீரிய்ஸு னு சொன்ன?
பொ:- ராசா பீளிஸ்உன்னை பற்றி தெரியாம
கிறு:- அது.. சரி சரி மேட்டருக்கு வா..
பொ:- வா ஒரு கட்டிங் போட்டுக்கிட்டே பேசுவோம்..
கிறு:- ஏன்'டா எனக்கு இருக்கிறதே தலையில நாலு முடி.. அதையும் கட் பண்ணிட்டா அடிக்கிற வெயில்'ல முன்னாடி வரவங்களுக்கு கண்னு கூசிட போகுது….
பொ:- ??? இப்ப எதுக்கு தேவை இல்லாம உன் சேப்பாக்கம் மைதானத்தை இழுக்குற?
கிறு:- நீ தானே கட்டிங் போடலாம்;னு சொன்ன? அப்போ நாம சலூன்க்கு போகலையா?
பொ:- உனக்கு சாயாங்காலம் போடுற கட்டிங்'னா தெரியாது?
கிறு:- ஓ அந்த கட்டிங்கா? வா வா அதை முதல்ல புட்டிங் போட்டுடலாம்… :)
ஒரு மணி நேரத்துக்கு அப்புறம்
பொ:- டேய் கட்டிங் மட்டும் போடலாம்'னு வந்தா நீ இங்க பில்டிங் பைப் பிட்டிங் மாதிரி இழுத்துக்கிட்டே போறியே…. பேச வந்ததை பேசுவோமா?
கிறு:- அட ஆமாம்'ல சொல்லு சொல்லு.. அப்படியே இன்னொரு சிக்கன் டிக்காவும் சொல்லிடு….
பொ:- ம்ம்ம். முதல்'ல என்னத்த சொல்ல? கதையை'யா இல்லை சிக்கன் டிக்கா வா?
கிறு:- கண்டிப்பா சிக்கன் டிக்காவை முதல்ல சொல்லிடு..
பொ:- "கண்டிப்பா சிக்கன் டிக்காவை முதல்ல" சொல்லிட்டேன் டா.. போதுமா?
கிறு:- சார் ஜோக் அடிச்சீங்களாக்கும்?
பொ:- நாயே, உன் முன்னாடி தானே காசு கொடுத்து நெப்போலியன் half வாங்குனேன்? இப்ப ஜோக் அடிச்சியானு நாக்கு மேல பல்லை போட்டாலும் பரவாயில்லை நீ காலை போட்டு இப்படி கேட்டுட்டியே?
கிறு:- பரவாயில்லைடா நெப்போலியன் உள்ளே போன பயங்கரமா தான் எல்லாத்தையும் பேச வைக்கிறார்..
பொ:- டேய் பிளிஸ் டா .. கொஞ்சம் சீரியஸா பேசுவோம் டா…..
கிறு:- சரி சரி, கொஞ்சம் மொபைல் போனை கொடுவேன்
பொ:- டேய் திரும்பியுமா? ??????
கிறு:- சே சே, பயப்படாத, வீட்டுக்கு தான் ஒரு கால் பண்ணி வர லேட்டாகும்னு சொல்லிடறேன்என் மொபைல்'ல சார்ஜ் இல்லை.
பொ:- தெளிவா தான்'டா இருக்க நீ..
கிறு:- ஆமாம் வாங்குனதே half தான் அதுல கட்டிங் மட்டும் தான் எனக்கு..அதுல நான் மட்டை ஆகுனேன்'னா அந்த மாவீரன் நெப்போலியனுக்கே அசிங்கம் டா
பொ:- கட்டிங்'க்கு எல்லாம் நீ மாவீரனை இழுக்க கூடாது.. அப்புறம் நான் டென்ஷன் ஆகிடுவேன்.. பார்த்துக்கோ
கிறு:- சரி சரி, பக்கோடால இருந்து கையை எடுத்துட்டு ஊருகாய்க்கு கையை மாத்து…….பக்கோடவ கேட்டா, இங்க கருவேப்பில்லைய வருத்து தராங்கேஹி ஹி ஹி..
பொ:- ஏன்'டா நான் எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்லனும்'னு உன்னை தேடி வந்தா நீ இப்படி பக்கோடாவ பத்தி லெக்சர் கொடுத்து கிட்டு இருக்கியே
கிறு:- நீ லெக்சர்னோன தான் நியாபகம் வருது எனக்கு…..
பொ:- என்னடா?
கிறு:- இங்க மிக்சர் கிடைக்குமா'னு கேட்டு பாருடா…. Side டிஷ்க்கு நல்லா இருக்கும்
பொ:- நீ எதையுமே சீரியஸாவே எடுத்துக்க மாட்டியா டா?
கிறு:- சரி சரி இப்ப சொல்லு
பொ:- இப்ப
கிறு:- ம்ம்ம்ம் மேல சொல்லு
பொ:- மேல
கிறு:- ஹா ஹா மாட்டிக்கிட்டநான் உன்னை ம்ம்ம்ம் மேல சொல்லுனு தானே சொன்னேன்.. நீ மேல'னு மட்டும் சொல்லிட்ட.. சோ, யூ ஆர் அவுட் ஆப் தி கேம்.. ஹி ஹி ஹிஎப்படி?
பொ:- நான் கிளம்புறேன்'டா…..
கிறு:- கூல்டா……. என் மேல கோவப்ப்டாதே…. கண்டிப்பா நாம அடுத்த எபிசோட்'ல் உன் காதலை பற்றி பேசுவோம்இப்ப 11மணி ஆச்சி….. 11.30 க்கு மேல ரெயிட் இருக்கும்என்கிட்ட காஜா பீடி வாங்க கூட காசு இல்லை….. லைசென்ஸ் வேற இல்லை.. அதனால் இப்ப கிளம்புவோம்உன் கதையை அடுத்த மீட்ல புட்டு வை சரியா?
பொ:- டேய் எனக்கு சுடு தண்ணியே வைக்க தெரியாது.. இதுல எங்கத்த புட்டு வைக்கிறது?
கிறு:- பேசுடா பேசு…… உனக்கு ரிப்பிட்டு அடுத்த வாரம் கொடுக்கிறேன் கிளம்புறேன்..
-----------------------------------------------------
மாரல் ஆப் தி பதிவு :- யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா...
சரி சரி துப்பிட்டுப் போங்க..
.
மொக்கை from கோபி
http://pakkatamilan.blogspot.com/2008/05/blog-post_29.html
.
.

Comments

இன்னிக்கு தமிழ்மணம் மொதக்குத்து என்னுது தான்....
//நீ உங்க வீட்டுல ஒரு கரப்பான் பூச்சிய சாகடிச்சா, அவ அவங்க வீட்டுல எலியை சாகடிப்பாலா?//

இதுதான் உயிருக்க உயிராவா....
//சரி சரி துப்பிட்டுப் போங்க..//

அருமையான பதிவு...
கலக்கல் பதிவு.......
சூப்பர்...............
இதுல மாரல் வேறையா?
மாரல் ஆப் தி பதிவு :- யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா...
சும்மா, படித்ததில் நொந்தது, மொக்கை
ஹி ஹி ஆட்டைய போட்ட பதிவா?

இருந்தாலும் இந்த மாதிரி ஒரு மரண மொக்கைய உங்களால தானே நான் வாசிச்சேன்,,,,

சூப்பரா கீது பாஸ்,,,,,,,,
அடக்கடவுளே... ரத்தம் வர்ற அளவுக்கு இப்படிக்கூட மொக்கை போட முடியுமா..?
இவிங்ககிட்டே நெப்போலியன் படுற பாடு இருக்கே ஹய்யய்யோ முடியல ஹா ஹா ஹா ஹா....
Lingesh said…
மொக்கை அருமை
K.s.s.Rajh said…
கலக்கள் மொக்கை...மொக்கை...
அடடா..அப்புடியே மொக்கராசு மாமாவ பிரதி எடுத்த மாதிரியே இருக்கே.. கலக்கல் மொக்கை.
ஹா... ஹா.... இம்புட்டு மொக்கையை நான் படிச்சதே இல்லை...
என் அருமைப்பேத்தியை இன்று மீண்டும் கண்டு களிக்க வைத்ததற்கு என் நன்றிகள். vgk
////
உயிருக்கு உயிரா'னா எப்படி? நீ உங்க வீட்டுல ஒரு கரப்பான் பூச்சிய சாகடிச்சா, அவ அவங்க வீட்டுல எலியை சாகடிப்பாலா?///////


புதுசா இருக்கு...
செம மொக்கைங்க...
நடத்துங்க...

இதுல அடுத்த எபிசோடு வேறையா...
SURYAJEEVA said…
மாறி மாறி போனா மாரலா? மாறளா?
Anonymous said…
கலக்கலான மொக்கை!
COOL said…
மொக்கை சூப்பர்...
Unknown said…
பொறுக்கி+கிறுக்கன்=மொக்கை
Henry J said…
romba romba mokkai!!!!!!!!!!!


`.¸¸♥´¯) ¸.☆´ღ
¸☆´ ¸.♥´´¯`•.¸¸.ღ
(¯`v´¯) .**
`*.¸.*
¸.*`.¸¸ . ✶*¨*. ¸ .✫*¨*.¸¸.✶*¨`*✶
(. . ✫ . . Nice Blog !! Keep it up.. :)
`.¸¸ . ✶*¨*. ¸ .✫*¨*.¸¸.✶l
90 ரூபாய் பூஸ்டர் பேக் போடுங்க 30 நாட்களுக்கு நான் ஸ்டாப் ஆ பேசுங்க மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க 365 Days Free Unlimited Calls Click Here
vinu said…
ennathu parents kittey signature vaangittu varranumaa??.....
vinu said…
pongappaa naan intha aattathukku varalai!!!!!
இங்கே கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட, பகிரப்போகும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்..

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..