கருப்பா இருக்கீங்களா?? கர்வமா இருங்க..



நேத்து டிவில முக க்ரீம் விளம்பரம் ஒண்ணு பார்த்தேன். எவ்ளோ தான் யோசிச்சாலும் க்ரீம் பேரு நினைவுக்கு வர மாட்டீங்குது. இத்தனை நாள் சிகப்பா மாறுவதற்குனு விளம்பரம் செஞ்சுகிட்டிருந்தாங்க. ஆனா இந்த விளம்பரத்துல “கண்ட கண்ட க்ரீம் உபயோகிச்சதால வெளுத்துப்போன மாதிரி இருக்குற சிகப்பு நிறத்தை, அழகான சிகப்பு நிறமா மாத்துவோம்“னு சொல்லிகிட்டு இருந்தாங்க. அத பாக்கும்போது வேடிக்கையா இருந்துச்சு.
நம்மள்ல பலர், கருப்பா இருக்குறவங்க சிகப்பாகணும்னு ஆசைப்பட்றாங்க. சிகப்பா இருக்குறவங்க இன்னும் சிகப்பாகணும்னு முயற்சி எடுக்குறாங்க. கருப்பு நிறத்தை பெரும்பாலும் யாரும் விரும்புறதே இல்லை. அது அசிங்கமான ஒரு அடையாளமா தான் சமுதாயத்துல நினைக்கிறாங்க. வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும்போது கூட வெளி அழகு தான் முதல் கன்டிஷனா இருக்குது. பொண்ணு கருப்பா இருக்குதுனா, வாய்கூசாம வரதட்சணைல பத்து பவுன் நகை ஜாஸ்தியா கேக்குற மாப்பிள்ளை வீடுகளும் உண்டு. அதுக்கு விதியேனு நெனச்சு சம்மதிக்கிற பெத்தவங்களும் இருக்காங்க.


குழந்தை சிகப்பா பொறக்கணும்னு குங்குமப்பூவை அள்ளி சாப்பிட்ற தாய்மார்கள் நம்ம ஊர்ல அதிகம். குழந்தை நடக்க ஆரம்பிச்சதுமே அழகு நிலையத்துக்கு கூட்டிகிட்டுப் போற வழக்கம் வந்துடுச்சு.
எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே மாட்டீங்குது. கருப்பானவங்கள்ல லட்சணமானவங்களும் இருக்காங்களே.. அவங்களே கூட சிகப்பா பிறக்கலையேனு வருத்தப்பட்றது காமெடியா இருக்கு. இந்த சமுதாயம் அவங்கள அப்படி பழக்கப்படுத்திருச்சு. நம்ம்ம ஊர்ல Fairness cream விக்கிறது மாதிரி வேற எங்கயும் விக்காது.. வயித்துக்கு சாப்பாடு இருக்கோ இல்லையோ.. முகத்துக்கு மேக்-அப் அவசியம்னு நெனைச்சிக்குறாங்க.
பாக்குறதுக்கு உற்சாகமா இருக்கணும்னு நெனைக்கிறது நியாயமான விஷயம் தான். ஆனா அது சிகப்பு நிறத்துல தான் இருக்குதுனு சொல்றது நியாயமில்ல.
 
உண்மைய சொல்லணும்னா கருப்பு நிறத்தோல் அடர்த்தியானதுஇதுல மெலனின் அதிகமா இருக்குறதுனால அது ஆரோக்கியமானதாகவும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் கொண்டதாகவும் இருக்குதுனு ஆராய்ச்சில உறுதி செஞ்சிருக்காங்க. அதுவுமில்லாம கருப்பான தோலுக்கு முகப்பருவோ தழும்போ அதிகம் வராதுணும் சொல்றாங்க.
வெளிநாடுகள்ல இருக்குறவங்க சன்-பாத் எடுத்து சிகப்பான தங்களோட உடம்பை பக்குவப்படுத்திக்குறாங்க. ஆனா நாம வெயில் படாம இருக்கணும்னு Sunscreen லோசன் தடவி கருத்துடாம பாத்துக்குறோம். அதுக்காக எல்லாரும் கருப்பாகணும்னு சொல்ல வரல. கருப்பும் ஒரு அழகு தான்னு சொல்றேன்.
சிவந்த நிறத்துக்கு சொந்தக்காரவங்க தன்னம்பிக்கையோட இருப்பாங்க, கருப்பா இருக்குறவங்களுக்கு அது குறைவுனு சொல்றதெல்லாம் பொய். ஒரு விளம்பரத்துல Fair&lovely க்ரீம கையில வச்சவுடனே வாழ்க்கைல ஜெயிக்குற மாதிரி காட்டுவாங்க.. வாட் எ காமெடி..
மைனா படத்துல வர்ற வசனம் மாதிரி “அவனவன் முக்கி முக்கி சம்பாரிச்சாலும் மூணு டவுசருக்கு மேல வாங்க முடியல.. அதுலயும் ஒண்ணு எலாஸ்டிக் போய்டுது.. இந்த லட்சணத்துல மூணே நிமிசத்துல முன்னேறுறாய்ங்களாம்ல..
ஆணோ பெண்ணோ, சிகப்பா இருந்தா தான் எதிர்பாலினரை ஈர்க்க முடியும்னு தாங்களா முடிவு பண்ணிக்கிறாங்க. அந்த மாதிரி நிறத்தையும் வெளி அழகையும் பார்த்து வர்ற நட்பு நிலைக்கவும் செய்யாது.
அழகுங்குறது நிறத்துலயா இருக்கு? அது மனசுல இருக்கணும். அதுக்காக அடுத்தவனுக்கு உதவுறவன், தியாகம் பண்றவன், அள்ளிக் குடுக்குறவன் தான் அழகு அப்படி இப்படினு அட்வைஸ் பண்ணல. அதெல்லாம் அவங்கவங்க சூழ்நிலையப் பொறுத்தது. நா என்ன சொல்றேன்னா.. அடுத்தவங்கள பாதிக்காம, கஷ்டப்படுத்தாம, தொந்தரவு குடுக்காம, தன்மேல அக்கறையா இருக்குறவங்கள புரிஞ்சு, மத்தவங்கள நேசிக்கிற எல்லாருமே அழகானவங்க தான். இதுல கருப்பென்ன சிகப்பென்ன??
நிறத்தை வச்சு தாழ்வு மனப்பான்மைய வளத்துக்குறது முட்டாள்தனம். வாழ்க்கைய வாழ்றதுக்கு, சாதிக்குறதுக்கு, நிறம் ஒரு தடையே இல்ல.
அதுனால..
கருப்பா இருக்கீங்களா?? கர்வமா இருங்க பாஸூ..
.
.

Comments

அருமையான கருத்து. எனக்கு கருப்பும் ஒரு அழகுதான். அதை ரசிப்பேன் நான். அழகாச் சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
ஆர்வா said…
நீங்க சொல்றது என்னமோ உண்மைதான். ஆனா இன்னைக்கு கருப்பா இருக்கிறதால நிறைய இழக்க வேண்டி இருக்கு. வேலை, திருமணம், காதல் போன்ற விஷயங்கள்ல இதுக்கான புறக்கணிப்புங்கிறது மிக் அதிகம். கருப்பா இருக்கிறவங்க தன்னம்பிக்கையா இருந்தாக்கூட, சுற்றி இருக்கிற சமூகம் அவங்க மேல காட்டுற பாரபட்சம், அந்த தன்னம்பிக்கைய உடைச்சி எறிஞ்சிடுதுங்கிறதுதான் உண்மை. கருப்பா இருக்கிறவங்க எத்தனையோ பேரு இந்த குற்ற உணர்ச்சியிலதான் சிக்கித்தவிச்சிக்கிட்டு இருக்காங்க.. அவ்ளோ சீக்கிரம் அவங்க மனசுக்குள்ள தன்னம்பிக்கைய விதைக்கிறது சாதாரண விஷயம் இல்லை.
Marc said…
அழகான உண்மை அழகான பதிவு வாழ்த்துகள்
SURYAJEEVA said…
if you would have added oparah winfrey's picture it would have been great for this article...
baleno said…
மிகவும் நல்ல பதிவு.
"கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு !"
நல்ல பதிவு! நன்றி !
Jaleela Kamal said…
மிக அருமையான கருத்தும் பதிவும்...
நன்னம்பிக்கையை ஏற்படுத்தும்
தன்னம்பிக்கை பதிவு...!

நல்ல பதிவு...!

ஆமா...!
நீங்க கருப்பா...! இல்ல செவப்பா...!
எப்புடி புடிச்சோம் பாருங்க பாய்ண்ட...!
மனசு கறுப்பா இருக்கக்கூடாது... அவ்வளவுதான்...
Avainayagan said…
"அடுத்தவங்கள பாதிக்காம, கஷ்டப்படுத்தாம, தொந்தரவு குடுக்காம, தன்மேல அக்கறையா இருக்குறவங்கள புரிஞ்சு, மத்தவங்கள நேசிக்கிற எல்லாருமே அழகானவங்க தான். இதுல கருப்பென்ன சிகப்பென்ன??" மிகச்சரியான கருத்து
"அழகுங்குறது மனசுல தான் இருக்கு, இருக்கணும்.
நல்ல பதிவு.
வாழ்த்துகள்.
//கணேஷ் said...

அருமையான கருத்து. எனக்கு கருப்பும் ஒரு அழகுதான். அதை ரசிப்பேன் நான். அழகாச் சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.//


நன்றிங்க..
வருகைக்கும் வாழ்த்துக்கும்.
//கவிதை காதலன்//


அந்த நிலைமை மாறணும்குறது தான் என்னோட.. எல்லோருடைய விருப்பமும்.
பிஸி நேரத்துலயும் வருகை தந்ததுக்கு நன்றி மணி சார்..
:))
//dhanasekaran .S said...

அழகான உண்மை அழகான பதிவு வாழ்த்துகள்//


நன்றிங்க..
//suryajeeva said...

if you would have added oparah winfrey's picture it would have been great for this article...//


அவர் மட்டுமல்ல. பட்டியல்ல நிறைய பேர் இருந்தாங்க. அதனால பொதுவான புகைப்படங்கள வச்சுட்டேன்.
சரி விடுங்க.. இன்னொரு முறை பார்த்துக்கலாம்.
//baleno said...

மிகவும் நல்ல பதிவு.//


நன்றிங்க..
//baleno said...

மிகவும் நல்ல பதிவு.//


நன்றிங்க..
//திண்டுக்கல் தனபாலன் said...

"கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு !"
நல்ல பதிவு! நன்றி !//


நன்றிங்க..
வருகைக்கும் கருத்துக்கும் பாட்டுக்கும்..
//Jaleela Kamal said...

மிக அருமையான கருத்தும் பதிவும்...//


நன்றிங்க..
//காஞ்சி முரளி said...

நன்னம்பிக்கையை ஏற்படுத்தும்
தன்னம்பிக்கை பதிவு...!

நல்ல பதிவு...!//


நன்றி முரளி சார்..
வருகை தொடரட்டுமுங்க..
////காஞ்சி முரளி said...


ஆமா...!
நீங்க கருப்பா...! இல்ல செவப்பா...!
எப்புடி புடிச்சோம் பாருங்க பாய்ண்ட...!//


ரெண்டுத்துக்கும் நடுவுலங்க..
(மீ எஸ்கேப்புஉஉஉ..)
//குடந்தை அன்புமணி said...

மனசு கறுப்பா இருக்கக்கூடாது... அவ்வளவுதான்...//


சரியாச் சொன்னீங்க..
கருத்துக்கு நன்றி.
//வியபதி said...


மிகச்சரியான கருத்து
"அழகுங்குறது மனசுல தான் இருக்கு, இருக்கணும்.//


உண்மை தான்.
நன்றிங்க..
//Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.//


நன்றிங்க..
கருப்பே அழகு
காந்தலே ருசி

கருப்புதான்
ஆனாலும்
மாநிறம் என
மனதை தேற்றிக் கொள்ளும்
அனைவரும் படியுங்கள்
Praveen said…
Sister, i like Dusky people for their skin tone on first sight.

Disky -Sight'nu naan sonnathu PArkkum pozhuthu appadingara meaningla mattum thaan.

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..