டல்லடிக்கும் பதிவுலகம்..
கிட்டத்தட்ட தலைப்ப வச்சே நா என்ன சொல்ல வரேன்னு முடிவு பண்ணிருப்பீங்க.. அதுக்காக என்னால சொல்லாம போக முடியாது.
மாற்றம்குறது மனுஷனோட இயல்பு தான். அதுக்காக ஒரு விஷயத்துல இருந்து இன்னொரு விஷயத்துக்கு மாறும்போது பழச மறந்துடக் கூடாது. இது பொதுவா யாருக்கு வேணும்னாலும் சொல்லலாம். இத பதிவர்களுக்கு கட்டாயம் சொல்லியே ஆகணும்.
(எனக்குத் தெரிஞ்சு) ஒரு ஆறுமாசமா பதிவுலகத்துல என்ன நடக்குதுனே புரியல. நல்லா எழுதிகிட்டிருந்த பதிவர்களெல்லாம் எங்க போனாங்கனே தெரியல. ஏதோ ஒண்ணு ரெண்டு பிரபல பதிவர்கள தவிர மத்த பதிவர்கள் பெரும்பாலானவங்க எழுதுறத குறைச்சுட்டாங்க. கேட்டா பிஸிங்குறாங்க. சிலருக்கு வேலை மாற்றம், சிலருக்கு குடும்ப வாழ்க்கை, வேறு சிலருக்கு தொழில்“னு என்னென்னவோ காரணம் சொல்றாங்க. ஆனா எல்லாத்துக்கும் மூல காரணம் “ஆர்வம் குறைஞ்சது“ தான்னு சொல்லணும்.
முன்னாடியெல்லாம் ஒரு பதிவு எழுதினா, அதுக்கு விமர்சனங்களும் மாற்றுக்கருத்துகளும் சரமாரியா வரும். காரசாரமான விவாதங்களை முன்வச்சு பதிவுகள்ல விவாதம் பண்ணுவாங்க. ஆனா இப்ப? நாலு வரி கவிதை, இல்லனா ஒரு ஜோக், அதுவுமில்லைனா மொக்கை திரைப்பட விமர்சனம்.. அவ்ளோ தான். இன்னைக்கு சூழ்நிலைல பதிவுலகம் குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளயே முடங்கிடுச்சுனு சொல்லலாம்.
ஒரு சில நல்லா எழுதிகிட்டு இருந்த பதிவர்கள காணோமேனு தேடிப்பார்த்தா பேஸ்புக், டுவிட்டர், கூகுள் ப்ளஸ்“னு எழுதி தள்ளிகிட்டு இருக்காங்க. பேஸ்புக்னு ஒண்ணு வந்தாலும் வந்துச்சு.. ப்ளாக் பக்கம் நெறைய பேர் வர்றதே இல்ல.
அங்க சாதாரண ஒரு புகைப்படத்துக்கு “லைக்“ குமியுது.. ஆனா பல நல்ல கருத்துக்கள் எழுதுனாலும் பதிவுகள படிக்க ஆளில்ல. நாம எழுதுற எழுத்துக்களுக்கு போதிய ஊக்கம் குடுக்கப்படாத நிலைல, நிறைய பதிவர்களுக்கு சலிப்பு உண்டாகுது. இது கொஞ்சம் ஆலோசிக்க வேண்டிய விஷயம்.
நல்லா எழுதிகிட்டு இருந்த பதிவர்கள் கூட இப்ப பதிவுகள் எழுதுறத பெரும்பாலும் குறைச்சுட்டாங்க. அதையும் மீறி எழுதினாலும் தங்களோட தொழிலுக்குரிய விளம்பரங்கள், உள்குத்து பதிவுகள்“னு தான் எழுதுறாங்க. ஆரம்பத்துல பதிவுலகத்துல இருந்த ஒரு சுறுசுறுப்பு இப்ப இல்லாமப் போய்டுச்சு.
சும்மாவே பதிவுலகம் டல்லா இருக்கு.. இந்த லட்சணத்துல கூகுள்“ல இப்ப நிறைய மாற்றம் கொண்டுவந்துட்டானுக. ஹிட்டுக்காக எழுதுனவங்களும் இந்த மாற்றத்துனால சோர்ந்து போய்ட்டாங்க. மறுபடியும் முதல்லயிருந்தா“னு சலிப்பாய்ட்டாங்க.
பதிவுகள் எழுதுறது தான் குறைஞ்சுடுச்சுனா, சக பதிவர்களோட வலைப்பக்கங்களுக்கு போறதையும் விட்டுட்டாங்க. குறிப்பிட்ட ஒரு நாலு பேர், அதுலயும் தங்களோட நண்பர்களா இருந்தா மட்டும் எப்பவாவது போய் அட்டெண்டன்ஸ் போட்றாங்க. இதுல ஆதங்கமான விஷயம் என்னனா, தரமான பதிவுகளுக்கு கூட கிளுகிளுப்பான தலைப்பு வச்சு வருகைய அதிகரிக்கச்செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. என்ன பண்றது? 18+“னு தலைப்புல இருந்துச்சுனா அந்தப் பதிவுக்கு வர்றவங்க எண்ணிக்கைய கணக்கிடவே முடியாது. அதுலயும் “தலைப்ப பார்த்து ஏமாந்துட்டேன்“னு பின்னூட்டம் போட்றவங்க தான் அதிகமா இருப்பாங்க.
நா ஆரம்பத்துல சொன்னது போல புதுசு புதுசா சிந்திக்கிறது தப்பில்ல. அதுக்காக நல்லா வளர்ந்துகிட்டு இருந்த ஒரு துறைய, நம்மளோட சிந்தனைகளோட சிறகை விரிக்கச் செஞ்ச ஒரு தளத்தை மறக்குறது வேதனையான விஷயம். நல்லா எழுதுறவங்களப் பார்த்து புதுசா வர்றவங்க கத்துக்கணும். அத விட்டுட்டு பதிவுலகம்னாலே மொக்கை“ங்குற நிலைமை வந்தாச்சு. மொக்கை பதிவுகளுக்கு கிடைக்குற வரவேற்பு, தரமான பதிவுகளுக்கு கிடைக்குறதில்லனு காரணம் சொல்லி, நல்லா எழுதுறவங்க விலகிடுறது சரியில்ல. நாம நல்லா எழுதுறோம், நம்மளோட எழுத்துக்கள் தரமானதா இருக்குங்குற பட்சத்துல தொடர்ந்து எழுதலாமே.. கட்டாயம் அதுக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும்.
அத விட்டுட்டு ஹிட்ஸ் வரமாட்டீங்குது.. நெறைய பின்னூட்டம் வரல.. ஓட்டுகள் அதிகம் கிடைக்கல“னு பதிவுகள் எழுதுறத கைவிடக் கூடாது. அதுக்காக மாங்கு மாங்குனு எழுதி தள்ளுங்கனு சொல்ல வரல. தினம் ஒரு பதிவு போடலைனாலும் வாரத்திற்கு ரெண்டாவது எழுதுங்க..
மற்ற வலைப்பக்கங்களுக்குச் சென்றாலும் ஓட்டுக்களோ, ஹிட் ரேட்டுகளோ முக்கியமில்ல. தங்களோட உண்மையான கருத்துக்களைப் பகிர்ந்துக்குற மாதிரி ஒரே ஒரு பின்னூட்டம் போதும். அது எழுதுறவங்கள இன்னும் உற்சாகப்படுத்தி, பல பதிவுகளுக்கு தூண்டுதலா அமையும். அதே மாதிரி வேண்டியவங்க.. வேண்டாதவங்கனு பிரிச்சுப் பார்க்காம பதிவுகள் எப்படிப்பட்டதுனு மட்டும் பாருங்க.
நா இங்க ரெண்டு விஷயத்த முன்வைக்கிறேன்.
1. எல்லா பதிவர்களுமே பழையபடி தங்களோட பதிவுகளை எழுத தொடரணும்.
2. எழுதுற பதிவுகள் தரமானதா இருக்கும்போது, சக பதிவர்கள் பாரபட்சம் பார்க்காம அத ஊக்குவிக்கணும்.
பதிவுலகம் பழையபடி சுறுசுறுப்போட, விவாதங்கள், மாற்றுக் கருத்துக்கள், விமர்சனங்கள்னு களை கட்டணும்.. அதுக்கு சக பதிவர்கள் முயற்சி எடுப்பீங்கனு நம்புறேன்.
நம்பிக்கையுடன்..
.
.
Comments
நம்மள பப்ளிக்ல புகழாதீங்கன்னு எத்தன தப்பா சொல்லுறது? ஹி...ஹி...ஹி..
இருங்க முழுசா படிச்சுட்டு வரேன்
பதிவுலகின் மேல் தற்போது ஊடல் இன்னும் சில காலங்களில் நிச்சயம் அது காதாலாக மாறும் என்ற நம்பிக்கையில் நானும்....
நானும் நம்புறேன். முடிஞ்சவரை அடுத்தவர்களை குறை சொல்லாமல் ஹிட்ஸ் கிடைக்குதோ இல்லையோ திருப்திக்காக எழுத வேண்டும் என்ற மனநிலை உருவாக வேண்டும்.
நல்லதொரு சீரியஸ் கட்டுரை :-)
நம்பிக்கை ஈடேறட்டும்
வாழ்த்துக்கள்
இப்படி எல்லாம் ஆளுங்க இருப்பாங்களா...?????
தாங்கள் சொன்னது உண்மை...! உண்மை.....! உண்மை.......! உண்மையைத்
தவிர வேறில்லை...!
நல்ல பதிவுக்கு... சில பின்னூட்டம் மட்டுமே வரும்...!
"சிங்கம் சிங்கிளாதான் வரும்...!
............கூட்டமாத்தான் வரும்"
கூட்டம் வருவதால் ............... சிங்கமாகிவிடாது...!
எனக்கு ஒரு சந்தேகம்...!
இப்பதிவில் நீங்க சொன்ன இந்த அறிவுரை....!
///தினம் ஒரு பதிவு போடலைனாலும் வாரத்திற்கு ரெண்டாவது எழுதுங்க..///
யாருக்கு...!
உங்களுக்கும்தானே..!
உங்க கோரிக்கைகள் ஞாயமானதே.நான் இதை வழிமொழிகிறேன்.
பகிர்ந்துக்குற மாதிரி ஒரே ஒரு பின்னூட்டம்
போதும். அது எழுதுறவங்கள இன்னும்
உற்சாகப்படுத்தி, பல பதிவுகளுக்கு தூண்டுதலா
அமையும். //
நான் நினைச்சேன்.. நீங்க சொல்லிட்டீங்க..!
:)
சரியான நேரத்தில்....சரியான பதிவு.
டல்லடிக்கும் பதிவுலகை...
டாலடிக்க வைக்கும்...
உங்கள் முயற்ச்சி பலிக்கட்டும்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.
மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.
"இனிமே வாரம் ஒரு பதிவாவது போடணும்" என்ற ஆலோசனையும் சரியானதுதானே
அங்க சாதாரண ஒரு புகைப்படத்துக்கு “லைக்“ குமியுது.. ஆனா பல நல்ல கருத்துக்கள் எழுதுனாலும் பதிவுகள படிக்க ஆளில்ல. நாம எழுதுற எழுத்துக்களுக்கு போதிய ஊக்கம் குடுக்கப்படாத நிலைல, நிறைய பதிவர்களுக்கு சலிப்பு உண்டாகுது. இது கொஞ்சம் ஆலோசிக்க வேண்டிய விஷயம்.//////
/////
Rathnavel Natarajan said...
நல்ல பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.
8 Februar //////
ஹா ஹா ஹா ஹா ஹா என்னத்தை சொல்ல!!!!!!
hi hi ஹி ஹி ஹி
என்வே எனக்கு கிடைத்த விருதினை
தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்
என்னுடைய பதிவினிற்கு விஜயம் செய்ய வேணுமாய்
அனபுடன் வேண்டுகிறேன்
இன்னிக்கு தான் உங்க தளத்தின் பக்கம் வருகிறேன். மிக அருமையாக எழுதுறீங்க.
பதிவு எழுதும் வகையறா நான். நமது தெரிந்த விசயங்கள் மற்றவர்க்கும் தெரியப்படுத்தலாம் என்ற நல்லெண்ணத்தில்தான் வலைப்பூவை ஆரம்பித்தேன்.
நீங்கள் சொல்லியது போல் நல்ல நல்ல பதிவுகளை எந்த எதிர்பார்ப்பின்றி தொடர்ந்து எழுதுவேன்.
thanks for this post..