உப்புமா.. (03.07.2012)
நூலகத்தில் புத்தகங்களை எடுக்கும் ஒருசிலர், தங்களுடைய சுயபுராணங்களை எல்லாம் அதுல எழுதி வைக்குறாங்க. அப்புறம் அவங்களுக்குப் பிடிச்ச வரிகளை கோடிட்டு காட்டுறது.. பக்கத்துலயே “சூப்பர்“ “இது என்னோட கதை“ “நானும் இந்தக் கொடுமைய அனுபவிச்சேன்“னு எல்லாம் எழுதி வைக்குறாங்க. அடுத்துப் படிக்குறவங்களுக்கு இதப் பார்க்கும்போது பரிதாபத்துக்கு பதிலா எரிச்சல் தான் வருது. அதுவுமில்லாம, படிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே இவங்களோட அபிப்ராயங்கள் கண்ல பட்டுத் தொலைக்கிறதுனால, அந்த கண்ணோட்டத்துலயே படிக்கிற மாதிரி இருக்கு. அப்புறம் ஒரு சில புத்தகங்கள்ல நடுவுல இருக்குற பக்கங்களை கிழிச்சிடுவாங்க. “மன்னிச்சிடுங்க.. இது எனக்குப் பிடிச்ச பக்கம்“னு எழுதி வேற வச்சிருவாங்க. பிடிச்ச கருத்துக்களை அவங்கவங்க டைரியில எழுதி வைக்கணும். அத விட்டுட்டு, இப்படி பண்றதுனால அடுத்துப் படிக்கிறவங்களுக்கு கஷ்டமா இருக்குது.
*****************************************
நேத்து அலுவலகத்துல வேலை (!!) பார்த்துகிட்டு இருந்தேன். ரொம்பவும் தலைவலி.. அதுனால பியூன் கிட்ட மாத்திரை இருக்கானு கேட்டுகிட்டு இருந்தேன். அப்ப என்கூட வேலை பார்க்குற நண்பர் வந்தார்.
“என்ன இந்திரா? உடம்பு சரியில்லையா?“னு கேட்டார்.
“ஆமா சார்.. தலைவலி. சிஸ்டத்துல வேலைங்குறதுனால அடிக்கடி வருது“னு சொன்னேன்.
உடனே அவர் ”அடடே.. இதையெல்லாம் ஆரம்பத்துலயே கவனிக்கணும் இந்திரா.. சரி எனக்குத் தெரிஞ்ச ஒரு வைத்தியம் சொல்லவா“னு ரொம்ப சீரியஸா கேட்டார். நானும் சரினு கவனமா கேட்டேன்.
“தினமும் சாயந்திரம் வீட்டுக்குப் போனதும் சுடு தண்ணிய ஒரு பாத்திரத்துல வச்சுக்கங்க. கொஞ்சம் வெதுவெதுனு இருந்தா கூட போதும். சரியா?“
“ம் சரி“னு சொன்னேன். தொடர்ந்து அவர்..
“அதுல கொஞ்சம் கல் உப்பு போட்டு கறைய விடுங்க. அப்புறம் வடிகட்டுங்க“னு சொன்னார். நானும் “ம் அப்புறம்“னு ஆர்வமா கேட்டேன்.
“அதுல ரெண்டு காலையும் வச்சு கொஞ்ச நேரம் நில்லுங்க. இப்படியே தினமும் தொடர்ச்சியா பண்ணிகிட்டு வந்தீங்கனா கால் பித்த வெடிப்பு போய்டும்“னு சொன்னார்.
எனக்கு ஒண்ணுமே புரியல. “எனக்குத் தான் பித்த வெடிப்பே இல்லையே.. அதுவுமில்லாம இப்படி செஞ்சா தலைவலி எப்படி போகும்“னு கேட்டேன்.
அதுக்கு அவர், “பித்த வெடிப்புக்குத் தான் எனக்கு வைத்தியம் தெரியும். தலைவலிக்கு மாத்திரை போடுங்க. சரியாயிடும். எனக்குத் தெரிஞ்ச வைத்தியத்தை தானே நா சொல்லமுடியும்“னு சொல்லிட்டு விருவிருனு போயிட்டார்.
அவ்வ்வ்வ்வ்வ்... ஏண்டா இந்த கொலைவெறி???
*****************************************
ராசிப்பொண்ணுக்கு வளைகாப்பு முடிஞ்சு அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாச்சு. எப்படியும் இந்த மாசத்துல பிரசவமாகலாம்னு டாக்டர் சொல்லிருக்காங்க. நல்லபடியா குழந்தை பிறக்கணும்னு வாழ்த்துங்கப்பா..
*****************************************
அடுத்த பதிவுல சந்திக்கலாமுங்க..
.
.
Comments
நியாயமான கோவம் தான் முதலவது...
இரண்டாவது ரக மனிதரை பார்த்து சிரிக்கவா கோவப்படவான்னு தெரியலை, ஹி ஹி கடைசில தலைவலி போனதா?
அப்பறம் ராசிப்பொண்ணுக்கு வாழ்த்துகள், புதுவரவு நலமாய் வந்து சேர ஆன்பெனும் ஆண்டவன் சார்பில் வேண்டிக்கொள்கிறேன் :)
என்னம்மா?
நூலகங்களில் உள்ள நூல்களில் இப்படி நடக்கிறது தவிர்க்க முடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது....
என்ன செய்வது திருந்தாத உள்ளங்கள் இருக்கும் வரை இப்படித்தான்:0
சுகப்பிரசவமாகி தாயும் சேயும் நலமுற வாழ்த்துக்கள் .
இந்த பிரச்சனை நமக்கும் இருக்கிறதால ரொம்ப ஆர்வமா படிச்சேன்.., கடைசில பல்பு வாங்கி சிரிச்சேன்!
அது சரி...!
////நல்லபடியா இந்திரா மாதிரியே எழுத்துல கலக்க ஒரு சூப்பர் குழந்தை பிறக்கணும்.. ஹி..ஹி.. ////
ஏனையா...!
இவிங்க ஒருத்தர சமாளிக்கிறதே கஷ்டமா இருக்கு...!
இப்படி உப்புமாவு...உப்புமாவுன்னு போடுற ஒரு பதிவர் போதாதா...!
இன்னொருதரா...????????
ஆத்தாடி.......! ஆள விடுங்க சாமி...!
இப்போ தலை வலி மறந்து கபாலமே விறைச்சிருக்குமே...
புது வரவிற்கு என் வாழ்த்துக்கள்.
சந்திப்போம் சொந்தமே
காதல் இங்கும் ஒளிந்திருக்கும்..!!!!
// நல்லபடியா குழந்தை பிறக்கணும்னு வாழ்த்துங்கப்பா..// கண்டிப்பாக வாழ்த்துகிறோம்