கொஞ்சம் கொசுவத்தி.. கொஞ்சம் பல்பு..
ஒரு விஷயம் முதன் முதலா நமக்கு அனுபமாகுற ஸ்வாரஸ்யமே தனிதான். அதுலயும் கொஞ்சம் பல்பு வாங்குன அனுபவமா இருந்துச்சுனா சொல்லவே வேணாம். நா நிறைய பல்பு வாங்கியிருக்கேன்குறது வேற விஷயம். இருந்தாலும் ஒரு விஷயத்தை முதன்முதலா முயலும்போதே பல்பு வாங்குன அனுபவம் எனக்குண்டு.
உள்ளூர் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சில செமையா சொதப்பி மேனேஜர்கிட்ட பல்பு வாங்குன அனுபவமும் உண்டு. (ஏற்கனவே இத ஒரு பதிவுல விளக்கமா சொல்லியிருந்தேன்.)
முதன்முதலா சமையல் பண்ணும்போது, என்னென்ன போட்டு தாளிக்கணும்னு தெரியாம அஞ்சறைப்பெட்டில இருந்த கடுகு, சோம்பு, சீரகம், மிளகு, உளுந்து, வெந்தயம், பட்டை, கிராம்புனு ஒண்ணு விடாம எடுத்து எண்ணெய்ல போட்டு “யாகம்“ வளர்த்த அனுபவமும் உண்டு.
அதுமாதிரி இன்னும் சில (பல்பு நிறைந்த) அனுபவங்கள்..
1. ATM கார்டு வந்த புதுசுல ரொம்ப நாளா அத உபயோகிக்காமயே இருந்தேன். அக்கவுண்ட்ல பணமில்லேங்குறது காரணமா இருந்தாலும் எப்டி உபயோகிக்கிறதுனு தெரியாம இருந்ததும் காரணம். தோழிகள்கிட்ட கேக்கலாம்னா “இது கூட தெரியாதா“னு கிண்டல் செய்துடுவாங்களோனு சும்மா இருந்துட்டேன். அப்புறம் ஒரு முறை, முதல்தடவை கார்டை உள்ள போட, அது உள்ளே இழுத்துக்கிடுச்சு. ஒரு சில ATM இயந்திரங்கள் கார்டுகளை உள்ளே இழுத்துக்கும்னு எனக்குத் தெரியாதனால எனக்குப் பதட்டமாய்டுச்சு. “ஐயயோ“னு கத்திட்டேன். உடனே வெளில நின்னுகிட்டிருந்த செக்யூரிட்டி வந்துட்டார். “என் கார்டு என் கார்டு“னு டென்சனா சொன்னேன். அவரு சிரிச்சுகிட்டே, “பணம் எடுத்ததும் வெளில வந்துடும்மா. இதுக்கா இப்டி கத்துனீங்க“னு சொல்லிட்டு போயிட்டார். நல்லவேலை ATM இயந்திரத்தைப் பிடிச்சு ஆட்டுறதுக்கு முயற்சி பண்ணேன்.. அத அவரு பாக்கல.. ஹிஹி..
2. நா அலுவலகத்துல சேர்றதுக்கு முன்னாடி, ஒரு கம்ப்யூட்டர் சென்டர்ல வேலை பார்த்தேன். COA courseக்கு Basicலருந்து கம்ப்யூட்டர் சொல்லிக்குடுக்க சொல்லிருந்தாங்க. ஒரு சில சின்னப் பசங்களுக்கு சொல்லிக்குடுத்துகிட்டு இருந்தேன். அப்ப ஒரு நடுத்தர வயதுக்காரர் சேர்ந்திருந்தார். அவருக்கு சொல்லிக்குடுக்க சொன்னாங்க. Basic knowledge வேணும்னு, நானும் அவர் பக்கத்துல உட்கார்ந்து, கம்ப்யூட்டர்னா என்ன.. அதை எதுக்கு உபயோகிக்கிறோம்.. அப்டினெல்லாம் சொல்ல ஆரம்பிச்சேன். பத்து நிமிஷம் பொறுமையா கேட்டுகிட்டுருந்த அவர் திடீருனு கோவமா கத்த ஆரம்பிச்சுட்டாரு. “ஏம்மா? கம்யூட்டர்னா என்னானு தெரியாமலா வந்திருக்கோம்? இது கூட தெரியாத முட்டாள்னு நெனச்சியா? நீயெல்லாம் ஒரு டீச்சரா? உனக்குத் தான் கம்ப்யூட்டர்பத்தி தெரியும்னு பந்தா பண்றியா?“னு கேட்டுட்டு, மேனேஜர்கிட்டப்போய் வேற ஆள சொல்லிக்குடுக்க சொல்லுங்கனு சொல்லிட்டுப் போய்ட்டார். அவ்வ்வ்..
3. நானும் என் தோழிகள் வட்டாரமும் ஒரு கோர்ஸ் சேர்ந்திருந்தோம். அங்க மாணவர்களுக்கிடைல Culturals போட்டி வச்சாங்க. எல்லாரும் ஒவ்வொரு போட்டில கலந்துக்கணும்னு கட்டாயம். அதுனால நா பாட்டுப் போட்டில சேர்ந்தேன். நா முதல்முதலா போட்டினு கலந்துகிட்டதுனா அதுதான். ஆனா என்னாலயே நம்ப முடியல.. எனக்கு மூணாவது பரிசு கெடச்சுச்சு. தோழிங்க எல்லார்க்கும் ஒரே சந்தோசம். ஆனாலும் சந்தேகப்பட்டு மார்க் போட்டவங்ககிட்ட “எனக்கு மூணாவது பரிசு எந்த அடிப்படைல குடுத்தீங்க“னு கேட்டேன். “நீங்க பாடின அதே பாட்ட, இன்னொரு மாணவி உங்களவிட கேவலமா பாடினாங்க. அதுனால நீங்க பாடினது பரவாயில்லாம இருந்துச்சு.. அதுக்குதான் குடுத்தோம்“னு சொன்னாங்க. அவ்வ்வ்..
இன்னும் நிறைய பல்பு இருக்கு.. வேறு சில பதிவுல சொல்றேங்க..
.
.
Comments
me 1st...!
Tan Q...!
not Bulb...! bulbukal...
இன்று என் தளத்தில் மழை!ஹைக்கூக்கள்!http://thalirssb.blogspot.com/2012/08/blog-post_6.html
என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
செம செம ஹி ஹி ஹி ஹி!
எதார்த்தத்தை அழகாக வடிக்க தெரிகிறது உங்களுக்கு .
நேரம் இருப்பின் என் தளம் வாங்க
http://kovaimusaraladevi.blogspot.in
// Athisaya //
//T.N.MURALIDHARAN//
// s suresh //
//திண்டுக்கல் தனபாலன் //
//வரலாற்று சுவடுகள்//
// மனசாட்சி //
//கோவை மு சரளா//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பர்களே..