வன்புணர்வு.. வன்கொடுமை.. விருப்பப்பாடல்..!

அதனைத் தவிர்த்தோ அல்லது வேகமாகக் கடந்தோ சென்று விடலாம்..!

பிற வேலைகளை முடித்த அயர்ச்சியின் ஆசுவாசமாய்,
சராசரிக்கும் சற்றே சாதாரணமான சம்பவமாய் சஞ்சரிக்கலாம்..!

நட்புக்களின் அரட்டையிலும், காதலின் கொஞ்சல்களிலும்
உறவுகளின் விருந்தோம்பலிலும், விருப்பங்களின் தேடல்களிலும்
எங்கோ.. யாருக்கோ.. எப்பொழுதோவென
அவை மறந்து, மறைந்து, மறத்து மரித்துப் போகலாம்..!

பொது அறிவின் பறைசாற்றலாய்..
கூட்ட நெரிசலின் பெருமை பீற்றலாய்..
கண்சிமிட்டும் நொடியில் காணாமல் போகலாம்..!

இல்லாத தைரியங்களும், பொய்யான மனசாட்சிகளும்,
மிகைப்படுத்தியே பழக்கப்பட்ட கற்புக்களும்,
கேவலமான சமாதானங்களும்,
இருத்தலை நிரூபித்துக்கொள்ளும்வரை
வட்டத்திற்காய் உள்ளிழுத்துக்கொள்ளலாம்..!

பத்தோடு பதினொன்றாகப் பழக்கப்பட்டதற்குப்பின்
வன்புணர்வென்றாலும் வன்கொடுமையென்றாலும்
விளம்பரங்களின் விளம்பர இடைவேளையாய்
விட்டகற்றிவிட்டு விருப்பப்பாடலுக்கு செவிசாய்ப்போம்..!!
.
.

Comments

VOICE OF INDIAN said…
டும் டும் ..டும் இதனால சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து மூன்றாவது வருசமாக
டும் டும் ..டும் இதனால சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து மூன்றாவது வருசமாக வருகிற 04-01-13 அன்னைக்கி காலை ஒன்பது மணி அளவில தொடங்கி பதினோரு மணி வரைக்கும் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் மேமொரியல் ஹால் எதிரில பாலியல் வன்கொடுமைக்கும்
, வன்முறை கொலை கொள்ளை போன்ற சமூக குற்றங்களுக்கும் எதிரான போராட்டம் நடக்குதுங்கோ ......கோ அனனைவரும் தவறாம கலந்துக்கணுமுன்னு இந்தியன் குரல் சார்பில கேட்டுக்குறோம் சாமியோவ் .
நன்மக்களே!
வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த இந்தியன் குரல் நடத்தும் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்காத அதிகாரிகளை தண்டனையில் இருந்து தப்பிவைக்கும் நோக்கில் தவறான ஆணைகள் இட்டும், விண்ணப்பதாரர்களை மரியாதைக் குறைவாக நடத்தியும், விண்ணப்பதாரர்களுக்கு உரிய நீதியை வழங்காத தமிழ் நாடு தகவல் ஆணையத்தின் செயல்பாடுகளை வெளிச்சப்படுத்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். தகவல் உரிமை சட்ட உபயோகிப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
இடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.

காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்
www.vitrustu.blogspot.in
balasubramanian
voice of indian
9444305581
சாட்டையடி கருத்துக்கள்! நன்றி!
////வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு////


இன்று நடக்கும் அனைத்திற்குமே...

இவைகள்தான் காரணம்...
இதுதான் காரணம்...
இதுதான் முதலும்... முடிவுமான காரணம்...


எனதும்...
உனதும்...
எல்லோரின் வாழ்க்கையிலும்...

இன்றியமையாததாகிவிட்ட..
அறிவியற் தொழில்நுட்பம்

அனைத்திலும்
ஆக்கிரமிக்க...
ஆக்கிரமமித்தோடு
அதுவே...
மேலோங்கிட... மேலோங்கிட...

மேற்சொன்னதுதான் காரணம்...

அதைவிடுத்து...

கண்ணெதிரே உலவும்
மலைமுழுங்கி மகாதேவன்கள நாம விட்டுவிட்டு...

“இருக்கும் இடத்தைவிட்டு
இல்லாத இடம்தேடி
எங்கெங்கோ அலைகின்றான்” என்பதைப்போல...

எதையோ குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறோம்...


kadhaikkalam said…
மேடம் அருமையான பதிவு ......
ezhil said…
அருமையான பகிர்வு...

ஆம் பத்தோடு பதினொன்றாய் எடுத்துக்கொள்ள பழகியதன் விளைவு..

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..