“அவனும் அவளும்“..
“அவனும்
அவளும்“ என்று ஆரம்பிக்கும்போதே
கள்ளப்பார்வையும்
காதலோ என்ற கேள்வியுமாய்
அசட்டுச்
சிரிப்புடன் ஆர்வமாய் பிரகாசிக்கிறாய்..!
அருகருகே
நடந்து செல்பவர்களை உற்று நோக்கி
கலிகாலம்
என்று காரி உமிழ்கிறாய்..!
பயண
நெரிசலில்கூட பக்கத்திலமர்வது பாவமென்று
குறுக்கிக்கொள்கிறாய்
உனக்கான யதார்த்தங்களை..!
ரத்தமும்
சதையுமான மனிதர்கள் என்பதைத்தாண்டி
ஆணென்றும்
பெண்ணென்றும் பாகுபடுத்திப் பாழாக்குகிறாய்..!
தனித்துவமென்றும்
தனிமைப்படுத்தலென்றும்
தற்பெருமைபேசியே
தள்ளிவைத்துப் பழக்குகிறாய்..!
பலருடன்
படுத்தெழுந்தாலும் “ஆண்“ என்ற ஜம்பத்தையும்
நினைத்தாலே
நடத்தை தவறிய “பெண்“ என்ற சமாளிப்பையும்
கேட்டுக்
கேட்டுப் பழகிய உனக்கு என்றுமே புரிவதில்லை
பால்
வேறுபாடில்லா தோழமையின் உறுதிப்பாடு..!
கழுத்துக்குக்
கீழே குறிவைக்கும் உனக்கு
கண்கள்
மட்டும் பார்க்கும் நட்பின் நிலைப்பாடு
என்றுமே
புரிதலுக்கு உட்படாத புதிர்தான்..!
இச்சைக்
குப்பைகள் குமிந்துகிடக்கும் உனக்கு
என்றுமே
பிடிபடப்போவதில்லை..
தாய்ப்பாலுக்கும்
காமத்துப்பாலுக்குமான வித்தியாசங்கள்..!!
.
.
Comments
கண்கள் மட்டும் பார்க்கும் நட்பின் நிலைப்பாடு
என்றுமே புரிதலுக்கு உட்படாத புதிர்தான்..!
இச்சைக் குப்பைகள் குமிந்துகிடக்கும் உனக்கு
என்றுமே பிடிபடப்போவதில்லை..
தாய்ப்பாலுக்கும் காமத்துப்பாலுக்குமான வித்தியாசங்கள்..!!
மிக மிக அருமையான வரிகள்
எதையும் பாலின வேறுபாட்டில் மட்டுமே
பொருத்திப் பார்க்க அறிந்த
வக்கிர மனம் கொண்டவர்களை இதை விட
தெளிவாக அறிமுகம் செய்ய இயலாது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
thevaiyaana kavithai...
.... nice... http://www.rishvan.com
வாளெடுத்து குத்தினாலும் திருந்தாத மிருகங்களை என்ன செய்ய ........வார்த்தைகள் வெளிபடுத்திய விதம் அருமை