விஸ்வரூபம் – என் பார்வையில்..
படம் முழுக்க கமல்..
கமல்.. என கமல்ஹாசனின் ஆக்கிரமிப்புகள் தான். பல இடங்களில் அமைதியாக, நடிப்பில்
அசத்துகிறார். ஆரம்பக்காட்சிகளில் கதக் மாஸ்டராக வரும் கமல் தான் மனதில்
நிற்கிறார். குறிப்பாக நடனப்பயிற்சி முடிந்ததும் வரும் தொலைபேசியை எடுக்க, மெலிதான
ஓட்டத்துடன் வரும் காட்சி.. ஸ்பெஷல் அப்ளாஸ் கமல் ஜி. கைகளைக் கட்டிப்போட்டபடி
உண்மைகளை கூறுமாறு கேட்கும் தீவிரவாதியிடம், பெண்மை கலந்த கண்சிமிட்டலுடன் பதில்
சொல்வது கதாப்பாத்திரத்திற்கே உரிய யதார்த்தம்.
இந்தப் படத்துல ஆண்ட்ரியா
எதுக்குனே தெரியல. அவ்வப்போது வந்து போவது தவிர நடித்ததாய் தெரியவில்லை. பாடல்கள்
சுமார் ரகம் தான். காதல் ரோஜாவே படத்துல வந்த பூஜா குமார் தானே இது? வயசே தெரியல.
அவருக்கு அபிராமியின் டப்பிங் குரல் கணகச்சிதம். இருந்தாலும் தசாவதாரம் ஹீரோயினின்
வாயாடித்தனம் வந்துபோகுது.
வெளிநாட்டுல நடக்குற
கதைங்குறதால நிறைய வேற்று மொழிகள் உலவுது. இருந்தாலும் சாமான்யனுக்கு சத்தியமா
புரியுறது கஷ்டம். இத்துனூண்டா தமிழ்ல எழுத்துக்கள் போட்டாலும் தேடிப் படிக்கிறதுக்குள்ள
அடுத்த காட்சி போய்டுது. அதென்னப்பா... தமிழ் சினிமாவுல வர்ற FBI மட்டும் இவ்ளோ தத்தியா இருக்காங்க. ஹீரோ
ஹீரோயின் எதப் பண்ணினாலும் ஆ“னு வாயப்பொழந்துகிட்டு ஆச்சர்யப்படுறாங்க. வழக்கமான சினிமாத்தனம்.
ஜேம்ஸ்பாண்ட் அளவுக்கு ஏதோ ஒரு ஏஜேன்ட்னு சொல்றதையும் சேத்துக்கலாம்.
தாலிபான்கள்.. ஜிகாதிகள்
என ஏற்கனவே நிறைய படித்தாயிற்று. அதுனால அதுபத்தி எழுதி போர் அடிக்கல. வசனங்கள்ல கூர்மை கம்மி தான். இன்னும் கொஞ்சம்
கவனம் செலுத்தியிருக்கலாம்.
Overall
கண்டனங்களும் பரபரப்புகளும் நடந்த அளவுக்கு
படம் வொர்த் இல்லையோங்குறது என்னோட தனிப்பட்ட அபிப்ராயம்.
.
Comments
KAARI KAARI THUPPUREN
remember??
Review இவ்வளவுதானா.............-:((