BLACK.. என் பார்வையில்
வெளிவந்து சில வருடங்களாகிவிட்டாலும்
இன்றும், பார்க்கும்போது பிரமிப்பை ஏற்படுத்துற வெகுசில படங்களில் இதுவும் ஒன்று.
பார்க்கும், கேட்கும் திறனற்றவராக ராணி முகர்ஜி.. அவரது ஆசிரியராக அமிதாப் பச்சன்.
இருவரைச் சுற்றியே முழுப்படமும்.
மாற்றுத்திறனாளியாய்
நடிப்பில் க்ளாப்ஸ் வாங்குகிறார் ராணி முகர்ஜி. கையசைவுகளில் அநாயாசமாய் பேசி, விழிகளை
உருட்டி உருட்டிப் பார்ப்பது (!!) என கதாப்பாத்திரத்தின் இயல்பாய் மாறியிருக்கிறார். நகைச்சுவைக்காக எனினும் நடையில்
சார்லி சாப்ளின் சாயலை தவிர்த்திருக்கலாம். சகோதரி தன் மன உணர்வுகளை பொதுவில்
வெளிப்படுத்தி அழும்போது ஆத்திரத்தை வெளிப்படுத்தியிருப்பது யதார்த்தம்.
ராணியின் சிறுவயதாக வரும்
சிறுமியின் கதாப்பாத்திரம் மிரட்டலாய் அமைந்திருக்கும். தலைவிரி கோலமாய்
முறைக்கும் கண்களுமாய் எதையோ தேடியபடி கைநீட்டும் அச்சிறுமியின் நடிப்பு.. க்ளாஸ்..!!
ராணியின் ஆசிரியராய்
அமிதாப்.. சிறுமியிடம் அறை வாங்கிவிட்டு ‘So strong’ என்று சிரிக்கும்போதும், ஞாபகமறதி நோயால் அவ்வப்போது ஸ்தம்பித்துவிடும்போதும்,
“டீச்சர்“ “வ்வ்வா“ (வாட்டர்) என்று ஒவ்வொரு வார்த்தையாய் ராணிக்கு
கற்பிக்கும்போதும்.. ஹாட்ஸ் ஆஃப் அமிதாப்ஜி. சில நேரங்களில் கமல்ஹாசனை
நினைவுபடுத்துகிறது அவருடைய சிவந்து அழும் கண்கள்.
படத்தின் இரண்டு
காட்சிகள் என்னை இரண்டாவதாய் பார்க்கத் தூண்டியது.
முதலாவது.... சகோதரியின்
திருமணத்தில் முத்தமிடுவதை அமிதாப் விளக்கம்போது, உதட்டில் முத்தமிடலாம் என்பதை
அறியும் ராணி ஏக்கமாய் “Will
you kiss me“
என்று அமிதாப்பிடம் கெஞ்சும் காட்சி. கெஞ்சி அழும் ராணியை அழுதபடியே மெலிதாய் முத்தமிடுவார்
அமிதாப். மிகைப்படுத்தாத பூரணமான காட்சியமைப்பு அது.
இரண்டாவது.. வயதாகி
தள்ளாடும் தன் ஆசிரியரிடம், பட்டப்படிப்பை முடித்து கருப்பு அங்கியுடன் வந்து
நிற்கும் ராணியை, கண்ணீர்மல்க பூரிப்பாய் பார்க்கும் அமிதாப் மெலிதாய் ஒரு நடனம்
ஆடுவார்.. இமைக்க மறந்த காட்சி அது.
அந்த ஆசிரியரின்
மரணத்திற்கான சோகம் படம் முடிவில் நம்மையும் பற்றிக் கொ’ல்’கிறது.
BLACK is not just
dark. It’s a colour of achievement.
Comments
வாங்க தல...
மீண்டும் இந்திரா.. மீண்டு வந்து இருக்கிறார்... வாழ்த்துக்கள்...
வாங்க தல...//
நன்றி தல..
இனி அப்பப்ப ப்ளாக் பக்கமும் வரலாம்னு இருக்கேன். அடிப்படையை மறக்க கூடாதுல.
:)
வண்ணமய
விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..!
அமிதாப். தமக்கு என்ன வருமோ, எது சரியானதோ அதை தேர்தெடுந்து நடியுங்கள் என இந்திய நடிகர்களுக்கு சொல்லாமல் சொல்லிய படம்.//
மிகச்சரி..
அறுபது வயதிலும் டூயட் பாடி நடிக்கும் நம்ம ஊர் ஹீரோக்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் தான்.
BLACK is not just dark. It’s a colour of achievement.
வண்ணமய
விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..!//
நன்றிங்க..
வருகைக்கும் பாராட்டுக்கும்.
:)
இதுவும் ஒன்று
தங்கள் அருமையான விமர்சனம்
பார்க்காத வருத்தத்தைக் கூட்டிப்போகிறது
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
இருந்தாலும் ‘பழம்’ விட்டு ஒரு அருமையான பதிவோடு வந்ததுக்கு வாழ்த்துக்கள்.
[ பிறந்த வீட்டை மறக்கக்கூடாது.
அப்பப்ப வந்து போணும் மக்களே!]
பார்த்து ரசித்ததை,ரசனையோடு பகிர்ந்து பார்க்கத் தூண்டுகிறீர்கள்//
நன்றிங்க
:)
பார்க்கத் தவறிய படங்களில்
இதுவும் ஒன்று
தங்கள் அருமையான விமர்சனம்
பார்க்காத வருத்தத்தைக் கூட்டிப்போகிறது
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
tha.ma 2
//
வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க..
ரொம்ப நாளா பதிவுலகம் கூட ‘டூ’ விட்டுட்டு போயிட்டீங்க!
இருந்தாலும் ‘பழம்’ விட்டு ஒரு அருமையான பதிவோடு வந்ததுக்கு வாழ்த்துக்கள்.
[ பிறந்த வீட்டை மறக்கக்கூடாது.
அப்பப்ப வந்து போணும் மக்களே!]//
“டூ“வா?? அவ்வ்வ்வ்.
தாய்வீட்டை எப்பவும் பகைச்சுக்க முடியாது. கொஞ்சம் இடைவெளி விழுந்துடுச்சுங்குறது உண்மை. இனி சரிபண்ண முயற்சி செய்யனும்.
வருகைக்கு நன்றிங்க.
:)