பயணங்கள்..


கிடைத்தவைகளையும் இழந்தவைகளையும்
ஏனோ ஞாபகப்படுத்துகிறது ஒவ்வொரு பயணமும்..!

வியாபார நோக்கில் தட்டப்படும் கண்ணாடிகளில்
வெறுப்பின் சாயலை பூசிவிடும் சில பயணங்கள்..!

திருமணத்திற்கு எழுதப்போகும் மொய்யையும்
உடுத்தப்போகும் ஆடையையும்
கணக்கிட்டபடியே கழிகிறது சில பயணங்கள்..!

பயணச்சீட்டிலிருந்து தப்பிக்கும்போதுமட்டும்
கடவுள்களிடம் நன்றி சொல்லும் சிலரது பயணங்கள்..!

ஜன்னல்வழி வேடிக்கைகளிலும் எட்டிப்பார்க்கும்
காட்சிகளை மீறிய எண்ணஓட்டங்களுடன் பயணங்கள்..!

பக்கத்து இருக்கை புரணிகளும்
எதிர்ப்பக்க குழந்தைச் சிரிப்புகளும்
அவ்வப்போது கவனமீர்த்து மறையும் பயணங்கள்..!

பின்னிருக்கை புதுமண சில்மிஷங்கள்
முகம்சுளிக்க வைக்கும் ஏராளமாய் பயணங்கள்..!

கவலைகளையும் கற்பனைகளையும் கட்டிவைத்து
கண்ணயரும் அபூர்வமாய் சில பயணங்கள..!

ஆக்கிரமிக்கும் வரவு செலவுக் கணக்கின்
வாய்ப்பாடுகள் வசமாய் பெரும்பாலும் பயணங்கள்..!

இறந்தகாலமும் எதிர்காலமும் நிறைந்து வழிகிறது
நீண்டுசெல்லும் நிகழ்காலப் பயணங்கள்..!!
.

.

Comments

வாழ்க்கைப் பயணத்தின் சுருக்கம்போல்
பல சமயங்களில் ஊர்ப்பயணங்களும்...
மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்
இது கவிதையா கட்டுரையா டவுட்டுங்கோ...
Avainayagan said…
''ஜன்னல்வழி வேடிக்கைகளிலும் எட்டிப்பார்க்கும்
காட்சிகளை மீறிய எண்ணஓட்டங்களுடன் பயணங்கள்''
நம் பல பயணங்கள் இப்படித்தானே இருக்கின்றன.
எண்ணங்களை அழகாக எழுத்து வடிவில் கொண்டுவந்திருக்கிறீர்கள்.
// Ramani S
வாழ்க்கைப் பயணத்தின் சுருக்கம்போல்
பல சமயங்களில் ஊர்ப்பயணங்களும்...
மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்
tha.ma 1//


நன்றிங்க
// சங்கவி said...
இது கவிதையா கட்டுரையா டவுட்டுங்கோ...//

கவிதைனு நா சொல்லலங்க. அதுக்குத் தான் கவிதை மாதிரினு போட்ருக்கோம்.. (அலர்ட்டா இருப்போம்ல)
// வெற்றிவேல் said...
த.ம: இரண்டு

//

நன்றிங்க
//Viya Pathy said...
''ஜன்னல்வழி வேடிக்கைகளிலும் எட்டிப்பார்க்கும்
காட்சிகளை மீறிய எண்ணஓட்டங்களுடன் பயணங்கள்''
நம் பல பயணங்கள் இப்படித்தானே இருக்கின்றன.
எண்ணங்களை அழகாக எழுத்து வடிவில் கொண்டுவந்திருக்கிறீர்கள்.//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

மரணவலி தரும் உன் மௌனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்