மூடர் கூடம் - என் பார்வையில்..

மூச்சு விடாம பேசுற பன்ச் வசனம் கிடையாது. ஜிகுஜிகுனு ஆடை உடுத்திகிட்டு ஆடும் ஐட்டம் சாங் கிடையாது. ஒரே ஆள் பத்து பேரை அடித்து வீழ்த்தும் சாகசங்கள் கிடையாது. தொடைதட்டி சவால் விட்டு, ஒரே பாட்டில் கோடீஸ்வரர் ஆகும் வித்தையேதும் கிடையாது. ஹீரோயினைக் கட்டிப்பிடித்து புரண்டு ரொமான்ஸ் பண்ணும் கில்மாஸ் கிடையாது. வேற என்ன தான் படத்துல இருக்கு? ஆர்ப்பாட்டாமில்லாத நச் வசனங்கள்.. யதார்த்தமான நடிப்புகள்.. பாத்திரத்திற்குப் மிகப் பொருத்தமான நடிகர்களும் வசன உச்சரிப்புகளும்.. வித்தியாசமான கதையமைப்பு.. சூப்பர் ஹிட்.. ஆஹா ஓஹோ..னு நிச்சயம் நம்ம மக்கள் வரவேற்க மாட்டாங்க. எனினும் கட்டாயம் பாராட்ட வேண்டிய முயற்சி தான். “ரெண்டாயிரம் ரூபாய்க்கு கூட சட்டை இருக்குனு இன்னைக்குத் தான் தெரியும்“ “ரெண்டு லட்சம் இப்டித்தான் இருக்குமா?“ “ஆயிரம் ரூபாய்க்கு பீட்சாவா?“ “நீங்க தானே மொபைல் மாதிரி எது இருந்தாலும் உடைக்க சொன்னீங்க.. அதுனால தான் ரிமோட்டை உடைச்சேன்“.. போகிற போக்கில் தூவிவிடும் செண்ட்ராயனின் அப்பாவித்தனம் கூடுதல் பலம். தலைகீழா நிற்க வைப்பதும், முட்டி போட வைப்பதும், பந்தினை தட்ட சொல்ல...