ஸ்பரிசம்..!


ம.வே.சிவகுமார் எழுதிய ஸ்பரிசம் சிறுகதை படிக்க நேர்ந்தது. ஒற்றைச் சம்பவத்தை அடிப்படையாக்க் கொண்ட மிகச்சிறிய கதையெனினும், படித்து முடித்தபின் வெகுநேரமாய் யோசிக்க வைத்தது.
கதையானது.. சிறுவயது முதலே தந்தையால் மிகுந்த கண்டிப்புடன் வளர்க்கப்படும் ஒருவன், தனக்கு பிறந்திருக்கும் குழந்தையைப் பார்க்க ஊருக்குச் செல்கிறான். ரயிலேற்றிவிடும் தகப்பனார் அவன் கைகள் பற்றியபடி இருநூறு ரூபாய் தந்து அறிவுரைகூறி வழியனுப்புகிறார். அந்த ஒரு சிறு ஸ்பரிசத்தில் தன் பழைய நினைவுகளைப் புரட்டியபடி பயணம் செய்கிறான் அவன். உறவுகளுக்குள் என்னதான் பிணைப்பிருந்தாலும், ஒரு கட்டத்திற்குமேல் தொட்டு ஸ்பரிசிக்க முடிவதில்லை என்பதை அந்த உள்ளங்கை சூட்டில் உணர்கிறான்.
குழந்தையை முதன்முதலாய்த் தூக்கி உச்சிமுகரும்போது, இன்னும் சில காலத்திற்குப்பின் இந்த வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்று யோசித்தவாறே முத்தமிடுகிறான். அதே நேரம், ஊரில் அம்மாவிடம் அப்பாவும் இதையே சொல்லிக்கொண்டிருப்பதாக கதை முடிகிறது.
கதையம்சம் சாதாரண சம்பவம்தானெனினும் உட்கருத்து என்னவோ மனதை அழுந்தச்செய்கிற உண்மை.
கடைசியாக என் அப்பாவின் உள்ளங்கை சூடு எப்போது உணர்ந்தேன்?? என் தாயின் உச்சிமுத்தம் எப்போது கிடைக்கப்பெற்றேன்? சகோதரியின் தோள் தட்டி கட்டிப்பிடித்தது நினைவிலேயே இல்லாமல் போய்விட்டது..
வாழ்வில் ஸ்பரிசம் என்பது மிக முக்கியமானது. ஒரு தொடுகை நிகழ்த்திவிடும் அற்புதம், அலாதியானது. கட்டிப்பிடித்து இதழ் கவ்வுதும், புணர்வதும் மட்டும் ஸ்பரிசமாகாது. காய்ச்சலடிக்கும்போது அக்கறையாய் நெற்றி தொட்டுப்பார்ப்பது கூட ஸ்பரிசம் தான். நட்புக்களில் அனிச்சையாய் கரம்பிடித்துப் பேசுதல் கூட சலனமில்லா ஸ்பரிசம் தான்..!
குழந்தைப் பருவத்தைக் கடந்தபின் யாருமே எட்டி நின்று நலம் விசாரிப்பதோடு சரி..! அருகமர்ந்து பேசும்போது கைபிடித்து, விரல்கோர்த்துப் பேசும் காதல் உறவில்கூட, குறிப்பிட்ட வயதிற்கு அல்லது காலத்திற்குப்பின் இவ்விடைவெளி தோன்றிவிடக்கூடும்.
ஸ்பரிசம் என்பது தொடுகை மட்டுமல்ல.. நம்பிக்கையும் அக்கறையும் சார்ந்தது..!
நீங்கள் கடைசியாய் எப்போது உங்கள் தந்தையின் கரம் பிடித்துப் பேசுனீர்கள்?
.
.

Comments

// நீங்கள் கடைசியாய் எப்போது உங்கள் தந்தையின் கரம் பிடித்துப் பேசுனீர்கள்? //

அம்மாவின் கரம் பிடித்து பேசுனா ஒத்துக்க மாட்டீங்களா...
அம்மாவை விட அப்பாவிடமிருந்து அதிகம் விலகியிருப்பார்கள் பலர்.. அதுனால அப்படிக் கேட்டேன் யுவரானர்..
//ஸ்பரிசம் என்பது தொடுகை மட்டுமல்ல.. நம்பிக்கையும் அக்கறையும் சார்ந்தது..!//

;)))))

மிகவும் அருமையான யதார்த்தமான அழகான படைப்பு.

சிந்திக்க வைக்கிறது.

பாராட்டுக்கள்.
//வை.கோபாலகிருஷ்ணன் said...

;)))))
மிகவும் அருமையான யதார்த்தமான அழகான படைப்பு.
சிந்திக்க வைக்கிறது.
பாராட்டுக்கள்.//

நன்றிங்க..
அருமையான கதையைப் பற்றிய அழகிய பகிர்வு! நன்றி!
அருமையான பதிவுங்க..இதமான அன்பான தொடுதல் எப்பொழும் இதம்தானே...
///////
ஸ்பரிசம் என்பது தொடுகை மட்டுமல்ல.. நம்பிக்கையும் அக்கறையும் சார்ந்தது..!
/////////
உண்மை...

கருணைக்கொண்ட பார்வைக்கூட நல்லதொரு ஸ்பரிசம் தான்...

சில கதைகள் மனிதை சிலிர்க்க வைக்கிறது....
கட்டிப்பிடி வைத்தியம் சிறந்தது...
Unknown said…
"ஸ்பரிசம் என்பது தொடுகை மட்டுமல்ல.. நம்பிக்கையும் அக்கறையும் சார்ந்தது..!"

ஆம். மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள்
அருமையான சிந்தனை

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..