மூடர் கூடம் - என் பார்வையில்..
மூச்சு விடாம பேசுற
பன்ச் வசனம் கிடையாது. ஜிகுஜிகுனு ஆடை உடுத்திகிட்டு ஆடும் ஐட்டம் சாங் கிடையாது.
ஒரே ஆள் பத்து பேரை அடித்து வீழ்த்தும் சாகசங்கள் கிடையாது. தொடைதட்டி சவால் விட்டு,
ஒரே பாட்டில் கோடீஸ்வரர் ஆகும் வித்தையேதும் கிடையாது. ஹீரோயினைக் கட்டிப்பிடித்து
புரண்டு ரொமான்ஸ் பண்ணும் கில்மாஸ் கிடையாது.
வேற என்ன தான்
படத்துல இருக்கு?
ஆர்ப்பாட்டாமில்லாத
நச் வசனங்கள்..
யதார்த்தமான
நடிப்புகள்..
பாத்திரத்திற்குப்
மிகப் பொருத்தமான நடிகர்களும் வசன உச்சரிப்புகளும்..
வித்தியாசமான
கதையமைப்பு..
சூப்பர் ஹிட்.. ஆஹா
ஓஹோ..னு நிச்சயம் நம்ம மக்கள் வரவேற்க மாட்டாங்க. எனினும் கட்டாயம் பாராட்ட
வேண்டிய முயற்சி தான்.
“ரெண்டாயிரம்
ரூபாய்க்கு கூட சட்டை இருக்குனு இன்னைக்குத் தான் தெரியும்“
“ரெண்டு லட்சம்
இப்டித்தான் இருக்குமா?“
“ஆயிரம் ரூபாய்க்கு
பீட்சாவா?“
“நீங்க தானே மொபைல்
மாதிரி எது இருந்தாலும் உடைக்க சொன்னீங்க.. அதுனால தான் ரிமோட்டை உடைச்சேன்“..
போகிற போக்கில்
தூவிவிடும் செண்ட்ராயனின் அப்பாவித்தனம் கூடுதல் பலம்.
தலைகீழா நிற்க வைப்பதும்,
முட்டி போட வைப்பதும், பந்தினை தட்ட சொல்லி தண்டனை தருவதும் மெல்லிய முறுவல். (ஆனா
அதையே திரும்ப திரும்ப செய்யச் சொல்வதால் கொட்டாவி வருது).
குழந்தை வளர்ப்பு,
பதுக்கல், விலைவாசி, மதம் பற்றிய மெலிதான அலசல் என்று வழக்கமான இயக்குனர்
பாண்டியராஜனின் ஸ்டைல் நிச்சயம் உண்டு.
நவீன், வெள்ளைச்சாமி,
குபேரன், செண்ட்ராயன், நாய், பொம்மை – ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு முன்கதை.
(நல்லவேளை.. சின்னச்சின்ன பாட்டு போட்டு முடிச்சுட்டாங்க.). பாக்குறியா..
பாக்குறியா..னு ஏகதேசத்தில் அலறாது, காதில் ரத்தம் வராத அளவுக்கு மெதுவாகப்
பேசுவது சமீபத்திய மிகப் பெரிய ஆறுதல்.
கஷ்டப்பட்டு ரெண்டு
லட்சம் கொள்ளையடிச்சு, அஞ்சே நிமிசத்துல மொத்தப் பணத்தையும் தானம் பண்றது.. லாஜிக்
இடிக்குது.
மேல்தட்டு மற்றும்
சாமான்ய வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை ஒப்பிட்டு அங்கலாய்ப்பது
பெரும்பாலானவர்களின் உள்ளிருக்கும் ஆதங்கமே..!
ஆனா படம்
வெற்றியடைவதும், மக்கள் இந்த முயற்சியை ஏத்துக்குறதும் சந்தேகமே.. ஏன்னா..
(திரும்பவும் முதல் பேராவைப் படிக்கவும்).
.
.
Comments