மற்றுமொரு மிருகமாய்..!


நிசப்தங்களுக்கும் இறைச்சல்களுக்கும் மத்தியில்
பயணித்துக் கொண்டிருக்கிறாய்.

ஜனித்த குழந்தையின் அழுகைச் சத்தங்களோ
சவங்களுக்கான சடங்குகளோ
உன்னை பாதிப்பதேயில்லை.

கண்முன் நடந்த கோர விபத்தைக் கூட
கண்டுகொள்ளாது நகர்ந்து செல்கிறாய்.

உடலுறுப்பு தானம் செய்யுங்கள்
விளம்பரம் படித்து, விளம்பரப்படுத்தி
போர்வைக்குள் ஒளிந்துகொள்கிறாய்.

கடவுள் பிரச்சாரமோ பாலியல் தொழிலோ..
அண்டைவீடோ அடுத்த நாடோ.
ஏதுமுனை ஈர்ப்பதில்லை.

இழப்பின் புலம்பல்களோ 
மகிழ்ச்சிக்கான ஆரவாரங்களோ
எப்போதும் உன்னை ஊடுருவுவதில்லை.

மறத்துப்போன உணர்வுகளோடு 
மறைவதற்கு காத்திருக்கிறாய்..
மிருகக் கூட்டத்திற்குள் மற்றுமொரு மிருகமாய்..!
.
.

Comments

மறத்துப்போன உணர்வுகளோடு
மறைவதற்கு காத்திருக்கிறாய்..

YES YES .I TOO
ஒவ்வொறு மனிதரும் தனக்குள் மிருகமாய் வாழ்வதற்கான கட்டாயத்தை இந்த சமூகம் ஏற்படுத்திவிடுகிறது....


இயலாமையின் விளைவே...
மரத்துப்போனவர்களும் உண்டு
அதிக அடிவாங்கி சராசரி நிலைகடந்து
ஞானமடைந்தவர்களும் உண்டுதானே
ezhil said…
ஓங்கிக் குரல் கொடுக்க இயலா கோழையாய்த்தான் இருக்கிறேன்..
Avainayagan said…
This comment has been removed by the author.
Avainayagan said…
மரத்துப்போன உள்ளங்களுக்கு எல்லாமே ஒன்றுதானே- அதுதான் மிருகங்கள் என்று சொல்லிவிட்டீர்களே
மனிதனுக்குள் மிருகமாய்த்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்! அருமை!
மிக நல்ல கவிதைங்க !

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..