Life is Beautiful - என் பார்வையில்..!

முன்வழுக்கை, ஒட்டிய கன்னங்கள், சற்றே குள்ளமாய் ஒடிசலான உருவம்.. இதுவே Life is Beautiful படத்தின் நாயகன் Roberto Benigni யின் தோற்றம். சராசரிக் கதாநாயகனுக்குரிய எந்தவிதமான ஹீரோயிசமுமின்றி படம்முழுக்க நம் மனதில் நிறைந்து நிற்கிறார். ஆரம்பித்த முதல் நிமிடத்திலிருந்து இவர் முகத்திலிருக்கும் புன்னகை, இறுதிவரை சற்றும் குறையாமல் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. ( படத்தினை எழுதி இயக்கியவரும் இவரே..!). வாழ்க்கையை, எந்த சூழலிலும் பாஸிடிவ்வாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறது திரைப்படம். காதலன் , கணவன் , தகப்பன் என முப்பரிணாமத்தையும் அழகாய் வெளிப்படுத்தியிருக்கும் இயக்குநருக்கு ஸ்பெஷல் அப்ளாஸ் . ஒரு காட்சியில் , இசைநாடகம் நடந்துகொண்டிருக்கும் அரங்கத்தில் பால்கனியிலிருக்கும் காதலியை , கீழிருந்து திரும்பிப் பார்த்துக்கொண்டிருப்பார் ஹீரோ . அப்போது, நாயகனுக்கு பக்கத்து இருக்கைப் பெண் இவரை முறைத்ததும் , எனக்கு வலதுபக்க காது தான் கேட்கும் . அதனால் அவ்வாறு திரும்பி உட்கார்ந்திருப்பதாக கூறி சமாளிப்பார் . ஹய்ய்ய்யோ ... செம சீன் அது . இ...