ஆரம்பம்..!


பொதுவாகவே இன்னாரைத் தான் பிடிக்கும்.. இன்னாருடைய ரசிகை என்றெல்லாம் கூச்சலிடுவதில் எனக்கு இஷ்டமில்லை. ஆர்ப்பாட்டமில்லாது அசால்ட்டாய் நடித்துவிட்டுப்போகும் நடிகர்கள் நிறைய பேரை எனக்கு ரொம்பவே பிடிக்கும். எல்லா நடிகர்களும் ஏதாவதொரு படத்தில் சிறப்பாகவே நடித்துவிடுகின்றனர். (குறைந்தபட்சம் ஒரு படத்திலாவது). அந்த விஷயத்தில் எனக்கு அஜித்தின் ஸ்டைலும், அசாலாட்டான நடிப்பும் பிடிக்கும். வாலி, பில்லா1, மங்காத்தா போன்ற படங்கள் என் கலெக்சனில் நிச்சயம் உண்டு. அந்த எதிர்பார்ப்புடன் தான் “ஆரம்பம்“ பார்த்தேன்.
நண்பரின் மரணத்திற்காக பழிவாங்கவும், ஊழல் சதியை முறியடிக்கவும், தொழில்நுட்பம் தெரிஞ்ச ஆர்யாவை மிரட்டி, அவர் உதவியால் வில்லன் கும்பலை அஜித் பழிவாங்குவது தான் கதை. ஒரு வரிக் கதைதான் எனினும், திரைக்கதை யுக்திகள் நம் கவனத்தை வெகுவாய் ஈர்க்கின்றன. சமீபகாலத் திரைப்படங்களில் Catwalk போய்க்கொண்டே ஸ்டைலாய் வசனம் பேசும் அஜித், இந்தப் படத்திலும் தன் பணியை செவ்வனே செய்திருக்கிறார். ஆனாலும் அந்த ஸ்டைல் தான் நம்மைக் கட்டிப்போடுகிறது.
பாம் வச்ச அந்த தீவிரவாதிக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்னு ஆர்யா கோபமாய் கேட்கும்போது, “அன்னைக்கு ப்ளாக் டீசர்ட் போட்ருந்தேன். இன்னைக்கு ரெட்“னு கேஸ்வலாய் சொல்லும்போது.. செம்ம்ம்ம..! (மறுபடியும் குண்டாகிட்டு வர்றீங்க அஜீத். அத கொஞ்சம் கம்மி பண்ணுங்களேன்).
Die hard 4.0“ படத்துல வரும் Matthew (Justin Long) கதாப்பாத்திரத்தை நினைவுபடுத்துகிறது ஆர்யாவின் கதாப்பாத்திரம். கம்ப்யூட்டரில் கலக்குவதாய் காண்பிக்கும் காட்சிகளில் முகத்தில் காட்டும் எக்கச்சக்க ரியாக்சனில் கொஞ்சம் கீபோர்ட்லயும் கொண்டு வந்திருக்கலாம். சட்டுசட்டுனு ஹேக் பண்ணுவதாய் காதுகுத்துகின்றனர். குண்டான ஆர்யாவின் வெகுளித்தனம் சுமாராய் ரசிக்க வைக்கிறது.
ஆர்யாவை மிரட்டுவதற்காவது தாப்ஸி பயன்படுத்தப்பட்டாங்க. ஆனா நயன்தாரா எதுக்குனே கடைசிவரைக்கும் தெரியல. (வில்லனுடைய ஆளை,  நடித்து மயக்கி கட்டிலுக்கு கூட்டிச்செல்லும் காட்சிக்குமட்டும் தேவைப்பட்ருக்காங்க). தமிழ்ப்படங்களுக்கே உரிய சம்பிரதாயமா, விஷம் குடிச்ச எல்லாரும் இறந்தபின்னும் நயன்தாரா மட்டும் உயிரோட இருக்காங்க. அதே மாதிரி ஹீரோவும் எத்தன அடி வாங்கினாலும் ஃப்ளாஸ்பேக் சொல்றதுக்காகவே பிழைச்சு வந்துடுறார்.
இறந்துபோகும் பாசமான நண்பர்.. அவருடைய அன்பான குடும்பம் மற்றும் நிறைமாத கர்பினி மனைவி, குடும்பத்தையே கொல்லும் வில்லன்.. பழிவாங்கும் ஹீரோ.. ஷ்ஷ்ஷ்ஷ் அடப்போங்கப்பா..! கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் மூலம் பழிவாங்குகிறார்கள்.
ஹோலி பாட்டைத்தவிர, வேற பாடல்கள் ஞாபகத்துக்கே வரமாட்டீங்குது. அதிகமா பாராட்ட வேண்டி விஷயங்கள்னா, அது காஸ்ட்யூம் டிசைனர்களையும், கேமரா மேனையும் தான். அவ்ளோ அழகு..!
குடுத்த காசுக்கு ஏத்த மாதிரிதான் கூவியிருக்காங்க. டிக்கெட் காசு நிச்சயம் நஷ்டமாகாது.
.
.

Comments

அப்ப டைஹார்ட் 4 தான் ஆரம்பமா.

இருங்க ஃபேஸ்புக்கில் கொழுத்தி போடுறேன் :)
//வால்பையன் said...
அப்ப டைஹார்ட் 4 தான் ஆரம்பமா.

இருங்க ஃபேஸ்புக்கில் கொழுத்தி போடுறேன் :)//

ஹாஹா.. ஆர்யா கதாப்பாத்திரத்தை சொன்னேன் தல.
வத்திவைக்கிறதுலயே இருங்க..
(அதுமட்டுமில்லாம அந்த டைஹார்ட் படம் இத விட விறுவிறுப்பா இருக்குமாக்கும்)
சென்னை 28 = லாங்கஸ்ட் பெனால்டி இன் த வேர்ல்டு

மங்காத்தா = கேயாஸ்

ஆரம்பம் = டை ஹார்ட்

இதெல்லாம் தமிழ் சினிமாவுல சகஜம் தானே. :)
Avainayagan said…
" பாராட்ட வேண்டி விஷயங்கள்னா, அது காஸ்ட்யூம் டிசைனர்களையும், கேமரா மேனையும் தான். அவ்ளோ அழகு..!"

பாராட்ட சில விஷயங்களாவது இருக்கேனு பாருங்க. பாராட்டுக்கள்

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..