கோலி சோடா - என் பார்வையில்..

“கோலி சோடா“வுக்கு பதிலா “அடையாளம்“னு பேர் வச்சிருக்கலாம். ஒரு மனுஷனுக்கு அடையாளம், அங்கீகாரம் எவ்வளவு முக்கியம்னு சொல்ல முயற்சி பண்ணியிருக்காங்க.
விட்டேத்தியா திரியிற நாலு பசங்க, சுயமா மெஸ் ஆரம்பிச்சு, வில்லனோட ஆட்களை அடித்து, பிரிக்கப்பட்டு வேறவேற ஊர்ல திரிஞ்சு, திரும்பவும் சேர்ந்து, மறுபடியும் வில்லனை எதிர்கொண்டு ஜெயிச்சு, தங்கள் மெஸ்ஸை மீண்டும் ஆரம்பிப்பதுதான் கதை.
நிஜ வாழ்க்கைல இதெல்லாம் சாத்தியமா“ங்குற கேள்வியெல்லாம் ஓரம்கட்டிவச்சுட்டு படம் பார்த்தா, கண்டிப்பா பாராட்ட வேண்டிய முயற்சி தான்.
பசங்க படத்துல வர்ற பசங்களா இவங்க? அரும்பு மீசையும், பொண்ணுங்க முன்னாடி கெத்து காட்டுறதும், கண்கள்ல மிறட்சியும் வெறியும்..னு அசத்தியிருக்காங்க.
“தொலைச்ச இடத்துல தான் தேடணும்“ போன்ற நறுக் வசனங்கள் நிமிர வைக்கின்றன. ஒல்லியாய் வரும் பெண் தோழி மனதில் நிற்கிறார். பாண்டியை போலீஸ் ஜீப்பில் ஏற்றியபின், காயங்களுடன் பச்சை தாவணியைப் பார்த்து மெல்லிசாக சிரிக்கும்போது.. அழகு.
ATMன்னா அழுகுன டொமேட்டோ தானே?“ “நானும் அழுவேங்க.. ஆனா யாருக்கும் தெரியாது“ எனும்போதெல்லாம், பக்கடா பாண்டியைப் போலவே நமக்கும் அந்தப் பெண்ணை சட்டென பிடித்துவிடுகிறது.
வெவ்வேறு மாநிலங்களில் தள்ளப்படும் நால்வரும் ஒரே பாட்டில் சட்டென சேர்ந்துவிடுவது.. அவர்களின் தோழிகளுள் ஒருவருக்கு மட்டும் மொட்டை போட்டுவிட்டு, மற்றொரு பெண்ணை ஏதும் செய்யாமல் விட்டுவிடுவது.. திடீரென எலெக்சனில் நாமினேசன் தாக்கல் செய்வதாய் ஹீரோயிசம் காட்டுவது... என அங்கங்கே நிறைய லாஜிக் ஓட்டைகள் இருக்கத்தான் செய்கின்றன.
காதல், ரெட்டை அர்த்த வசனங்கள், மொக்கை காமெடிகள், டாஸ்மாக் உளறல்கள் என்ற வட்டத்திற்குள்ளயே சுற்றிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் இப்படம் சிறிதேனும் ஆறுதல் தான். இம்மாதிரியான முயற்சிகளை தாராளமாய் வரவேற்கலாம்.
.
(ஒருவழியா 250வது பதிவை இதன்மூலமா தேத்தியாச்சு)

Comments

250வது பதிவுக்கு முதல் ஓட்¬ட்ப போட்டாச்சு... ஹி... ஹி...! புதிய களத்தில் புதியவர்களை வெச்சு செய்யப்பட்ட முயற்சியான இது ஆறுதல் தர்ற அளவுக்கு இருக்குன்னு நீங்க சொல்றதால அவசியம் இந்தப் படத்தைப் பார்த்துடறேன்!
பயனுள்ள சுவாரஸ்யமான
பதிவுகளாக 250 பதிவுகள் தருவது
என்பது பிரம்மப் பிரயத்னமே
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
பயனுள்ள சுவாரஸ்யமான
பதிவுகளாக 250 பதிவுகள் தருவது
என்பது பிரம்மப் பிரயத்னமே
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
சுவாரஸ்யமான விமர்சனம்... 250 பதிவிற்கும், மென்மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்...
Anonymous said…
வணக்கம்

விமர்சனம் சிறப்பாக உள்ளது. 250வது பதிவு என்னும் போது மிக்க மகிழ்ச்சி இந்த வலையுலகில் மேலும் பல படைப்புக்கள் மலர எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆர்வா said…
250 படைப்பை காணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது இந்திரா அவர்களே... படம் பார்த்தேன். மிகவும் அருமை.. நான் ஃபேஸ்புக்கில்தான் ஷேர் செய்திருக்கிறேன்..
ஆயிரமாயிரம் பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்...

படம் பார்த்தால் அது சந்தோஷமாக இருந்தால் நல்லது, மாஸ் படம் எடுக்குறேன்னு ஜில்லா மாதிரி படத்தையெல்லாம் எடுத்துட்டு நம்ம உயிரைத்தான் வாங்குறானுக...!

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..