Miss you Sweetheart..


பம்பாய்திரைப்படம் வெளியான நேரம் அது. மணிரத்தினம், ஏ.ஆர்.ரஹ்மான் என அத்தனைபேரையும் ஓரங்கட்டிவிட்டு, ஒரு நடிகன் இத்தனை வசீகரமாய் இருக்க முடியுமா என்று வாய்பிளந்து ரசிக்க ஆரம்பித்த காலகட்டம். என்னதான் ரோஜா’“வில் பார்த்துப் பார்த்து ரசித்திருந்தாலும் ஆதர்ஷ நாயகனாக்கியது பம்பாய் படத்திலிருந்து தான். வெளிர் நிறம், நெற்றிப் புருவத்தில் சிவப்பு மச்சம், கொழுக்மொழுக் கன்னங்கள், சின்னதாய் உதட்டோரப் புன்னகை, மார்பு ரோமம், அலட்டிக்கொள்ளாத நடிப்பு..என அரவிந்த்சாமியை ரொம்பவே பிடித்துப்போனது. சன்-டிவியில் வரும் சூப்பர் 10 நிகழ்ச்சியில், முதல் வாரத்தில் புதுவராயிருந்து, அடுத்த வாரமே முதலிடத்தைப் பிடித்த குச்சி குச்சி ராக்கம்மாவிற்கு நடுவீட்டில் தோழிகள் சகிதம் கைதட்டி ஆரவாரம் செய்தது இன்றும் நினைவிருக்கிறது.
நடைமுறைக்கு மாறாய், ஒரு நடிகனை கொண்டாட ஆரம்பித்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் வீட்டில் கலவரமாக தொடங்கினர். எங்கே அரவிந்த்சாமியைத் தேடி சென்னைக்கு (தோழிகளுடன்) ஓடிப்போய் விடுவோமோ என்று பயந்து, மாமா, சித்தப்பா என அனைவரும் சூழ அட்வைஸ் எல்லாம் வழங்கப்பட்டது பெருங்காமெடி. அவன் கருப்பா தான் இருப்பான், எல்லாமே மேக்-அப், ரொம்ப குடிப்பானாம், நம்பியாரைவிட கெட்டவனாம், லவ் பண்ற காட்சியெல்லாம் நிஜம் கிடையாது, சுத்தி நூறு பேர் இருக்கும்போது நடிப்பாங்க.. அதெல்லாம் நிஜமில்லஇவையெல்லாம் எங்களை திருத்துவதாய் வழங்கப்பட்ட அறிவுரைகள். இவற்றை ஞாபகப்படுத்தும்போதெல்லாம் இப்போதும் அம்மா சிரிப்பதுண்டு.
வீட்டில் கொஞ்சம் பயம் ஓய்ந்திருந்த நிலையில், “இந்திராதிரைப்படம் வெளியானது. அனுஹாசனை அவர் காதலாய் வம்பிழுத்து அழவைக்கும்போதெல்லாம் அனுவுக்கு பதிலாய் நாங்களே நிற்பதாய் வெட்கப்பட்டுக்கொள்வோம். தொடத் தொட மலர்த்தென்னபாடலின் ஒரு காட்சியல் வெள்ளை டீ-சர்ட் போட்டு தன் மார்பில் கைவைத்து மனுஷன் பாடுவார். நாங்கள் டிவியை கட்டிப்பிடிக்காத குறை தான். அம்மா வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பிக்க, மறுபடியும் அட்வைஸ் மழைகள். (அந்தப் படத்தில் அனுவுக்கும் அரவிந்துக்கும் என்ன எழவு கெமிஸ்ட்ரி இருந்ததாய் நாங்கள் அத்தனை கொண்டாடினோம் என்று இப்போது யோசித்துப் பார்த்தால்... ஙே!).
அப்படி அதீதமாய் கனவு கண்டுகொண்டிருந்தபோது வெளியான தாலாட்டு”, ”என் சுவாசக் காற்றேகுறிப்பாய் ஸ்ரீதேவியின் ஜோடியாக தேவராகம்போன்ற படங்களைப் பார்த்து, நொந்து, அவரை டைவர்ஸ் செய்யுமளவிற்கு வெறுப்பு வந்துவிட்டது. கடைசியில், மின்சாரக் கனவில் பாதிரியாராய் அவர் கெவுன் அணிந்து வரும் காட்சியைப் பார்த்து, சேர்த்து வைத்த அவருடைய போட்டோக்களையெல்லாம் கிழித்துப் போட்டாயிற்று.
அதன்பிறகு மாறிக்கொண்ட ஹ்ரித்திக் ரோஷனில் ஆரம்பித்து இன்று துல்கர் சல்மான் வரையிலான வெவ்வேறு காதல்களை வீட்டில் யாரும் அந்த அளவு சீரியஸாய் எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனாலும் அரவிந்த்சாமிக்கான இடத்தை இனி அவரால் கூட நிரப்ப முடியாது என்பதே ஆகச்சிறந்த வருத்தம். 
காலையில் தனி ஒருவன்பட போஸ்டர்கள் கண்ணில்பட்டதன் விளைவு இப்பதிவு. ட்ரெய்லரின் இறுதியில் Love you Sweetheart என்ற பின்னணி வசனத்திற்கு சிரித்துக்கொண்டிருக்கிறார் அரவிந்த்சாமி.
Miss you sweetheart :(

.

Comments

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சுவாரசியமான பதிவுடன் வருகைக்கு வாழ்த்துகள் .இனிமையான நினைவுகளை சொன்ன விதம் அருமை
தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்
வருண் said…
அடேங்கப்பா!!

இளம் நடிகைகளை இதுபோல் "காதலித்தவர்களை"ப் பார்த்தால் ரொம்பவே பாவமாக இருக்கும். உங்களை "அன்னாரிடத்தில்" வைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம்.

நல்லவேளை ஹேர் ட்ராண்ஸ்ப்ளாண்ட் பண்ணினாரு, இல்லைனா பார்க்க எப்படி இருப்பாரோ. அவருடைய கல்யாண வாழ்க்கை முறிவில் முடிந்ந்ததாகப் படித்தேன். அவர் மாஜி மனைவி உங்க பதிவை வாசிச்ச்சா தலையில் அடிச்சுக்குவாங்க! She might not miss him as much as you do, I suppose! :)

It is a free world. Who says you should not share all these? :)

Popular posts from this blog

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..