கடுப்பேத்துறதுக்குனே கல்யாணம் பண்ணிக்கிறாய்ங்க...



போன வாரம், ராசிப்பொண்ணுக்கு விருந்து குடுத்தோம். மீசைக்காரனும் நானும் தான் சமையல். மட்டன், சிக்கன், மீன்“னு எல்லாமே சமைச்சிருந்தோம். (நம்புங்க.. நா நல்லா சமைப்பேன்..). அரட்டை அடிச்சுகிட்டே சமைச்சதுனால, சமையல் முடிய மதியம் 3.30 ஆய்டுச்சு. எல்லாருக்கும் நல்ல பசி. ஒரு வழியா சாப்பிட உக்காந்தாங்க.
சமைச்சதை எல்லாம் டைனிங் டேபிள்ல எடுத்துவச்சுகிட்டு இருந்தோம். கடைசியா மீன் குழம்ப வேற பாத்திரத்துல மாத்திகட்டு இருந்தேன். பாத்திரம் வெயிட்டா இருந்ததால, குழம்புல இருந்த மீனை எல்லாம் முதல்ல கரண்டில எடுத்து மாத்திட்டு, அப்புறம் குழம்ப அதுல ஊத்திகிட்டு இருந்தேன். பசி தாங்க முடியாம உள்ள வந்த ராசிப்பொண்ணு அத பாத்துட்டு “என்னடி பண்ற?“னு கேட்டா. உடனே நா ரெண்டு பாத்திரங்களையும் காட்டி “இது மீனு, இது புளி குழம்பு, ரெண்டையும் ஒண்ணா ஊத்துனா மீன் குழம்பாயிடும்“னு சொன்னேன். “ஓ அப்படியா? சரி சீக்கிரம் கொண்டு வா, எனக்குப் பசிக்குது“னு சொல்லிட்டு எந்த ரியாக்சனும் குடுக்காம போயிட்டா. (உருப்ட்ட மாதிரி தான்..)
*******************************************
என் மொபைல்ல சார்ஜ் சுத்தமா இல்லனு கனெக்டர் உபயோகப்படுத்தி மீசைக்காரனோட சார்ஜர்ல போட்ருந்தேன்.  சாப்பிட்டுட்டு மறுபடியும் அரட்டைய கண்டினியூ பண்ணினோம். பேசிகிட்டு இருக்கும்போது திடீருனு எனக்கு போன் வந்துச்சு. (கனெக்டர கழட்டாம) சார்ஜர மட்டும் கழட்டிவிட்டுட்டு ஆன் பண்ணி பேசினேன். என்னையவே பாத்துகிட்டு இருந்த ராசிப்பொண்ணு, “ஏண்டி கனெக்டர கழட்டாம பேசுற?“னு கேட்டா. உடனே நா “கனெக்டரோட பேசினா டவர் நல்லா கிடைக்கும்டி“னு சொன்னேன். “ஓ அப்படியா?“னு கேட்டுட்டு பேசாம போயிட்டா. (நம்மள நம்புறதுக்கும் ஒரு ஜீவன் இருக்குதே..)
*******************************************
அன்னைக்கு சாயந்திரம் எல்லாரும் வெளில போய் சாப்பிடலாம்னு பேசிவச்சிருந்தோம். புதுசா கல்யாணமானதால அது ராசிப்பொண்ணோட ட்ரீட்னு சொல்லிருந்தோம். அவளும் சரினு சொல்லிட்டா. மனசுக்குள்ள வேண்டிகிட்டே இருந்தா போல, கரெக்டா சாயந்திரம் 4 மணியில இருந்து மழை பிடிச்சிக்கிச்சு. வேற வழியில்லாம ஃபாத்திமா காலேஜ் பக்கத்துல இருக்குற கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர்க்கு போய் ஆளுக்கொரு ஜூஸ், ஐஸ்கிரீமாவது சாப்பிடலாம்னு போனோம்.  கடைக்குள்ள போனதுதான் தாமதம், திரும்பி பாத்தா ராசிப்பொண்ணையும் (புது மாப்பிள்ளை) பலியாடையும்  காணோம். பொறுத்துப் பொறுத்துப் பாத்துட்டு எனக்கும் மீசைக்காரனுக்கும் ஐஸ்கிரீம் வாங்கிட்டு, மத்தவங்களுக்கு ஜூஸ் வாங்கிக்குடுத்துட்டோம். (பில்லு என் தலைல விழுந்துச்சு.. அவ்வ்வ்வ்).
கொஞ்ச நேரம் கழிச்சு கடைக்குள்ளயிருந்து அதுக ரெண்டும் கை கோர்த்து நடந்து வந்துச்சுக. கடுப்பாகி “எங்கடி போன“னு கேட்டா... “அவரு எனக்காக கிப்ட் வாங்கி தரேன்னு சொன்னாரு.. அதான் அப்படியே கடைக்குள்ள வாக் போயிட்டு வந்தோம். அதுல நம்ம ட்ரீட்ட சுத்தமா மறந்துட்டேன், சாரி“னு கூலா சொல்றா.. (படுபாவி..)
*******************************************
மறுநாள் எக்கோ பார்க் போயிருந்தோம். அங்க சாயந்திரமானா, பெரிய உயரமான ஃபவுண்டெயின் ஒண்ணு ஆன் பண்ணுவாங்க. எல்லாரும் சாதாரணமா வேடிக்கை பாத்துகிட்டு இருந்தோம். யதார்த்தமா திரும்பி பாத்தா... ராசிப்பொண்ணு, பலியாடோட கைய பிடிச்சுகிட்டு என்னவோ முதல் தடவையா அந்த ஃபவுண்டெயின பாக்குற மாதிரி “ஹே.. எவ்ளோ அழகா இருக்கு பாருங்களேன்“னு சினிமா ஹீரோயின் மாதிரி சீன் போட்டுகிட்டு இருந்தா. அப்பப்ப அந்த சாரல் முகத்துல படும்போதெல்லாம் அத தடுக்குற மாதிரி ஸ்டில்லு குடுத்துகிட்டா. (இதுக்கு முன்னாடி பல தடவ இந்த பார்க் வந்திருக்குறா, ஆனா இந்த அளவுக்கு சீன் போட்டதேயில்ல..)
*******************************************
அது என்னவோ தெரில.. பொதுவாவே, கல்யாணமான புது ஜோடிகள், கூட இருக்குறவங்கள கண்டுக்கவே மாட்டிங்குறாங்க. எப்பப் பாத்தாலும் கைய கோர்த்துகிட்டு நடக்குறதும், தோள்ல சாஞ்சுக்குறதும், ஒருத்தர ஒருத்தர் ரசிச்சுக்குறதும்.. யப்பா. முடியலடா சாமி.... இது கூட பரவாயில்ல.. பல்லு விளக்குறதுல இருந்து, செருப்பு மாட்றது வரைக்கும் எல்லாத்தையுமே ஒருத்தருக்கொருத்தர் ரசிப்பாய்ங்க.. (என் பொண்டாட்டி பல்லு விளக்குற அழகே அழகு“னு பக்கத்துல இருக்குற நம்மகிட்ட சொல்லும்போது சப்“புனு அறையலாம்போல வரும் பாருங்க.. கொடுமைடா சாமி..)
புதுசா கல்யாணமான ஜோடிங்க மட்டும் ஏன்தான் இப்படி ஓவரா பண்ணுதுகளோ... கடுப்புகள கிளப்புறாய்ங்கப்பா..
பதிவ படிச்சிட்டு இந்த வீடியோ காட்சியையும் பாருங்க.. என்னோட ஆதங்கம் புரியும்..

 .
.

Comments

Jaleela Kamal said…
ஐய்யா எங்கிருந்து புச்சிங்க இந்த ஷோக்கானா ஜோடி போட்டாவ
Jaleela Kamal said…
ஐ நான் தா பஸ்டா..
unga raasi poonu kudothu vachavanga,,, eaan neenga apdi irunthathu illaya??? illana irunthu parunga,,, love pani parunga life nalla irukum,,, but kalyanam panito love panunga,,, illana kastam,,,
SURYAJEEVA said…
கடுப்பு ரொம்ப தான் ஏத்திட்டாங்க போலிருக்கு..
என்னமோ சொல்லிறீங்க
படம் அருமை
Mahan.Thamesh said…
அருமை பகிர்வுக்கு நன்றி
நண்பியை நல்லாவே கலாயிச்சி இருக்கீங்க போங்க ஹா ஹா ஹா...
சின்னபுள்ளைங்க சந்தோசமா இருக்குறது பிடிக்கலையா உங்களுக்கு, ரசத்துக்குள்ளே மீனை அள்ளிபோட்டு மீன்கறின்னு தந்துருவேன் சாக்குரதை...!
அட ஏனுங்க!!! காமெடி யில் எப்படி !!கலக்கிறிங்க!!
சூப்பர்
யானை குட்டி
vinu said…
Thanks for the info will help full in the near by future.... he he he he he
உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குதே!மாங்கு மாங்குன்னு பின்னூட்ட பதிவு போட்டா படிக்காமலே பின்னூட்டம் போடுறேன்னு சொன்னது நீங்கதானே? காணொளி காணாமல் பின்னூட்டம் போடுறேன்னு சொன்னாலும் கேட்டுக்குவேன்.ஆனால் பதிவு படிக்காம பின்னூட்டம் போடுறேன்னா....நோ சான்ஸ்:)
நீங்க எது சொன்னாலும் நம்பிடுறாங்க ராசிபோண்ணு ரொம்ப நல்லவங்களா இருப்பாய்ங்க போலருக்கே....
(என் பொண்டாட்டி பல்லு விளக்குற அழகே அழகு“னு பக்கத்துல இருக்குற நம்மகிட்ட சொல்லும்போது சப்“புனு அறையலாம்போல வரும் பாருங்க.. கொடுமைடா சாமி..)
புதுசா கல்யாணமான ஜோடிங்க மட்டும் ஏன்தான் இப்படி ஓவரா பண்ணுதுகளோ... கடுப்புகள கிளப்புறாய்ங்கப்பா..//

ஆஹா... நீங்க ரொம்பா கோபக்காரரா இருப்பீங்க போலருக்கே..ம்ம்ம் ரொம்பவும் தான் கடுப்பேத்துறாய்ங்க...
test said…
சரி சரி விடுங்க! நீங்களும் ஒருநாளைக்கு இதெல்லாம் பண்ணத்தானே போறீங்க! :-)
நானும் இன்னிக்கு திருமணம்பற்றி ஒரு பதிவுதான்!
உங்கள் தங்கைக்கு லேட்டான திருமண வாழ்த்துக்கள்!
ஆனாலும் இன்னும் உங்க தங்கைக்கு பல்பு கொடுப்பது சரியில்லை!
எல்லாம் அருமை

போட்டோ சூப்பர்.
//Jaleela Kamal said...

ஐய்யா எங்கிருந்து புச்சிங்க இந்த ஷோக்கானா ஜோடி போட்டாவ//


வேறெங்க... நம்ம கூகுள்ள தான்..
//Jaleela Kamal said...

ஐ நான் தா பஸ்டா..//


நீங்களே தான்..
//மழலைப் பேச்சு said...

unga raasi poonu kudothu vachavanga,,, eaan neenga apdi irunthathu illaya??? illana irunthu parunga,,,//

ராசிப்பொண்ணு மட்டுமில்லங்க.. கல்யாணமான புதுசுல எல்லாருமே இப்படிதான் இருப்பாங்க.. வருஷம் போக போக தான் தெரியும்.. நாய் மாதிரி அடிச்சுக்குறத.. மழலையையும் சேர்த்துதான் சொல்றேன்.

//love pani parunga life nalla irukum,,,//


ஹெ ஹெ ஹெ.. அட என்னாங்க நீங்க... காமெடி பண்றீங்க???

//but kalyanam panito love panunga,,, illana kastam,,,//


ஓகே.. ஓகே.. ஆல் த பெஸ்ட்ங்க..
உங்க கடுப்பு வீடியோல தெரியுது..

ஆனா ஒன்னு..இதப்பாத்து கடுப்பாகாம ரசிக்கத் தொடங்கினீங்கனா எல்லாமெ ரம்மியமா இருக்கும்.

அதுசரி, அந்த போட்டொல இருக்கற பேண்ட் சர்ட் போட்ட குரங்கு என்னமா லுக் விடுது பாருங்க..
vinu said…
iiiiiiiiiiiii


me the 25thuuuuuuuu
கடுப்பா? சிரிப்பா?
//suryajeeva //

//கிராமத்து காக்கை //

//விக்கியுலகம் //

//Mahan.Thamesh //

//MANO நாஞ்சில் மனோ //

//யானைகுட்டி @ ஞானேந்திரன்//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..
//vinu said...

Thanks for the info will help full in the near by future.... he he he he he//


இதெல்லாம் நல்லா தெரிஞ்சுவச்சுக்குவீங்களே.. ம்ம்ம் ஆல் த பெஸ்ட் வினு.
//ராஜ நடராஜன் said...

உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குதே!மாங்கு மாங்குன்னு பின்னூட்ட பதிவு போட்டா படிக்காமலே பின்னூட்டம் போடுறேன்னு சொன்னது நீங்கதானே? காணொளி காணாமல் பின்னூட்டம் போடுறேன்னு சொன்னாலும் கேட்டுக்குவேன்.ஆனால் பதிவு படிக்காம பின்னூட்டம் போடுறேன்னா....நோ சான்ஸ்:)//


அட.. நா குறிப்பிட்டு யாரையம் சொல்லலங்க.. பொதுவா தான் சொன்னேன்.
நீங்க படிச்சிட்டு தான் பின்னூட்டம் போட்றீங்கனு நம்புறேன்.
வருகைக்கு நன்றி நண்பரே..
//மாய உலகம் //


வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டளித்தமைக்கும் நன்றிங்க..
//முனைவர்.இரா.குணசீலன் said...

:))//


உங்களுக்காகவே டெம்ப்ளேட் கமெண்டுக்கு அபராதம் அறிவிக்கிறேன் இருங்க..
//ஜீ... said...

சரி சரி விடுங்க! நீங்களும் ஒருநாளைக்கு இதெல்லாம் பண்ணத்தானே போறீங்க! :-)//


அந்த நாள் வந்து ரொம்ப நாள் ஆய்டுச்சுங்க..
//வால்பையன் said...

உங்கள் தங்கைக்கு லேட்டான திருமண வாழ்த்துக்கள்!//


அவளுக்கு லேட் மேரேஜ் எல்லாம் இல்லீங்க.. கரெக்ட்டான வயசு தான்.
(ஓ நீங்க தாமதமா வாழ்த்தினத சொல்றீங்களோ..)
//வால்பையன் said...

ஆனாலும் இன்னும் உங்க தங்கைக்கு பல்பு கொடுப்பது சரியில்லை!//

நா பல்பு வாங்கினா மட்டும் சந்தோசப்படுவீங்களே.. என்ன உலகம்டா..
//ஆயிஷா . said...

எல்லாம் அருமை

போட்டோ சூப்பர்.//


நன்றிங்க..
//வெட்டிப்பேச்சு said...

உங்க கடுப்பு வீடியோல தெரியுது..

ஆனா ஒன்னு..இதப்பாத்து கடுப்பாகாம ரசிக்கத் தொடங்கினீங்கனா எல்லாமெ ரம்மியமா இருக்கும்.

அதுசரி, அந்த போட்டொல இருக்கற பேண்ட் சர்ட் போட்ட குரங்கு என்னமா லுக் விடுது பாருங்க..//


கருத்துக்கு நன்றிங்க.. எவ்ளோ நாள் தான் நானும் ரசிக்கிற மாதிரியே நடிக்கிறது. அதான் பொங்கிட்டேன்.
//vinu said...

iiiiiiiiiiiii


me the 25thuuuuuuuu//


வினு ஸ்டைல் காணோமேஏஏஏனு நெனச்சேன்..
//சி.பி.செந்தில்குமார் said...

கடுப்பா? சிரிப்பா?//


கடுப்போட சிரிப்புங்க..
பாவங்க புது ஜோடிங்க. கண்டுக்காதீங்க ரசிங்க.
pichaikaaran said…
சரளமான எழுத்து.... ம்ம்...பலியாடு என்ற சொல்லாடலின் ஆழமான அர்த்தம் திருமணமான் ஆண்களுக்குத்தான் நன்கு தெரியும்... நீங்களும் புரிந்து கொண்டு இருப்பது சூப்பர்.. ஹி ஹி
Menaga Sathia said…
எல்லாமே கலக்கல்...புகைப்படம் சூப்பர்!!வலைச்சர அறிமுகத்திற்க்கு மிக்க நன்றிங்க...
அட கொஞ்ச நாளைக்கு சந்தோஷமா இருக்கட்டுமே!!
Praveen said…
(என் பொண்டாட்டி பல்லு விளக்குற அழகே அழகு“னு பக்கத்துல இருக்குற நம்மகிட்ட சொல்லும்போது சப்“புனு அறையலாம்போல வரும் பாருங்க.. கொடுமைடா சாமி..)//

Lolzzz.

Appo neenga ithellam pannala sister?
Unknown said…
//நம்புங்க நான் நல்லா சமைப்பேன்//

நம்பிட்டேன்.

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..