Posts

Miss you Sweetheart..

Image
‘ பம்பாய் ’ திரைப்படம் வெளியான நேரம் அது. மணிரத்தினம் , ஏ.ஆர்.ரஹ்மான் என அத்தனைபேரையும் ஓரங்கட்டிவிட்டு , ஒரு நடிகன் இத்தனை வசீகரமாய் இருக்க முடியுமா என்று வாய்பிளந்து ரசிக்க ஆரம்பித்த காலகட்டம். என்னதான் ‘ ரோஜா ’“ வில் பார்த்துப் பார்த்து ரசித்திருந்தாலும் ஆதர்ஷ நாயகனாக்கியது பம்பாய் படத்திலிருந்து தான். வெளிர் நிறம் , நெற்றிப் புருவத்தில் சிவப்பு மச்சம் , கொழுக்மொழுக் கன்னங்கள் , சின்னதாய் உதட்டோரப் புன்னகை , மார்பு ரோமம் , அலட்டிக்கொள்ளாத நடிப்பு..என அரவிந்த்சாமியை ரொம்பவே பிடித்துப்ப ோனது. சன்-டிவியில் வரும் சூப்பர் 10 நிகழ்ச்சியில் , முதல் வாரத்தில் புதுவராயிருந்து , அடுத்த வாரமே முதலிடத்தைப் பிடித்த “ குச்சி குச்சி ராக்கம்மா “ விற்கு நடுவீட்டில் தோழிகள் சகிதம் கைதட்டி ஆரவாரம் செய்தது இன்றும் நினைவிருக்கிறது. நடைமுறைக்கு மாறாய் , ஒரு நடிகனை கொண்டாட ஆரம்பித்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் வீட்டில் கலவரமாக தொடங்கினர். எங்கே அரவிந்த்சாமியைத் தேடி சென்னைக்கு (தோழிகளுடன்) ஓடிப்போய் விடுவோமோ என்று பயந்து , மாமா , சித்தப்பா என அனைவரும் சூழ அட்வைஸ் எல்லாம் வழங்கப்பட்டது பெருங்காமெடி. “...

“மனம்“ - என் பார்வையில்..

Image
மறுஜென்மம் அப்டினு ஏதாவது இருக்குதா? அப்டி இருந்தா திரும்ப பிறக்குறவங்க அதே உருவத்தோட பிறப்பாங்களா? குறிப்பா போன ஜென்ம ஞாபகங்கள் திரும்ப வருமா? முந்தைய ஜென்மத்துல தாங்கள் யாரை நேசிச்சாங்களோ அவங்களை இந்த ஜென்மத்துலயும் அடையாளங்காண முடியுமா? அப்பாவை கண்டுபிடிச்சாச்சு.. அப்டினா அம்மாவும் கிடைப்பாங்கனு தேட ஆரம்பிச்சா சித்ததப்பா, மாமா, தாத்தானு வரிசையா எல்லாரையும் கண்டுபிடிச்சுடலாமா?? இந்த மாதிரியான அறிவியல் கேள்விகளையெல்லாம் ஓரமா ஒதுக்கி வச்சுட்டு படம் பார்க்க உக்கார்ந்தா போதும்.. “மனம்“ உணர்ச்சிகளின் ஒட்டு மொத்த குவியல்னு சர்டிபிகேட் குடுக்கலாம். நாகேஷ்வர்ராவ், நாகர்ஜூனா, நாகசைத்தன்யா மூவரும் நாகசைத்தன்யா, நாகர்ஜூனா, நாகேஷ்வர்ராவ் என்ற வரிசையில் நடித்திருக்கும் திரைக்கதை. ஆரம்பத்துலருந்து பார்க்கலேனா குழப்பம் தெளியிறதுக்குள்ள படம் முடிஞ்சிடும். தன் பெற்றோரான நாகசைத்தன்யா மற்றும் சமந்தாவின் மரணத்திற்குப் பின் நாகர்ஜூனா ரொம்ப வருடம் கழித்து அவர்களை அதே உருவில் இளைஞர்களாக காண்கிறார். இருவரையும் காதலர்களாக சேர்த்துவைக்க முயற்சி செய்து, கடைசியில் அவர்களுக்கே முன்ஜென்ம ஞாபகம் வந்து கட்ட...

Bungee jumping of their own - என் பார்வையில்..

Image
காதலுக்கு பாலின வேறுபாடு அவசியமில்லை .. . ஆழ்மனதில் அதை உணர்ந்தாலே போதும் என சொல்ல முயற்சித்திருக்கும் கதை. (கொஞ்சம் மறுஜென்ம சாயலும்). பயமும் ஆர்வமும் கலந்த பால்ய அழகான காதல், பிரியமான காதலி, அவர்களுக்குள்ளான ரம்மியமான ஊடல், திடீரென விபத்தில் அவள் மரணம்.. ஒரு மெல்லிய இசையை கேட்டுமுடிக்கும் தருவாயில் தோன்றும் பாரத்துடன் ஆரம்பிக்கிறது படத்தின் பிற்பாதி. நாயகன் ஆசிரியராய் சேரும் பள்ளியில், தன் இறந்துபோன காதலியை நினைவுபடுத்தும் ஒரு மாணவன். காதலியை ஒத்திருக்கும் அவனது பேச்சுக்களும் படம்வரையும் திறனும், பார்க்கும்போதெல்லாம் நாயகனுக்கு அவனைநோக்கியதான ஓர் உந்துதலை ஏற்படச்செய்கிறது. // After I'm born again, I'm going to look for you. And when I do, I'll fall in love with you again. Really? But how will you know if it's me in my next life? I'll recognize you. I'll know. How? I'm going to fall in love again with someone else. That person will be you. // காதலின் அழுத்தத்தை கவிதையாய் சொல்லிச்செல்லும் காட்சி இது. ஓரின...

செல்போன்..

Image
“என்னக்கா இந்நேரம் வந்துருக்கீங்க?“ சட்டை பட்டனை போட்டுக்கொண்டே கேட்ட பக்கத்துவீட்டு சாரதியிடம் தயங்கியபடி விஷயத்தை சொன்னேன். சிரிப்பா ஏளனமாவெனப் புரிந்துகொள்ள முடியாதபடி புன்னகைத்தான். “இதெல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்கக்கா. கண்டுக்காம விட்ருங்க“ சொன்னவனை நிமிர்ந்து பார்த்தேன். இவனுக்கு நான்பட்ட அவமானம் புரியவில்லை. “உன்னால எனக்கு உதவ முடியுமா முடியாதானு மட்டும் சொல்லு“ “ம்ம் சரிங்கக்கா. உங்களுக்காக பண்றேன். ஆனா எனக்கென்னவோ இது தேவையில்லாத வேலைனு தோணுது.“ கடைசி வார்த்தையை கவனிக்காதவளாய் “எட்டு மணிக்கு வாங்கிவச்சுடுவேன். சரியா காலேல எட்டரைக்கு பஸ் ஸ்டாண்ட் வந்துடு.“ என்றவாறு வீடுவந்து சேர்ந்தேன். இரவு முழுக்க தூக்கமே வரவில்லை. ச்சே.. எல்லாம் அந்த சந்திராவால் வந்தவினை.  நான்குநாட்களாக வேண்டுமென்றே சீண்டிக்கொண்டிருந்தவள் இன்று நேரடியாகவே பேசிவிட்டாள். இருக்கட்டும். நாளைக்கு நான் யார்னு காட்டுறேன். மறுநாள் சரியாய் ஏழு மணிக்கு செல்லதுரை வீட்டுக் கதவை தட்டினேன். அவர் மனைவியின் பலத்த சிபாரிசு என்பதால் அதிகம் கேள்வி கேட்காமல், பொருள் பத்திரம் என்றும் சாயந்திரம் ஒப்ப...

தீராத பசிகொண்ட விலங்கு..

வாழ்வின் ஸ்வாரஸ்யமான அனுபவங்களை தொகுப்பாக வெளியிடுவதென்பது எழுத்தாளர்களுக்கேயுரிய பெருஞ்சவால். நூலிழையில் அது தற்பெருமையாகவோ, சுயசொரிதலாகவோ அமைந்துவிடக்கூடும். இதைத் தவிர்த்திடவே சிறுகதைத் தொகுப்புகள் என்ற பேர்வையில் ஆங்காங்கே அரிதாரமிட்டு சம்பவங்களை எழுதித் தள்ளுவர் சிலர். அவற்றில் பத்தில் நான்கு கதைகள் படிப்பவர் மனதை ஆட்கொண்டாலே பெரிய விஷயம் தான். வாழ்வில் இடம்பெறும் மிகச்சாதாரண சம்பவங்களில் கிடைக்கும் அசாதாரண அனுபவங்களின் தொகுப்புகளுக்கு பாவண்ணன் எழுதிய “தீராத பசி கொண்ட விலங்கு“ நிச்சயம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இதில் இடம்பெறுபவர்கள் யாவும் நம் அன்றாட வாழ்வில் சட்டென காணாமற் போகும் மனதில் பதிந்த மனிதர்கள் தான். தினமும் நாம் கடந்து செல்லும் மரத்திலிருந்து மனிதர்கள் வரை ஏதோ ஒன்று நம்மை எந்தவகையிலோ பாதித்து பதிந்து செல்கின்றன. அவற்றிற்கான தேடல்களும் ஏக்கங்களும் புத்தகம் முழுக்க நிறைந்து கலந்திருக்கின்றது. இருபத்தி மூன்று (வெவ்வேறு) சம்பவங்களின் தொகுப்புகள் அடங்கிய இப்புத்தகத்தில் என்னை இரண்டாவதாய் படிக்கத் தூண்டிய பகுதியெனில் “நெருங்க முடியா இடைவெளி“ தான். தந்தைக்கும் மகனுக்குமா...

துருப்பிடித்த நேயம்..!

Image
சடுதியில் விலகிச்செல்லும் பைத்தியக்காரனின் அருகாமையென இழந்துகொண்டிருக்கிறோம் நமக்கான இயல்புகளை.. ! நின்று நிதானமாய் எதையும் ரசித்திட அவசியமோ அவகாசமோ ஏதுமிருப்பதில்லை.. ! பக்கத்து இருக்கைக் குழந்தையின் அழுகையில் முகஞ்சுளிப்பதில் தோற்றுப்போகிறது ஆதி மனிதனின் ஆசுவாசங்கள்... ! வண்ணத்துப்பூச்சியை மீண்டும் புழுவாக்கும் முயற்சியில் லயித்துக்கிடக்குமித் துருப்பிடித்த நேயத்தில் துர்நாற்றமடிக்கிறது தேங்கிக்கிடக்கும் ரத்தக்கறைகள்.. ! காயங்களைக் குத்திக்கிழிக்கும் கோணிகளைக்கொண்டு வேறேதும் செய்வதற்கில்லை நாம்.. ! வாழ்விற்கான சாத்தியங்களில் தொலைந்துபோகிறது வாழ்வதற்கான முகாந்திரங்கள்.. !! . .

“Highway” – என் பார்வையில்..

Image
Stockhome syndrome என்பதனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். தமிழில் அமர்க்களம் முதலிய சில படங்களில் பார்த்துப் பழகிய “தம்மைக் கடத்தியவர்கள் மீதே தோன்றும் ஈடுபாடு“ என்கிற விஷயம் தான். சாமான்ய வாழ்க்கைக்கு ஏங்கும் பணக்காரவீட்டுப் பெண்ணாய் Alia Bhatt . எதிர்பாராதவிதமாய் கடத்தப்பட்டு, அழுது, தப்பிக்க முயற்சி செய்து, பின் கொஞ்சம் கொஞ்சமாய் சூழ்நிலையை ரசிக்க ஆரம்பித்து, கடத்தியவரையே பிடித்துப்போய், “எதுவுமே வேணாம். நீ போதும்“ எனும் கதாப்பாத்திரம். அழுகை மட்டும் நல்லா வருது அம்மணிக்கு. கதாப்பாத்திரத்தின் அழுத்தத்தை இன்னும் தெளிவாக உணர்ந்து நடித்திருக்கலாம். தேர்ந்த முகபாவங்கள் மூலமாகவே ஸ்கோப் செய்யக்கூடிய காட்சிகளில் அதற்கான முக்கியத்துவத்தை அறியாது அலட்சியமாய் தவறவிட்டிருக்கிறார். Randheep Hooda சிரிச்சா நல்லாயிருக்கார். ஆனா சோதனைக்குனே இந்தப் படத்துல ஒரே ஒரு காட்சில தான் சிரிக்கிறார்.. வசனமும் ஏகத்துக்கு கம்மி. அதிகமாய் அவர் பேசியது “வாய மூடு..“ “உள்ள போ..“ “பேசாம இரு..“ அவ்ளோ தான். கதாப்பாத்திரம் உணர்ந்து நடிச்சிருக்கார்ங்குறதால கொஞ்சம் ஆறுதல். தனக்கென உணவு தயார் செய்யும் ஆலிய...