எதிலும் நீ இருந்தால்..
உலகமே கைக்குள் அடங்கியதோ..!!
என் உள்ளங்கையில் உனது ரேகைகள்.
எனது தோள்கள் உன் காதுகளுடன்
ரகசியம் பேச வேண்டுமாம்..
சற்றே சாய்ந்து கொள்ளேன்.
நமக்குள் தூரம் கொடுமையடி..
உன் இதழ் தரும் ஈரம் வேண்டுமடி..
என்னைப்போல் உன்னிடத்தில் காதல் கொள்ள
எவனும் இல்லை.. எவனும் இல்லை..
என்னிடத்தில் உள்ள உன்னை ஈடு செய்ய
எதுவும் இல்லை.. எதுவும் இல்லை..
இனியொரு வரம் வேண்டாம்..
எப்போதும் நீ அருகில் இருந்தால்.
எதையும் செய்கிறேன்..
எதிலும் நீ இருந்தால்.
Comments
எதுவும் இல்லை.. எதுவும் இல்லை..//
அற்புதம்!!!
அற்புதம்!!!//
நன்றி அண்ணாத்தே
உன் இதழ் தரும் ஈரம் வேண்டுமடி.///
ரசித்த வரி.. நல்லாயிருக்கு..
ரகசியம் பேச வேண்டுமாம்..
சற்றே சாய்ந்து கொள்ளேன்.
நிஜமாகவே அருமையான வரிகள்...
என் உள்ளங்கையில் உனது ரேகைகள்.
/
ஒரு நிமிஷம் நான் நோக்கியா மொபைலோ'னு நினைச்சிட்டேன்
எதையும் செய்கிறேன்..
எதிலும் நீ இருந்தால்.
//
அருமையான வரிகள்.... மிகவும் ரசித்தேன் :)
நமக்குள் தூரம் கொடுமையடி..
உன் இதழ் தரும் ஈரம் வேண்டுமடி.///
ரசித்த வரி.. நல்லாயிருக்கு..//
ரசித்துப் பாராட்டியதற்கு நன்றி நண்பரே..
//chithra ..
so in love............. ;-)//
ஐயயோ அப்படியெல்லாம் இல்லை தோழி..
//Ravikumar ..
எனது தோள்கள் உன் காதுகளுடன்
ரகசியம் பேச வேண்டுமாம்..
சற்றே சாய்ந்து கொள்ளேன்.
நிஜமாகவே அருமையான வரிகள்...//
அப்படியா? நிஜமாகவே நன்றி ரவி..
ஒரு நிமிஷம் நான் நோக்கியா மொபைலோ'னு நினைச்சிட்டேன்//
அடங்கமாட்டீங்களா கோபி??
//அருமையான வரிகள்.... மிகவும் ரசித்தேன் :)//
தொடர்ந்து உற்சாகப்படுத்துவதற்கு நன்றி நண்பரே..
நன்றி.
உங்களுக்கு "விருது" கொடுத்துள்ளேன், வந்து பெற்று கொள்ளவும்.
நன்றி.//
பகிர்ந்து கொண்டேன்.. நன்றி அண்ணாத்தை.
///என்னைப்போல் உன்னிடத்தில் காதல் கொள்ள எவனும் இல்லை......
என்னிடத்தில் உள்ள உன்னை ஈடு செய்ய எதுவும் இல்லை....///
///இனியொரு வரம் வேண்டாம்.. எப்போதும் நீ அருகில் இருந்தால்.////
ஓர் இறுமாப்புடன்... கர்வத்துடன்... உலகில் தன்னைத்தவிர வேறொருவன் இப்படி காதல் கொள்ளமாட்டான் என்பதை மேலேயுள்ள முதல் வரியும்...
இவனுக்குள் இருக்கும் அவளை... ஈடுசெய்ய எவளுமில்லை என்று சொன்னால் அது சாதாரண வரி... "எதுவும் இல்லை" என்று அக்ரினையையும் சேர்த்ததால்... இது வைர வரி..
அதோடு முடிவில்.. வரமே வேண்டாமென்கிறான் எப்போது... அவளருகிலிருந்தால்...///
இறுதியாய்...
கவிதையும் அருமை...
கவிதை வரிகளும் அருமை...
அழகான... அருமையான கவிதை...
நட்புடன்...
காஞ்சி முரளி....
பாராட்டுவது ஒரு ரகம்.
தாராளமாகப் பாராட்டுவது இன்னொரு ரகம்.
நீங்கள் இரண்டாவது ரகம் நண்பரே..
உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது..
நன்றி காஞ்சி முரளி.