இன்னைக்கு யார் மூஞ்சில முழிச்சேனோ..



எப்பவும் பஸ்க்கு கரெக்ட்டா அஞ்சு ரூபாய் சில்லரை எடுத்து வச்சுக்குவேன். (கண்டக்டர் கிட்ட திட்டு வாங்க முடிலப்பா..). இன்னைக்குனு பாத்து சில்லரை இல்லாம ஒரு இருபது ரூபாயும் ஒரு நூறு ரூபாயும் பர்ஸ்ல இருந்துச்சு. சரினு இருபது ரூபாய கைல எடுத்துகிட்டு நூறு ரூபாய பர்ஸ்ல வச்சு ஹேண்ட் பேக்ல போட்டுகிட்டேன்.

ஸ்டாப்புக்கு வந்து பக்கத்துல இருக்குற கடைல சில்லரை கேட்டேன். (காலங்காத்தால வந்து சில்லரை கேட்டா எதுக்கு தான் இப்டி முறைக்கிறாய்ங்களோ தெரில..) இல்லைனு சொல்லிட்டான். வேற வழியில்லாம பத்து ரூபாய்க்கு டாப்-அப் கார்ட் வாங்கினேன். (மிஸ்டு கால் குடுக்குறதுக்கு எதுக்கு டாப்-அப் பண்ணனும்னு கேக்காதீங்க.). மீதி ரெண்டு அஞ்சு ரூபாய் குடுத்தான். வாங்கிட்டு பஸ் ஏறினேன். என் நேரங்காலம், கொஞ்சம் லேட்டாய்டுச்சு.. ஆபீஸ் பஸ்ஸ விட்டுட்டேன். (அந்த டிரைவர் வாட்ச் நாசமாப்போக..) ஸ்டாஃப் பஸ் போய்டுச்சுனா, டவுன் பஸ்ல போய் ஆபீஸ் கேம்ப்பஸ்ல 20 நிமிசம் நடக்கணும்.

டவுன் பஸ்க்கு டிக்கெட் 4.50, அதுனால பேக்ல இருக்குற நூறு ரூபாய மாத்த தேவையில்ல, கைல தான் அஞ்சு ரூபாய் இருக்குதேனு நெனச்சு நம்ம்ம்ம்பி ஏறினேன். டிக்கெட் எடுத்தது போக மீதி அம்பது பைசாவ அப்புறம் தர்றேனு கண்டக்டர் சொல்லிட்டாரு.. (தருவாரா தரமாட்டாரா???). எல்லாம் நல்லா தான் போய்கிட்டு இருந்துச்சு. பாதி தூரம் போனதுக்கப்புறம் திடீர்னு பஸ் நின்னுபோச்சு. வேறொன்னுமில்ல.. ப்ரேக் டவுனாம். பாதி வழில இறக்கி விட்டுட்டாங்க. உடனே, கூட வேலை செய்யுற பொண்ணுக்கு போன் பண்ணி, பஸ்ஸ விட்டுட்டேன் அதுனால அரைமணி நேரம் லேட்டா வருவேன்னு சொல்லி, முடிக்க வேண்டிய வேலையோட தகவலையும் சொல்லிகிட்டிருக்கும்போதே போன் பேலன்ஸ் காலியாயிடுச்சு.

வேற பஸ் பிடிக்கலாம்னு ஹேண்ட் பேக்குள்ள பர்ஸ தேடினேன். கெடைக்கலங்க.. அப்ப தான் தெரிஞ்சது.. காலேல இருபது ரூபாய எடுத்துட்டு மறந்துபோய் பர்ஸ வீட்லயே வச்சிட்டு வந்திருக்கேன்... (அவ்வ்வ்வ்). என் நிலைமைய கொஞ்சம் நெனச்சுப் பாருங்க. கைல சுத்தமா காசில்ல. தெரிஞ்சவங்க யாரும் பக்கத்துல இல்ல. போன் பண்ண கூட காசில்ல.

ப்ரேக் டவுனான பஸ்ஸோட டிக்கெட், வேற டவுன் பஸ்க்கு செல்லும்னு சொன்னாங்க. ஆனா என்னோட கெட்ட நேரம்... எந்த லோக்கல் பஸ்ஸும் நிக்கல. கூட வந்தவங்க சிலர், ஆட்டோல சேர் பண்ணி போகலாம் வறீங்களானு கேட்டாங்க.. ஹிஹிஹி“னு கேனத்தனமா ஒரு சிரிப்பு சிரிச்சுகிட்டே “கண்டக்டர்கிட்ட மிச்ச பணம் வாங்கணும். அதுனால நீங்க போங்க“னு சொல்லி சமாளிச்சேன். அவங்களும் போய்ட்டாங்க.

ஆனாலும் விடாம அந்த அம்பது காச கேட்டு வாங்கிட்டோம்ல.. (கண்டக்டர் தான் முறைச்சுகிட்டே குடுத்தார்.. நம்ம காச குடுக்குறதுக்கு என்னா கடுப்பு வருது இவுங்களுக்கு..)

ஏ.டி.எம் கார்டும் பர்ஸ்ல தான் இருந்துச்சு.. (ஹிஹி அக்கவுண்ட்ல பணமில்லங்குறது வேற விஷயம்..) காயின் போன்ல பேசணும்னா கூட ஒரு ரூபாய் வேணும். ரெண்டு பேர்கிட்ட, ஒரு கால் மட்டும் பேசிக்கிறேன்னு அவங்க செல்போன கேட்டேன். சொல்லி வச்சது மாதிரி பேலன்ஸ் இல்லங்க“னு சொல்லிட்டாங்க. (கெட்டெண்ணம் பிடிச்சவய்ங்க..)

இன்னைக்கு ஆபீஸ் போன மாதிரிதான்னு நொந்துகிட்டேன். திடீருனு அங்க ஒரு ஒளிவட்டம் தெரிஞ்சுச்சு பாருங்க.. என் தூஊஊஊரத்து சொந்தக்காரர் ஒருத்தர், அவர் மனைவியோட அந்தப் பக்கமா பைக்ல வந்தார். அத பாத்ததுக்கப்புறம் தான் எனக்கு நிம்மதியாச்சு. ஒருவழியா அவர் கிட்ட விஷயத்த சொல்லி அவர் பைக்லயே ட்ரிப்பில்ஸ் போயிட்டேன். வழக்கம்போல ஆபீஸ்ல திரு திருனு முழிச்சுகிட்டே திட்டு வாங்கினேன்.

இன்னைக்கு யார் மூஞ்சில முழிச்சேனோ தெரில!! ஒரு வேளை கண்ணாடிய எதுவும் பாத்துட்டேனோ....!!! அவ்வ்வ்வ்வ்.

.

.

Comments

துன்பம் வரும் வேளையில சிரிங்கன்னு சொன்னா, சிரிக்க வக்கிறீங்க :)
// இல்லைனு சொல்லிட்டான்.//

சொல்லிட்டார் .. ஹி ஹி ஹி

//டவுன் பஸ்ல போய் ஆபீஸ் கேம்ப்பஸ்ல 20 நிமிசம் நடக்கணும்//

டவுன் பஸ் ஏற டவுனுக்குப் போகனுமா ?

//ஹிஹிஹி“னு கேனத்தனமா ஒரு சிரிப்பு சிரிச்சுகிட்டே “கண்டக்டர்கிட்ட மிச்ச பணம் வாங்கணும். அதுனால நீங்க போங்க“னு சொல்லி சமாளிச்சேன். அவங்களும் போய்ட்டாங்//

உண்மைதானே ... ஹி ஹி .. ஐம்பது பைசா ?

//இன்னைக்கு யார் மூஞ்சில முழிச்சேனோ தெரில!! ஒரு வேளை கண்ணாடிய எதுவும் பாத்துட்டேனோ....!!! அவ்வ்வ்வ்வ்.
//

இருக்கும் இருக்கும் ..
:)

:( என்ன தான் ஞாபகமறதியோ
காலைலயே உங்க ப்ளாக் படிச்சிருப்பீங்க
Balaji saravana said…
//ஒரு வேளை கண்ணாடிய எதுவும் பாத்துட்டேனோ....!!!//
இதுல டவுட்டு வேறயா?! அதே தான்.. :))
Ramani said…
பதிவை ரசித்துப் படித்தேன் (கஷ்டத்தையல்ல)
அதிலும் இடையிடையே அடைப்புக்குள்ளே
பாலச்சந்தர் படத்திலே வருமே மனச்சாட்சி
அதுபோல வந்ததை ரொம்ப ரசித்தேன்
நல்ல பதிவு தொடர(பதிவைத்தான் கஷ்டத்தையல்ல)
வாழ்த்துக்கள்
பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பது இதுதானோ.
Speed Master said…
மொபைல் கவர் யூஸ் பன்னும் பழக்கம் இருந்தால் அதில் ஒரு 10 ரூ மற்றும் 100 ரூ வைத்துக்கொள்ளவும்

மறைவாக
S Maharajan said…
//இன்னைக்கு யார் மூஞ்சில முழிச்சேனோ தெரில!! ஒரு வேளை கண்ணாடிய எதுவும் பாத்துட்டேனோ....!!!//

இருக்கும் இருக்கும் ..
karthikkumar said…
இன்னைக்கு யார் மூஞ்சில முழிச்சேனோ தெரில!! ஒரு வேளை கண்ணாடிய எதுவும் பாத்துட்டேனோ.////

இதுக்குதான் வீட்ல இருக்குற கண்ணாடியெல்லாம் தூக்கி ஓடைச்சிருங்க அப்புறம் பாருங்க நல்லதே நடக்கும் .....
//ஒரு வேளை கண்ணாடிய எதுவும் பாத்துட்டேனோ....!!!//

யாரு கண்டது இருக்கலாம்....
Arun Prasath said…
ஆமா 20 ருபாய்ல பத்து ருபாய் போக, மிச்சம் ரெண்டு அஞ்சு இல்ல, ஒரு அஞ்சு டிக்கெட், இன்னொரு அஞ்சு என்னாச்சு
வைகை said…
உங்க மூஞ்சிய கண்ணாடில பார்த்தனாலதான் உங்க சொந்தகாரர் வந்து உதவினதா நெனசுக்கோங்க! Be + :))))
//ஒரு இருபது ரூபாயும் ஒரு நூறு ரூபாயும் பர்ஸ்ல இருந்துச்சு//

ஐ.. அப்போ பில்கேட்ஸ்க்கு போட்டியா.???

//முடிக்க வேண்டிய வேலையோட தகவலையும் சொல்லிகிட்டிருக்கும்போதே போன் பேலன்ஸ் காலியாயிடுச்சு//

பத்து ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணினா 6 ரூபா வரும்ல.. 6 ரூபாய்க்கு மேல உங்களுக்கு வேலை இருந்துச்சுனா நீங்க பில் கேட்ஸ் தானுங்க..

//அவர் பைக்லயே ட்ரிப்பில்ஸ் போயிட்டேன்//

சட்ட குற்றம்..!!!
ஒரு வேளை கண்ணாடிய எதுவும் பாத்துட்டேனோ....!!! அவ்வ்வ்வ்வ்.

.
அரசன் said…
அற்புதம்ங்க ....
நல்லா தான் நடந்துருக்கு ....
கண்ணாடிய தினமும் பாருங்க ....
இன்னைக்கு யார் மூஞ்சில முழிச்சேனோ தெரில, எனக்கு பொழுது நல்லா போயிடுச்சு...
ஹா ஹா ஹா ஹா கண்ணாடியை நல்லா துடச்சிட்டு பாருங்க....
Lakshmi said…
கண்ணாடி ஐயோ பாவம்.
அன்னு said…
//இன்னைக்கு யார் மூஞ்சில முழிச்சேனோ தெரில!! ஒரு வேளை கண்ணாடிய எதுவும் பாத்துட்டேனோ....!!! அவ்வ்வ்வ்வ்.//


ஹெ ஹெ... ஒத்துகிட்டா சரி இந்திராக்கா...

:)))))
இது ஒரு சப்ப மேட்டர்...!! ஏன் இவ்வளவு டென்ஷன் .. மொபைல் போனின் பின் பக்க பேட்டரி பக்கம் ஒரு பத்து ரூபாயை அப்படியே மடிச்சி வையுங்க எமர்ஜென்ஸி நேரத்துல உதவும் ..!!
Chitra said…
/////ஒருவழியா அவர் கிட்ட விஷயத்த சொல்லி அவர் பைக்லயே ட்ரிப்பில்ஸ் போயிட்டேன். ////

... Be safe too!
அப்பாடா….. என்னோட SMS முகத்துலதான் முழிச்சு இருப்பீங்களோனு நினைச்சேன்… JUST MISS...

வேணும் வேணும் நல்லா வேணும்…. என்னை நேத்து கிண்டல் செய்தமைக்கு நல்ல தண்டனை…

போறது ஓசி இதுல டிரிப்ள்ஸ் வேற….. அவரு யாரு முகத்துல முழிச்சிட்டு வந்தாரோ…. இன்னிக்கு உங்க கிட்ட இப்படி குடும்பத்தோட வந்து சிக்கிகிட்டாரு….
சமயங்கள்ல இப்படி அப்பூர்வமாக எல்லோருக்கும் நடந்துவிடுகிறது ...
siva said…
அனுபவம்
அருமை

ஒரு போஸ்ட் போட
ஒரு மேட்டர் கிடைததேனு சந்தோஷ படனும்
//கோமாளி செல்வா said...

vadai !!//


உங்களுக்குத் தான்.
//கோமாளி செல்வா said...

டவுன் பஸ் ஏற டவுனுக்குப் போகனுமா ?//


ஆஹா என்ன ஒரு அறிவுப்பூர்வமான கேள்வி...
//அரபுத்தமிழன் said...

துன்பம் வரும் வேளையில சிரிங்கன்னு சொன்னா, சிரிக்க வக்கிறீங்க :)//


ஹிஹிஹி
//Balaji saravana said...

//ஒரு வேளை கண்ணாடிய எதுவும் பாத்துட்டேனோ....!!!//
இதுல டவுட்டு வேறயா?! அதே தான்.. :))//


அவ்வ்வ்வ்
//Ramani said...

பதிவை ரசித்துப் படித்தேன் (கஷ்டத்தையல்ல)
அதிலும் இடையிடையே அடைப்புக்குள்ளே
பாலச்சந்தர் படத்திலே வருமே மனச்சாட்சி
அதுபோல வந்ததை ரொம்ப ரசித்தேன்
நல்ல பதிவு தொடர(பதிவைத்தான் கஷ்டத்தையல்ல)
வாழ்த்துக்கள்//


நன்றி நன்றி நன்றி..
//☀நான் ஆதவன்☀ said...

:)

:( என்ன தான் ஞாபகமறதியோ//


ஏன் சொல்ல மாட்டீங்க...
//கே. ஆர்.விஜயன் said...

பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பது இதுதானோ.//


என்ன கொடும சார் இது????
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

காலைலயே உங்க ப்ளாக் படிச்சிருப்பீங்க//


நல்ல வேளை உங்க ப்ளாக்க படிக்கலை.. இல்லனா இன்னும் மோசமாயிருக்கும்...
Thanglish Payan said…
மிஸ்டு கால் குடுக்குறதுக்கு எதுக்கு டாப்-அப் பண்ணனும்னு கேக்காதீங்க

Unmai othukkuringa... i appreciate it
vinu said…
presennttu presenttu; naanum innaiku onnu face pannunean ; thats on my next post
எதையும்...!
பிளான் பண்ணி செய்யணும்...!
இல்லன்னா...!
இப்படித்தான்.......!

வாழ்த்துக்கள்... நற்பதிவு...!
//இன்னைக்கு யார் மூஞ்சில முழிச்சேனோ தெரில!! ஒரு வேளை கண்ணாடிய எதுவும் பாத்துட்டேனோ....!!! அவ்வ்வ்வ்வ்//


எனக்கும் அதே டவுட்டு தான்!
நல்ல நடைங்க..

வாழ்த்துக்கள்.
சகோ இந்திரா...

என்ன போங்க..அதா 10 ரூபாக்கு டாப்பப் வாங்கினீங்களே அது என்னாச்சு??...

அது மட்டும் இல்லாம..காசில்லைனா தயங்காம ஆட்டோ புடிச்சு போய்டுங்க..அங்க போய் இறங்கிய ஒடன தெரிஞ்சவங்க கிட்ட பணம் வாங்கி குடுத்திடுங்க...

பதிவுகள் அருமை...

அன்புடன்
ரஜின்
பாராட்டுக்களையும் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பின்னூட்டம் மூலம் தெரிவித்த, தெரிவிக்கப்போகும் நண்பர்களுக்கு என் நன்றிகள்

Popular posts from this blog

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..