விற்கப்படும் அரசாங்க வேலைகள்..




அரசாங்கப் பணி தொடர்பா எனக்கொரு இன்டர்வியூ வந்திருந்துச்சு. மொத்தம் ஐந்து பணியிடங்களுக்கு அறிவிச்சிருந்தாங்க. நானும் அப்ளிகேஷன் அனுப்பியிருந்தேன். போன வாரம் அதுக்கான ஹால் டிக்கெட் வந்திருந்தது. அதில் மூணு தேர்வுகள் திங்கட்கிழமையும், மீதி இரண்டு பணியிடங்களுக்கான நேரடி இன்டர்வியூ செவ்வாய்க் கிழமையும் இருப்பதாக சொல்லியிருந்தாங்க.
நானும் போன திங்கட்கிழமை (அலுவலகத்துக்கு லீவு போட்டுட்டுப் போய்) அந்தத் தேர்வை எழுதினேன். தனித்தனியான மூணு எக்ஸாம் வச்சிருந்தாங்க. மறுநாள் மீதி இரண்டு பணியிடங்களுக்கான நேரடி இன்டர்வியூவும் நடத்தப்பட்டது. ஒரிஜினல் சர்டிபிகேட் சரிபார்த்து, வேலை சம்பந்தமா சில கேள்விகளும் கேட்டாங்க. ஒருவழியாக இரண்டையும் முடிச்சிட்டு வெளிய வரும்போது முந்தின நாள் (திங்கட்கிழமை) எழுதிய தேர்வுக்கான ரிசல்ட் அன்னைக்கு சாயந்திரம் 5 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படுதுனும் அதுல செலக்ட் ஆகுறவங்க மறுநாள் (புதன் கிழமை) காலை 10 மணிக்கு இன்டர்வியூவில் கலந்து கொள்ளனும்னும் சொன்னாங்க.
நானும் சாயந்திரம் 5 மணில இருந்து இன்டர்நெட்ல பாத்தேன். 7.45க்கு தான் ரிசல்ட் வந்துச்சு. நா செலக்ட் ஆகல. (இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா“னு கேப்பீங்களே..). வழக்கத்த விட இந்த எக்ஸாமுக்கு நான் நல்லாத்தான் படிச்சிருந்தேன். என்னோட சேர்ந்து எக்ஸாம் எழுதிய சில ஃப்ரெண்ட்ஸ விசாரிச்சதுல அவங்களும் யாருமே செலக்ட் ஆகலனு சொன்னாங்க. சரி நமக்கு வாய்ச்சது அவ்ளோ தான்னு நெனச்சுகிட்டு விட்டுட்டேன்.
மறுநாள் காலேல வழக்கம்போல என் அலுவலகத்துக்கு வந்துகிட்டிருந்தேன். வழில என் நண்பர் ஒருவர் இன்னொருவருடன் பேசிகிட்டிருந்தாரு. ரொம்ப நாள் கழிச்சு பாக்குறதுனால சகஜமா விசாரிச்சுப் பேசினாரு. அவருக்குப் பக்கத்துல நின்னுகிட்டிருந்த நண்பரை எனக்கு அறிமுகப்படுத்துனாரு. அப்ப தான் அவர், நான் தேர்வு எழுதிய அந்த குறிப்பிட்ட அரசாங்க அலுவலகத்துல வேலை பாக்குறார்னு எனக்குத் தெரியவந்துச்சு.
அதுமட்டுமில்லாம அந்த காலியிடங்களுக்கான ஆட்கள் ஏற்கனவே செலக்ட் பண்ணிட்டாங்கனும் இந்தத் தேர்வுகளும் இன்டர்வியூக்களும் சாதாரண கண்துடைப்புனும் சொன்னார். அரசியல் தலையீடும் பணமும் அந்தப் பணியிடங்களை நிரப்பிடுச்சாம். தேவையில்லாம நேரத்த வீணாக்கிட்டீங்கனு சொல்லி எடக்கா சிரிச்சாரு.
என்ன சொல்றதுனு தெரில.. இப்ப இது தானே நடக்கிறது என்று நமக்கு நாமே சமாதானம் செய்வது, இன்னும் கேவலம். இந்த மாதிரி கண்துடைப்புக்கு தேர்வுகளை நடத்துறதுனால எத்தன பேரோட எதிர்பார்ப்புகள் சிதைக்கப்படுது?
இவ்ளோ நாள், எக்ஸாம்ல செலக்ட் ஆகுறதுக்கு லஞ்சம் குடுத்துகிட்டிருந்தாங்க. இப்ப முன்கூட்டியே ஆள செலக்ட் பண்ணிட்டு சம்பிரதாயத்துக்காக எக்ஸாம் நடத்துறாங்க. நாடு ரொம்ப முன்னேறிடுச்சு.. லஞ்சம் வாங்கவோ குடுக்கவோ கூடாதுனு ஒரு பக்கம் கோஷங்கள் வந்தாலும் எல்லாரும் தனக்குனு வரும்போது சூழ்நிலைக் கைதியா மாறிட்றாங்க. எவன் லஞ்சம் குடுக்குறானோ அவனுக்கு வேலைங்குற கேவலமான கட்டத்த தாண்டி, எவன் அதிகமா லஞ்சம் குடுக்குறானோ அவனுக்குங்குற நிலைமை வந்தாச்சு.
இவ்வளவு ஏன், பல அரசாங்க அலுவலகத்துல தற்காலிகப் பணியாளர்களா, கிட்டத்தட்ட தினக்கூலி ஊழியர்களா, இருபத்தைந்து வருஷம் வரைக்கும் கூட டெம்பரவரியா வேலை பாத்துகிட்டு இருக்காங்க. இன்னைக்கும் இவங்களோட ஒரு நாள் சம்பளம் வெறும் 80 ரூபாய் தான். தனியார் கம்பெனில இருந்திருந்தா, இவங்களுக்கு சம்பளமாவது கூட கிடைத்திருக்கும். பணவசதியும் இல்லாம, வேற வேலைக்கும் போக முடியாம என்னைக்காவது தங்களோட பணி நிரந்தரமாகும்னு வருஷக்கணக்கா எதிர்பார்த்துகிட்டு இருக்குறவங்களும் உள்ளுக்குள்ள இருக்கதான் செய்றாங்க.
இவங்கள மாதிரியான பாவப்பட்ட ஆட்கள் ஒரு பக்கம் இருந்தாலும், எந்த அனுபவமுமின்றி லஞ்சம் கொடுத்து வேலையில உக்காந்து வெட்டியா பொழுத கழிக்கும் ஊழியர்களும் இருக்காங்க. உள்ள வேலைபாக்குற இவங்களுக்குள்ளயே இந்த ஏற்றத் தாழ்வுனா வெளிலருந்து முயற்சி பண்ற நமக்கு சொல்லவே வேணாம்..
மத்த இடங்கள்ல எப்டியோ, அரசாங்க வேலைல இந்த பணப் பரிமாறல்கள் வெளிப்படையாவே நடக்குது. இந்தந்த வேலைக்கு இவ்வளவு பணம் குடுக்கணும்னு அட்டவணை ஒட்டாத குறை. ஒரு பியூன் வேலைக்கு கூட நாலஞ்சு லட்சம் தயங்காம பகிரங்கமா கேக்குற நிலைமை வந்தாச்சு. ஏன் இப்படினு கேட்டா, சம்பளம் தான் மாசம் எட்டாயிரம் பத்தாயிரம்னு வாங்கப் போறார்லனு பதில் வருது. அசிஸ்டன்ட், அக்கவுண்டன்ட் மாதிரியான வேலைக்கு ஆறுலருந்து எட்டு லட்சமாம், டீச்சிங் வேலைக்கு இன்னும் அதிகமாம். இந்த லஞ்சப் பணம் ஒவ்வொரு துறையப் பொறுத்து மாறுமாம், பே கமிஷன் போட்டு சம்பளம் கூடுச்சுனா லஞ்சத் தொகையும் இரு மடங்காயிடுமாம். இதுல ஜாதி மண்ணாங்கட்டிய வேற பாப்பாங்களாம். சிபாரிசு பண்றவங்களோட ஒத்த ஜாதியா இருந்தா இன்னும் சுலபமாம். என்ன கொடுமைடா இது???
ஆக மொத்தம் படிப்புக்கும் திறமைக்கும் அனுபவத்துக்கும் இங்க மதிப்பே கிடையாது. அதிகமான பணமுள்ள பெட்டியை யார் முதலில் கொண்டு வராங்களோ அவங்களுக்குத் தான் எதிர்காலம்னு உருவாய்டுச்சு. நேர்மையான வழில தான் முன்னேறனும், லஞ்சம் தர மாட்டோம்னும் பிடிவாதமா இருந்தாலும் பெரும்பாலானவங்க பண்ற தப்பால சகஜமான விஷயமா இது மாறிடுச்சு. லஞ்சம் கொடுக்க இயலாத எத்தனையோ பேர் இன்னமும் வேலை கிடைக்காத இயலாமையால திண்டாடிகிட்டு இருக்கத்தான் செய்றாங்க. இவங்களுக்கு மத்த எல்லாரும் வச்சிருக்குற பேர் பிழைக்கத் தெரியாதவன்”. அதாவது காலத்துக்கு தகுந்தாப்ல மாறத்தெரியாதவனாம்.. லஞ்சம் குடுத்தாதான் எதுவும் கிடைக்கும்குற இந்தக் கேவலமான நிலைமை இருக்குறவரைக்கும் எவ்ளோ தான் மனுஷன் முன்னேறினாலும் கீழ்த்தரமான நிலைக்கு தான் தள்ளப்படுகிறான்.
.
.

Comments

//படிப்புக்கும் திறமைக்கும் அனுபவத்துக்கும் இங்க மதிப்பே கிடையாது.//

உண்மைதான் காசுக்குத்தான் மரியாதை...

சத்துணவு பணியாளர் வேலைக்கு சமீபத்தில் ஆள் போட்டாங்க அதுக்கும் பணம் தானாம்...
vinu said…
appuram oru doubttu post seriousaana materaa irrunthaa commentsum seriousaa podanumaaa
உங்களை மாதிரி ஒரு திறமையாளரை அரசாங்கம் இழந்துடுச்சி அப்படின்னு நினைச்சுக்க வேண்டியதுதான்..
40 வயசுக்கு மேல அரசாங்க வேலை அப்ளை பண்ண முடியாதே. நீங்க எப்படி?#டவுட்டு
////லஞ்சம் குடுத்தாதான் எதுவும் கிடைக்கும்குற இந்தக் கேவலமான நிலைமை இருக்குறவரைக்கும் எவ்ளோ தான் மனுஷன் முன்னேறினாலும் கீழ்த்தரமான நிலைக்கு தான் தள்ளப்படுகிறான்///

உண்மைதான்...

பகிர்வுக்கு நன்றிங்க மேடம் :)
ramalingam said…
ராமதாஸ் மாதிரி ஆட்கள் ஓபனாக ஜாதிக் கட்சிதான்னு சொல்றாங்க. அவங்களுக்கும் மரியாதை இருக்குதே. என்னவோ போங்க.
dharumi said…
ஒரு இளம் வயதினரின் கோபமும் ஆதங்கமும் பார்க்கும்போது என்றாவது இதற்கெல்லாம் முடிவு வரும் என்ற எண்ணம் மெல்ல எட்டிப் பார்க்கிறது.

ஆனாலும், வந்துள்ள சில பின்னூட்டங்களைப் பார்க்கும் போது அவர்களுக்கு உங்கள் வேதனை புரியாவிட்டாலும் ’அவர்களெல்லாம் ஏன் இப்படியெல்லாம் இருக்காங்க?’ அப்டின்ற எண்ணத்தைத் தருகின்றன.
Chitra said…
இவ்ளோ நாள், எக்ஸாம்ல செலக்ட் ஆகுறதுக்கு லஞ்சம் குடுத்துகிட்டிருந்தாங்க. இப்ப முன்கூட்டியே ஆள செலக்ட் பண்ணிட்டு சம்பிரதாயத்துக்காக எக்ஸாம் நடத்துறாங்க. நாடு ரொம்ப முன்னேறிடுச்சு.. லஞ்சம் வாங்கவோ குடுக்கவோ கூடாதுனு ஒரு பக்கம் கோஷங்கள் வந்தாலும் எல்லாரும் தனக்குனு வரும்போது சூழ்நிலைக் கைதியா மாறிட்றாங்க. எவன் லஞ்சம் குடுக்குறானோ அவனுக்கு வேலைங்குற கேவலமான கட்டத்த தாண்டி, எவன் அதிகமா லஞ்சம் குடுக்குறானோ அவனுக்குங்குற நிலைமை வந்தாச்சு.


....Incredible India! :-(
//40 வயசுக்கு மேல அரசாங்க வேலை அப்ளை பண்ண முடியாதே. நீங்க எப்படி?#டவுட்டு//

வன்மையாக கண்டிக்கிறேன்.!! இந்திராவின் அனுபவத்தை குறைத்து கூறியமைக்கு..
//படிப்புக்கும் திறமைக்கும் அனுபவத்துக்கும் இங்க மதிப்பே கிடையாது.//

உண்மைதான்.
sulthanonline said…
//லஞ்சம் கொடுக்க இயலாத எத்தனையோ பேர் இன்னமும் வேலை கிடைக்காத இயலாமையால திண்டாடிகிட்டு இருக்கத்தான் செய்றாங்க. இவங்களுக்கு மத்த எல்லாரும் வச்சிருக்குற பேர் ”பிழைக்கத் தெரியாதவன்”.//

//படிப்புக்கும் திறமைக்கும் அனுபவத்துக்கும் இங்க மதிப்பே கிடையாது.//


நீங்க சொல்வது சரிதான் தோழி . எவன் எக்கேடு கெட்டு போனால் என்ன தனக்கு பணம் வந்தால் சரிதான்னு அரசாங்க உயர் அதிகாரிங்க இருக்கானுங்க . தன் வயிறு நிறைந்தால் போதும் அடுத்தவனுடைய வயிற்றெரிச்சலைப் பற்றி கவலைப்படாதவர்கள்.பொதுத்துறையிலிருந்துகொண்டு சுயநலமாக செயல்படுபவர்கள்.
siva said…
40 வயசுக்கு மேல அரசாங்க வேலை அப்ளை பண்ண முடியாதே. நீங்க எப்படி?#டவுட்டு//

good doubt..
siva said…
மாதிரி ஒரு திறமையாளரை அரசாங்கம் இழந்துடுச்சி அப்படின்னு நினைச்சுக்க வேண்டியது///

yes sir..you are right.
:(

இதை விட நல்ல வேலை கிடைக்கும் பாருங்க.
இப்பவே இப்பிடீன்னா 10 வருசம் போக எப்படியிருக்கும்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன
logu.. said…
\\ கவிதை காதலன் said...
உங்களை மாதிரி ஒரு திறமையாளரை அரசாங்கம் இழந்துடுச்சி அப்படின்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.\\


Vanmaiyaga kandikkiren...

( Yaro ungala tube liggtunu sonna mathiri oru feeeelinngu,, hihi..)
logu.. said…
லஞ்சம் = Miga mosamana seyal.

Vangravanaium savadikanum..
kodukuravanaium saavadikanum.
அன்னு said…
சுப்ரீம் கோர்ட்டே லஞ்சம் தந்து காரியம் சாதிச்சுக்குங்கன்னு சொன்னப்புறம் வேறென்ன செய்ய முடியும். ரமணாக்களை படத்தில் மட்டும்தான் பார்க்க முடியும் :(
//படிப்புக்கும் திறமைக்கும் அனுபவத்துக்கும் இங்க மதிப்பே கிடையாது.//

Yes... Correct.
R.Gopi said…
நார்மலா எம்ப்ளாயிண்ட்மெண்ட் ஆஃபீஸ்ல பதிவு செஞ்சு வச்சு இருந்தா, 60 வயசுக்கு குறைந்து கால் லெட்டரே வராது..

தப்பித்தவறி உங்களுக்கு கால் லெட்டர் வந்தது.. அதுக்கே சந்தோஷப்படணும் போல இருக்கு...

படிப்புக்கும், திறமைக்கும், அனுபவத்திற்கும் கண்டிப்பாக இங்கு மதிப்பே கிடையாது... உண்மை..
//சங்கவி said...

உண்மைதான் காசுக்குத்தான் மரியாதை...

சத்துணவு பணியாளர் வேலைக்கு சமீபத்தில் ஆள் போட்டாங்க அதுக்கும் பணம் தானாம்...//


இந்தக் கேவலமான நிலை என்னைக்குத் தான் மாறுமோ தெரில..
வருகைக்கு நன்றி நண்பரே.
//கவிதை காதலன் said...

உங்களை மாதிரி ஒரு திறமையாளரை அரசாங்கம் இழந்துடுச்சி அப்படின்னு நினைச்சுக்க வேண்டியதுதான்...//


நன்றிங்க..
ஆமா.. என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே...
//vinu said...

appuram oru doubttu post seriousaana materaa irrunthaa commentsum seriousaa podanumaaa//


இல்லைன்னாலும் நீங்க சீரியசா பின்னூட்டம் போட்ருவீங்களாக்கும்... எப்பவும் போல உங்க பணி தொடரட்டுமுங்க..
//மாணவன் said...

உண்மைதான்...

பகிர்வுக்கு நன்றிங்க மேடம் :)//


வருகைக்கு நன்றிங்க..
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

40 வயசுக்கு மேல அரசாங்க வேலை அப்ளை பண்ண முடியாதே. நீங்க எப்படி?#டவுட்டு//


நீங்க பென்சன் தொகை வாங்கப் போன இடத்துல இந்த விசயத்த சொன்னாங்களா??? ஓகே ஓகே..
//தருமி said...

ஒரு இளம் வயதினரின் கோபமும் ஆதங்கமும் பார்க்கும்போது என்றாவது இதற்கெல்லாம் முடிவு வரும் என்ற எண்ணம் மெல்ல எட்டிப் பார்க்கிறது.

ஆனாலும், வந்துள்ள சில பின்னூட்டங்களைப் பார்க்கும் போது அவர்களுக்கு உங்கள் வேதனை புரியாவிட்டாலும் ’அவர்களெல்லாம் ஏன் இப்படியெல்லாம் இருக்காங்க?’ அப்டின்ற எண்ணத்தைத் தருகின்றன.//


உண்மை தான்..
கருத்துக்கு நன்றிங்க.
//ramalingam said...

ராமதாஸ் மாதிரி ஆட்கள் ஓபனாக ஜாதிக் கட்சிதான்னு சொல்றாங்க. அவங்களுக்கும் மரியாதை இருக்குதே. என்னவோ போங்க.//


வருகைக்கு நன்றிங்க..
//Chitra said...

....Incredible India! :-(//


வருந்தத்தக்க நிலைமை தான் சித்ரா..
வருகைக்கு நன்றி.
//ஆயிஷா said...

//படிப்புக்கும் திறமைக்கும் அனுபவத்துக்கும் இங்க மதிப்பே கிடையாது.//

உண்மைதான்.//


நன்றிங்க..
//தம்பி கூர்மதியன் said...

//40 வயசுக்கு மேல அரசாங்க வேலை அப்ளை பண்ண முடியாதே. நீங்க எப்படி?#டவுட்டு//

வன்மையாக கண்டிக்கிறேன்.!! இந்திராவின் அனுபவத்தை குறைத்து கூறியமைக்கு..//


ஓ.. நீங்களும் கூட்டு சேந்துட்டீங்களா??? ம்ம் நடத்துங்க..
//sulthanonline said...


நீங்க சொல்வது சரிதான் தோழி . எவன் எக்கேடு கெட்டு போனால் என்ன தனக்கு பணம் வந்தால் சரிதான்னு அரசாங்க உயர் அதிகாரிங்க இருக்கானுங்க . தன் வயிறு நிறைந்தால் போதும் அடுத்தவனுடைய வயிற்றெரிச்சலைப் பற்றி கவலைப்படாதவர்கள்.பொதுத்துறையிலிருந்துகொண்டு சுயநலமாக செயல்படுபவர்கள்.//


உண்மை தான் நண்பரே..
இந்தக் கொடுமை என்று மாறுமோ..
//☀நான் ஆதவன்☀ said...

:(

இதை விட நல்ல வேலை கிடைக்கும் பாருங்க.//


நன்றி ஆதவன்..
கருத்துக்கும் வருகைக்கும்..
//siva said...

மாதிரி ஒரு திறமையாளரை அரசாங்கம் இழந்துடுச்சி அப்படின்னு நினைச்சுக்க வேண்டியது///

yes sir..you are right.//


வருகைக்கு நன்றி சிவா
//ம.தி.சுதா said...

இப்பவே இப்பிடீன்னா 10 வருசம் போக எப்படியிருக்கும்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா//


வேறென்ன ஆகும்???? இப்ப இரண்டு மடங்கா இருக்குற தொகை பத்து மடங்காகும்..
ஆக மொத்தம் நம்ம பாடு திண்டாட்டம் தான்.
//logu.. said...

லஞ்சம் = Miga mosamana seyal.

Vangravanaium savadikanum..
kodukuravanaium saavadikanum.//


உங்க கோவம் புரியுது..
வருகைக்கு நன்றிங்க..
//logu.. said...

\\ கவிதை காதலன் said...
உங்களை மாதிரி ஒரு திறமையாளரை அரசாங்கம் இழந்துடுச்சி அப்படின்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.\\


Vanmaiyaga kandikkiren...

( Yaro ungala tube liggtunu sonna mathiri oru feeeelinngu,, hihi..)//


இதே டவுட்டு தான் எனக்கும்..
//சே.குமார் said...

//படிப்புக்கும் திறமைக்கும் அனுபவத்துக்கும் இங்க மதிப்பே கிடையாது.//

Yes... Correct.//


நன்றிங்க..
//அன்னு said...

சுப்ரீம் கோர்ட்டே லஞ்சம் தந்து காரியம் சாதிச்சுக்குங்கன்னு சொன்னப்புறம் வேறென்ன செய்ய முடியும். ரமணாக்களை படத்தில் மட்டும்தான் பார்க்க முடியும் :(//


உண்மை தான் அன்னு..
கருத்துக்கு நன்றி.
//R.Gopi said...

நார்மலா எம்ப்ளாயிண்ட்மெண்ட் ஆஃபீஸ்ல பதிவு செஞ்சு வச்சு இருந்தா, 60 வயசுக்கு குறைந்து கால் லெட்டரே வராது..

தப்பித்தவறி உங்களுக்கு கால் லெட்டர் வந்தது.. அதுக்கே சந்தோஷப்படணும் போல இருக்கு...

படிப்புக்கும், திறமைக்கும், அனுபவத்திற்கும் கண்டிப்பாக இங்கு மதிப்பே கிடையாது... உண்மை..//


உண்மை தான். இப்ப இருக்குற இளைஞர்கள்கிட்ட எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேன்ஜ்ல பதிஞ்சு வையுங்கனு சொன்னாலே ஏதோ இளக்காரமா பாக்குறாங்க.. என்னத்த சொல்ல.. நிலைமை அப்படி ஆகிவிட்டதே..
இந்திரா said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

40 வயசுக்கு மேல அரசாங்க வேலை அப்ளை பண்ண முடியாதே. நீங்க எப்படி?#டவுட்டு//


நீங்க பென்சன் தொகை வாங்கப் போன இடத்துல இந்த விசயத்த சொன்னாங்களா??? ஓகே ஓகே..
//

ஆமா எங்க அப்பாவோட பென்சன் பணம் வாங்க போனேன்
இந்திரா.. இதுக்கு ஒரே தீர்வு.. இளைஞர்கள் அரசாங்க வேலையை துச்சமா எண்ணி பிஸ்னெஸ்ல இறங்கரதுதான். உங்க அனுபவம் அதிர்ச்சியா இருக்கு.
//எவன் லஞ்சம் குடுக்குறானோ அவனுக்கு வேலைங்குற கேவலமான கட்டத்த தாண்டி, எவன் அதிகமா லஞ்சம் குடுக்குறானோ அவனுக்குங்குற நிலைமை வந்தாச்சு.
//

உண்மை.. லஞ்சம் கொடுத்து வேலையை வாங்குவோர்கள்தான் ஊழலின் வித்து.

தான் கொடுத்ததனால் தன்னிடம் வருவோரிடம் பணிசெய்து கொடுக்க மிகுந்த உரிமையுடன் லஞ்சம் பெருகின்றனர்.

இது ஒரு கீழ்த்தரமான செயல் என்பது இவர்களுக்கு தோண்றுவதே இல்லை. என்ன செய்ய..
//சி.பி.செந்தில்குமார் said...

இந்திரா.. இதுக்கு ஒரே தீர்வு.. இளைஞர்கள் அரசாங்க வேலையை துச்சமா எண்ணி பிஸ்னெஸ்ல இறங்கரதுதான். உங்க அனுபவம் அதிர்ச்சியா இருக்கு.//


கருத்துக்கு நன்றி செந்தில்குமார்
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்திரா said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

40 வயசுக்கு மேல அரசாங்க வேலை அப்ளை பண்ண முடியாதே. நீங்க எப்படி?#டவுட்டு//


நீங்க பென்சன் தொகை வாங்கப் போன இடத்துல இந்த விசயத்த சொன்னாங்களா??? ஓகே ஓகே..
//

ஆமா எங்க அப்பாவோட பென்சன் பணம் வாங்க போனேன்//


அதுனால தான் உங்கப்பா, பணத்த காணோம்னு தேடிகிட்டு இருந்தாரா???
//வெட்டிப்பேச்சு said...

உண்மை.. லஞ்சம் கொடுத்து வேலையை வாங்குவோர்கள்தான் ஊழலின் வித்து.

தான் கொடுத்ததனால் தன்னிடம் வருவோரிடம் பணிசெய்து கொடுக்க மிகுந்த உரிமையுடன் லஞ்சம் பெருகின்றனர்.

இது ஒரு கீழ்த்தரமான செயல் என்பது இவர்களுக்கு தோண்றுவதே இல்லை. என்ன செய்ய..//


வாங்குறவன கேள்வி கேட்டா குடுக்குறவன சொல்றாங்க.. குடுக்குறவன கேள்வி கேட்டா வாங்குறவன சொல்றாங்க..
ஆக மொத்தம் தன்னைத் திருத்திக்கொள்ள யாரும் முயற்சிப்பதே இல்லை.
என்ன செய்ய??? சுயநலவாதிகள் அதிகரித்துவிட்ட காலமிது.
லஞ்சம் கொடுக்க முன்வரும் சிலரால் தான் பலர் பாதிக்கப்படுகிறார்கள், பொதுவாழ்வில் எல்லாரும் சில விசயங்களில் சமரசம் செய்து கொள்கிறோம்!

நாம பண்றப்ப அதெல்லாம் தப்பா தெரியிறதில்ல, ப்ளாக்குல டிக்கெட், திருட்டு விசிடி என பல விசயங்கள், இதெல்லாம் சின்ன விசயம் தானே எனும் நண்பர்களுக்கு!

”அஞ்சு கோடி பேர், அஞ்சு கோடி தடவை அஞ்சு பைசா திருடினா தப்பா” என்ற வசனத்தை நியாபகபடுத்துறேன், கொடுக்க/வாங்க மாட்டேன் வரதட்சணை என பல இளைஞர்/ஞிகள் முன் வந்ததை போல், கொடுக்க மாட்டேன் லஞ்சம் என்பதும் முக்கியமாக்கப்பட வேண்டும்!
உண்மையச் சொன்னா... கோபம் வரும் இந்திரா...!

முதலில் நான் யோக்கியனாய் இருக்கிறோமா? என்று எண்ணுவது மட்டுமல்ல...!
நான் யோக்கியனாய் இருந்தால் தான்...
உங்களை கேள்வி கேட்க முடியும்...!

நானே யோக்கியனாய் இல்லையே...?
suryajeeva said…
இங்கு யார் லஞ்சம் கொடுக்காமல் இருக்கிறார்கள்,
நிலம் வாங்குவது,
வீடு கட்டுவது,
வண்டி வாங்குவது,
வண்டி ஓட்ட உரிமம் வாங்குவது,
குழந்தை பிறந்தவுடன் ஆயாவுக்கு,
பிறப்பு சான்றிதழ் வாங்க
ஓட்டு போட,
லஞ்சம் கொடுக்காமல் வாழ்க்கை நடத்துபவர்களுக்கு
தலை வணங்குகிறேன்..
மற்றவர்கள் லஞ்சம் பற்றி பேசக் கூட யோக்கிதை இல்லை...

Popular posts from this blog

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..