நின்னைச் சரணடைந்தேன் (3)




நின்னைச் சரணடைந்தேன் (1) படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
நின்னைச் சரணடைந்தேன் (2) படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
“இந்த கல்யாணத்துக்கு நீ வரமாட்டேனு நெனச்சேன் காயத்ரி. அந்த அளவுக்கு என் மேல உனக்குக் கோவமிருக்கலாம். என்ன மன்னச்சிடு. ஆனா என்னோட சூழ்நிலையையும் நீ புரிஞ்சுக்குவனு நம்புறேன்ரமேஷின் குரல் தெளிவாய்க் கேட்டது சித்தார்த்துக்கு. மெல்லிய குழப்பம் அவனை சூழ்ந்து கொள்ள, தொடர்ந்து வந்த காயத்ரியின் குரலைக் கேட்க ஆயத்தமானான்.
“இதுல கோவப்பட்றதுக்கு ஒன்னுமேயில்ல ரமேஷ். சின்ன வயசுலருந்தே, பெரியவங்க பேசி வச்சதுனால உங்கள என் மனசுல நெனச்சிருந்தது வாஸ்தவம் தான். ஆனா அது உங்கள பாதிக்கலைங்கும்போது உங்க மேல கோவப்பட என்ன இருக்கு? இதுல உங்களுக்கு எந்தவித குற்ற உணர்ச்சியும் வேண்டாம் காயத்ரியின் சலனமில்லாத பதில் சித்தார்த்தைக் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
அப்படியானால்.... காயத்ரி ரமேஷை காதலித்தாளா??
அதிர்ச்சியாய் நின்றவனின் காதுகளில் விழுந்தது.. மீதமான உரையாடல்..
“நிஜமா தான் சொல்றியா காயத்ரி?? உனக்கு இந்த கல்யாணத்துல எந்த வருத்தமும் இல்லையே? இல்ல எனக்காக பொய் சொல்றியா? உன்கிட்ட, காதல்... கல்யாணம் அப்டி இப்டினு இதுவரைக்கும் நா பேசினதே இல்ல.. எனக்கந்த எண்ணமும் உன் மேல இருந்ததில்ல. அதுனால தான் நீ அன்னைக்கு என்கிட்ட வந்து உன் காதல சொன்னப்ப கூட என்னால ஏத்துக்க முடில. ஆனா ப்ளீஸ் காயத்ரி உனக்கு என்மேல கோபம் இருந்தா ஆசை தீர என்னைத் திட்டிரு“ குனிந்த தலையுடன் ரமேஷ் சொல்வதை வெளியிலிருந்து அமைதியாய் சித்தார்த் கேட்டுக்கொண்டிருந்தான்.
ஏனோ அவனது இதயம் அவனுக்கே பாரமாகத் தோன்றியது. சாஹித்யாவை நினைத்து, தான் அடைந்த வேதனைகள், ரமேஷை நினைத்து காயத்ரிக்கும் தோன்றியிருக்குமா?? அப்படியெனில் இந்த நிமிடம் என்னைப் போல அவளும் தவித்துக்கொண்டிருக்கிறாளா?? கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக அவனைக் குழப்பியபடியிருக்க காயத்ரி பேச ஆரம்பித்தாள்.
“இதோ பாருங்க ரமேஷ்.. பெரியவங்க சின்ன வயசுலயே பேசி வச்சிருந்ததால உங்கள மனசுல நெனச்சிருந்தேன். ஒருதலையா காதலிச்சுமிருக்கலாம். ஆனா, எப்ப என்னோட காதல் உங்களுக்குப் புரியலையோ, ஏத்துக்க மறுத்திட்டீங்களோ.. அப்பவே உங்க மேலயிருந்த காதல் முடிஞ்சுபோச்சு. உங்களுக்கு என்னைப் பிடிக்கலைங்குறதுக்காக, அந்தக் காதல் கேவலமானதுனு சொல்ல முடியாது. அதுக்காக வாழ்க்கை முழுசும் உங்களையே நெனச்சுகிட்டு அழுது புலம்பிகிட்டு இருக்குறது நியாயமில்ல. என்னோட காதல் உண்மையானது, அதை நீங்க ஏத்துக்ல.. சொல்லப்போனா என்னோட தூய்மையான காதலயும், என்ன மாதிரியான ஒரு மனைவியையும் நீங்க இழந்துட்டீங்கனு தான் சொல்லனும். அதுக்காக நா உங்கமேல பரிதாபப்பட்றேன். சுருக்கமா சொல்லப்போனா என்னோட காதலைப் புரிஞ்சுக்காம அலட்சியப்படுத்துன யாரோ ஒருத்தருக்காக நா எதுக்காக கவலைப்படணும்?? அந்த கண்களப் பாக்குறதுக்கு நா எதுக்கு வெட்கப்படணும்?? மறைஞ்சு ஓடி ஒழியிற அளவுக்கு என்மேல என்ன தப்பு இருக்கு?? இப்ப எனக்குக் கல்யாணமாய்டுச்சு. கட்டாயம் என்னப்பத்தி முழுமையா அவரும் தெரிஞ்சுக்குவாரு. என் ஒட்டுமொத்தக் காதலையும் அனுபவிக்க, எனக்குனு ஒருத்தர் இருக்காருனு நெனைக்கும்போது அதை விட சந்தோசம் வேறெதுவும் இல்ல. உங்க மேல எனக்கெந்த கோபமும் இல்ல. அதுனால எந்தவிதமான உறுத்தலுமில்லாம நீங்க சந்தோசமா இருக்கலாம்“ என்றவள் “சரி நாங்க கிளம்புறோம், அவர் எனக்காக காத்துகிட்டிருப்பாரு...“ மெல்லிய புன்னகையுடன் சொல்லிவிட்டு விருட்டென வெளியேறினாள்.
சாட்டையடியாய் அவளுடைய வார்த்தைகள்... நிதானமான பக்குவமான அவளுடைய முடிவு.... ஒவ்வொரு வார்த்தைகளும் தனக்காகவே செதுக்கப்பட்டிருந்தது போல உணர்ந்தான் சித்தார்த்...
வெளியே, அறையை விட்டுக் கொஞ்சம் தள்ளி நின்ற கணவனிடம் “என்னங்க நேரமாய்டுச்சு கிளம்பலாமா?” என்ற காயத்ரியை முதன் முறையாகக் காதலுடன் பார்த்தான் சித்தார்த். சாஹித்யா மெல்ல மெல்ல அவன் நினைவுகளிலிருந்து மறைந்துகொண்டிருந்தாள்.
(முற்றும்)
.
.

Comments

முதல் மழை என்னை நனைத்ததே
கவித்துவமான டைட்டில்
>>>மறைஞ்சு ஓடி ஒழியிற அளவுக்கு என்மேல என்ன தப்பு இருக்கு??

ஒளியும் அளவு
Balaji saravana said…
மூன்று பகுதியில ஒரு மென்மையான, நல் உணர்வுள்ள, காதலின் புரிதலை அழகான நடையில் எழுதிட்டீங்க இந்திரா! வெல்டன்! :)
S Maharajan said…
அருமையாக முடித்து உள்ளீர்கள்
R.Gopi said…
ஆஹா...

மென்மையான காதலை அழகாக சொல்லி முடித்து இருக்கிறீர்கள்...

நல்ல முடிவு....
vinu said…
me presenttu..........


aang appuram story! story? oooo storyyaaa


athuvum nallaa irruku....
//சி.பி.செந்தில்குமார் said...

முதல் மழை என்னை நனைத்ததே//


பாட்டு நல்லா இருக்கு செந்தில் சார்.. முதல் மழைய பிடிச்சிட்டீங்க..
//சி.பி.செந்தில்குமார் said...

>>>மறைஞ்சு ஓடி ஒழியிற அளவுக்கு என்மேல என்ன தப்பு இருக்கு??

ஒளியும் அளவு//


ஓகேங்க..
//Balaji saravana said...

மூன்று பகுதியில ஒரு மென்மையான, நல் உணர்வுள்ள, காதலின் புரிதலை அழகான நடையில் எழுதிட்டீங்க இந்திரா! வெல்டன்! :)//


கருத்துக்கு நன்றி பாலாஜி...
தொடர்ந்து வாங்க..
//சி.பி.செந்தில்குமார் said...

கவித்துவமான டைட்டில்//


நன்றிங்க..
//S Maharajan said...

அருமையாக முடித்து உள்ளீர்கள்//


கருத்துக்க நன்றி மஹாராஜன்..
//vinu said...

me presenttu..........


aang appuram story! story? oooo storyyaaa


athuvum nallaa irruku....//


படிச்சீங்களா இல்லையா???
சரி சரி அட்டெண்டன்ஸ் போட்டுக்குறேன். போய்ட்டு வாங்க.
//R.Gopi said...

ஆஹா...

மென்மையான காதலை அழகாக சொல்லி முடித்து இருக்கிறீர்கள்...

நல்ல முடிவு....//


வாங்க கோபி..
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
காதலின் உணர்வுகளை அழகாக பதிவு செய்து சிறப்பாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள் :)
கதை மிக தெளிவான கவிதையா நகர்கிறது.... பாராட்டுக்கள்.
vinu said…
இந்திரா said...


படிச்சீங்களா இல்லையா???
சரி சரி அட்டெண்டன்ஸ் போட்டுக்குறேன். போய்ட்டு வாங்க.


athuthaan nallaa irrukunnu pottu irrukkomulley appuram enna padicheengalaanu oru kealviyum....

he he he he he chumma oru doubbttu........
//சாஹித்யா மெல்ல மெல்ல//

எனக்கெல்லாம் அப்பவே மறைஞ்சுட்டா. சே, சான்ஸே இல்ல,
தொடர்ந்து படிக்க வச்சிட்டீங்க.
இந்தச் சரணடைதல் தோல்வி இல்லை, வாழ்வின் வெற்றிக்கு ஆரம்பம்!
சூப்பர்!
Chitra said…
வெளியே, அறையை விட்டுக் கொஞ்சம் தள்ளி நின்ற கணவனிடம் “என்னங்க நேரமாய்டுச்சு கிளம்பலாமா?” என்ற காயத்ரியை முதன் முறையாகக் காதலுடன் பார்த்தான் சித்தார்த்.


...very sweet ending!
vinu said…
indira said
ஏதோ சொல்ல வறீங்க.. என்னனு
தான் புரியல.. ம்ம்ம்


athu ennannaaa; naanea ingea oru aalu koooda kidaikkalyeannu kavalyla irrukean......

ithula intha storyla ennanna...

oruththarukku rendu perum aalu kidaichchum athai ignore pannittaangalaaam....

appuram avanga rendu perukkum kalyaanam panna vera thaniyaa oru aalu kidaichchuthaaam....

orea vayatherichchalaaa irruku....

ithu thaan anth rendu kodumai jingu chaanu guthichchaa mater


[disky : he he he he he ingittu post pannurathukkup pathilaa,
maaththi angittu post pannitean]
ஹேமா said…
காதலில் உணரும் வலி,சந்தோஷம் எல்லாமே சொன்ன விதமும் கதையை நகர்த்திய வடிவமும் இயல்பாயிருக்கு இந்திரா.எத்தனை காயத்ரிக்கள் இப்படி !
இன்றுதான் படிக்க முடிந்தது மூன்று பதிவுகளையும்...

மிகவும் சுவாரஸ்யமாக நல்ல நகர்த்தி கொண்டுபோய் இருக்கிங்க...

வாழ்த்துகள்....

நின்னைச் சரணடைந்தேன்....
நல்லா இருக்கு.. ஆனா நீங்க தொடரா ஆரம்பிச்சத பாத்தா எதோ பல பகுதிகள் போகும்னு நெனச்சேன்..
கருத்துக்களுக்கும் வருகைக்கும் நண்பர்களுக்கு நன்றிகள்..
FunScribbler said…
sweeeeeeeeeeet and nice!!! i love the flow of the story! keep writing more!!!!!!

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

மரணவலி தரும் உன் மௌனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்