உங்கள் காதலிக்குப் பிடித்தமானவராக நடந்துகொள்ள சில டிப்ஸ்..
நீங்கள் காதலித்துக்கொண்டிருப்பவராக இருந்தால் உங்கள் காதலிக்குப் பிடித்தமானவராக நடந்துகொள்ள இதோ சில ஆலோசனைகள்.. (அபத்தமானதாக இருந்தாலும் சகித்துக்கொள்ளுங்கள்).
- அடிக்கடி அவர்களிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள்.
- அவர்களை ஏதாவது ஒரு செல்லப்பெயர் வைத்து அழையுங்கள்
- இந்த டிரெஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்கு, நீ சிரிக்கிறது அழகாயிருக்கு, உனக்கிந்த ஹேர் ஸ்டைல் நல்லாயிருக்குனு பாக்கும்போதெல்லாம் எதையாவது சொல்லனும்
- அவங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு பாடலை ரிங்டோனா வச்சுக்கங்க.
- அடிக்கடி SMS பண்ணுங்க. குறிப்பா காலையில் எழுந்தவுடனேயும் தூங்கும் முன்னும் மறக்காம அனுப்புங்க.. (அதாவது உங்கள் நாளின் ஆரம்பமும் முடிவும் அவர்களுடன் தான் என்பதை உணர்த்துங்கள்)
- கேட்ட கேள்விக்கு மட்டுமோ அல்லது வெறும் ‘K’ (OK) என்று ஒற்றை வார்த்தையிலோ ரிப்ளை செய்தால் அவர்கள் கோபமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
- போன் பேசும்போது சண்டை வந்தால் எக்காரணம் கொண்டும் நீங்களா கட் பண்ண கூடாது.. (அத அவங்க செய்யலாம்)
- அவங்க கேக்கலனாலும் அப்பப்போ அவங்க போனுக்கு டாப்அப் பண்ணி விடுங்க.
- ஏதாவது ஒரு டாபிக் அவர்களுக்கு பிடிக்கலனா அதுபற்றி பேசாதீங்க.
- கருத்துவேறுபாடு வந்து பேசாம இருந்தாங்கனா 'மிஸ் யூ' மெசெஜா வரிசையா அனுப்புங்க. அவங்க கோபத்தை குறைக்கும்.
- நீங்க சாப்பிட்றீங்களோ இல்லையோ, எவ்ளோ வேலை இருந்தாலும் 3 வேளையும் கரெக்ட்டா போன் (இல்லனா மெசெஜ்) பண்ணி சாப்டியா?னு அவங்கள கேளுங்க.
- அவங்களோட பிறந்தநாள், முதல் சந்திப்பு இப்படி முக்யமான நாளையெல்லாம் ஞாபகம் வச்சு சர்ப்ரைஸா கிப்ட் கொடுத்து அசத்துங்க. (அவங்களுக்கு ஞாபகத்துல இருந்தாலும் உங்களுக்கு நினைவிருக்கானு டெஸ்ட் பண்ணுவாங்க.. அதுனால ஜாக்கிரதை)
- அவங்க எங்கயாவது வெளில போனாங்கனா அவங்களுக்கு முன்னாடி அங்க போய் நில்லுங்க.. உன்ன பாக்கணும்போல இருந்தது, அதான் வந்தேனு சொல்லுங்க.
- எந்த சூழ்நிலையா இருந்தாலும் பாக்கவே முடியலைனாலும் தினமும் தூங்குறதுக்கு முன்னாடி ஒரு மணிநேரமாவது அவங்க கிட்ட மனசு விட்டுப் பேசுங்க.
- சண்டை வந்ததுனா ஆண்கள் தான் இறங்கி வந்து தங்கள சமாதானப்படுத்தணும்னு பொண்ணுங்க நெனப்பாங்க..
- ரொமான்ஸா பேசுறோம்னு கண்டபடி எதையாவது உளறி, வளிஞ்சு சொதப்பிடாதீங்க.. டீசன்ட்டா அப்ரோச் பண்ணுங்க.
- பொதுவா பெண்கள் கோபத்தையோ பிடிக்காததையோ வெளிப்படையா சொல்லமாட்டாங்க. ஆண்கள் தானாக புரிந்துகொள்ளனும்னு நெனப்பாங்க. அதுனால எதுனாலும் அவங்கள கலந்துகிட்டு முடிவெடுங்க.
- அவர்களது தோழிகளிடம் பேசும்போது அளவோடு பேசுங்கள். இதுவே பெரும்பாலான சண்டைக்கு வழிவகுக்கும். கவனம் தேவை..
- இன்டர்நெட்டிலோ மொபைலிலோ சாட் பண்ணும்போது வேறு புதிய பெண் அறிமுகமானால் கவனமாகப் பேசுங்கள். அது உங்கள் காதலியாகவே கூட இருக்கலாம். உங்களை சோதிக்கும் முயற்சியாக இருக்கும்.
- அவர்களுக்கு ஏதாவது தனித் திறமையிருந்தால் (உங்களுக்குப் பிடிக்கலனாலும்) அதனைப் பாராட்டுங்கள்.
- ஏற்கனவே தெரிந்த விசயமானாலும் 'அதுதான் எனக்குத் தெரியுமே'னு அசட்டை செய்யாதீர்கள். ஆர்வமாய் அவர்கள் பேச்சை கேளுங்க.
- அவர்களிடம் பேசும்போது அதிகாரமோ அட்வைஸோ செய்து அறுக்காமல் கொஞ்சலும் கெஞ்சலுமாகப் பேசுங்கள்.
- எங்காவது வெளியூர் சென்றுவந்தால் எல்லாருக்கும் வாங்குவதுபோல பத்தோடு பதினொன்றாக இல்லாமல் அவர்களுக்கென ஸ்பெஷலாக ஏதாவது பரிசு வாங்கிவந்து கொடுங்கள்.
- உனக்காக நானிருக்கிறேன் என்றும், நீயில்லாமல் என்னால் இருக்க முடியாது என்றும் அவர்களது உள்ளங்கை பிடித்து அடிக்கடி நம்பிக்கையுடன் சொல்லுங்கள்.
இதெல்லாம் செய்தாலும் அவங்க உங்கள புரிஞ்சுக்கலனா அதுக்கு நாம ஒண்ணும் பண்ண முடியாது, கடவுள் தான் உங்கள காப்பாத்தனும்.
.
Comments
அவர்களை ஏதாவது ஒரு செல்லப்பெயர் வைத்து அழையுங்கள்//////
நாம்பி ஜிம்மி-ன்னு செல்ல பெயர் வச்சி கூப்பிட்டேன் கோச்சிகிட்டாங்க ஏங்க...
idhu இது எந்த ஊர் நியாயம்?
அடேங்கப்பா. விழிப்புணர்வுப்பதிவுதான்
வாழ்த்துக்கள்
ரொம்பப்பேர் இது தெரியாம் இருக்காங்க..
இனிமே அவங்க தப்பிச்சுரலாமில்ல..
அவங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு பாடலை ரிங்டோனா வச்சுக்கங்க.
///////
நிறைய பாடல் பிடிச்சிருந்தா என்ன செய்வது...
போன் பேசும்போது சண்டை வந்தால் எக்காரணம் கொண்டும் நீங்களா கட் பண்ண கூடாது.
/////////
நாங்க எங்கங்க கட்பண்றோம்...
ஏதாவது ஒரு டாபிக் அவர்களுக்கு பிடிக்கலனா அதுபற்றி பேசாதீங்க.
/////
அதனாலதாங்க நிறைய பேர் வீட்டில் பேசுறதே இல்லை...
(அவங்களுக்கு ஞாபகத்துல இருந்தாலும் உங்களுக்கு நினைவிருக்கானு டெஸ்ட் பண்ணுவாங்க.. அதுனால ஜாக்கிரதை)
////////
கொஞ்சம் உஷாராதான் இருக்கனும்..
டெஸ்ட் வக்கிராங்களா டெஸ்ட்...
ரொமான்ஸா பேசுறோம்னு கண்டபடி எதையாவது உளறி, வளிஞ்சு சொதப்பிடாதீங்க.. டீசன்ட்டா அப்ரோச் பண்ணுங்க.
///////
என்ன பொழப்புடா இது...
இதெல்லாம் செய்தாலும் அவங்க உங்கள புரிஞ்சுக்கலனா அதுக்கு நாம ஒண்ணும் பண்ண முடியாது, கடவுள் தான் உங்கள காப்பாத்தனும்.
///////////
ஓ.. மை ... காட்....
அதான் ரீ எண்ட்ரி...
உண்மையில் ஒரு குடும்பத்தில் இந்த நடைமுறைகளை பின்பற்றினால் கண்டிப்பாக அந்த குடும்பம் மகிழ்ச்சியுடன் இருக்கும்...
அசத்தலான பதிவு...
கொசுரு செய்தி...
இதுக்கு நான் இன்னும் தயாராகவில்லை...
ரொம்பப்பேர் இது தெரியாம் இருக்காங்க..
..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... நல்ல வார்னிங்!
ம்ம்ம் பேசவே சந்தர்ப்பம் கிடைக்கல இதுல எங்க போய் அடிக்கடி ஐ லவ் யூ சொல்றது...
//அவர்களை ஏதாவது ஒரு செல்லப்பெயர் வைத்து அழையுங்கள்//
ம்ம் பேர் சொல்லியே அழைக்க முடியல இதுல எங்க போய் செல்லப்பெயர் சொல்லி அழைக்கிறது..
ஹலோ... நாங்க பொய் சொல்லமாட்டோம் ரொம்ப நல்லவங்கன்னு பேர் எடுத்திருக்கோம்
super ஐடியாங்க ஏற்கனவே டாப்பு கழுண்டு ஆப்பு விழுந்துட்ருக்கு... இதுல டாப் அப் வேறய்யா..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
கடைசியா உருப்புடியா ஒன்று சொன்னீங்க பாருங்க ... இங்க தாங்க நீங்க மறுபடியும் புத்திசாலின்னு நிருபிச்சுட்டீங்க...ஸ்ஸ்ப்பா முடியல
///////
அவர்களை ஏதாவது ஒரு செல்லப்பெயர் வைத்து அழையுங்கள்//////
நாம்பி ஜிம்மி-ன்னு செல்ல பெயர் வச்சி கூப்பிட்டேன் கோச்சிகிட்டாங்க ஏங்க...//
அவங்க கூப்பிட நெனச்ச பேரோ என்னவோ...
>>போன் பேசும்போது சண்டை வந்தால் எக்காரணம் கொண்டும் நீங்களா கட் பண்ண கூடாது.. (அத அவங்க செய்யலாம்)
idhu இது எந்த ஊர் நியாயம்?//
என்னவோ புதுசா கேக்குறீங்களே செந்தில் சார்..
காலங்காலமா இது தானே நடந்துகிட்டு இருக்கு???
இது ஒரு சூப்பர் ஹிட் பதிவு//
ஹிஹிஹி
நன்றிங்க..
சூப்பர்...//
நன்றிங்க..
மிகவும் பயன் உள்ள பதிவு
வாழ்த்துக்கள்//
பயனடஞ்சீங்களா???
அப்படினா நன்றி சிவா.
சகோ இந்த விஷயமெல்லாம் காலேஜ் டைம்ல தெரியாம போச்சே ஹூம் ஹூம்!..except computer matter!//
சரி விடுங்க.. இப்பயாவது தெரிஞ்சுச்சே..
ம்ம் கலக்குங்க..
அனுபவப்பதிவா?//
ஷ்ஷ்.. கம்பெனி சீக்ரெட்ட வெளில சொல்லப்படாது சதீஷ்..
காதலிக்கு பிடிக்கணும்ன்னா அப்போ பர்ச காலி பண்ணியாகணுமா........அவ்வ்வ்வ் ....என்ன கொடுமை சரவணா ..//
வேற வழி???
ரொம்ப தான் கொடுத்திருக்கீங்க டீட்டெய்லு... ஆணுக்கு பிடிச்சமாதிரி எப்புடி நடந்துக்கிறதுன்னு ஒரு கிளாஸ் எடுங்க மேடம்.. ஹி.. ஹி..//
இப்படியே போனா எனக்கு பிஎச்டி பட்டம் குடுத்துடுவீங்க போலயிருக்கே..
(அவ்வ்வ்வ்)
எல்லாம் நல்லாதான் இருக்கு.... நான் இப்போ காதலிக்கு எங்க போவேன்?//
அட.. நா டிப்ஸ் தான் குடுக்க முடியும்.. காதலி எல்லாம் நீங்க தான் தேடணும்.
(வேணும்னா காதலியை தேர்ந்தெடுப்பது எப்படினு ஆராய்ச்சி பண்ணி பதிவு போடலாம்.)
அடேடே..நல்ல டிப்ஸ்..
ரொம்பப்பேர் இது தெரியாம் இருக்காங்க..
இனிமே அவங்க தப்பிச்சுரலாமில்ல..//
ஏதோ என்னால முடிஞ்ச உதவி...
//நிறைய பாடல் பிடிச்சிருந்தா என்ன செய்வது...//
//நாங்க எங்கங்க கட்பண்றோம்...//
//அதனாலதாங்க நிறைய பேர் வீட்டில் பேசுறதே இல்லை...//
//கொஞ்சம் உஷாராதான் இருக்கனும்..//
//டெஸ்ட் வக்கிராங்களா டெஸ்ட்...//
//என்ன பொழப்புடா இது...//
//ஓ.. மை ... காட்....//
இப்படி கேள்வி கேட்டுகிட்டே இருந்தா உங்க காதலிகிட்டயிருந்து அடி வாங்காம இருக்குறது எப்படினு நா டிப்ஸ் குடுக்க வேண்டி வரும்.. பரவாயில்லையா???
முதல் கமாண்ட் போட்டஉடனே பவர் கட்..
அதான் ரீ எண்ட்ரி...கமாண்ட்ஸ் கொஞ்சம் தமாசுக்குங்க...
உண்மையில் ஒரு குடும்பத்தில் இந்த நடைமுறைகளை பின்பற்றினால் கண்டிப்பாக அந்த குடும்பம் மகிழ்ச்சியுடன் இருக்கும்...
அசத்தலான பதிவு...
கொசுரு செய்தி...
இதுக்கு நான் இன்னும் தயாராகவில்லை...//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சௌந்தர்..
அட...சூப்பரு டிப்ஸ்//
தாங்ஸ்ங்க..
அடேடே..நல்ல டிப்ஸ்..
ரொம்பப்பேர் இது தெரியாம் இருக்காங்க..//
ஹிஹி ஏதோ என்னா முடிஞ்ச உதவிங்க..
இதெல்லாம் செய்தாலும் அவங்க உங்கள புரிஞ்சுக்கலனா அதுக்கு நாம ஒண்ணும் பண்ண முடியாது, கடவுள் தான் உங்கள காப்பாத்தனும்.
..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... நல்ல வார்னிங்!//
வேற என்னத்தங்க சொல்றது???
பயபுள்ளைங்க தலையெழுத்து.
வருகைக்கு நன்றி சித்ரா.
அன்பின் இந்திரா - தங்களுடைய மின்னஞ்சல் முகவரி தர இயலும் ? நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா - மதுரை - 9840624293 cheenakay@gmail.com//
வருகைக்கு நன்றி சீனா சார்.
கட்டாயம் தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன்.
நட்புடன் இந்திரா.
//அடிக்கடி அவர்களிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள்.//
ம்ம்ம் பேசவே சந்தர்ப்பம் கிடைக்கல இதுல எங்க போய் அடிக்கடி ஐ லவ் யூ சொல்றது...
//அவர்களை ஏதாவது ஒரு செல்லப்பெயர் வைத்து அழையுங்கள்//
ம்ம் பேர் சொல்லியே அழைக்க முடியல இதுல எங்க போய் செல்லப்பெயர் சொல்லி அழைக்கிறது..//
ரொம்ப நொந்துபோயிருக்கீங்கனு புரியுது..
இன்னும் காதலை சொல்லவேயில்லையோ???
சீக்கிரம் சொல்லிடுங்க சார்.
ம்ம்ம் வாழ்த்துக்கள்.
//இந்த டிரெஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்கு, நீ சிரிக்கிறது அழகாயிருக்கு, உனக்கிந்த ஹேர் ஸ்டைல் நல்லாயிருக்குனு பாக்கும்போதெல்லாம் எதையாவது சொல்லனும்//
ஹலோ... நாங்க பொய் சொல்லமாட்டோம் ரொம்ப நல்லவங்கன்னு பேர் எடுத்திருக்கோம்//
அத அவங்க கிட்ட தான் கேக்கணும்..
:-)
//அவங்க கேக்கலனாலும் அப்பப்போ அவங்க போனுக்கு டாப்அப் பண்ணி விடுங்க.//
super ஐடியாங்க ஏற்கனவே டாப்பு கழுண்டு ஆப்பு விழுந்துட்ருக்கு... இதுல டாப் அப் வேறய்யா..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
ரைமிங் எல்லாம் நல்லா தான் இருக்கு..
ரொம்ம்ம்ப அனுபவப்பட்ருக்கீங்க போலயே..
//இதெல்லாம் செய்தாலும் அவங்க உங்கள புரிஞ்சுக்கலனா அதுக்கு நாம ஒண்ணும் பண்ண முடியாது, கடவுள் தான் உங்கள காப்பாத்தனும்.//
கடைசியா உருப்புடியா ஒன்று சொன்னீங்க பாருங்க ... இங்க தாங்க நீங்க மறுபடியும் புத்திசாலின்னு நிருபிச்சுட்டீங்க...ஸ்ஸ்ப்பா முடியல//
ரொம்ப புகழாதீங்க பாஸ்..
வருகைக்கு நன்றிங்க.
சீனா அய்யா கமெண்ட்டை பார்த்தா வலைச்சர ஆசிரியர் ஆகப்போறீங்கனு நினைக்கறேன், அட்வான்ஸ் வாழ்த்துக்கள்//
நீங்க வேற.. முதல்ல விஷயத்த தெரிஞ்சுக்கலாம்.
சின்ன வயசுல இருந்தே எனக்கு ஆசிரியர்னாலே பயம்..
ம்ம்ம் பார்க்கலாம்.
(ஒரு அனுபபூர்வ கருத்துக்கள் மாதிரி தெரிகிறதே )
தெரிந்துகொள்ளவேண்டிய பதிவு இது .என்னம்மா
ஐடியாக் கொடுக்குறாங்க பாருங்க!....அது எப்புடி
>>போன் பேசும்போது சண்டை வந்தால் எக்காரணம் கொண்டும் நீங்களா கட் பண்ண கூடாது.
நல்லா அனுபவிச்சு எழுதி இருக்குறாங்க அருமையான பகிர்வு .
வாழ்த்துக்கள் சகோதரி .நம்ம வீட்டுப்பக்கம் வந்துபாருங்க
நீதி தேவதை தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்குறாங்க .
உங்க கருத்தையும் தவறாமல் சொல்லீடுங்க.நன்றி பகிர்வுக்கு
please read my blog
www.suresh-tamilkavithai.blogspot.com