வயிற்றினுள் ஒரு இதயம்..
உருவானது உறுதியானதும்
துவங்கிவிட்டது..
உன்மீதான என் கற்பனைகள்.
உடலைக் கருவாக்கி, உதிரத்தை உணவாக்கி
உன்னை உலகிற்கும், உலகை உனக்கும்
அறிமுகப்படுத்தத் தயாராகிக் கொண்டிருந்தேன்.
உனது பேரிலிருந்து, பெரும் எதிர்காலம் வரை
விரிவடைந்தது எனது சிந்தனைகள்..
உன் ஒவ்வொரு அசைவினையும்
அனுபவிக்க ஆயத்தமானேன்..
உணவு முதல் உறக்கம் வரை
உனக்கேற்றதைப் பழகிக்கொண்டேன்.
உனக்கான பொருட்களை சேகரிப்பதே
என் முழு வேலையாகிப் போனது..
இனிய இசையும் எனது உரையாடல்களையும்
எப்போதும் உனக்குப் பரிசளித்தேன்.
கால்களின் வீக்கம் குறைய பார்லி காஞ்சி குடி
- பாட்டி சொன்னாள்
சூடு தணிக்க விளக்கெண்ணை தடவு
- அம்மா சொன்னாள்
குடல் சுற்றாமல் இருக்க உறங்கும் பயிற்சிகொள்
- அக்கா சொன்னாள்
குனிந்து நிமிர வீட்டுப்பணி செய்
- அத்தை சொன்னாள்
இவற்றோடு நடை பயிற்சியும் செய்
- தோழி சொன்னாள்
மாத்திரைகளை தவறாமல் சாப்பிடு
- இது மருத்துவர்.
அனைத்தும் செய்தேன் உன் ஜனனம் சுகப்பட..
குமட்டல்களும் மயக்கங்களும்
சகித்துக்கொண்டேன் - உன் வளர்ச்சிக்காக.
நிறைமாத வளையல்களின் ஓசை
உனக்குக் கேட்டது போலும்..
உன் பாதங்களை என்னால் உணர முடிந்தது.
இருந்த இடம் சலித்துவிட்டது போல..
நீ முண்டத் தொடங்கினாய்..
கொஞ்சம் கொஞ்சமாக
முதுகுத்தண்டில் ஆரம்பித்த வலி
உடல் நரம்புகளைத் தொற்றியது..
வலிகளைப் பொறுத்துக்கொண்டேன்..
அது உனக்கான வழி என்பதால்.
ஏனோ உனக்கும் எனக்கும் பெரும் போராட்டமே நடந்தது..
இருவருமே அவதிப்பட்டோம்..
உனது பிஞ்சுக் கன்னங்களில்
என் முதல் முத்தம் பதிவதற்கு ஏங்கியிருந்தேன்..
என்னதான் உன்னை வெளியே தள்ளினாலும்
எனக்கு மிஞ்சியது ஏமாற்றம்தான்.
முழுநாள் அவதிக்குப்பின்
என் காதில் விழுந்தது..
"பெரிய உசுரையாவது காப்பாத்துங்க டாக்டர்"
.
.
Comments
பாராட்டுகள்..
ப்ச்சு.. இப்படியும் மனிதர்களா?
என் காதில் விழுந்தது..//
வேதனையின் உச்சம்.
என் காதில் விழுந்தது..
"பெரிய உசுரையாவது காப்பாத்துங்க டாக்டர்"//
மிகவும் வேதனை.
மனதினை நெகிழ வைத்துவிட்டது கவிதை வரிகள்.
.
என் காதில் விழுந்தது..
"பெரிய உசுரையாவது காப்பாத்துங்க டாக்டர்"//
கடைசி வரி படித்ததும் ரொம்ப கஷ்டமாயிடுச்சி. மேலே சொன்ன அத்தனை வரிகளும் ஒரு தாயின் ஆசைகளை அப்படியே விவரிக்கிறது. இன்னும் அதை ஒரு கவிதையாக உணர முடியவில்லை. வாழ்த்துக்கள்.
நல்லதொரு கவிதை.
இருவருமே அவதிப்பட்டோம்..
உனது பிஞ்சுக் கன்னங்களில்
என் முதல் முத்தம் பதிவதற்கு ஏங்கியிருந்தேன்..
என்னதான் உன்னை வெளியே தள்ளினாலும்
எனக்கு மிஞ்சியது ஏமாற்றம்தான்./
arumaiyaana kavithai...
valiyaiththanthathu kadaisiyil...
எத்தனையோ கனவுகள், கறபனைகள், ஏக்கங்கள், ஆசைகள், வலிகள், வேதனைகள் எல்லாமே கருவின் முதல் குரல் கேட்கும் வரையிலும், கண்ணில் பிஞ்சு குழந்தையின் முகம் காணும் வரையிலும் இருக்ககூடும்...
அப்படி இல்லாமல் இப்படி நடக்கும் சில பெண்களின் வாழ்வியல் மன வேதனை, வலிகளை எல்லாம் வார்த்தைகளில் சொல்லி அடக்கிவிடமுடியாது...
மிகவும் அருமை தோழி உங்கள் படைப்பு....
நீ முண்டத் தொடங்கினாய்..//
ஒரு பெண் கவிஞரால் மட்டுமே இத்தகைய வரிகளை பிரசவிக்க முடியும்.
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
எண்ணம் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது.
வாழ்த்துக்கள்.
God Bless You.
முத்திரை பதிக்கும் முதல் நித்திரை
இறுதி வரிகள் மொத்தக்கவிதைக்குமான சோகச்செதுக்கல்//
கருத்துக்கு நன்றி செந்தில் சார்..
அட.. மனதை நெகிழச்செய்யும் கவிதை.. அருமை..
பாராட்டுகள்..//
நன்றி கருன்
முழுநாள் அவதிக்குப்பின்
என் காதில் விழுந்தது..//
வேதனையின் உச்சம்.//
கருத்துக்கு நன்றி
தாய்மையின் நெகிழ்ச்சி கலந்த வரிகள்...//
நன்றிங்க..
//முழுநாள் அவதிக்குப்பின்
என் காதில் விழுந்தது..
"பெரிய உசுரையாவது காப்பாத்துங்க டாக்டர்"//
மிகவும் வேதனை.
மனதினை நெகிழ வைத்துவிட்டது கவிதை வரிகள்.//
நன்றிங்க..
கடைசி வரிகள் மொத்தக் கவிதையையும் சுமக்கிறது..... அருமை!//
நன்றிங்க..
mm, arambikkum pothu iruntha magilchi mudivil alla vaikkirathu,, pengalaal mattom ninaikka mudintha ondru,, penmaikum ,thaaimaikum, thalai vanngugiren,,//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
கடைசி வரி படித்ததும் ரொம்ப கஷ்டமாயிடுச்சி. மேலே சொன்ன அத்தனை வரிகளும் ஒரு தாயின் ஆசைகளை அப்படியே விவரிக்கிறது. இன்னும் அதை ஒரு கவிதையாக உணர முடியவில்லை. வாழ்த்துக்கள்.//
நன்றி நண்பரே..
Brought back all the nightmarish feelings of my miscarriage, few years back. :-(//
வருத்தங்களும் நன்றிகளும்..
இப்படியொரு போராட்டத்தை சந்திக்காத பெண் இருக்க முடியுமா..
நல்லதொரு கவிதை.//
கருத்துக்கு நன்றிங்க..
இப்படி எல்லாம் கூட எழுத முடியுமா .......சூப்பர் !//
நன்றிங்க..
மலையாளப் படம் போல கவிதை சோகமாய் முடிந்தது. கவிதை அருமை//
நன்றிங்க..
தாய்மையின் நெகிழ்ச்சி கலந்த வரிகள்...நல்லதொரு கவிதை...//
வருகைக்கு நன்றி
மனதை நெருட வைக்கிறது...//
நன்றிங்க..
arumaiyaana kavithai...
valiyaiththanthathu kadaisiyil...//
நன்றிங்க..
கவிதை மனதை வலிக்க செய்தது... உங்கள் பதிவுகளில் இந்த பதிவு ஒரு மைல்கல்லாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.... சூப்பர்//
பாராட்டிற்கு நன்றி நண்பரே..
வருகைக்கும் தான்.
ஒவ்வொரு வரியாக ரசித்துக்கொண்டே வந்தேன். கடைசியில் மனதை கனக்க வைத்துவிட்டீர்கள்.. அற்புதமாக இருக்கிறது தோழி..//
நன்றி தோழரே..
sorry i don't like!!!!!//
இப்படி மொட்டையாகச் சொன்னால் எப்படி வினு?
பிடிக்காததற்கு காரணம் தெரியணும்ல..
ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் நடக்கும் சம்பவம் என்றாலும்... முதல் பிரசவம் என்பது அனைவருக்கும் ஒரு புதியதொரு உலகை கொடுக்கும்...
எத்தனையோ கனவுகள், கறபனைகள், ஏக்கங்கள், ஆசைகள், வலிகள், வேதனைகள் எல்லாமே கருவின் முதல் குரல் கேட்கும் வரையிலும், கண்ணில் பிஞ்சு குழந்தையின் முகம் காணும் வரையிலும் இருக்ககூடும்...
அப்படி இல்லாமல் இப்படி நடக்கும் சில பெண்களின் வாழ்வியல் மன வேதனை, வலிகளை எல்லாம் வார்த்தைகளில் சொல்லி அடக்கிவிடமுடியாது...
மிகவும் அருமை தோழி உங்கள் படைப்பு....//
உங்கள் கருத்துக்கு நன்றி வாசன்.
வருகை தொடரட்டும்.
படிக்காதிங்கன்னு தலைப்பு வச்சிட்டு இவ்ளோ அருமையான கவிதை எழுதினா எப்படி?//
உங்களை மாதிரி வால்பையன்களுக்கு ஏற்றவாறு தானே தலைப்பு வைக்க முடியும்... அகராதிகளா இருக்கீங்களே.. வேற என்ன பண்றது?
அழகான கவிதை,ரொம்ப ரொம்ப பிடிச்சி இருந்தது.கருவை சுமந்து கொண்டிருக்கும் ஒரு தாயின் உண்மையான வரிகள்.கடைசி வரிகள் நெஞ்சை பிழிந்து கண்களை குளமாக்குகின்றன.//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே..
//இருந்த இடம் சலித்துவிட்டது போல..
நீ முண்டத் தொடங்கினாய்..//
ஒரு பெண் கவிஞரால் மட்டுமே இத்தகைய வரிகளை பிரசவிக்க முடியும்.//
நன்றிங்க..
கண்ணீரை வரவழைக்கும் அந்த கடைசி வரிகள்.அப்பப்பா,,...... எழிலன்//
கருத்துக்கு நன்றிங்க..
அன்பின் இந்திரா - கவிதை அருமை - வரி வரியாக இரசித்து மகிழ்ந்து படித்துக் கொண்டு வரும் போது ....... இறுதி வரி - எதிர் பார்க்காத வரி - இறைவன் நிச்சயிக்கும் வரி - கலங்கி விட்டேன் - மனம் வலித்தது. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - நல்ல சிந்தனையில் உருவான நற்கவிதை. இறுதி வரி தேவையா இந்திரா ? இரு உயிர்களும் காப்பாற்றப் பட்டு சுகப் பிரசவமாக ஆக்கி இருக்கலாமெ இந்திரா - அதற்கும் இத்தனி வரவேற்பு இருக்கும் இந்திரா.......
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
கருத்திற்கு நன்றிங்க..
மேலும் அவை வரவேற்பிற்காக எழுதப்பட்ட வரிகள் அல்ல சீனா சார்.
மனதில் எழுந்த, கேள்விப்பட்ட, ரணமான சம்பவங்களின் தொகுப்புகளில் ஒன்று.
தங்கள் வருகை தொடரட்டும்.
அருமை.//
நன்றி
பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக விரும்பி ஏற்றுக் கொள்ளும் வலிகளும் வேதனைகளும் எல்லை கடந்தவைகள். இவைகள் கருவைச் சுமப்பதில் தொடங்கி முடிவை அடைவதே இல்லை. ஒருவேளை இழப்பை அனுபவிக்கவே.. தியாகத்தை சுவைக்கவே இறைவன் இந்தப் பேறை தருகிறானோ என்னவோ..
எண்ணம் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது.
வாழ்த்துக்கள்.
God Bless You.//
கருத்திற்கும் வருகைக்கும் அக்கறைக்கும் நன்றி நண்பரே..
அமர்களமாய் இருக்கிறது.வாழ்த்துக்கள்!
ஏங்க உங்களுக்கே நியாயமா? இந்த வலைத்தளத்துக்கு பெயர் படிக்காதீங்க.
அமர்களமாய் இருக்கிறது.வாழ்த்துக்கள்!//
இதோட நிறைய நண்பர்கள் சொல்லிட்டாங்க..
சரி விடுங்க.. மாத்திட்டேன்.
இனிமேல் “படிக்காதீங்க“ இல்ல... பழைய ப்ளாக் மாதிரி “இந்திராவின் கிறுக்கல்கள்..“ சரிதானே??
வாழ்த்துக்கு நன்றி நண்பரே..
கண்ணில் நீர் பனிக்க செய்த வரிகள்... மருத்துவம் இத்தனை முன்னேறிய இந்த நாளிலும் சில கேள்விகளுக்கு விடை இருப்பதில்லை... :(//
சரியாகச் சொன்னீர்கள் தோழரே..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.