போன வாரம், ராசிப்பொண்ணு க்கு விருந்து குடுத்தோம். மீசைக்காரனு ம் நானும் தான் சமையல். மட்டன், சிக்கன், மீன்“னு எல்லாமே சமைச்சிருந்தோம். (நம்புங்க.. நா நல்லா சமைப்பேன்..). அரட்டை அடிச்சுகிட்டே சமைச்சதுனால, சமையல் முடிய மதியம் 3.30 ஆய்டுச்சு. எல்லாருக்கும் நல்ல பசி. ஒரு வழியா சாப்பிட உக்காந்தாங்க. சமைச்சதை எல்லாம் டைனிங் டேபிள்ல எடுத்துவச்சுகிட்டு இருந்தோம். கடைசியா மீன் குழம்ப வேற பாத்திரத்துல மாத்திகட்டு இருந்தேன். பாத்திரம் வெயிட்டா இருந்ததால, குழம்புல இருந்த மீனை எல்லாம் முதல்ல கரண்டில எடுத்து மாத்திட்டு, அப்புறம் குழம்ப அதுல ஊத்திகிட்டு இருந்தேன். பசி தாங்க முடியாம உள்ள வந்த ராசிப்பொண்ணு அத பாத்துட்டு “என்னடி பண்ற?“னு கேட்டா. உடனே நா ரெண்டு பாத்திரங்களையும் காட்டி “இது மீனு, இது புளி குழம்பு, ரெண்டையும் ஒண்ணா ஊத்துனா மீன் குழம்பாயிடும்“னு சொன்னேன். “ஓ அப்படியா? சரி சீக்கிரம் கொண்டு வா, எனக்குப் பசிக்குது“னு சொல்லிட்டு எந்த ரியாக்சனும் குடுக்காம போயிட்டா. (உருப்ட்ட மாதிரி தான்..) ******************************************* என் மொபைல்ல சார்ஜ் சுத்தமா...