தூக்கத்தில் குழந்தைகள் உச்சா போவதைத் தடுக்க – சில ஆலோசனைகள்..



இரவில் தூங்கும்போது குழந்தை படுக்கையை நனைத்துவிடும் பழக்கத்தை Nocturnal enuresis என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகள் பெரும்பாலும் படுக்கையில் சிறுநீர் கழிக்க மூன்று காரணங்களைச் சொல்லலாம்.
1.       சிறுநீர்ப் பையின் கொள்ளளவு குறைவாக இருந்தால் சிறுநீரை அடக்க முடியாமல் போகலாம். (ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது அடக்க முடியாது நனைத்து விடலாம்).
2.       இரவு படுக்கைக்குச் செல்லும்முன் நிறைய தண்ணீர் குடித்துவிட்டுத் தூங்கச் செல்வதாலும் இருக்கலாம்.
3.       மனரீதியான பிரச்சனைகளாலும் இருக்கலாம்.
அடிப்படைக் காரணம்:
பொதுவாகவே குழந்தையின் மூளை முதிர்ச்சியடைய சுமார் ஐந்தாண்டுகள் ஆகும். எனவே 5-6 வயது வரை படுக்கையை நனைத்தால் அது இயற்கைதான். அதற்குமேல் இருந்தால் சிறுநீர் உறுப்புகளில் கோளாறு இருந்தாலோ, நரம்புத் தளர்ச்சி இருந்தாலோ அல்லது மனரீதியாகப் பாதிப்பு இருந்தாலோ படுக்கையை நனைக்க வாய்ப்புண்டு.
தடுக்க எளிய முறைகள்:
1.       பகல் நேரத்தில் சிறுநீர் கழிக்க விரும்பும்போது சிறிது நேரம் அடக்கப் பயிற்சி கொடுத்தால் சிறுநீர்ப் பையின் கொள்ளளவு பெரிதாகும்.
2.       இரவு 7.30 மணிக்குள் உணவு கொடுத்து விடுங்கள்.
3.       இரவு உணவு உலர்ந்த வகையாக இட்லி, புளிசாதம், தேங்காய் சாதம் போன்ற வகையாகக் கொடுங்கள். பால் கொடுத்தால் எட்டு மணிக்குள் கொடுத்து விடுங்கள்.
4.       மற்றவர்கள் எதிரில் குழந்தையைத் திட்டவோ, கேலி செய்யவோ கூடாது.
5.       முக்கியமாக டாக்டரிடம் காட்டி அவர் கூறும் ஆலோசனைப்படி மூக்கில் விடும் சொட்டு மருந்து கொடுக்கலாம்.
முக்கியமாக உங்களுடைய அரவணைப்பு மிக அவசியம். படுக்கையை நனைக்காத நாள் எது என்று கவனித்து வாருங்கள். ஐந்து நாள் தொடர்ந்தால் குழந்தையைப் பாராட்டி பரிசு ஒன்று கொடுங்களேன். பலன் கிடைக்கும். வெளியிடங்களில் சரியான தூக்கமில்லாமல் இருப்பதால் விழிப்பு ஏற்பட்டு டாய்லெட்டில் சிறுநீர் கழிக்க எழுந்துவிடும்.
மனோதத்துவ ரீதியான காரணங்கள்:
புதிதாகப் பள்ளி சேர்தல் அல்லது ஆசிரியை திட்டுதல் அல்லது தனக்குப் பின் புதிய வரவாக வீட்டில் மற்றொரு குழந்தை பிறந்ததால்  அதற்கு முன்னுரை தந்து தன்னை நீங்கள் மறந்துவிடுதல் அல்லது தனக்குப் பிடித்த தாத்தா பாட்டி இறந்துவிடுதல் அல்லது பெற்றோர்களாகிய உங்களிடம் சண்டை சச்சரவுகள் இவை குழந்தை மனதைப் பாதித்து விடும்.
பிஞ்சுமனம் கொண்ட குழந்தை படுக்கையை நனைத்துவிட்ட அற்ப காரணத்துக்காக அவர்களை நோகடிக்காது அரவணையுங்கள். உங்கள் குழந்தைக்கு நல்ல பழக்கங்கள் பிடிபட நீங்கள் உதவ வேண்டும். தவறாது கடைப்பிடிப்பதால் பழக்கங்கள் இயல்பான தன்மைபோல என்றும் நிலைத்து விடும். ஆனால் சக்திக்கு ஏற்றவாறு பழக்கங்களைப் புகுத்துங்கள். அதுவும் அன்பாக நயமாக இரண்டும் கலந்த முறையில் நடைபெறட்டும்.
.
(குழந்தை வளர்ப்புக் கலை புத்தகத்திலிருந்து)
.
.

Comments

தமிழ்மணம் தான் அடிக்கடி தகராறுனா இன்ட்லி பட்டையையும் காணோம்..

"பராமரிப்பு காரணங்களுக்காக இன்ட்லி தளம் தற்காலிகமாக முடக்கப்பட்டு உள்ளது"னு வருது.

இவனுகளோட பெரிய தலைவலி..
டாக்டர் இந்திரா வாழ்க....


எதுக்கு புலம்பல்ஸ்??
ஆளினால் அழுக்கு ராணி.... சாரி. அழகு ராணி... பதிவு அருமை.. பகிர்விற்கு மிக்க நன்றி...
vinu said…
iiiiiiiiiiiii yaa me the 3rduuuuuu
vinu said…
1st comment by author so "chellaathu chellaathu"...........
இப்போது எனக்கு தேவையான டிப்ஸ்..

பகிர்வுக்கு நன்றிகள்..
குழந்தைகள் மலர்களைப் போல. அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை அழகாக விளக்கியுளளீர்கள். நன்று!
மிகவும் பயனுள்ள தகவல்கள்.
baleno said…
அருமையான தகவல்கள். நன்றி.
Unknown said…
விஷயம் புரிந்தது நன்றி சகோ!
F.NIHAZA said…
அருமையான தகவல்...
இனி உங்கள் வீட்டுப்பக்கம் அடிக்கடி வருவேன்...
உண்மையில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்கள்...

தொளிவாக குறிப்பிட்டுள்ளீர்..
வாழ்த்துக்கள்..
நல்ல மன இயல தொடர்பான பதிவு...வாழ்த்துக்கள்
இந்திரா டாக்டராக பிரமோஷன் ஆகிறார்....!!!
Learn said…
நல்ல பகிர்வு

பகிர்வுக்கு நன்றி

www.tamilthottam.in
தமிழ்த்தோட்டம்
குழந்தை வளர்ப்பு பல விஷயங்களை உள்ளடக்கியது.. இதுவும் ஒன்று.. நல்ல பதிவு.
நல்ல பதிவு தான்....
SURYAJEEVA said…
இரவு தூங்க போகும் முன் உச்சா அடித்து விட்டு வந்து படுக்க நினைவூட்டலாம்...
இதெல்லாம் ஒண்ணும் பன்ண வேண்டாம் - கொஞ்சம் வயசானா எல்லாம் சரியாய்டும் - இதெல்லாம் ஒரு பிரச்னையெ இல்லை. உட்டுத்தள்ளலாம்.
நல்ல பதிவு.

பெற்றோர்களிடையே இது பற்றிய விழிப்புணர்வு அவசியம்.

பகிர்வுக்கு நன்றி.
//சி.பி.செந்தில்குமார் said...

டாக்டர் இந்திரா வாழ்க....


எதுக்கு புலம்பல்ஸ்??//


நன்றி செந்தில் சார்..
//Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

ஆளினால் அழுக்கு ராணி.... சாரி. அழகு ராணி... பதிவு அருமை.. பகிர்விற்கு மிக்க நன்றி...//


என்ன வாசன் சார்... ரொம்ப நாளா ஆளையே காணோம்???
//vinu said...

1st comment by author so "chellaathu chellaathu"...........//


இல்லனாலும் முதல் ஆளா வந்துடுவீங்களாக்கும்????
//!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இப்போது எனக்கு தேவையான டிப்ஸ்..

பகிர்வுக்கு நன்றிகள்..//


வருகைக்கு நன்றி கருன்
//கணேஷ் said...

குழந்தைகள் மலர்களைப் போல. அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை அழகாக விளக்கியுளளீர்கள். நன்று!//


கருத்துக்கு நன்றிங்க..
//வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் பயனுள்ள தகவல்கள்.//


நன்றிங்க..
//baleno said...

அருமையான தகவல்கள். நன்றி.//


வருகைக்கு நன்றிங்க..
//விக்கியுலகம் said...

விஷயம் புரிந்தது நன்றி சகோ!//


நன்றி சகோதரரே..
//F.NIHAZA said...

அருமையான தகவல்...
இனி உங்கள் வீட்டுப்பக்கம் அடிக்கடி வருவேன்...//


கட்டாயம் வாங்க..
வருகைக்கு நன்றி.
//# கவிதை வீதி # சௌந்தர் said...

உண்மையில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்கள்...

தொளிவாக குறிப்பிட்டுள்ளீர்..
வாழ்த்துக்கள்..//


நன்றிங்க..
//மாய உலகம் said...

நல்ல மன இயல தொடர்பான பதிவு...வாழ்த்துக்கள்//


நன்றி நண்பரே..
//siva said...

:) M M..//


நன்றி
(என்ன இது???)
//MANO நாஞ்சில் மனோ said...

இந்திரா டாக்டராக பிரமோஷன் ஆகிறார்....!!!//


ஐயோ வேணாம்.. டாக்குடர் பட்டம்னாலே எனக்கு அலர்ஜிங்க..
//தமிழ்தோட்டம் said...

நல்ல பகிர்வு

பகிர்வுக்கு நன்றி//


வருகைக்கு நன்றிங்க..
//ரிஷபன் said...

குழந்தை வளர்ப்பு பல விஷயங்களை உள்ளடக்கியது.. இதுவும் ஒன்று.. நல்ல பதிவு.//


நன்றி நண்பரே..
வருகைக்கும் கருத்துக்கும்.
//ஆர்.சண்முகம் said...

நல்ல பதிவு தான்....//


நன்றிங்க..
//suryajeeva said...

இரவு தூங்க போகும் முன் உச்சா அடித்து விட்டு வந்து படுக்க நினைவூட்டலாம்...//


அப்படி செய்தாலும் நடுஇரவில் போய்விடும் குழந்தைகளும் இருக்கிறார்களே..
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல பதிவு....//


நன்றி..
பன்னி சார் ரொம்ப பிஸி போல..
//cheena (சீனா) said...

இதெல்லாம் ஒண்ணும் பன்ண வேண்டாம் - கொஞ்சம் வயசானா எல்லாம் சரியாய்டும் - இதெல்லாம் ஒரு பிரச்னையெ இல்லை. உட்டுத்தள்ளலாம்.//


எனக்குத் தெரிந்து பனிரெண்டு வயது வரை கூட இந்தப் பிரச்சனை தொடரும் குழந்தைகளும் உண்டு. ஐந்து வயதுக்கு மேல் தொடர்ந்தால் மருத்துவரைப் பார்ப்பது நல்லது.
//வெட்டிப்பேச்சு said...

நல்ல பதிவு.

பெற்றோர்களிடையே இது பற்றிய விழிப்புணர்வு அவசியம்.

பகிர்வுக்கு நன்றி.//


வருகைக்கு நன்றிங்க..
கலக்கல் பதிவு .
சூப்பர் ....
யானைக்குட்டி
Anonymous said…
உங்கள் குழந்தைக்கு நல்ல பழக்கங்கள் பிடிபட நீங்கள் உதவ வேண்டும்.....
சரியா சொன்னீங்க
Unknown said…
நீங்க குழந்தைகளைப் பத்தி சொல்லவறீங்க.
சில எருமமாடுகளும்...

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..