தவறுகளை ஒத்துக்கொள்ளப் பழகுவோம்..
மன்னிப்புக் கேட்பது பற்றி இதற்குமுன் ஒரு பதிவுல எழுதியிருந்தேன்.. நான் பார்த்தவரைக்கும் மனதார தங்களுடைய தவறுகளை ஒத்துக்கொள்வோர் மிக மிகக் குறைவுனு சத்தியமே செய்யலாம். ஏனோ தெரியல... இந்தப் பழக்கம் மட்டும் பெரும்பாலானவர்களிடம் இருக்குறதே இல்ல.. ஒரு தப்பு பண்ணிட்டோம்னா, அதை செய்யும்போது இருக்குற தைரியம், ஒத்துக்கும்போது இருக்குறது கிடையாது. யாராவது சுட்டிக்காட்டினாலும் வீண் வாக்குவாதம் செய்கிறார்களே ஒழிய பணிந்து போகும் பழக்கம் இருப்பதே இல்ல. தன்மேல் குறை சொல்லிட்டாங்களே.. என்று ஆதங்கப்படுறவங்களே இங்கு அதிகம். இதில் அவர் இவர் என்று பாரபட்சம் இல்லாம நான் உட்பட பல சமயங்கள்ல வாக்குவாதம் செய்ததுண்டு. (என்னையும் சொல்லிகிட்டேன்.. இப்ப சந்தோசமா??) என் நட்பு வட்டாரங்களில் இது மாதிரி பலரைப் பார்த்திருக்கேன். ஏதாவது தவறு செஞ்சிருந்து, அதை சுட்டிக்காட்டிய சந்தர்ப்பங்களில், அவங்களோட வாக்குவாதங்கள் முற்றிப்போய் பிரிவு வரைக்கும் கொண்டுவந்து விட்டிருக்குது. வாதம் எந்த விளிம்புக்குப் போனாலும்கூட “நீ சொல்றதும் சரிதான்.. இது என்னுடைய தவறுதான். மன்னிச்சிடு“ என்ற வார்