என் பள்ளி நாட்கள் - தொடர்பதிவு..தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் பிரகாஷ்க்கு நன்றி..
நாம எவ்ளோ தான் வாழ்க்கைல முன்னேறினாலும், நம்மளோட ஆரம்பகாலத்தை நெனச்சுப் பார்க்கும்போது ஆச்சர்யமா இருக்கும். நாம இப்படியெல்லாம் இருந்திருக்கோமா?ங்குற கேள்வி நமக்குள்ள கட்டாயம் எழும். அது சில நேரம் சிரிப்பைத் தரலாம்.. சில சமயம் அழுகையை.. ஆனா அந்த நினைவுகள் என்னைக்கும் நம்ம மனசை விட்டு நீங்குறது இல்ல.
அப்படிப்பட்ட நினைவுகள்ல நம்மளோட பள்ளிக் கால வாழ்க்கைக்கு பெரும்பங்கு உண்டு. இன்னைக்கும்.. என்னைக்கும் பசுமையான நாட்களா நமக்குள்ள இருந்துகிட்டே இருக்கும். நண்பர் பிரகாஷ் மாதிரி, வகுப்பு வாரியா பிரிச்சு சொல்ல முடியாதுனாலும் என்னோட பள்ளி வாழ்க்கைல குறிப்பிடக்கூடிய ஒரு சில நிகழ்வுகள் இங்கே...
1. இப்ப நா இருக்குறது மதுரையானாலும், எனக்கு சொந்த ஊர் திண்டுக்கல் தான். அங்க இருக்குற சென் ஜோசஃப் மெட்ரிக்குலேசன்ல தான் எல்கேஜில இருந்து ஐந்தாம் வகுப்பு வரைக்கும் படிச்சேன். ஐந்தாவது படிக்கும்போது தான் அப்பா முதன்முதலா சைக்கிள் வாங்கி குடுத்தாரு. என்னதான் நான் தனியா சைக்கிள்ல போனாலும் அப்பா இன்னொரு சைக்கிள்ல பின்னாடியே வந்து விட்டுட்டுதான் போவாரு. “சூப்பரா படிப்பேன்.. க்ளாஸ் பர்ஸ்ட்“னு எல்லாம் சொல்ல முடியாது. ஆனாலும் நல்லா படிப்பேன்.
2. அம்மா படிப்பு விசயத்துல ரொம்ப கண்டிப்பு. நானும் நல்லாவே படிப்பேன். ஆனா அஞ்சாவது படிக்கும்போது ஒரு தடவை க்ளாஸ் டெஸ்ட்ல பதில் தெரியாம, நோட்ட திறந்து பார்த்து எழுதுனேன். அதை ரொம்ப பெருமையா வீட்ல சிரிச்சுகிட்டே சொல்லி அடிவாங்கினேன். அது தான் முதலும் கடைசியுமா நா அடிச்ச பிட்.
3. ஆறாவது வகுப்புலயிருந்து சென் ஜோசஃப் பெண்கள் மேல்நிலைப் பள்ளில படிச்சேன். இங்கிலிஷ் மீடியம் சீட் கிடைக்கலனு வேற வழியில்லாம தமிழ் மீடியத்துல சேர்ந்தேன். எனக்கு ஆங்கிலம் நல்லாவே வரும்.. அந்த சப்ஜெக்ட்ல மட்டும் எப்பவும் க்ளாஸ் பர்ஸ்ட்டா வருவேன்.. வாய்ப்பாடு கூட தமிழ்ல சொல்லத் தெரியாது.. அதுனாலயே ஏதோ வேற்றுகிரகவாசிய பார்க்குறது மாதிரி மற்ற மாணவிகள் பார்ப்பாங்க. ஆரம்பத்துல தயங்கினாலும் அப்புறம் சகஜமாயிடுச்சு..
4. இடையிடையே யோகா, பாட்டு க்ளாஸ்னு முந்திரிக்கொட்டைத் தனமா சேர்ந்துடுவேன்.. அப்புறம் அம்மா திட்டுறாங்கனு விலகிடுவேன்.. நான் உயரமா இருக்கேன்னு பாஸ்கட்பால் விளையாட்டுல என்னோட சம்மதமே இல்லாம சேர்த்துட்டாங்க. அந்த கோச் மாஸ்டரைப் பார்த்தாலே எனக்கு பயம். யூனிபார்ம், ஸ்போர்ட் ஷூ எல்லாம் கேட்டாங்க.. வேற ஊருக்கு போய் விளையாடணும், சாயந்திரம், லீவ் நாள்ல எல்லாம் ப்ராக்டீஸ் பண்ணனும்னு சொன்னாங்க.. ஓவரா வெயில்ல விளையாடுனதாலயும் பயத்துனாலயும் காய்ச்சலே வந்துடுச்சு.. அப்புறம் அப்பா வந்து ஆசிரியர் கிட்ட எடுத்துசொல்லி விலக வச்சுட்டார்.
5. ஏழாவது எட்டாவதுக்கப்புறம் தோழிகள் நிறைய சேர்ந்துட்டாங்க. ப்ளஸ்டூ வரைக்கும் எனக்கு அம்மா குடுக்குற டெய்லி பேட்டா ஒரு ரூபாய்.. (அதையும் செலவு பண்ணாம சேர்த்து வைப்பேன். இப்ப இருக்குற குட்டீஸ்ங்க அசால்ட்டா பத்து ரூபாய் அம்பது ரூபாய்னு கேக்குதுக.. நெனச்சா சிரிப்பு தான் வருது.). அதுனால செலவுன்னு வந்துட்டா நா எஸ்கேப் ஆய்டுவேன். யாருக்காவது பிறந்தநாள்னா கூட அஞ்சு ரூபாய் க்ரீட்டிங் கார்டோட முடிச்சிடுவேன்.
6. கணிதம், அறிவியல்னா கஷ்டமா இருக்கும்.. கம்ப்யூட்டர் காமர்ஸ் எடுக்கலாம்னு கும்பலோட முடிவு பண்ணி பதினோராம் வகுப்பு சேர்ந்தேன். ப்ச்... அங்கயும் அக்கவுண்ட்ஸ்.. ஆனாலும் அரட்டைக்கு பஞ்சமேயில்ல. சினிமா ஹீரோக்கள் படமெல்லாம் சேகரிச்சு ஸ்கூல் பேக்ல வச்சுகிட்ட காலம் அது.
7. பள்ளி வாழ்க்கையோட கடைசி வருஷம் மறக்கவே முடியாது. ப்ளஸ்டூ ப்ப்ளிக் எக்ஸாம்னால கெடுபிடி ஜாஸ்தி.. எப்பபார்த்தாலும் படி.. படி.. படி..னு உயிர வாங்கிட்டாங்க. ஆனாலும் படிக்குறது, சைட் அடிக்கிறது, தோழிகளோட அரட்டை, வீட்டுக்கு தெரியாம ப்ரெண்ட்ஸ் கூட ஒரு சினிமா பார்த்ததுனு நிறைய அனுபவம் அந்த வருஷத்துல கிடைச்சுச்சு.
8. அப்புறம் வழக்கமா வர்ற ஃபேர்வெல்-டே நிகழ்ச்சி.. வழக்கமான அழுகை.. வாழ்க்கைல நாம உணர்ற முதல் பிரிவாச்சே.. அதுக்கப்புறம் பிரிவுகள் சகஜமாய்டுச்சு.. எக்சாம் ரிசல்ட் வந்ததுக்கப்புறம் எல்லாரும் சேர்ந்து எல்லாருடைய வீட்டுக்கும் போய்ட்டு வந்தோம். அதுக்கப்புறம் போக வாய்ப்பு கிடைக்கவேயில்ல.
நாட்கள் செல்லச் செல்ல, பள்ளி நட்புக்களோட பிடிமானங்கள் குறையத் தொடங்கி, எங்கயாவது எப்போதாவது, முகம்பார்த்தா மட்டும் ஒருத்தரையொருத்தர் விசாரிக்குற நிலை வந்தாச்சு. அடுத்தடுத்து வந்த மாற்றங்களால புதுப்புது நட்புகள் கிடைச்சாலும் ஆரம்பகால நட்புக்களை மறக்கவே முடியாது. இன்னைக்கும் தோழிகளோட ஆட்டோகிராஃப் டைரிய படிச்சுப் பார்க்கும்போது சந்தோசமும் துக்கமும் கலந்த ஒருவித உணர்வு உருவாவதுண்டு.. அது வார்த்தைகளால விவரிக்க முடியாதது. இந்தப் பதிவை தட்டச்சு செய்யும்போதும் கூட அந்த வலி உண்டாவதை தவிர்க்க முடியல.
இன்னும் ஏராளமான நிகழ்வுகள் பள்ளிக்காலத்தில் இடம்பெற்றதுண்டு.. ஆனாலும் இந்தப் பதிவை முடிக்கிறேன்.. வலியுடன்..
.
(ஏற்கனவே நிறையபேருக்கு இந்த தொடர்பதிவை எழுத அழைப்பு விடப்பட்டிருக்கும். அதுனால நா யாரையும் அழைக்கல..)

.

Comments

வணக்கம் சகோ
//சில நேரம் சிரிப்பைத் தரலாம்.. சில சமயம் அழுகையை//

வாஸ்தவம் தான்
//ஆனாலும் நல்லா படிப்பேன்.//

பிளாக் நடத்துற அளவுக்குன்னு சொல்றிக
// நா அடிச்ச பிட்.//

அப்ப.....வே..வா...
//வேற்றுகிரகவாசிய பார்க்குறது மாதிரி மற்ற மாணவிகள் பாப்பாங்க//

வாயால பாடலைன்னா எப்புடீ?? பார்பாங்க
//மனசாட்சி said...//


வாங்க நண்பரே..
படுவேகமா இருக்கீங்களே...
//வலி உண்டாவதை தவிர்க்க முடியல.//

நிதர்சமான உண்மையான வலி தான் உணர முடிகிறது
இவ்வளவு ஞபாகம் சக்தி பாராட்ட வேண்டிய விஷயம் - வாழ்த்துக்கள்

மலரும் நினைவுகளை அசைபோட முடியும் எழுத்தில் கொண்டு வருவது....


உங்களின் பள்ளி வாழ்க்கையை பகிர்ந்தமைக்கு நன்றி பாராட்டுக்கள்
உடனே பதிவிட்டமைக்கு நன்றி...
பள்ளிக்கு திரும்ப சென்றது போன்ற உணர்வு..... பதிவு
பசுமை நிறைந்த நினைவுகள்..
ஆட்டோகிராப் பதிவு...அற்ப்புதம்.
COOL said…
நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி...
அதுக்கப்புறம் பிரிவுகள் சகஜமாய்டுச்சு.//


எனக்கு இன்னும் சகஜமாகல!
//வால்பையன் said...

அதுக்கப்புறம் பிரிவுகள் சகஜமாய்டுச்சு.//


எனக்கு இன்னும் சகஜமாகல!//


அப்படினா பிரியாம தான் இருக்கணும்.. பரிவுகள் தானாக வருவது பாதியென்றால் வரவழைத்துக்கொள்வது பாதி.... வாழ்க்கைல மாத்த முடியாத பல விஷயங்கள்ல பிரிவுகளும் ஒண்ணு.

பழகிக்கங்க.. வலிகளும் பழகிடும்.
வாழ்த்துக்கள்.
K said…
அட, இன்னிக்குத்தான் ஃபர்ஸ்டு பர்ஸ்டா உங்க ப்ளாக்குக்கு வர்ரேனா? இல்ல இதுக்கு முன்னாடி வந்திருக்கேன்னா தெரியல! மறந்துடுச்சு!

உங்க பள்ளி அனுபவம் சிறப்பா இருந்துச்சு! அது எல்லோருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாததுதான்! அழகான அனுபவங்களின் தொகுப்பு!!
நட்பின் வலிகளைக் கடைசிப் பாராவில் சொன்னது மனதில் நின்றது. அந்தக் காலத்தில் அவ்வளவு ஆழமாகப் பழகிய அந்த நட்பு இன்றைய கால ஓட்டத்தில் காணாமல் போவது வினோதம்தான். சில நட்புகள் தொடர்வதும் உண்டு. பள்ளிப் பதிவை விட நடப்புப் பகுதி மனதில் நிற்க சொந்த அனுபவங்களும் காரணம்!
எங்கேயும்...!
இப்போதும்......!
எப்போதும்..........!
என் நினைவில் உலவும் வரிகள்...!
"நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை
என்றுமது கலைவதில்லை..!
எண்ணங்களும் மறைவதில்லை....!"
இந்த பாடலும்....! இந்த பாடலின் படமும்...!
மறக்கமுடியாதவை...!
காரணம்...!
எனது விடலைப் பருவ பிம்பங்கள்தான் அப்படமும்...!

நல்ல பதிவு...!

ஆனாலும்...

////வலியுடன்.//// என்று நீங்கள் முடித்தது??????????????????????????

"வலியுடன்
வலிதாங்கு...! அப்போதுதான்
வசந்தம்... உன்
வாசல் வரை வந்து காத்திருக்கும்...." என்று யாரோ எழுதிய கவிதை....!
எங்கேயும்...!
இப்போதும்......!
எப்போதும்..........!
என் நினைவில் உலவும் வரிகள்...!
"நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை
என்றுமது கலைவதில்லை..!
எண்ணங்களும் மறைவதில்லை....!"
இந்த பாடலும்....! இந்த பாடலின் படமும்...!
மறக்கமுடியாதவை...!
காரணம்...!
எனது விடலைப் பருவ பிம்பங்கள்தான் அப்படமும்...!

நல்ல பதிவு...!

ஆனாலும்...
////வலியுடன்.//// என்று நீங்கள் முடித்தது??????????????????????????
வலியுடன்
வலிதாங்கு...! அப்போதுதான்
வசந்தம்... உன்
வாசல் வரை வந்து காத்திருக்கும்.... என்று யாரோ எழுதிய கவிதை....!

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்