ஒரு நிமிடம்.. கவிதை (படித்ததில் பிடித்தது)
“ஒரு நிமிஷம் இருடா“ என
ஓடைக்குள் சென்ற அப்பா
விடிந்துதான் வந்து சேர்ந்தார்
வாந்தி நாற்றத்தோடும்
வீழ்ந்து கிடந்ததன் வலிகளோடும்
“ஒரு நிமிஷம் பார்த்துக்க“ என்று சொல்லி
புதருக்குள் ஒளிந்த
பக்கத்து கொல்லைக்காரி
அந்தி சாய்கையில் தான் வந்து சேர்ந்தாள்
கலைந்த தலையோடும்
கொஞ்சம் கதகதப்போடும்.
“ஒரு நிமிஷம் காட்டுடா“ என்ற
பள்ளித்தொழி
பின்பு
பிடுங்கிக் கொண்ட மெயின் ஷீட்டை
பேப்பர் கட்டும்வரை
கொடுக்கவே இல்லை
அரசாங்கத் தேர்வு ஒன்றில்.
“ஒன் மினிட் ப்ளீஸ்“ என்று
பேனா வாங்கிய
பேண்ட் ஆசாமி
இப்போதும்
புரட்டிக் கொண்டிருக்க வேண்டும்
சன்டே ஹிண்டுவில்
ஆப்பர்ச்சூனிட்டி பக்கங்களை.
“ஒரு நிமிஷம் ப்ளீஸ்“ என்று
வாங்கிய பக்கத்து இருக்கைக்காரர்
இந்த நிறுத்தத்தில்தான் இறங்கியிருப்பார்
திருப்பிக் கொடுக்காத தினசரியோடு.
ஒரு நிமிடத்திற்கு யாரேனும்
அறுபது நொடியென்றால்
நம்பவே முடிவதில்லை இப்போது.
ஒரு நிமிடத்தை
ஒரு நிமிடமாய்
இருக்கவிட்டதில்லை
எப்போதும் நாம்.
------------
.
.
Comments
ஒரு நிமிஷம்.....
ஒரு நிமிடம் என்பது வழக்கு மொழியாகி போனதோ...??
he he he he
சாரி...!
ஒன் மினிட்...!
ஒரு நிமிடம்...!
ఒక్క నిమిషంలో....!
एक मिनिट...!
One Second...!
ஒரு நிமிஷ தவணை வாங்குபவர்களைப் பற்றி யோசிக்க வைக்கிறது....புத்தகம் பெயர் போட்டிருக்கிறீர்கள்...யார் எழுதியது என்று சொல்லவில்லையே....//
புத்தகம் இரவல் வாங்கியிருந்தேன். எழுதியவரை கவனிக்க மறந்துட்டேன். ஆனால் தெரிந்தவுடன் கண்டிப்பாக கூறுகிறேன்.
பார்க்க:
http://www.tamilvaasi.com/2012/03/blog-post.html