படித்ததில் பாதித்தது..
உள் தாழ்ப்பாள் இடப்பட்ட அறை, இறக்கமற்றதொரு உறவு, பொய்யான உரையாடல், பிரியமற்ற ஸ்நேகம், காத்திருத்தல், எதிர்பார்த்தல், கனவுகள் சிதைவு, எதிர்நம்பிக்கை எழும்புதல், ஏக்கம், குரூரம், அவமதிப்பு, உதாசீனப்படுத்துதல், துரோகம், மூர்க்கமாய் ஒரு பிரியத்தை நிராகரித்தலென, எதன் வழியாயும் நிகழ்ந்து விடுகின்றன மன வலிகளும் அதன் பிறகான மரணமும்.
எவ்வளவு எளிதாய் ஏமாற்றப்பட்டுவிடுகிறோம்.. எத்தனை மூர்க்கத்தைக் கொண்டிருக்கிறது மென்மையான ஏதோ ஒன்று. எவ்வளவு இதமாய் வந்து விடுகிறது இரக்கமற்றதொரு சாபம். நீண்ட நேரக் கெஞ்சுதல்களாலான பிரார்த்தனையின் முடிவில் ஒரு சாபம் கூட கிடைக்கலாம் என்பதை எவ்வளவு நிதானமாய்க் கற்றுக்கொடுக்கிறது ஒரு ஸ்நேகிதம். எதிர்த்துத் தாக்க இயலாது என்று அறியும் கணமொன்றில் எவ்வளவு உக்கிரமாய் தாக்கப்பட்டு விடுகிறோம் நம்முடைய பலவீனங்களைக் கொண்டு.
ஆனால் இவை எல்லாவற்றையும் விடக் கொடுமையானது பிரியம் நிறைந்ததொரு சம்பவத்தை பிரியமற்றதொரு கணத்தில் நினைத்துப் பார்த்தல் தான்.
.
.

Comments
நீங்களாவது எழுதலாமே!
பெண் பிள்ளைகள் பெற்றவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.
இந்த வரிகள் முற்றிலும் உண்மை!