தத்துவம் எதுவும் இல்ல.. பயப்புடாம படிங்க..
வாழ்க்கைங்குறது.....
அட??? இப்ப நா என்ன சொல்லிட்டேன்னு முறைக்குறீங்க.. தத்துவமெல்லாம் சொல்லமாட்டேன். பயப்படாதீங்க. சொல்ல வந்தத சுருக்கமா சொல்லிடுறேன்.
வாழ்க்கை – இது என்னவோ பெரிய்ய்ய பூதம் மாதிரி நிறைய பேர் பயப்படுறதும், நம்மள கடிச்சுத் திண்ணுடப்போறதுமாதிரி ஓடுறதுமா இருக்காங்க. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.. வாழ்க்கைல என்னென்ன நடக்கும்?
ஜன்னம், அனுபவம், மரணம்..
இது தான் வாழ்க்கையோட உள்ளடக்கம்.. (என் ஜிந்தனை எப்பூடி....)
இந்த மூணுல ஜன்னத்தையும் மரணத்தையும் நாம ஒண்ணும் பண்ண முடியாது. நடுவுல இருக்குற அனுபவம் தான் முழு வாழ்வையும் அடக்கியிருக்கு.
சந்தோசம், துக்கம், இழப்பு, ஏமாற்றம், கோவம், பொறாமை, வெற்றி, தோல்வி, அவமானம், புகழ், பழி, நம்பிக்கை, துரோகம், நிம்மதி, சிரிப்பு, அழுகை, தனிமைனு மாறி மாறி வந்துபோகுது.. இத தாண்டி என்ன நடக்குது? இதுகூட நம்ம மனசப் பொறுத்துதான் அமையுது. இது எதுவுமே இல்லைனா நெனச்சுப் பாருங்க.. வாழ்க்கை எவ்ளோ வெறுமையா இருக்கும்னு!! எல்லாமே நமக்கொரு அனுபவம் தான். நாம பார்த்து ஈஸியா எடுத்துக்கிட்டோம்னா எல்லாமே ஓகே தான். ஒவ்வொரு இழப்பையும் தாண்டி வாழ்க்கை, தன் பாதையில் போய்கிட்டு தானே இருக்கு..
எந்தவொரு சூழ்நிலையையும், நாம எப்படிக் கையாளுறோம்குறதுல தான் இருக்கு வாழ்வோட ஸ்வாரஸ்யம். அத விட்டுட்டு, சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட விதியை நொந்துகொண்டு அழுது புலம்புறதுல பிரேயோஜனமே இல்ல. அந்த நொடிப்பொழுதுல நம்மை தளர்ந்து போகச் செய்தாலும், அடுத்த நிமிடம் நிதானமா பிரச்சனையிலருந்து வெளில வர யோசிக்கணும். “என் நேரம் சரியில்ல... என் தலையெழுத்து... என் விதி“ அப்படி இப்படினு ஓவரா வசனம் பேசி குண்டுச் சட்டிக்குள்ளயே குதிரை ஓட்டாம வாழ்க்கைய ரசிச்சு... ரசிக்க முடியலனாலும் வெறுக்காம வாழ கத்துக்கணும். அப்பதான் வாழுறதுலயும் ஒரு பிடிப்பு இருக்கும்.
பலர், காதல் தோல்விக்கே மனசொடிஞ்சு மூளைல உட்கார்ந்துடுறாங்க.. அது ஒண்ணுதானா வாழ்க்கை?? காதலைத் தாண்டி எவ்வளவோ விஷயங்கள் இருக்கே. ஒரு விஷயத்துலருந்து நம்மளை வெளிக்கொண்டு வர்றதுக்கு, நமக்குப் பிடிச்ச இன்னொரு விஷயத்துல ஆர்வம் செலுத்தணும்னு சொல்வாங்க. அதுக்காக த்ரிஷா இல்லேனா திவ்யா“னு சொல்ல வரல. நம்மளப் பத்தி கவலைப்படாதவங்கள நெனச்சு நாம ஏன் கவலைப்படணும்? அதையே நெனச்சு வருத்தபடுறத விட்டுட்டு, பார்க்குற வேலைல கவனம் செலுத்தலாம். நமக்குப் பிடிச்ச பொழுதுபோக்குல நம்ம திறமைய வளர்த்துக்கலாம்.
பிரச்சனைகளுக்குள்ள மூழ்கிடாம, தள்ளிப்போடாம, பக்குவமா அத சரிபண்ணி, அத்தாண்டி வரப் பழகணும். ஒரு குறிப்பிட்ட வட்டம் போட்டுகிட்டு அதுலயே அடஞ்சு கெடக்காம அத விட்டு வெளில வாங்க. உலகம் ரொம்ப பெருசு. நமக்காக இன்னும் எவ்வளவோ ஆச்சர்யங்களும் சந்தோசங்களும் நட்புக்களும் காத்துகிட்டு இருக்கலாம்.
பார்க்குற பார்வைலயும் எடுத்துக்கொள்ளும் விதத்திலும் தான் இருக்கு ஏமாற்றங்களும் ஏற்றுக்கொள்ளுதல்களும்.. வாழப் பழகுங்கள்.
:-)
.
.
Comments
நல்ல பகிர்வு, நன்றி ..!
அருமையான பகிர்வு..........
பகிர்வுக்கு நன்றி சகோ
பொருட்பால்
வினைத்திட்பம்
664வது குறள் ....!
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்...!
"தத்துவம்" சொல்றது ஈஸிங்கோ...!
ஆனா...!
செய்வது...!
செயல்படுவது...!
கஷ்டங்கோ...!
மொபைல்போன அதிகநேரம் பயன்படுத்தாதீங்கோ...! அதனால் ஏற்படும் கதிர்வீச்சினால் எதிர்காலத்தில் சொல்லொணா துன்பங்களைக் கொண்ட நோய்கள் தாக்கும்னு சொல்றாங்க... காட்டு கத்தல் கத்துறாங்க அறிவியற் மேதைகள்...!
நாம கேட்குரோமா...! இல்லையே...!
கம்ப்யூட்டர் முன்னாடி அதிகநேரம் உட்காராதீங்கோ... ஸ்பைநெல் கார்ட் ப்ராப்ளம்...! பேக்பெயின் பிராப்ளம்...! வரும்னு டாக்டர் சொன்னா கேக்கிரோமா நானும்... நீங்களும்...!
இல்லையே...!
அதுனால...!
"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்...!
கடந்தவாரம் தாங்கள் முகநூலில்...!
திருக்குறள் மனப்பாடம் செய்வதில் என்ன பயன்..? என்று கேட்டிருந்தீர்கள்...!
அதனால்தான்...!
அய்யன் வள்ளுவன்...!
கூலியாள் முதல் கும்மிடும் தெய்வம் வரையிலும் அனைவருக்கும் வாழ... நல்வாழ்வு வாழ வழிகட்டியுள்ளான்...!
படித்துப் பாருங்கள்
வாழ்க்கைக் கொடுத்தவன்