பதிவர் சந்திப்பும் களைகட்டிய பதிவுலகமும்..



(சந்திப்புல கலந்துகிட்டவங்க தான் அதுபற்றிய பதிவு போடணுமா என்ன? கலந்துக்கலைனாலும் நாங்களும் எழுதுவோம்ல..)
ரொம்ப நாளைக்குப் பின் சமீபத்தில் பதிவுலகம் களைகட்டியது. இதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது சென்னை பதிவர் சந்திப்பு என்பதை யாராலும் மறுக்க முடியாது. போன வாரம் முழுக்க பதிவர்களுக்கிடையே இதுபற்றி எழுந்த சர்ச்சைகளும் சண்டைகளும் அனைவரும் அறிந்ததே.. இந்த வாக்குவாதங்கள்கூட, பதிவர் சந்திப்பு பற்றிய ஒரு வித எதிர்பார்ப்பைத் தூண்டிவிட்டது என்றே சொல்லலாம்.
என்னால் சென்னைப் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ள முடியல. ஆனாலும் அதில் கலந்துகொண்டவர்கள் பகிர்ந்த பதிவுகளும் புகைப்படங்களும் சந்திப்பில் கலந்துகொள்ளாத குறையை நீக்கி நிறைவைத் தந்தது. முகம் தெரியாத, பதிவுகள் மூலமே பழகிய பல நண்பர்கள் ஒன்றாய் இணைவதற்கு இதுமாதிரியான சந்திப்புகள் பெரிதும் உதவுகிறது. விழா பற்றிய நிறை குறை விமர்சனங்கள் வரலாம்.. வராமலும் போகலாம். ஆனாலும் விழா சிறப்பாய் அமைய பாடுபட்டவர்களுக்கு முதலில் எனது பாராட்டுக்கள்.
சரி விஷயத்துக்கு வருவோம்..
கொஞ்ச நாளாவே பல பதிவர்கள் பதிவெழுதுறத குறைச்சிட்டாங்க.. நிறுத்திட்டாங்கனு கூட சொல்லலாம். சிபி செந்தில், சங்கவி சதிஷ், தமிழ்வாசி பிரகாஷ், இன்னும் ஒரு சில பதிவர்கள் தவிர நிறையபேர் காணாமப் போயிட்டாங்க. பல காரணங்களுடன் ஆர்வம் குறைந்தமையும் ஒரு முக்கிய காரணம். ஏனோதானோனு பின்னூட்டமும், நட்பு வட்டார கும்மியுமே இடையில் நிலவியது. பலருடைய பக்கங்களில் சுயதம்பட்டங்களும் தனிப்பட்ட விமர்சனங்களும் மட்டுமே அதிகமாவே இருந்தது.
இதுல வருத்தப்பட வேண்டிய இன்னொரு விஷயம், சிலருடைய வலைப்பக்கம், வார இதழ்களில் வெளிவரும்குற ஒரே காரணத்துக்காக மட்டும் பதிவெழுதப்படுதுங்குறது தான். பதிவுலகம்குறது நம்மளோட எழுத்துக்களுக்கு கிடைக்கும் மிகச் சிறந்த அங்கீகாரம். அதை இப்படி கொச்சைப்படுத்த வேண்டாம்குறது தான் என்னுடைய ஆதங்கம். எதைப் பற்றியும் கவலைப்படாமல், பல பிரபல மற்றும் பிரபலமாகாத பதிவர்கள் தொடர்ந்து நல்ல பதிவுகளை எழுதுறதுதான் இங்க இருக்குற ஒரே ஆறுதல்.
இது எல்லாத்தையும் தாண்டி, போன வாரம் பதிவர்களுக்குள் நடந்த விவாதங்களும் ஆதரவுகளும் கொஞ்சம் “அப்பாடா“னு சொல்ல வச்சுச்சு. பதிவுலகத்துல ஆரம்பநிலைல இருந்தவொரு சுறுசுறுப்பு மறுபடியும் வந்துச்சுனு தான் சொல்லணும். (அதுக்காக மாறி மாறி சண்டைபோடணும்னு சொல்ல வரல). பதிவுகள் சரமாறியா எழுதப்பட்டுச்சு. அதுவே ஒரு ஆரோக்யமான விஷயம் தான்.
விவாதம் எதுனால.. யார் ஜெயிச்சது.. யார் விட்டுக்கொடுத்தது.. யார் கழுவி கழுவி ஊத்துனதுங்குற அலசலைக் கொஞ்சம் தள்ளிவச்சுட்டுப் பார்த்தோம்னா, பதிவர்களுக்குள் இருந்த பழைய வேகத்தையும், ஒற்றுமையையும் பாராட்டியே ஆகணும். (அவ்வ்வ்வ்.. நா சரியாதான் பேசுறேனா? போன வாரப் பதிவுகள்லயிருந்தே கொஞ்சம் டெரரா இருக்கு).
தொடர்ந்து பதிவுலகில் நல்லநல்ல பதிவுகளும் அதற்கான வரவேற்பும் அங்கீகாரமும் இடம்பெறும் என்ற நம்பிக்கையுடன்..
அடுத்த பதிவில் சந்திப்போம்..
.
.

Comments

சிறப்பான கருத்துக்கள்! பதிவுலகம் புதுபொலிவு பெறட்டும்!

இன்று என் தளத்தில்
நினைவுகள்! கவிதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html

பதிவர்களை சண்டை போட அழைக்கும் இந்திரா...

அடுத்த தலைப்பு ரெடியாகிடுச்சுங்க...
// s suresh //

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சுரேஷ்
// சங்கவி said...

பதிவர்களை சண்டை போட அழைக்கும் இந்திரா...

அடுத்த தலைப்பு ரெடியாகிடுச்சுங்க...//

தலைப்பில்லாமயே பதிவ தேத்துறவரு நீங்க.. தலைப்பு குடுத்தா சொல்லவே வேணாம்..
ம்ம் நடத்துங்கப்பூ..
MARI The Great said…
நல்ல பதிவுகள் அங்கீகரிக்கபடாததும் நிறைய பேர் பதிவு எழுதுவதை நிருத்தியதர்க்கு ஒரு காரணம்!
கொஞ்ச நாளாவே பல பதிவர்கள் பதிவெழுதுறத குறைச்சிட்டாங்க.. நிறுத்திட்டாங்கனு கூட சொல்லலாம். சிபி செந்தில்.////

அண்ணன் சிபியை இந்த லிஸ்டில் சேர்தமைக்கு வன்மையான கண்டனங்கள்.. ஹி..ஹி...

சிபி ஒரு நாளுக்கு மூணு முதல் ஐஞ்சு பதிவுகள் போடறார் சகோ...
ஆமா ஆமா சகோ, தாங்கள் கூட முக நூல் பக்கம் போய் விட்டீர்களே.... (கொளுத்தி விட்டாச்சி...அப்பாடா)
நீங்களும் இப்படி உள்குத்து பதிவு போடா ஆரம்பிச்சிட்டீங்களா ....நல்லது
தொடர்ந்து பதிவுலகில் நல்லநல்ல பதிவுகளும் அதற்கான வரவேற்பும் அங்கீகாரமும் இடம்பெறும் என்ற நம்பிக்கை க்கு வாழ்த்துகள்!
பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...
Rasan said…
அருமையான கருத்துக்கள்
// தொடர்ந்து பதிவுலகில் நல்லநல்ல பதிவுகளும் அதற்கான வரவேற்பும் அங்கீகாரமும் இடம்பெறும் என்ற நம்பிக்கையுடன்.. // என்ற நம்பிக்கையில் தான் என்னை போன்ற பதிவர்கள் அடியேடுத்து வைத்துள்ளனர்.
தொடருங்கள்.
என்னுடைய தளத்தில்

ஏணிப்படி

தன்னம்பிக்கை

நம்பிக்கை

Unknown said…
உங்க பங்குக்கு கொளுத்தி போட்டாச்சின்னு சொல்லுங்க..அவ்வ்!
Doha Talkies said…
நிகழ்ச்சிக்கு வரமுடியாத எங்களை போன்ற அயல்நாட்டில் பணியற்றுபவர்கள் உங்கள் பதிவின் மூலம் நடந்ததை அறிந்துக்கொண்டோம்..
மிக்க மகிழ்ச்சி.
http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest.html
சகோ நீங்களுமா..?
// Doha Talkies said...

நிகழ்ச்சிக்கு வரமுடியாத எங்களை போன்ற அயல்நாட்டில் பணியற்றுபவர்கள் உங்கள் பதிவின் மூலம் நடந்ததை அறிந்துக்கொண்டோம்..
மிக்க மகிழ்ச்சி.//

அவ்வ்வ்..
நிகழ்ச்சியில் என்ன நடந்ததுனு நா சொல்லவேயில்லையே...
படிக்காம பின்னூட்டம் போட்டுட்டீங்களா?
// வரலாற்று சுவடுகள் said...

நல்ல பதிவுகள் அங்கீகரிக்கபடாததும் நிறைய பேர் பதிவு எழுதுவதை நிருத்தியதர்க்கு ஒரு காரணம்!//

சரியாச் சொன்னீங்க..
// தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணன் சிபியை இந்த லிஸ்டில் சேர்தமைக்கு வன்மையான கண்டனங்கள்.. ஹி..ஹி...

சிபி ஒரு நாளுக்கு மூணு முதல் ஐஞ்சு பதிவுகள் போடறார் சகோ...//

சிபி செந்தில், சங்கவி சதிஷ், தமிழ்வாசி பிரகாஷ், இன்னும் ஒரு சில பதிவர்கள் “தவிர"னு சொல்லியிருக்கேனே..
சிபி சார் கூகுள் சொன்னா கூட கேக்காம பதிவெழுதுறவராச்சே..
// மனசாட்சி™ said...

ஆமா ஆமா சகோ, தாங்கள் கூட முக நூல் பக்கம் போய் விட்டீர்களே.... (கொளுத்தி விட்டாச்சி...அப்பாடா) //


இங்குட்டு காத்தாடிகிட்டு இருந்துச்சு.. அதான் அங்குட்டு போயிட்டேன். ஆனாலும் வாரம் ஒரு பதிவு எழுதிகிட்டு தான் இருந்தேனுங்க. (எப்புடியெல்லாம் சமாளிக்க வேண்டியதாயிருக்கு.. அவ்வ்வ்)
//அஞ்சா சிங்கம் said...

நீங்களும் இப்படி உள்குத்து பதிவு போடா ஆரம்பிச்சிட்டீங்களா ....நல்லது //


உள்குத்தும் இல்ல.. வெளிக்குத்துமில்ல.
இப்படியெல்லாம் உசுப்பேத்தப்படாது.. சொல்லிப்புட்டேன்.
// இராஜராஜேஸ்வரி said...

தொடர்ந்து பதிவுலகில் நல்லநல்ல பதிவுகளும் அதற்கான வரவேற்பும் அங்கீகாரமும் இடம்பெறும் என்ற நம்பிக்கை க்கு வாழ்த்துகள்!//


நன்றி.. நன்றி.. நன்றி..
நம்பிக்கையுடன் நடைபோடுவோம்.
// Rasan said...

அருமையான கருத்துக்கள்
// தொடர்ந்து பதிவுலகில் நல்லநல்ல பதிவுகளும் அதற்கான வரவேற்பும் அங்கீகாரமும் இடம்பெறும் என்ற நம்பிக்கையுடன்.. // என்ற நம்பிக்கையில் தான் என்னை போன்ற பதிவர்கள் அடியேடுத்து வைத்துள்ளனர்.
தொடருங்கள்.//

வாங்க.. வாங்க..
எங்க ஜோதியில் நீங்களும் ஐக்கியமாகுங்க.
பிரபலமானதும் இங்குட்டு வராம இருக்கப்படாது.. ஆமாம்.
// விக்கியுலகம் said...

உங்க பங்குக்கு கொளுத்தி போட்டாச்சின்னு சொல்லுங்க..அவ்வ்!//


ஹிஹி..
// Sasi Kala said...

சகோ நீங்களுமா..?//


ஏதோ நம்மளால முடிங்சதுங்க..
நீங்களும் சென்னைப் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டீர்கள் என்று நினைத்துதான் படித்தேன்!
.

எனக்கும் அந்த நம்பிக்கை உண்டு
அது பதிவர் சந்திப்பில் பல பதிவர்களை
நேரடியாகச் சந்தித்துப்பேசியதில் உறுதிப்பட்டது
வாழ்த்துக்களுடன்...
பதிவுலகில்...!
தொலைந்து போனவர்கள்...!
காணாமற் போனவர்கள்....!
ஏராளம்...! ஏராளம்...!
தொலைந்துபோனவர்கள் எனப்படுவோர்... பதிவுலகைவிட்டு... முகநூலுலகம்.. ட்விட்டருலகம் ... போனவர்கள்...!
காணாமற்போனவர்கள் எனப்படுவோர்... பதிவுலகைவிட்டு முற்றிலும் காணாமற்போனவர்கள்...!
இதில்...
தொலைந்துபோனவராகிய நீங்கள்...!
பதிவுலகம் பற்றி பதிவிடுவது...

??????????????????????????????????

// ஸ்ரீராம். said...

நீங்களும் சென்னைப் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டீர்கள் என்று நினைத்துதான் படித்தேன்!//

என்னால கலந்துக்க முடியலங்க. அதுனால தான் சக பதிவர்களின் புகைப்படப் பகிர்வுகளைப் படிச்சுகிட்டுருக்கேன்.
// Ramani said...

எனக்கும் அந்த நம்பிக்கை உண்டு
அது பதிவர் சந்திப்பில் பல பதிவர்களை
நேரடியாகச் சந்தித்துப்பேசியதில் உறுதிப்பட்டது
வாழ்த்துக்களுடன்...//

நன்றிங்க.
வருகைக்கும் கருத்துக்ககும்.
//காஞ்சி முரளி //

வருகைக்கு நன்றி முரளி சார்.
நான் தொலைந்துபோனேன்னு உங்களுக்கு யார் சொன்னது? பதிவுகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டேனே தவிர, நிறுத்தவில்லை. நீங்க இந்தப் பக்கம் வரலங்குறதுக்காக, என் தளத்தில் பதிவுகள் எழுதப்படலனு சொல்லாதீங்க சார்.
மேலும் வலைப்பூவில் பதிவெழுதும் பெரும்பாலான பதிவர்களுக்கு முகநூலிலும் ட்விட்டரிலும் இன்னும் பல தளங்களிலும் கணக்குள்ளது (உங்களுக்கும்). அது ஒன்னும் தப்பில்லனு நெனைக்கிறேன். ஒரு நாளைக்கு மூணு பதிவெழுதுறவங்க தான் பதிவுலகம் பத்தி பேசணுமா என்ன? மாத்திற்கு நான்கைந்து பதிவெழுதுறவர்களும் பதிவர்கள் தான் முரளி சார். அந்த வகைல நானும் பதிவர் தான். (நானும் ரவுடி நானும் ரவுடி)
:-)
"ஹேய்..! எல்லாருக்கும் சொல்றேன்...!

நானும் பதிவர்தான்...! பதிவர்தான்...!"

இப்படி நீங்களே சொல்ற அளவுக்கு வந்துடீங்களேன்னுதான் வருத்தமாயிருக்கு...!



நாங்க வந்து கமெண்ட் போட்டுட்டுதான் போறோம்...!

நாங்க "தொலைந்துபோனர்வகளாய்... காணாமற்போனவர்களாய்... இருக்கலாம்...!

காரணம்...!

நாங்கள் குளத்தைத்தேடி வந்து இளைப்பாறும் பறவைகள்...!

இந்த குளம் இல்லைலேன்னா... இன்னொரு குளம் நோக்கி எம் பயணம் தொடரும்...!

ஆனால்...! குளம்... இடமாற்றம் முடியாதே...!

என் கவலையெல்லாம்...

குளம் சுருங்கி... குட்டையாகி....

பின் அதுவும் சுருங்கி... சிறுதேக்கம் ஆகக்கூடாதென்பதுதானே... தவிர வேறில்லை...!



அதோடு... என் சூழ்நிலை காரணமாய் தினமும் வராவிட்டாலும் எல்லாப் பதிவையும் நான் படிப்பது என் இயல்பு...! முன்பதிவுக்கும் என் கருத்துக்களை சொல்லிச் சென்றுள்ளேன்...! சில பதிவுகளுக்கு கருத்துக்கள் இடுவதில்லை... எனக்கு உடன்படாத பதிவுக்கு நான் கருத்து தெரிவிப்பதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்...! குறிப்பாய் சில "கும்மி" பதிவுகளுக்கு நான் கருத்துரை அளிப்பதில்லை என்பதை தங்கள் நன்கு அறிவீர்கள்...!



பதிவுலகில்... நல்ல பதிவர் எனப்படுபவர் சிலர் மட்டுமே உண்டு என்பதை தங்கள் மறுக்கமாடீர்கள் என நினைக்கிறேன்...! அப்பதிவர்களும் ஓர் சராசரிகளில்... ஓர் சராசரியாய்... சரிந்துபோவது வேதனை தரும் விஷயம்....!



நல்நட்பு என்பது தவறுகளை சுட்டிக்காட்டுவதுதான் என்பது என் எண்ணம்... ஆதலால்... என்னைபொருத்தளவில் நான் வந்துபோகும் சில பதிவர்களில் நீங்கள் ஒருவர்... உங்கள் பழைய கவிதைகள்.. சில நல்பதிவுகள்... இன்றும் என் நினைவுக்கு வருவதால்தான் ஓர் அக்கறையுடன் எனது மேற்சொன்ன கேள்வி..!



இதனை தங்களுக்கு மட்டுமல்ல... மலிக்கா பாரூக்... ஜெய்லானி... போன்றவர்களின் பதிவுகளிலும் வற்புறுத்தியுள்ளேன்...!

எப்போதும்... நீங்கள் நீங்களாய் இருங்கள்... பின்னூட்டமிடுபவர்கள் கருத்துக்களை தெரிவிக்கவில்லை அல்லது குறைந்துவிட்டது என்பதாலேயே உங்கள் பதிவு நற்பதிவல்ல என்று முடிவுகட்டிவிடாதீர்...!



"போற்றுவார் போற்றலும்... தூற்றுவார் தூற்றலும் சரிசமமாய் கொண்டு... பழையபடி தொடர் பதிவிடுங்கள் என்றுதான் சொல்கிறேன்....!



//காஞ்சி முரளி//

மனிதருக்கே உரிய வீண் வாதங்களைத் தவிர்த்துவிட்டு பதில் அளிக்க நினைக்கிறேன் முரளி.

உங்கள் கருத்துக்களின் ஒரு உண்மையை ஏற்றுக்கொள்வேன். அது.. என் பதிவுகளின்.. எழுத்துக்களின் வேகம், வீரியம் நடுவில் சிறிது நாட்கள் சற்று பின்தங்கியது என்பது தான்.
முகநூலோ மற்றவைகளோ பொழுதுபோக்கிற்கு என்றாகிடலாம். வலைப்பூ இவற்றிலிருந்து கட்டாயம் வேறுபடும். எனக்கு “இந்திரா“ என்ற அங்கீகாரம் கிடைத்தது இங்கு தான். எழுத்துக்களின் ஏக்கங்களும் ஆதங்கங்களும் நிறைவேறியது இந்த தளத்தில் தான். இடையில் சிறிது காலம் பதிவுகளில் தடையேற்பட்டதை மறுக்க முடியாது. இனி அத்தவறு நடக்காது என்று நிச்சயம் சொல்வேன்.
உங்கள் அக்கறைக்கும் நட்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

வழக்கம்போல இனி முரளியின் பின்னூட்டங்களை எதிர்நோக்குகிறேன்.
:-)
//அவ்வ்வ்..
நிகழ்ச்சியில் என்ன நடந்ததுனு நா சொல்லவேயில்லையே...
படிக்காம பின்னூட்டம் போட்டுட்டீங்களா//

பதிவர் சந்திப்பைப் பற்றி விளக்கமாக உங்களுடைய பதிவின் மூலம் அறிந்து கொண்டோம். நன்றி.

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

மரணவலி தரும் உன் மௌனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்