நட்பொன்று தொலைந்துபோனது..




தூசு தட்டியெடுத்த பழைய டைரிகளில் ஒளிந்திருக்கிறது
பால்ய நட்புக்கான பரவலான அடையாளங்கள்..!
கவிதையென்றும் காவியமென்றும்
என்னென்னவோ கிறுக்கல்கள் தாங்கியபடி
நைந்துகிழிந்த தாள்களுள் நியாபகங்கள் நிறைந்திருக்க,
ஒவ்வொன்றைத் தொடர்ந்தும் கேள்விகளாய் வந்துபோகிறது..
தொலைந்த நட்புக்கான தேடல்களுக்காய்!!
.




மெலிதான புன்னகையுடனும்,
நலமா? என்ற கேள்வியுடனும்
பதிலுக்குக் காத்திராமல் பகட்டாய்க் கடந்து,
யாரென வினவிய துணையிடம்
கூடப் படிச்சவங்கஎன்ற உன் வார்த்தைகளில்
என் நட்பொன்று தொலைந்துபோனது..!!
.





நமக்குள்
அண்ணாஎன்ற ஆயுதம் தேவையில்லை..!
சகோஎன்ற சமத்துவம் அவசியமில்லை..!
நண்பன்என்பதிலும் தோழிஎன்பதிலும்
நட்பென்பது உண்மையாயிருக்கும் பட்சத்தில்
.

Comments


“அண்ணா“ என்ற ஆயுதம் தேவையில்லை..!
“சகோ“ என்ற சமத்துவம் அவசியமில்லை..!
“நண்பன்“ என்பதிலும் “தோழி“ என்பதிலும்
நட்பென்பது உண்மையாயிருக்கும் பட்சத்தில்




நிச்சயமாக.
அருமையான வரிகள்
மனம் தொட்ட கவிதை
தொடர வாழ்த்துக்கள்

.
எப்போதுமே
எனக்கு பிடிக்கும் தலைப்பு இது...

காதல்... எனும் தலைப்பைவிட
நட்பு எனும் தலைப்பு அதிகம் விரும்புவன் நான்...

அதனால்தான்...
என்னோட டைட்டிலே...நட்புடன் என முடியும்...

காதலைவிட ஆத்மார்த்தமானது நட்பு என்பது என் எண்ணம்...

நட்பெனும் தலைப்பில் கவிதை என்பதால் அருமையான கவிதை...

குறிப்பாக...

///தூசு தட்டியெடுத்த பழைய டைரிகளில் ஒளிந்திருக்கிறது
பால்ய நட்புக்கான பரவலான அடையாளங்கள்..!
கவிதையென்றும் காவியமென்றும்
என்னென்னவோ கிறுக்கல்கள் தாங்கியபடி
நைந்துகிழிந்த தாள்களுள் நியாபகங்கள் நிறைந்திருக்க,
ஒவ்வொன்றைத் தொடர்ந்தும் கேள்விகளாய் வந்துபோகிறது..
தொலைந்த நட்புக்கான தேடல்களுக்காய்!!////

இந்த வரிகள்... அருமை...

இளமையில் கருவாகும் நட்பு...
வீடு,மனைவி,மக்கள்,அண்ணன்,தம்பி,உற்றார், உறவினர் வாழ்க்கையை ஆக்கிரமிக்க...

நடுவில் தொலைந்துபோய்...
இறுதிநாட்களில்...
மீண்டும் தொடரும் பந்தம்தான் நட்பு...

நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்...

ஆமினா said…
//யாரென வினவிய துணையிடம்
“கூடப் படிச்சவங்க“ என்ற உன் வார்த்தைகளில்
என் நட்பொன்று தொலைந்துபோனது..!!
//

பாவமா தான் இருக்கு என்ன பண்ண... :-)))

ஆமினா said…
//நமக்குள்
“அண்ணா“ என்ற ஆயுதம் தேவையில்லை..!
“சகோ“ என்ற சமத்துவம் அவசியமில்லை..!
“நண்பன்“ என்பதிலும் “தோழி“ என்பதிலும்
நட்பென்பது உண்மையாயிருக்கும் பட்சத்தில்
//

நச்...
இந்திரா...

ஆண்களாக இருந்தால் அவர்களின் நட்பை எப்பொழுதுமே புதுப்பித்தக் கொள்கிறார்கள்.
பெண்கள்...???

தோழமையை நாம் அன்னையின் அன்பிற்கு இணையாக நினைத்தாலும் உலகம் வேறுவிதமாகத் தான் பார்க்கும் என்பதற்கு

//யாரென வினவிய துணையிடம்
“கூடப் படிச்சவங்க“ என்ற உன் வார்த்தைகளில்
என் நட்பொன்று தொலைந்துபோனது..!!

அழகான விளக்கம்.
வாழ்த்துக்கள்.
Admin said…
/யாரென வினவிய துணையிடம்
“கூடப் படிச்சவங்க“ என்ற உன் வார்த்தைகளில்
என் நட்பொன்று தொலைந்துபோனது/

நிதர்சனம்..
///“அண்ணா“ என்ற ஆயுதம் தேவையில்லை..!
“சகோ“ என்ற சமத்துவம் அவசியமில்லை..!
“நண்பன்“ என்பதிலும் “தோழி“ என்பதிலும்
நட்பென்பது உண்மையாயிருக்கும் பட்சத்தில்////

மிகச் சிறந்த வரிகள். 'நறுக் கென்று சொல்லியவிதம் நன்று

அண்ணா, சகோ, தங்கச்சி எனபதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் இந்த வலைதளத்தில் சில பேரை அப்படி அழைக்க தள்ளபடுகிறோம். எனக்கு பெயர் சொல்லி அழைப்பதில் மட்டும் உடன்பாடு அண்ணா, சகோ, தங்கச்சி எனபதில் எனக்கு உடன்பாடு இல்லை
.
.வாழ்த்துக்கள் தொடருங்கள்
அருமையான கவிதை இது கவிதை என்பதை விடவும் ஓர் உண்மையை உரக்கச் சொன்னதால் இவைகள் நிஜங்கள்
என உணர வைத்தது தோழி !...மேலும் தொடர வாழ்த்துக்கள் .
எனக்கு உரிமையா அழைக்க பிடிக்கும் மரியாதை தாண்டி வாடி போடி னு ஒகே வா இந்திரா. (சும்மா)

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..