நான் விதிவிலக்கா? உதாரணமா?
சண்டையிடும் நாட்களில் நீ சொல்லும் “ஐ ஹேட் யூ“க்கள்
அதிகமாய் உன்னை நேசிக்க வைக்கின்றன..
உனக்கான என் காத்திருப்புகள்
ஒட்டுமொத்தமாய் உருக்குலைந்த அந்நொடியில்
உண்மையாகவே உணரப்பட்டேன்..
உள்மனதில் ஏதோ ஒரு ஊனம்
உள்ளூரக் குடிபுகுந்ததுபோல..!!
பட்டாம்பூச்சிகளைக் கூட
அடைத்துவைக்கப் பிடிக்காதவள் நான்.
ஆனால்
என் நினைவுச் சிறைக்குள்
உனை அடக்கிவிடவே துடிக்கிறேன்..!!
நாமில்லா நமது நாட்களும்
நம்மை நிறைத்தே நகர்ந்துவிடுகிறது..
நமக்கான நினைவுகளைச் சுமந்தபடி..!!
நீ
இல்லை என்பது மனதிற்குப் புரிந்தாலும்,
எனக்காக நீ காத்திருந்த இடத்தைக்
கடக்கும்போதெல்லாம்
அனிச்சையாய் உனைத் தேடும் என் கண்களை
என்ன செய்வது?
எனக்காக நீ காத்திருந்த இடத்தைக்
கடக்கும்போதெல்லாம்
அனிச்சையாய் உனைத் தேடும் என் கண்களை
என்ன செய்வது?
விதிவிலக்குகள்
உதாரணங்களாகாது என்பார்கள்.
உன்னை வெறுக்கிறேன்.. நேசித்தவாறே..
நான் விதிவிலக்கா? உதாரணமா?
உன்னை வெறுக்கிறேன்.. நேசித்தவாறே..
நான் விதிவிலக்கா? உதாரணமா?
உடல் கிழித்து ரத்தம் குடிக்காமல்,
உணர்வு கிழிக்கப்பட்டு
நினைவுகளைக் குடித்துக்கொண்டிருக்கிறேன்..
காட்டுமிராண்டியாய் அல்ல..
உன் காதல் மிராண்டியாய்..!
எத்தனை
பரிசுப்பொருட்கள் தந்தாலும் ஈடாகாது..
இறுக்கமாய் என் விரல் கோர்த்து
“நான் இருக்கிறேன்“ என்ற உன் வார்த்தைக்குமுன்!!இறுக்கமாய் என் விரல் கோர்த்து
மறப்பதென்பது முடியாதெனினும்
மறந்தாற்போல நடிப்பதென்பது முடியும்வரை
என்னால் உன்னை மறக்க முடியும்.
நான் தனிப்பட்டு இருந்ததேயில்லை..
என் தனிமையும் உன் நினைவுகளும் இருக்கும்வரையில்!!
.
.
Comments
அத்தனையும் காதல் பேசுகிறது...
இறுக்கமாய் என் விரல் கோர்த்து
“நான் இருக்கிறேன்“ என்ற உன் வார்த்தைக்குமுன்!!//
சத்தியமான வார்த்தைகள்
எனக்காக நீ காத்திருந்த இடத்தைக்
கடக்கும்போதெல்லாம்
அனிச்சையாய் உனைத் தேடும் என் கண்களை
என்ன செய்வது? --- உண்மை வரிகள்..... எனக்குள்ளும் இந்த தேடுதல் உண்டு
காதலிப்போர் மட்டுமே
ரசிக்கும்...
பாராட்டும்... கவிதை வரிகள்...
என்செய்வது...
என்பார்வை இந்த பக்கமும் போவதால்...இக்
கவிதை வரிகள்
கனக்கின்றன...
மறந்தாற்போல நடிப்பதென்பது முடியும்வரை
என்னால் உன்னை மறக்க முடியும்.
வலியான வார்த்தைகள்
//Hemalatha //
//கவிதை வீதி... // சௌந்தர் //
// பால கணேஷ் //
கருத்துக்கு நன்றிங்க..
//rufina rajkumar //
நன்றிங்க..
சுட்ட பழமா, சுடாத பழமா ?//
சொந்தமா எழுதுனதுங்க..
(சுட்டதுனா அதையும் சொல்லிருப்போமாக்கும்..)
//joe.....! //
//காஞ்சி முரளி //
//Tamilraja k //
நன்றிங்க..