வெகுநேரப்
பேச்சிற்குப்பின்
கிளம்பிச்செல்ல எத்தனிக்கிறேன்..
விரல்கள் கோர்த்தபடி
விட்டகல மறுக்கிறாய்..!
விருட்சமாய் வளர்ந்திருப்பினும்
வேரூன்றித் துளிர் விடுகிறது
ஆங்கோர் காதல்..!!
.
விரல்கள் பிணைத்துக்கொள்வதைப் போல
அவ்வளவு எளிதாக இருப்பதில்லை...
பிணைத்த விரல்களிலிருந்து விடுவித்துச்
செல்வது..!!
.
Comments
சமயங்களில் சிக்கிக் கொண்டதுபோல்
திணற அடிக்கவும் செய்கிறது
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்