Kon-Tiki - என் பார்வையில்..

“ கடலுக்குள் ஒரு சாகசப் பயணம் “ இந்த ஒற்றை வரியினுள் உயிர் பிழைப்பதற்கான விளிம்பு நிலை சந்தர்ப்பங்கள் எத்தனை அடங்கியிருக்கிறது!! கடற்கரையில் அலைகளை வேடிக்கை பார்த்து சிலிர்க்கும் அதே நேரம் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.. காற்றால் மட்டுமே இயங்கும் மரத்தாலான படகு , சுற்றிலும் சுறாக்களும் திமிங்கலங்களும் உங்களை விழுங்கக் காத்திருக்கின்றன. கொஞ்சம் உணவு , சில நண்பர்கள் , அதோடு சுமார் 4000 மைல்களை கடந்தாக வேண்டும் என்ற வைராக்கியம் மட்டும் கைவசம் இருக்கிறது. இது தான் Kon-Tiki . பிரபஞ்சத்தி ற்கு அடுத்ததாக ஆச்சர்யங்கள் நிறைந்ததெனில் அது கடல் தான். இன்னும் இன்னும் என எத்தனை தேடினாலும் ஏதாவது கிடைத்துக்கொண்டே இருக்கும். அதுபோன்றதொரு சாகசப் பயணத்திற்கு நம்மை இழுத்துச் செல்கிறது திரைப்படம். “ Cast away”, “Life of Pi ” திரைப்படங்கள்போல் வழி தவறி கடலுக்குள் மாட்டிக்கொள்வதாக அல்லாமல் , திட்டமிட்டே ஒரு ஆராய்ச்சிக்கென தன் குடும்பத்தைப் பிரிந்து மேற்கொள்ளும் பயணத்தின் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு ஸ்வாரஸ்யங்கள். படகின் அடிப்பகுதி கொஞ்சங்கொஞ்சமாய் கரைந்துகொண்டே வருவதாய் கூறும்போது , இவர்கள் சீக்கிரம்...