Extremely Loud & Incredibly Close - என் பார்வையில்..

தந்தையின் மரணத் தருவாயினுடைய கடைசி நொடிகளை தெரிந்தே தவறவிடுவதன் குற்ற உணர்ச்சி, ஒரு சிறுவனை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பது தான் “Extremely Loud & Incredibly Close”. படம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கும் ஒரு கதாப்பாத்திரம்.. கேட்கப் பொறுமையிருந்தால் நிச்சயம் அவன் பேசுவதன் வலி நமக்குப் புரியும்.
ட்வின் டவர் வீழ்ந்த 9/11 சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட திரைக்கதை. ஒரு விபத்தை வெறும் செய்தியாக மட்டுமே வேடிக்கை பார்ப்பவர்களுக்கு, அதே விபத்தில் தனக்கே தனக்கான ஏதோ ஒன்றை இழந்து தவிக்கும் முகம் தெரியாத யாரோ ஒருவருடைய இழப்பை புரிய வைக்க முயற்சித்திருக்கின்றனர்.
தந்தையின் மரணத்திற்குப் பின் தற்செயலாய் கைக்குக் கிடைக்கும் சாவியை வைத்துக்கொண்டு அதன் மூலத்தை தேடிப் புறப்படும் சிறுவன், ஒவ்வொரு காட்சியிலும் எதையாவது பார்த்து மிரண்டு ஓடும்போது சில நேரம் நம்மையும் பிரதிபலித்துச் செல்கிறான். Tom Hanks, Sandra Bullock வழக்கம்போலவே கதாப்பாத்திரம் உணர்ந்த நடிப்பு. வாய்பேச முடியாத தாத்தா க்ளாசிக் படைப்பு.
அறிமுகமில்லாத சாவியின் உரிமையாளரிடம் தன் தவறுக்கான பாவமன்னிப்பு கேட்டு அழும் காட்சி அழுத்தம். நேசத்திற்குரியவா்களின் இழப்பு எத்தனை வேதனையானது என்பதை நம் விரல் பிடித்து கதை சொல்லியபடியே கடந்து செல்கிறான்.
இறுதிக்காட்சியில், யாருமறியாமல் பத்திரப்படுத்திய தந்தையின் வாய்ஸ் மெசேஜை சுட்டிக்காட்டியபடி, “Anybody there? என்று அவர் கேட்கல. Are you there?னு கேட்ருக்கார். நான் அங்க தான் இருக்கேன்னு அவருக்குத் தெரிஞ்சிருக்குஎன்று அழாமல் அழுத்தமாய் சொல்லும் காட்சி திரைப்படத்தின் மையம்.

# Extremely Loud & Incredibly Close (English)

Comments

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்