The Fault in our Stars - என் பார்வையில்..


ஒன்றிலிருந்து பத்துக்குள் நமக்கு ஏற்படும் வலிகளை அளவிடச் சொன்னால் நாம் என்ன செய்வோம்? அதிகபட்சமாய் ஒன்பது வரைக்கும் காட்டுவோம் தானே? (எப்போதாவது பத்தையும்). அந்தக் கடைசி பத்தாவது எண்ணை நாம் சேமித்து வைத்துக்கொண்டே இருப்போம். அதாவது பத்துக்கு பதிலாய் ஒன்பது என்றே குறிப்பிட்டுக் கொண்டிருப்போம். அந்த மன தைரியம் தான் ”The Fault in our Stars ” திரைப்படத்தின் அடித்தளம். மரணத்துடன் போராடிக்கொண்டிருக்கும் வெவ்வேறு விதமான புற்றுநோயாளிகளுடைய உணர்வுகளை ஒரு வயலின் இசை போல உணரச் செய்திருக்கிறார்கள். அந்த மெல்லிய காதல், நட்பு, தன்னம்பிக்கை, போராட்டம் அனைத்துமே பார்ப்பவர்களையும் தொற்றிக்கொள்கின்றன.
“I willed myself to imagine a world without us... and what a worthless world that would be.” (நம்மை இழக்கும் இந்த உலகம் எவ்வளவு பயனற்றதாகிறது!)
You put the thing that does the killing right between your teeth.. but you never give it the power to kill you.” (உன்னை கொல்லும் விஷயத்தை மிக நெருக்கமாக வைத்துக்கொள், ஆனால் உன்னைக் கொன்றுவிடுவதற்கான வாய்ப்பை அதற்கு வழங்கிடாதே!)
“The world is not a wish-granting factory“ (உலகம், ஆசைகளை நிறைவேற்றும் தொழிற்சாலை அல்லவே!) போன்ற பக்குவப்பட்ட வசனங்கள் படத்தின் மிகப்பெரிய பலம்.
சில திரைப்படங்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை. சிறு பிரச்சனைகளுக்கே தன் வாழ்வை நொந்துகொள்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.

# The Fault in our Stars (English)

Comments

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்