Posts

என்னைப் பார்த்து சிரிக்கும் உன் கொலுசுகள்

Image
காற்றிற்கும் ஒலியிருக்குமா உண்மையை சொல்.. அது உன் கால் கொலுசின் ஓசை தானே.. எல்லாப் பெண்களின் கொலுசுகளும் சத்தமிடுகின்றன.. உன் கொலுசுகள் மட்டும் சங்கீதம் பாடுகின்றன.. குளியலிலும் பிரியாது உன்னுடனிருக்கும் போதும் உன்னை முந்திக்கொண்டு வெட்கப்பட்டு சிணுங்கும் போதும் மௌனங்களை களைந்து ஊடல்களை உடைத்து கூடல்களை நெருக்கும்போதும் பின் வந்து கண்பொத்தும் தருணங்களில் காட்டிக்கொடுக்கும் போதும் என்னைப் பார்த்து ரகசியமாய் சிரிக்கின்றன.. உன்னுடன் சேர்ந்து உன் கொலுசுகளும்..

காலம் கடந்து...

Image
தனிமையில் இருவரும் பேசவேண்டும் என்கிறாய். கை கோர்த்து கடலோரம் நடக்கலாமா என்கிறாய். திரை அரங்கிற்கு மகிழ்வாக செல்லலாமா என்கிறாய். என்னருகிலேயே இரு என்கிறாய். உன் பிரிவை தாங்க முடியவில்லை என்கிறாய். தொலைபேசியில் அவ்வப்போது சிணுங்குகிறாய். உன் முகம் பார்த்து வாழும் நாட்கள் போதும் என்கிறாய். சின்ன சின்ன சந்தோசங்கள் தான் வாழ்க்கை என்கிறாய். --- மறுப்பை மட்டுமே தெரிவிக்கும் எனக்கு சிரிப்பதா அழுவதா என்று எனக்குத் தெரியவில்லை. இருபது வயதில் நன் உன்னிடம் எதிர்பார்த்ததை எழுபது வயதில் நீ என்னிடம் எதிர்பார்க்கிராயே.. நான் அடைந்த ஏக்கங்கள் இப்போது உனக்குப் புரிந்து என்ன பயன்? உன்மீதாய் என்னுள் அடங்கிப்போன எத்தனையோ எதிர்பார்ப்புகள் வாழ்வின் கடைசி நாட்களில் புரியப்படுகிறது.. இதுவும் ஒரு ஏமாற்றமே அன்றி வேறென்ன?

புதைத்தாலும் வருவேன்..

Image
சிவா காயத்ரியை உயிருக்கு உயிராக நேசித்தான் . அவளும் அப்படிதான். ஒருவர் இல்லாமல் ஒருவர் வாழவே முடியாது என்ற எண்ணம் அவர்களுக்குள் ஆழமாக உருவானது. அவர்கள் காதல் நாளுக்கு நாள் வலுவாக , ஆழமாக , சுவாசமாக வளர்ந்துகொண்டே போனது.. சிவாவின் குடும்ப நிலை.. காயத்ரியின் படிப்பு..   இது தான் அவர்களுக்கு தடையாக இருந்தது. எவ்வளவு நாட்களானாலும் காத்திருக்க தயாராக இருந்தனர் , மாறாத காதலுடன். திடீரென்று அவளுடைய அப்பாவுக்கு அவர்கள் காதல் தெரிய வந்தது. வழக்கமான அப்பா தான். அடி உதை மிரட்டல்.. வீட்டில் சிறை வைக்கப்பட்டாள். அவர்களால் சந்திக்கவே முடியவில்லை. சிவா வேறு வழியில்லாமல் அவள் அப்பாவிடம் அவளை பெண் கேட்டு வீட்டிற்கே போனான். சொந்த பந்தங்கள் சேர்ந்து அவனை விரட்டி விட்டது.. அன்று இரவு தொலைபேசியில் இருவரும் அழுதனர்.   மறுநாள் காலை வீட்டை விட்டு வெளியேறுவது என்று முடிவு செய்யப்பட்டது.   யாருக்கும் தெரியாமல் சிவா ரயில் நிலையம் வந்து அவளுக்காக காத்திருந்தான். நேரம் கடந்தது.. காயத்ரி வரவில்லை. காத்திருந்தான்.. வரவே இல்லை. குழம்பிய அவன் அவளு...

நீ இல்லாத நீ

Image
நீயா இது? என் ஸ்பரிசம் பட்டவுடன் உன் கன்னங்கள் சிவக்கவில்லையே.. எனைப் பார்த்த பரவசத்தில் உன் கண்கள் படபடக்கவில்லையே.. நான் பற்றியவுடன் வெட்கப்பட்டு உன் கைகள் உதறவில்லையே.. நான் கண்டுகொண்டதை அறிந்து நாணி உன் கால்கள் ஓடவில்லையே.. முத்தம் கேட்டவுடன் உன் இதழ்கள் வெட்கப்படவில்லையே.. என்னதான் நான் காதலை வெளிப்படுத்தினாலும் சலனமே இல்லாமல் இருக்கிறாயே.. கண்டிப்பாக இது நீ இல்லை. நீயே வைத்துக்கொள் உன் புகைப்படத்தை.

தாய்மை

Image
என் தாயின் ஸ்பரிசம் உன் தீண்டலில் உணர்ந்தேன். தனிமைச் சிறையில் விடுதலை பெற்றேன். தத்தித் தத்தி மழலை கொஞ்சும் குழந்தையாய் உன்னை நித்தம் நித்தம் ரசிக்கிறேனடி ஆவலாய்.. விரல் பிடித்து நடந்து செல்லும்போதும் உன் குரல் கேட்டு லயித்து நிற்கும்போதும் எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.. இனி ஒரு சொர்க்கம் வேண்டுமோ?

ஏமாற்றங்களால் ஆனது காதல்

Image
எங்கு தான் மறைத்து வைத்திருக்கிறாய்? பெயரில்லா பறவையின் கூடுகளிலும் உருவில்லா மலர்களின் மகரந்தங்களிலும் இருக்கக் கூடுமோ உன் காதல்? மௌனங்களால் ஆனதா காதல் எப்போதும்? வலிகளால் ஆனதா காதல் எப்போதும்? ஏமாற்றங்களால் ஆனது தான் காதல் எப்போதும்.

உன்னுள் என் நினைவுகள்

Image
தென்றல், மழை, வெயில், ஞாயிறு, நிலவு காலை, மாலை - இப்படி இயற்கை என்னைக் கடக்கும்போதெல்லாம் நீ தான் நினைக்கப்படுகிறாய். நீ என்னை நினைப்பது எப்போதடி? எதாவது இறுதி ஊர்வலம் உன்னைக் கடக்கும்போதா? உயிர் விடும் முன்னாவது துளிர் விடுமா? உன்னுள் என் நினைவுகள்..??